ஏர்செல் மேக்சிஸ் விவகாரம் முதற்கொண்டு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களில் நீதிமன்றத்தின் தயவால் கைதாகாமல் தள்ளிப்போட்டுக் கொண்டே போகிற சாமர்த்தியசாலி சால்வை அழகர்!அவரோடு மனைவி, மகன் என்று குடும்பமே வழக்குகளில் சிக்கியிருக்கிற பெருமை வாய்ந்த குடும்பம் அவருடையது.
இந்த உத்தமர் என்ன சொல்ல வருகிறார்? மூன்றாவது அணி வரவே வராது என்று எந்த அடிப்படையில் சொல்கிறார்? ரங்கராஜ் பாண்டேவுக்குப் பிறகு கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியை சலீம் எப்படி நடத்துகிறார் என்று பார்த்ததில் சரியான கேள்விகளும் இல்லை தெளிவான பதில்களும் இல்லை என்பது மிக நன்றாகவே வெளிப்பட்டிருக்கிறது.
*******
ஒரு வேளை எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்பட்டால் அந்த செய்தியையாவது ஊடகங்கள் வெளியிடுமா என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
இசுடாலினுக்கு ஊடகங்கள் மீது அப்படியென்ன வருத்தமோ?
#பொதுமேடையில்#அசடுவழிந்த#ஜோக்கர்கள்! துபையில் #ராகுல்; கிராமசபைக் கூட்டத்தில் #ஸ்டாலின்! பொதுமேடையில் இரு கட்சிகளின் வாரிசுத் தலைவர்களும் நிலைமையைச் சமாளிக்கத் தெரியாமல் அசடு வழிந்த செய்திகள் ஒரே நாளில் வெளியாகி, ஒருவரை ஒருவர் விஞ்சும் நிலையை அம்பலப்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபையில் இரு நாள் பயணமாகச் சென்றிருக்கிறார்.ஒரு 14 வயதுச் சிறுமி கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் ராகுல் காந்தி அசடு வழிந்து நின்றதும் நேரலை ஒளிபரப்பைக் கட் செய்து நிலைமையைச் சமாளித்ததுமான பரிதாபத்தை தினசரி தளத்தில் சொல்கிறார்கள்.
துபாயில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசிய காட்சி : படம் உதவி ட்விட்டர்
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரும் மக்களவைத் தேர்தலுக்கு மாயாவதி, அகிலேஷ் யாதவ் கூட்டணி அமைத்தது குறித்து நான் வருத்தப்படவில்லை, ஆனால்,முடிவில் பாஜக ஆட்சிக்கு வரப்போவதில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்
அதெல்லாம் சரி! காந்தி 150 என்று கொண்டாட இந்த டூப்ளிகேட் காந்தி துபாய்க்குத்தானா போக வேண்டும்? சாம் பிட்ரோடாக்கள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யத்தான் முடியும்!
அசடுவழிந்து நிற்பதற்கெல்லாம் என்ன செய்ய முடியும்? நீங்களே சொல்லுங்கள்!
+Md. Sultan Ad. Gulam தினகரனில் வெளிவந்த மறுப்புச் செய்தியை அனுப்பியிருக்கிறார்! நன்றி! இதில் சொல்லப் பட்டிருக்கிறபடி செய்தி பொய்யானதாக இருந்தால் இங்கேயும் என் வலைப் பதிவிலும் எழுதியது தவறாகக் கிடைத்த செய்தியின் அடிப்படையில் தான் என்று ஒப்புக்கொள்வது தான் நியாயமானதாக இருக்கும். அதன்படியே இந்தப்பகிர்வு.
ஆனால் சில கேள்விகளும் கூடவே எழுகின்றன. சன் குடும்பத்தின் தினகரன் முதலில் வெளியிட்டிருந்த செய்தியின் கடைசி வரியில் யாரோ ஒரு பிஜேபி ஆதரவாளர் சொல்லிக் கொடுத்து பேசியதாக எழுதியிருந்தது ஏன்?
காங்கிரசோடு தான் கூட்டணி என்று திமுக தலைமை உறுதியாக அறிவித்தபிறகும் தினகரனில் முதலில் வெளிவந்த செய்தி எதற்காக வெளியிடப்பட்டது? தனி ஆவர்த்தனமா? தங்கள் படத்தை விமரிசனம் செய்த ஒரு யூட்யூப் பதிவை காப்பிரைட் பிரச்சினை கிளப்பி முடக்கியவர்கள், , இந்தச் செய்தியில் கேள்வி கேட்டது பொய் செய்தி என்கிறார்களே தவிர தாங்கள் முன்னர் வெளியிட்டது தவறானது என்று வருத்தம் தெரிவிக்கவில்லையே! ஏன்?
