கார்ட்டூன்களில் தாக்கரே! வரைந்தே தாக்குறாங்களாம்!

ஃப்ரீ பிரஸ் ஜர்னல் என்ற பத்திரிகையில் கேலிச் சித்திரக்காரராக இருந்து 1966 இல் சிவசேனா கட்சியைத் தொடங்கியவர் பால் தாக்கரே. அரசியல் ரீதியாக, சிவசேனா பொதுவுடைமைக் கட்சிக்கு எதிரானதாக விளங்கி, மும்பையின் பிரதான வர்த்தகத் தொழிலாளர் சங்கங்களின் மீதான கட்டுப்பாட்டை இந்தியப் பொதுவுடைமைக் கட்சியிடமிருந்து பறித்து, பெரும்பாலும் குஜராத்தி மற்றும் மார்வாடி வணிகர்களிடமிருந்து மாமூல் பணம் வசூல் செய்கிற கட்சியாகவே இருந்தது என்று தமிழ் விக்கி இவரது புகழ் பாடுகிறது. ஹிந்துத்வா கட்சியாகக்  காட்டிக் கொண்டதெல்லாம் பிஜேபியுடன் கூட்டு சேர்ந்த பிறகுதான்! 

 டெக்கான் ஹெரால்டு நாளிதழில் சஜித் குமார் வரைந்த இந்த ஒரு கார்டூன்தான் ஆளுனரை முழுதாய்க் குறை சொல்லி வந்திருப்பது என்றால் ஆச்சரியப் பட ஒன்றுமே இல்லை. ஏனென்றால்  ஆளுநர்கள் என்றால் அவ்வளவு இளப்பமாகப் பார்க்கப்படுவது நம்மூரில் புதிதல்லவே! 

ட்வீட்டரில் ஹேமந்த் மோர்பாரியா வரைந்திருக்கும்  இந்த கார்ட்டூன் தான் களநிலவரத்துக்கு மிக நெருக்கமாக இருக்கிறது என்று சொல்வதில் தவறே இல்லை!


சிவசேனா சொந்த ஆதாயங்களுக்காக காங்கிரஸ், NCP பக்கம் சாய்வது புதிதல்ல. இது முதல்முறையுமல்ல!

ஆனால் ஆதித்ய தாக்கரேவை முதலமைச்சர் ஆக்கியே  தீருவது என்பதில் எங்கே சறுக்கினோம் என்பது உத்தவ் தாக்கரேவுக்கு இன்னமும் பிடிபடவே இல்லை! FirstPost தளத்துக்காக மஞ்சுள் வரைந்த கார்டூனில் ஆதித்ய தாக்கரே கேட்பதாக இருப்பது வாசகரைக் கொஞ்சம் யோசிக்க வைக்கிற மாதிரி!

   
சதீஷ் ஆசார்யா என்னமோ காங்கிரசுக்கு ஓவராக பில்டப் கொடுத்துத்தான்  பார்க்கிறார். காங்கிரசால் NCP தாங்கப் படுவதாக நினைப்பே மிகமிகத்  தவறானது. முந்தைய பதிவில் தேபோப்ரத் கோஸ் FirstPost தளத்தில் எழுதியிருந்த செய்திக்கு கட்டுரையை வாசித்த்திருப்பீர்கள் இல்லையா? மேலிருந்து 2வதாக ஹேமந்த் மோர்பாரியா கார்ட்டூன் களநிலவரத்துக்கு மிக நெருக்கமாக இருக்கிறதென்று சொன்னது ஏனென்று விளங்குகிறதா?


புலிவேஷக்காரனுக்கு எத்தனை நீளமாக  ஒட்டுப் போட்ட வால் இருந்தும் என்ன செய்ய? என்று  ஹிந்து நாளிதழில் சுரேந்திரா கேட்பதாக நாமாகப் புரிந்து கொள்ள வேண்டியதுதான்!


ஒட்டுவால் நீளமாக வளர்ந்து? சந்தீப் அத்வர்யு TOI நாளிதழுக்காக வரைந்திருக்கும் கார்டூனில் சொல்கிறபடி தானிருக்குமோ? 

மருத்துவ மனையிலிருந்து மூன்று மணிநேரத்துக்கு முன் டிஸ்சார்ஜ் ஆகியிருக்கும் சிவசேனாவின் ராஜ்யசபா எம்பி சஞ்சய் ராவத் அடுத்த முதல்வர் சிவசேனாக் காரர்தான் என்று மறுபடி பெனாத்த ஆரம்பித்து விட்டார். கேலிச்சித்திரக்காரர் ஆரம்பித்த கட்சியை கேலிக்குரிய கட்சியாக ஆக்காமல் ஓய மாட்டார் போலிருக்கிறது!

மீண்டும் சந்திப்போம்.    

              

2 comments:

  1. படித்திராத, பார்த்திராத செய்திகள், கார்டூன்கள். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!