மகா இழுபறி முடிந்துவிட்டதென்று தானே எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? எதற்கும் இங்கே ஒருமுறை வாசித்துப் பார்த்து விடுங்கள்! ஆர்னாப் கோஸ்வாமி வெளியேறிய பிறகு TimesNow சேனலைப் பார்ப்பது அறவே குறைந்துவிட்டதென்று தான் சொல்ல வேண்டும்! அதனால் Republic TVயை தினசரி பார்த்துக் கொண்டே இருக்கிறேன் என்று அர்த்தமல்ல. செய்திகளை பல இடங்களிலிருந்தும் சேகரிக்கிறேன், புரிந்துகொள்ள இன்னும் பல இடங்களில் போய்ப் பார்க்கிறேன். அதன்பிறகே என் விமரிசனக்கருத்தாக இந்தப்பக்கங்களில் எழுதுகிறேன் என்பதை நண்பர்கள் நினைவில் வைத்திருப்பீர்கள் என்பது என் நம்பிக்கை.
இது நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு Times Now TVயில் நடந்த The News Hour விவாதம். வீடியோ 43 நிமிடம். சுவாசிக்கப்போறேங்க தளத்தில் எழுதியது போல மகா இழுபறி இப்போதுதான் நிஜமாக ஆரம்பித்திருக்கிறது. ஒரே சிந்தனையோ ஒத்துப் போகும் இயல்போ இல்லாத மூன்று கட்சிகள் பதவிக்காகவும் பணத்துக்காகவும் கூட்டு சேர்ந்திருக்கும் போது அவர்களுடைய CMP காமன் மினிமம் ப்ரோக்ராம் என்னவாக இருக்கும் என்பதை ஊகிப்பது ஒன்றும் கடினமானது அல்ல. புலிகள் (சிவசேனா) புல்லும் தின்பார்கள் என்பதற்கேற்ப செகுலர் வேஷம் போடவும் சோனியாவின் தலைமையை ஏற்கவும் தயாராகிவிட்டது நன்றாகவே தெரிகிறது. தலைவர்கள் மட்டத்தில் வேஷத்தை எளிதாக மாற்றிக் கொண்டுவிடலாம்! ஆனால் தொண்டர்கள்? The common minimum programme (CMP) worked out between the Shiv Sena, NCP and Congress talks about immediate loan waiver to Maharashtra’s farmers; a new law to ensure 80 per cent reservation in jobs for locals; Re 1 heath clinics in all talukas; and a Rs 10 thali to provide affordable food to people என்றெல்லாம் செய்தி வந்திருக்கிறதே! அதெல்லாம் ஜனங்களை நம்ப வைப்பதற்கான லுலுலாயி!
கோட்ஸேவை தேசபக்தர் என்று உளறியதற்காக பிஜேபியின் பிரக்யா தாக்குர் தலையைச் சீவவேண்டும் என்கிற ரேஞ்சுக்கு காங்கிரஸ்காரர்கள் நாடாளுமன்றத்தில் கூவிக் கொண்டிருக்கையில் அதைவிட மோசமாகப் பலமுறை பேசியிருக்கிற சிவசேனாவின் செகுலர் வேஷத்தை ட்வீட்டரில் கிழிகிழியென்று கிழித்துக் கொண்டிருப்பது சுவாரசியமாக இருக்கிறது. At a time when BJP MP Pragya Thakur has come under fire for her controversial remarks glorifying Mahatma Gandhi’s assassin Nathuram Godse in Parliament, a Congress MLA in Madhya Pradesh kicked up a row. Congress’ Govardhan Dangi courted controversy during a protest in Rajgarh by saying he would "burn not only Pragya Thakur’s effigy, but her too" if she sets foot in Madhya Pradesh. டூப்ளிகேட் காந்திகளுக்கு ஒரிஜினல் காந்திமீது பாசம் வந்து விட்டதோ என்றெல்லாம் அனாவசியமாகச் சந்தேகப்படாதீர்கள்!
ஆனால் சரத் பவாரின் NCP ஷேக்ஸ்பியர் நாடகத்தில் வருகிற ஷைலக் பாத்திரம் மாதிரி சிவசேனாவிடம் தனக்குச் சேர வேண்டிய நெஞ்சுக்கறியை எதிர் பார்த்துக் கத்தியுடன் காத்துக் கொண்டிருக்கிறது. துணை முதல்வர், நிதி, உள்துறை இவைகளைக் குறி வைத்திருக்கிறது. காங்கிரஸ் தனது பங்குக்கு சபாநாயகர் பதவியோடு கொஞ்சம் வசதி வாய்ப்பை கொள்கிற துறைகளை எதிர்பார்க்கிறது. இவ்விரு கட்சிகளும் கேட்பதைக் கொடுத்துவிட்டு சிவசேனா என்ன செய்யப்போகிறது? இந்த வேடிக்கையைக் காண டிசம்பர் 3 ஆம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்து அமைச்சரவை விஸ்தரிக்கப்படுகிறவரை காத்திருந்தாக வேண்டும்!
அரசியல் விளையாட்டுக்கள் மிக விபரீதமான சர்க்கஸ் என்பதைப் புரிந்துகொண்டால், நடந்து கொண்டிருப்பவை குறித்து ஆச்சரியப்பட மாட்டீர்கள் தானே!
மீண்டும் சந்திப்போம்.
அரசியல் விளையாட்டுக்கள் மிக விபரீதமான சர்க்கஸ் என்பதைப் புரிந்துகொண்டால், நடந்து கொண்டிருப்பவை குறித்து ஆச்சரியப்பட மாட்டீர்கள் தானே!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!