சிலநாட்களுக்கு முன்னால்தான் காங்கிரஸ் கட்சியின் 134 வது துவக்கதினம் என்று ராவுல்பாபா கேக் வெட்டிக் கொண்டாடினார் என்று செய்திகள் வந்தன. ஆனால் இந்தியாவின் Grand Old Partyவயதுக்கேற்ற அனுபவமும் முதிர்ச்சியும் பெற்றிருக்கிறதா என்றால் #பப்பு என்று அழைக்கப்படுவதற்கேற்ற மாதிரித்தான் காங்கிரஸ் கட்சித்தலைவர் மற்றும் அடிவருடிகளின் செயல்பாடு இருக்கிறது.
காங்கிரசின் ஐக்கிய முற்போக்கு கூட்டணி வெர்ஷன் 1, அடுத்து 2 என இரண்டிலும் ஊழல் புகார்கள் வெடித்துக் கிளம்பியமாதிரி நரேந்திர மோடியின் ஆட்சியில் எதுவும் கிளம்பவில்லை. அதனாலென்ன? ஊழல் ஊழல் என்று பெருங் குரலெடுத்துக் கூவினால் போதுமே என்று ராவுல் பாபா ரஃபேல் விமானபேர ஊழல் என்று திரும்பத் திரும்பக் கூவிக் கொண்டிருக்கிறார். இதிலேயே 2019 நாடாளுமன்றத் தேர்தல்களை எதிர் கொள்ளலாம் ஜெயிக்கலாம் என்று கண்ணடித்துக் கனவு காண்கிறாரோ என்னவோ?
அதிமுகவின் தம்பித்துரை பேசிக்கொண்டிருக்கிறார். பின்னால் ராகுல் காந்தி என்ன செய்கிறார்? கொஞ்சம் பாருங்கள்! பப்பு கண்ணடிக்கிற அற்புதக் காட்சியை இந்த வீடியோவில் 6நி 20 செகண்டிலிருந்து பார்க்க.
இப்படியாகப்பட்ட இவரைத்தான் பிரதமராக்காமல் விட மாட்டேனென்று வீரவாள் எல்லாம் கொடுத்து இசுடாலின் சிலநாட்களுக்கு முன்னால் சூளுரைத்தார் என்பதாவது நினைவிருக்கிறதா?
நாடாளுமன்றத்தில் ரஃபேல் பற்றிய விவாதத்தைக் காங்கிரஸ்கட்சி நடத்திய விதமிருக்கிறதே! வேடிக்கை செய்வதே வாடிக்கை என்று கடைசியில் கோமாளிக் கூத்தாகிக் கொண்டே வருவதில் நிதியமைச்சர் அருண் ஜெயிட்லி மீது காங்கிரஸ் உறுப்பினர்கள் காகித அம்புகளை வீசி மகிழ்ந்திருக்கிறார்கள். அவர்கள் ஆட்சிக்காலத்தில் ராணுவத்துக்கு ஆயுதங்கள் தான் வாங்க முடியவில்லை, விமானங்கள் வாங்க முடியவில்லை அதனால் இப்போது காகிதத்தில் பிளேன்கள் செய்துவீசிப் பார்ப்போமே என்கிற எண்ணமா? தெரியவில்லை.
நாடாளுமன்றத்தில் நேற்றும் காங்கிரஸ் ரகளை. மோடி தான் சபைக்கு வந்து பதில் சொல்ல வேண்டும் என்கிற காங்கிரசின் கோரிக்கையை, அரசின் சார்பிலும், தன் துறை சார்ந்த விஷயம் என்பதாலும் பாதுகாப்புத் துறை அமைச்சருக்கு பேச முழு உரிமை உண்டு என்று தீர்ப்பளித்து சபாநாயகர் நிராகரித்து விட்டார்.
The five-hour debate on Rafale jet purchase saw heated moments in Lok Sabha on Friday with UPA chief Sonia Gandhi leaving the House midway amid personal attacks by BJP members and Defence Minister Nirmala Sitharaman getting emotional while mentioning Congress’repeated jibes at her and Prime Minister Narendra Modi.இப்படி பாதுகாப்புத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் காங்கிரஸ் எழுப்பிய அபத்தமான குற்றச்சாட்டுகளுக்கு இரண்டுமணி நேரம் விரிவான பதிலடி கொடுத்ததில் ஒரு சிறுபகுதி மேலே காணொளியாக.
தங்களுடைய திட்டங்கள் எல்லாம் பூமராங் மாதிரித் திரும்பத் திரும்ப, தன் குடும்பத்தினர் மீதே திரும்புவது குறித்து எதுவும் செய்ய முடியாமல், பாதியிலேயே சோனியா சபையை விட்டு வெளியேறிய பரிதாபம் செய்திகளில் ஒரு ஓரத்தில் வந்திருக்கிறது.
*******
ஜனவரி 5- திமுக மகளிரணிச் செயலாளரும் கருணாநிதியின் மகளுமான கனிமொழிக்குப் பிறந்தநாள்.
