Showing posts with label ஒரு விவாதம். Show all posts
Showing posts with label ஒரு விவாதம். Show all posts

மண்டேன்னா ஒண்ணு! #கொரோனா #காமெடி #அரசியல்

இன்று தமிழ்வருடப்பிறப்பு. நண்பர்கள் அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இறையருள் நம்மோடு எப்போதும் துணையிருப்பதாக. 



தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தினசரி வாசிக்கும் கொரோனா அறிவிப்புகள் வரவர செம காமெடியாக மாறிக் கொண்டிருக்கிறது. முழுப்பூசணிக்காயை மூடிமறைக்க இன்றைக்கு அவர் உபயோகித்திருக்கும் புதிய வார்த்தை #ஒரேதனித்தொற்று  இப்படி சமாளிக்க முடியாத அரைகுறை தினசரி அறிக்கைகள் வாசிக்காமலேயே இருந்திருக்கலாம் என்றுதான் எண்ணத்  தோன்றுகிறது.
 

இங்கே தமிழகத்தில் மட்டும்தான் இப்படி கொண்டையை மறைக்கத்தெரியாத வடிவேலு காமெடி  என்றில்லாமல் வேறுசில மாநிலங்களிலும் இதேகூத்துதான்! ஆனால் வேறுவேறு பெயர்கள் வைத்துச் சொல்கிற கொடுமையை மிக சிம்பிளாக ஒரே கார்டூனில் சொன்னதை PGurus தளத்தில் இன்றைக்குப் பார்த்தேன். 
 
 

நோய்த்தொற்றை எப்படிச் சமாளிக்கிறார்களோ, அது வேறு விஷயம்!  உண்மையைச் சொல்வதனால் தங்களுக்கு வாக்குவங்கி
யில் பாதிப்பு வந்துவிடக்கூடாதே  என்ற கவலை ஒவ்வொருவரையும் ஆட்டிப் படைப்பதை இதைவிட சிறப்பாகச் சொல்லியிருக்க முடியாது என்பது ஒருபுறம்! என்னதான் மறைக்கப் பார்த்தாலும் உண்மைநிலவரம் ஏதோவொரு வகையில் அம்பலப்பட்டுக் கொண்டே வருகிறது. அப்புறம் எதற்காக இதுமாதிரிச் செய்தியாளர் சந்திப்பு, அது இது என்று நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்க வேண்டும்? இன்று தமிழக அரசின் அறிவிப்புக்களில் lockdown என்கிற சுய ஊரடங்கை இந்தமாதம் 30 ஆம் தேதிவரை நீட்டித்திருப்பது ஒன்றே உருப்படியானது. ஆனால் அதுவரைக்கும் பீலா ராஜேஷ் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுவார்த்தையைக் கண்டுபிடித்துச் சொல்வதைப் பார்த்துக் கொண்டு இருக்கவேண்டுமே என்பது தமிழ்நாட்டின் தலையெழுத்து! கழகங்கள் இல்லாத தமிழகம் என்றானால் விடிவுகாலமும் பிறக்கும். பிறந்திருக்கிற தமிழ்ப்புத்தாண்டில் அதற்கான வலுவான அடித்தளம் அமைய இறையருளை வேண்டிப் பிரார்த்தனை செய்வோம்!

 

