Truth is stranger than fiction என்று சொல்வார்களே, கேள்விப் பட்டதுண்டா? நம்மூர் அரசியலிலும் கூட ஊடகப் பொய்கள், பரப்புரைகளைத் தாண்டி சில விஷயங்கள் பூனைக்குட்டிகள் பையை விட்டு வெளியே வருவது போல வெளிவந்துவிடுவதைக் கவனித்ததுண்டா?
கருணாநிதியின் இடத்தை நிரப்பவோ, தன்னுடைய தனித்துவமான ஆளுமையை வெளிக்கொணரவோ இசுடாலினால் ஏன் இன்றுவரை முடியவில்லை என்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா? உங்களால் முடியவில்லையென்றாலும் யோசிக்க முடிகிறவர்களும் இருக்கிறார்களே!
ஒரு திரைக்கதை தயாராகிறது..!
இதுதான் திரைக்கதை. ஆனால், அதில் உள்ள twist நடிகர்களுக்கு தெரியாமல் இருந்தால்? இந்த கோணம் உண்மையாக இருந்தால்?
# # காட்சி 1.
அறையில் பேசிக்கொள்கிறார்கள் 2,3 பேர்.
அறையில் பேசிக்கொள்கிறார்கள் 2,3 பேர்.
1. சார், மத்திய அரசு இந்த பஞ்சமி நில விவகாரத்தை கையிலெடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல். ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இன்னும் கொஞ்சம்தான் பாக்கி. பெரிதாக்க பிரச்சனை எதுவும் இல்லை. நமக்கு பாலிடிக்ஸ் பண்றதுக்கு மேட்டரே இல்லை சார். என்ன செய்யலாம்?!
2. பிரச்சனை இல்லை என்றால், உருவாக்கு. நான் சொல்கிற மாதிரி செய். இந்தா, இந்த காட்சி 2ஐ அரங்கேற்றம் செய். ஆனால் காட்சி 3 தான் உண்மை. அதை ஊடகத்துக்கு எடுத்து சொல்லவேண்டியது என் பொறுப்பு.
2. பிரச்சனை இல்லை என்றால், உருவாக்கு. நான் சொல்கிற மாதிரி செய். இந்தா, இந்த காட்சி 2ஐ அரங்கேற்றம் செய். ஆனால் காட்சி 3 தான் உண்மை. அதை ஊடகத்துக்கு எடுத்து சொல்லவேண்டியது என் பொறுப்பு.
காட்சி 2
சார், சின்னதா ஒரு பொறி இருக்கு. திருச்சியில ஒரு சின்னக் குழந்தை போர்வெல்ல விழுந்து தவிச்சிகிட்ருக்கான். நம்ம சர்ச் ஆளுதானாம். இதை நாம கொஞ்சம் கவனிச்சா போதும். ஊடகங்களுக்கு சொல்லிட்டா மீதிய அவங்க பாத்துக்குவாங்க! நாங்க கொஞ்சம் தள்ளி இருப்போம். அந்தக் குழந்தைய காப்பாத்துர மாதிரி அரசாங்கம் என்ன செஞ்சாலும் நம்ம கூட்டணி கட்சி ஆளுங்களை விட்டு குறை சொல்லிகிட்டே இருந்தா போதும் நாங்க உடனே பக்கத்துல வந்து காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு கத்தி கூட்டத்தை கூட்டுவோம். எப்பிடியும் குழந்தை பொழைக்கப் போறதில்லை.நம்ம ஆளுங்க குடுக்குற அழுத்தத்துல அரசு ஏகப்பட்ட ஆளுங்களை மிஷின்களை வரவச்சு வரவழைத்து அதகளம் பண்ணி உங்களை மறக்கடிச்சுரும். இதுதான் சார் ஸீன். எதுவும் பிரச்சனை ஆகாதே? சார், பக்கா ஸீன் சார். ஒரே நாள்ல நம்ம பிரச்னை மக்களுக்கு மறந்துரும் ஓகே ரெடி டேக்.!
காட்சி 3.