வழக்கமாகத் தனது பிறந்தநாள் அன்று அப்பா கருணாநிதி, அம்மா ராஜாத்தி அம்மாளிடம் இருந்து ஆசி, அண்ணன் ஸ்டாலினிடம் இருந்து வாழ்த்து, தொண்டர்கள் அணிவகுப்பு, நலம் விரும்பிகளின் சந்திப்பு என சந்தோஷத்தில் திளைப்பார் கனிமொழி. குறிப்பாக சி.ஐ.டி. காலனி வீட்டில் தந்தை முன்னிலையில் கேக் வேட்டிக் கொண்டாடுவார் கனிமொழி. ஆனால் இந்த முறை எதுவும் இல்லை.
ஏனாம்? #ரட்சகனுக்காக என்று கவிதை எழுதினாரே!! அது யாரென்று தெரியும் வரை ஸ்டாலின் தலைமைக்கு எதிராக எதையும் செய்து அவரின் அதிருப்தியை சம்பாதித்துக்கொள்ள கனிமொழி விரும்பவில்லை என்றும் அரசியல் வட்டாரத்தில் கூறுவதாக இங்கே
*******
எது எதையோ பேசிக்கொண்டிருக்கிறோம்! பேசவேண்டிய முக்கியமான விஷயத்தைப் பேசாமல் இருந்துவிடுவோமா? சொல்லின் செல்வன் என்று கம்பனால் சிறப்பிக்கப்பட்ட அனுமனை மறந்துவிடுவோமா என்ன?
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்றாறாக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கு கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளைக் குறித்து என்வரை அதிகமாக அலட்டிக் கொள்வதற்கு எதுவுமில்லை. ஏன் என்றால் பெரும்பாலான எக்ஸிட் கருத்துக் கணிப்புக்களில் ரிசல்ட் என்னவோ ஏறத்தாழ சரியாகவே பிரதிபலிக்கப் பட்டிருந்தது. இங்கே பார்க்க
டாக்டர்யக்கோவ் தோல்வியால் துவண்டு விடுவதில்லை என்று சமாளிக்கிறார் இங்கே இன்னொரு முக்கியமான கேள்வி இப்போது மட்டும் வாக்கு இயந்திரங்கள் சரியாக வேலை செய்ததா என்று கேட்டிருக்கிறார்.
திருமாவளவன் வைகோவையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒரு காமெடி செய்திருக்கிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் ராவுல்பாபா தலைமையிலான கூட்டணிதான் வெல்லும் என்கிறார். ராவுல்பாபா சென்ற இடமெல்லாம் தோல்வி என்றிருந்தது. இப்போது இந்த 5 மாநிலத்து தேர்தல் பிரசாரத்துக்கு ராவுல்பாபா போயும் கூட ராஜஸ்தான். சத்திஸ்கர் இரண்டு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருக்கிறது என்பதற்கு மேல் இந்தத் தேர்தல் முடிவுகளில் என்ன அதிசயம் இருக்கிறதென்று ஊடகங்கள் இப்படிக் கூவிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் புரியவில்லை.
ராஜஸ்தான் கேரளா போலத்தான்! ஒருமுறை ஆண்ட கட்சி அடுத்தமுறையும் ஆட்சிக்கு வருவதில்லை. இந்தமுறை அதை மாற்றிக்காண்பிப்பேனென்று #பிஜேபி யின் வசுந்தராராஜே முயற்சித்தார். அது கைகூடவில்லை என்பதாலேயே ராவுல்பாபா ஜெயிக்கிற தலைவராக ஆகிவிட்டாரா? தமாஷ்தான்!
சத்திஸ்கர் காங்கிரசுக்கே ஒரு சர்ப்ரைஸ் வெற்றிதான் என்பதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.
.
மத்தியப் பிரதேசத்தில் neck to neck என்று தான் இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி அமைத்தாலுமே கூட அதிருப்தியாளர்கள் ஆட்டத்தைக் கலைத்துவிடுகிற வாய்ப்பே அதிகம்.
மிசோரத்தில், தெலங்கானாவில் காங்கிரஸ் தோற்றிருக்கிறது. தெலங்கானாவில் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் மற்றும் உதிரிகளுடன் கூட்டணி வைத்தும் கூட 20 சீட்தான்! The People’s Front – a combine of the Congress, the TDP, the TJS and CPI – is likely to get around 20 என்கிறது செய்தி
அப்படியானால் பிஜேபியைப் பற்றிச் சொல்ல ஒன்றுமே இல்லையா என்று கேட்கிறீர்களா? இருக்கிறது.
நரேந்திரமோடி என்கிற ஒற்றைப்புள்ளியின் மீதே நீண்டதூரம் பயணிக்க முடியாது என்கிற பாடம்! அவர்களாகக் கற்றுக் கொண்டார்களானால் நல்லது! 2019 நாடாளுமன்றத்தேர்தல்களுக்கு முன்னால் கற்றுக் கொள்ள குறைவான அவகாசமே இருக்கிறது.
ஊடகங்களைப்பற்றிக் கூவுகிற பதிவில் இதையும் பகிர்ந்துகொள்ளாவிட்டால் எப்படி? தனி சேனலா என்ன என்பது விரைவிலேயே தெரிந்துவிடும்!