சமீபகாலங்களில் எந்த தமிழக சேனல் விவாதங்களையும் பார்ப்பதில்லை என்பதிலேயே நிறைய விஷயங்களைத் தேடிப்படிக்கவும், புத்தகங்கள் வாசிக்கவும், Money Heist வெப் சீரீஸின் 4 பாகங்களை பார்க்கவும் போதுமான அவகாசம் கிடைத்தது என்றால் நம்புவீர்களா? அப்படிப் பார்க்க மு டிந்ததில் டேனியல் டிமார்டினோ பூத் என்கிற பொருளாதார வல்லுனரின் 93நிமிட நேர்காணலும் ஒன்று. மேலே அதன் சுருக்கப்பட்ட 6 நிமிட வடிவம். முழு நேர்காணலையும பார்க்க  About  Danielle: As Founder & CEO of Quill Intelligence, DiMartino Booth set out to launch a #ResearchRevolution, redefining how markets intelligence is conceived and delivered. To build QI, she brought together a core team of investing veterans to analyze the trends and provide critical analysis on what is driving the markets – both in the United States and globally. A global thought leader on monetary policy, economics and finance, DiMartino Booth founded Quill Intelligence in 2018. She is the author of FED UP: An Insider’s Take on Why the Federal Reserve is Bad for America (Portfolio, Feb 2017), has a column on Bloomberg View, is a business speaker, and a commentator frequently featured on CNBC, Bloomberg, Fox News, Fox Business News, BNN Bloomberg, Yahoo Finance and other major media outlets என்று யூட்யூப் தளத்தில் ஒரு சிறு அறிமுகம் கிடைக்கிறது.

கொரோனா வைரசை சீனா தொடுத்த யுத்தமாகவே இவர் கருதுகிறார், காரணகாரியங்களோடு விளக்குகிறார். நேரமிருந்தால் என்ன சொல்கிறார் என்பதைக் காதுகொடுத்துக் கேளுங்களேன்! எத்தனை நாளைக்குத்தான் உள்ளூர் ஊடகச்சொத்தைகளையே பார்த்துக் கொண்டிருப்பதாம்?

மீண்டும் சந்திப்போம். இன்னொரு முறையும் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகளுடன்.

உண்மை, கதை கற்பனையை விட விசித்திரமானது! #அரசியல்

Truth is stranger than fiction என்று சொல்வார்களே, கேள்விப் பட்டதுண்டா? நம்மூர் அரசியலிலும் கூட ஊடகப் பொய்கள், பரப்புரைகளைத் தாண்டி சில விஷயங்கள் பூனைக்குட்டிகள் பையை விட்டு வெளியே வருவது போல வெளிவந்துவிடுவதைக் கவனித்ததுண்டா?

கருணாநிதியின் இடத்தை நிரப்பவோ, தன்னுடைய தனித்துவமான ஆளுமையை வெளிக்கொணரவோ இசுடாலினால் ஏன் இன்றுவரை முடியவில்லை என்பதை எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா? உங்களால் முடியவில்லையென்றாலும் யோசிக்க முடிகிறவர்களும் இருக்கிறார்களே!