தொலைகாட்சிகள் சொன்னபடி செய்தன.குழந்தை இறந்தான். இறந்தது ஊர்ஜிதமாகிறது. மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கிறார்கள். அனைத்து ஊடகங்களும் உடனே வாபஸ். எல்லோருக்கும் பறக்கிறது தகவல்கள். உசுரோட இருக்கும்போது வராத அனைவரும் பொணத்தை பார்த்ததும் சும்மா லைன் கட்டி வாரங்க. டெட் பாடிய காட்டி காட்டி காமிராவை பல கோணங்களில் ஜூம் பண்ணி பண்ணி எடுக்கறீங்க. இந்தாளு செத்ததுக்கு மோடிதான் காரணம்னு சொல்லி அலப்பறை பண்றோம். TRP யை ஏத்தறோம். அமைதிய கெடுக்கறோம். இதுதான் காட்சி 3.
காட்சி 2, 3 சிறப்பாக திட்டமிட்டபடி அரங்கேறியது. இறந்த குழந்தையின் குடும்பத்துக்கு ஒரே ஸ்ட்ரோக்கில் அரைக்கோடி! you win I win நிலைதான். எப்படி நம்ம திரைக்கதை?
அப்படியும் இந்த காவிங்க மறக்கலைன்னா எவனயாவது விட்டு ஈவேரா சிலைமேல சாணி அடிக்க விட்டு இல்லை உடைக்க விட்டு அடுத்த பரபரப்பை கிளப்பிடலாம் சார்! ஓகே வா?!
சமூக வலைத்தளங்களுடைய வருகைக்குப் பின்னால் கதை திரைக்கதை திறம்படச் செய்வதற்கு நிறையப் பேர் உருவாகிவிட்டார்கள்! அந்தநாளில் இலுப்பைப்பூ சக்கரை மாதிரி ஒரே ஒரு வசனகர்த்தா மட்டும் தான் இருந்தார் என்ற நிலையைக் காலம் எவ்வளவு வேகமாக மாற்றிவிட்டது பாருங்கள்! இந்த கதை திரைக்கதை எப்படி? கொஞ்சம் சொல்லுங்களேன்!
கொஞ்சம் பாகிஸ்தான் கதையையும் பார்த்துவிடலாம்! பாகிஸ்தானில் கதை திரைக்கதை வசனம் எல்லாம் எழுதுவது ராணுவம் தான் என்பது தெரியும்தானே! அதையும் மீறி யார் இந்த ஃபஸ்லுர் ரெஹ்மான்? இம்ரான் கானைப் பதவிவிலகச் சொல்லி ஜனங்களைத் திரட்டி இயக்கம் நடத்துவதெல்லாம் சாத்தியம் தானா? ஜெனெரல் க்வாமெர் ஜாவேத் பாஜ்வாவுக்கு மூன்றாண்டு காலம் பதவி நீட்டிப்புச் செய்யப்பட்டதில் அதிருப்தியடைந்திருக்கும் ராணுவத்தளபதிகளே இதன் பின்னால் இருக்கிறார்களா? ஆனால் இம்ரான் கானை அத்தனை எளிதில் விட்டுக் கொடுத்துவிட ராணுவம் தயாராக இல்லை என்பதற்குத் தெளிவான சிக்னல் கலகக்காரர்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. அதுவும் போக, இந்தியாவில் இருந்து கர்த்தாபூர் சாஹிப் என்ற சீக்கியர்கள் வழிபாட்டுத்தலத்துக்கு பாகிஸ்தானுக்குள் வர பாஸ்போர்ட் அவசியம் என்று இம்ரான் கானுக்கும் ராணுவம் ஒரு கொட்டு வைத்திருக்கிறது.
நேற்றைய நேர்பட பேசு நிகழ்ச்சியின் வீடியோ 62 நிமிடம். கொஞ்சம் பொறுமையாகப் பார்க்க முடிகிறவர்களுக்கு, கொஞ்சூண்டு தகவல் நிறைய காமெடி என்று வெரைட்டியான அனுபவம் கிடைக்கும்!
எப்படியோ திருவள்ளுவரையும் இழுத்துத் தெருவில் விட்டு விட்டார்கள்! தெருவெங்கும் குறள் முழக்கம் கேட்க ஆரம்பித்து விட்டது!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!