இட்லி வடை பொங்கல்! #51 கர்தார்பூர்! மஹாராஷ்டிரா! தடுப்புச்சுவர்!

இந்திய மக்களின் உதிரத்தால் எழுதப்பட்ட 1947 பிரிவினைக் கோட்டின் வடுக்கள் இன்றும் ஆறவிடாமல் பாகிஸ்தான் தொடர்ந்து இந்தியாவுக்குள் பயங்கர வாதச் செயல்களை ஊக்குவித்து வருகிற நிலையில் சீக்கியர்களுடைய குருவான குரு நானக் தேவ் ஜியின்  550 வது பிறந்த நாளை ஒட்டி கர்தார்பூர் காரிடார் என்று இரு சீக்கிய குருத்வாராக்களுக்கிடையிலான பயணம் இன்று பிரதமர் நரேந்திர மோடியாலும் அந்தப்பக்கம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானாலும் முறையாகத் தொடங்கி வைக்கப் பட்டிருக்கிறது.

   
இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்புரில் இருக்கும் தேரா பாபா நானக் குருத்வாராவில் இருந்து, பாகிஸ்தானுக்குள் சுமார் 5 கிலோமீட்டர் உள்ளே இருக்கும் கர்தார்பூர் சாஹிப் என்று அழைக்கப்படும் குருநானக் தேவ் ஜி அடக்கமான குருத்வாராவுக்கு சீக்கியர்கள் புனிதப்பயணம் மேற்கொள்ள உதவியாக இந்த கர்தார்பூர் காரிடார் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் 1999 வாக்கிலேயே ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தாலும், செயல்வடிவத்துக்கு வர இத்தனை காலம் ஆகியிருக்கிறது. 



This is what would welcome visitors into #KartarpurSahib. A bomb and a board saying India dropped the bomb in 1971 but the Gurudwara remained "unheart" (unhurt) and India's "evil" designs didn't materialise. #IndoPak MoU states #KartarpurCorridor will not be used for propaganda.
7:04 AM · Nov 8, 2019Twitter for Android 
பாகிஸ்தான் இந்த விஷயத்திலும் நஞ்சைக் கலக்கிற மாதிரி விஷமத்தனங்களைச் செய்யவும், காலிஸ்தானி பிரிவினைவாதத்தை விசிறிவிடவும் முயற்சி செய்யும் என்பது வெளிப்படையாகத்  தெரிந்தாலும் சீக்கிய மக்களுடைய உணர்வுகளுக்கு இந்திய அரசு மதிப்பளித்து இந்தப் பயணத்தை நடத்த அனுமதித்திருக்கிறது.  


Maharashtra Governor B.S. Koshyari on Saturday evening invited the Bharatiya Janata Party (BJP) -- the single-largest party -- to indicate its willingness to form the next government, barely four hours before the tenure of the state Assembly expires at midnight பிஜேபியை ஆட்சியமைக்க மஹாராஷ்டிரா ஆளுநர் அழைப்பு விடுத்திருப்பதாகத் தற்போதைய செய்தி! 

ரஷ்யாவின் பிடியில் கிழக்கு அமெரிக்க அரவணைப்பில் மேற்கு என துண்டாடப்பட்ட ஜெர்மனி மறுபடி ஒன்றாக இணைவதற்கு அச்சாரமாக இருந்தது முப்பதாண்டுகளுக்கு முன்னால் இதே நாளில்  பெர்லின் தடுப்புச் சுவர் இடிக்கப்பட்ட நிகழ்ச்சி இருந்ததென்று  முந்தைய பதிவில் கொஞ்சம் விரிவாகவே சொல்லியிருந்தேன். 


ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக வலிமையான பணக்கார நாடாக ஜெர்மனி இருப்பது  EUவில் உள்ள இதரநாடுகள் எதற்குமே பிடிக்கவில்லை என்பது ஒருபக்கம். உள்நாட்டு அரசியல் குழப்பங்கள் இன்னொருபக்கம்! ஒன்றாக இணைந்ததில் தீர்க்கப்படாத பிரச்சினைகள் என்று ஜெர்மனி, உள்ளே வெளியே இருபுறத்திலும் சமாளிக்க வேண்டியவை ஏராளம் என்று செய்திகள் சொல்கின்றன. உதாரணத்துக்கு இங்கே  Revisiting the Berlin Wall: Political and economic divisions continue to haunt Germany 
       
மீண்டும் சந்திப்போம்.     

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!