ஒரு திரைக்கதை தயாராகிறது..!
இதுதான் திரைக்கதை. ஆனால், அதில் உள்ள twist நடிகர்களுக்கு தெரியாமல் இருந்தால்? இந்த கோணம் உண்மையாக இருந்தால்?
# # காட்சி 1.
அறையில் பேசிக்கொள்கிறார்கள் 2,3 பேர்.
1. சார், மத்திய அரசு இந்த பஞ்சமி நில விவகாரத்தை கையிலெடுக்க முடிவு செய்திருப்பதாக தகவல். ஆணையமும் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. இன்னும் கொஞ்சம்தான் பாக்கி. பெரிதாக்க பிரச்சனை எதுவும் இல்லை. நமக்கு பாலிடிக்ஸ் பண்றதுக்கு மேட்டரே இல்லை சார். என்ன செய்யலாம்?!
2. பிரச்சனை இல்லை என்றால், உருவாக்கு. நான் சொல்கிற மாதிரி செய். இந்தா, இந்த காட்சி 2ஐ அரங்கேற்றம் செய். ஆனால் காட்சி 3 தான் உண்மை. அதை ஊடகத்துக்கு எடுத்து சொல்லவேண்டியது என் பொறுப்பு.
காட்சி 2
சார், சின்னதா ஒரு பொறி இருக்கு. திருச்சியில ஒரு சின்னக் குழந்தை போர்வெல்ல விழுந்து தவிச்சிகிட்ருக்கான். நம்ம சர்ச் ஆளுதானாம். இதை நாம கொஞ்சம் கவனிச்சா போதும். ஊடகங்களுக்கு சொல்லிட்டா மீதிய அவங்க பாத்துக்குவாங்க! நாங்க கொஞ்சம் தள்ளி இருப்போம். அந்தக் குழந்தைய காப்பாத்துர மாதிரி அரசாங்கம் என்ன செஞ்சாலும் நம்ம கூட்டணி கட்சி ஆளுங்களை விட்டு குறை சொல்லிகிட்டே இருந்தா போதும் நாங்க உடனே பக்கத்துல வந்து காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு கத்தி கூட்டத்தை கூட்டுவோம். எப்பிடியும் குழந்தை பொழைக்கப் போறதில்லை.நம்ம ஆளுங்க குடுக்குற அழுத்தத்துல அரசு ஏகப்பட்ட ஆளுங்களை மிஷின்களை வரவச்சு வரவழைத்து அதகளம் பண்ணி உங்களை மறக்கடிச்சுரும். இதுதான் சார் ஸீன். எதுவும் பிரச்சனை ஆகாதே? சார், பக்கா ஸீன் சார். ஒரே நாள்ல நம்ம பிரச்னை மக்களுக்கு மறந்துரும் ஓகே ரெடி டேக்.!
காட்சி 3.
தொலைகாட்சிகள் சொன்னபடி செய்தன.குழந்தை இறந்தான். இறந்தது ஊர்ஜிதமாகிறது. மருத்துவமனைக்கு கொண்டு சேர்க்கிறார்கள். அனைத்து ஊடகங்களும் உடனே வாபஸ். எல்லோருக்கும் பறக்கிறது தகவல்கள். உசுரோட இருக்கும்போது வராத அனைவரும் பொணத்தை பார்த்ததும் சும்மா லைன் கட்டி வாரங்க. டெட் பாடிய காட்டி காட்டி காமிராவை பல கோணங்களில் ஜூம் பண்ணி பண்ணி எடுக்கறீங்க. இந்தாளு செத்ததுக்கு மோடிதான் காரணம்னு சொல்லி அலப்பறை பண்றோம். TRP யை ஏத்தறோம். அமைதிய கெடுக்கறோம். இதுதான் காட்சி 3.
காட்சி 2, 3 சிறப்பாக திட்டமிட்டபடி அரங்கேறியது. இறந்த குழந்தையின் குடும்பத்துக்கு ஒரே ஸ்ட்ரோக்கில் அரைக்கோடி! you win I win நிலைதான். எப்படி நம்ம திரைக்கதை?
அப்படியும் இந்த காவிங்க மறக்கலைன்னா எவனயாவது விட்டு ஈவேரா சிலைமேல சாணி அடிக்க விட்டு இல்லை உடைக்க விட்டு அடுத்த பரபரப்பை கிளப்பிடலாம் சார்! ஓகே வா?!  

சமூக வலைத்தளங்களுடைய வருகைக்குப் பின்னால் கதை திரைக்கதை திறம்படச் செய்வதற்கு நிறையப் பேர் உருவாகிவிட்டார்கள்! அந்தநாளில் இலுப்பைப்பூ சக்கரை மாதிரி ஒரே ஒரு வசனகர்த்தா மட்டும் தான் இருந்தார் என்ற நிலையைக் காலம் எவ்வளவு வேகமாக மாற்றிவிட்டது பாருங்கள்! இந்த கதை திரைக்கதை எப்படி?  கொஞ்சம் சொல்லுங்களேன்! 

   
கொஞ்சம் பாகிஸ்தான் கதையையும் பார்த்துவிடலாம்! பாகிஸ்தானில் கதை திரைக்கதை வசனம் எல்லாம் எழுதுவது ராணுவம் தான் என்பது தெரியும்தானே! அதையும் மீறி யார் இந்த ஃபஸ்லுர் ரெஹ்மான்? இம்ரான் கானைப் பதவிவிலகச் சொல்லி ஜனங்களைத் திரட்டி இயக்கம் நடத்துவதெல்லாம் சாத்தியம் தானா? ஜெனெரல் க்வாமெர் ஜாவேத் பாஜ்வாவுக்கு மூன்றாண்டு காலம் பதவி நீட்டிப்புச் செய்யப்பட்டதில் அதிருப்தியடைந்திருக்கும் ராணுவத்தளபதிகளே இதன் பின்னால் இருக்கிறார்களா? ஆனால் இம்ரான் கானை அத்தனை எளிதில் விட்டுக் கொடுத்துவிட ராணுவம் தயாராக இல்லை என்பதற்குத் தெளிவான சிக்னல் கலகக்காரர்களுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. அதுவும் போக, இந்தியாவில் இருந்து கர்த்தாபூர் சாஹிப் என்ற சீக்கியர்கள் வழிபாட்டுத்தலத்துக்கு பாகிஸ்தானுக்குள் வர பாஸ்போர்ட் அவசியம் என்று இம்ரான் கானுக்கும் ராணுவம் ஒரு கொட்டு வைத்திருக்கிறது.

   
நேற்றைய நேர்பட பேசு நிகழ்ச்சியின் வீடியோ 62 நிமிடம். கொஞ்சம் பொறுமையாகப் பார்க்க முடிகிறவர்களுக்கு, கொஞ்சூண்டு தகவல் நிறைய காமெடி என்று வெரைட்டியான அனுபவம் கிடைக்கும்!

எப்படியோ திருவள்ளுவரையும் இழுத்துத் தெருவில் விட்டு விட்டார்கள்! தெருவெங்கும் குறள் முழக்கம் கேட்க ஆரம்பித்து விட்டது!

மீண்டும் சந்திப்போம்.    

வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! கமல் ஹாசன் அரசியல்! தேறுவாரா? ஒரு விவாதம்

நேற்று கமல்ஹாசன் மத்திய அமைச்சர் ஸ்ம்ருதி இரானியுடன் ரிபப்ளிக் டிவியில் பங்குகொண்ட ஒரு விவாதத்தின் மீது  கூகிள் ப்ளஸ் நண்பர்களுடன் ஒரு சிறு விவாதம் அல்லது உரையாடலாக நடந்தது





இது பொன்மாலைப்பொழுது பதிவர் நண்பர் மாணிக்கம் பகிர்ந்திருக்கிற நையாண்டி கமென்ட்.

B R மகாதேவன் தினசரி தளத்தில்  ஒன்றரை மணிநேர டிவி விவாதத்தைப் பொறுமையாகப் பார்த்து விட்டு முக்கியமான விஷயங்களைத் தமிழில் தந்திருக்கிறார்.

இங்கே அந்த தொலைகாட்சி விவாத வீடியோவைப்  பார்த்துவிட்டு கமல் ஹாசன் முன்னெடுக்கிற அரசியல் எப்படிப் பட்டது? அரசியலில் கமல்ஹாசன் தேறுவாரா? தசாவதார நடிகர் அடுத்த அ(வ)ரிதாரம் பூசியிருப்பது மட்டுமே தான் அவருடைய அரசியலா? 2019 நாடாளு மன்றத் தேர்தல்கள் எப்படியிருக்கும் என்று சொல்கிறார்கள்?

இவையெல்லாம் இந்தவார வெள்ளிக்கிழமைக் கேள்விகளாக! பதில் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன் !
   


#கமல்ஹாசன்#ஸ்மிருதி இரானி #ரிபப்ளிக் டிவி பேட்டி! தமிழில் சாத்தியமா? என்ன சொன்னார்கள் அவர்கள்!

நிகழ்ச்சியின் தொடக்கத்திலிருந்தே கமல் தன் டிரேட் மார்க் முனகலை முக்கினார். முனகினார். வயதாகிவிட்டது… நீங்கள் பேசுவது காதில் விழவில்லை என்றார். ரொம்பக் குளிருகிறது… உங்கள் அனுமதியுடன் கோட் மாட்டிக்கொள்ளவா என்று அசடு வழிந்தார். ஸ்மிருதி இரானிக்கும்…
கமல் ஹாசன் – ஸ்மிருதி இரானி ரிபப்ளிக் டிவி பேட்டி! கனவு காண்பவர் Vs செயல்வீரர்கள்!