Showing posts with label பாவம் நாயுடு. Show all posts
Showing posts with label பாவம் நாயுடு. Show all posts

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளும்! ஊடகக் கூவல்களும்!

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளைக் குறித்து என்வரை அதிகமாக அலட்டிக் கொள்வதற்கு எதுவுமில்லை. ஏன் என்றால் பெரும்பாலான எக்ஸிட் கருத்துக் கணிப்புக்களில் ரிசல்ட் என்னவோ ஏறத்தாழ சரியாகவே பிரதிபலிக்கப் பட்டிருந்தது. இங்கே பார்க்க    

டாக்டர்யக்கோவ் தோல்வியால் துவண்டு விடுவதில்லை என்று சமாளிக்கிறார் இங்கே   இன்னொரு முக்கியமான கேள்வி இப்போது மட்டும் வாக்கு இயந்திரங்கள் சரியாக வேலை செய்ததா என்று கேட்டிருக்கிறார்.


திருமாவளவன் வைகோவையும் பக்கத்தில் வைத்துக் கொண்டு ஒரு காமெடி செய்திருக்கிறார். 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் ராவுல்பாபா தலைமையிலான கூட்டணிதான் வெல்லும் என்கிறார். ராவுல்பாபா சென்ற இடமெல்லாம் தோல்வி என்றிருந்தது. இப்போது  இந்த 5 மாநிலத்து தேர்தல் பிரசாரத்துக்கு ராவுல்பாபா போயும் கூட ராஜஸ்தான். சத்திஸ்கர் இரண்டு மாநிலங்களில்  காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருக்கிறது என்பதற்கு மேல் இந்தத் தேர்தல் முடிவுகளில் என்ன அதிசயம் இருக்கிறதென்று ஊடகங்கள் இப்படிக் கூவிக் கொண்டிருக்கின்றன என்பதுதான் புரியவில்லை. 

ராஜஸ்தான் கேரளா போலத்தான்! ஒருமுறை ஆண்ட கட்சி அடுத்தமுறையும் ஆட்சிக்கு வருவதில்லை. இந்தமுறை அதை மாற்றிக்காண்பிப்பேனென்று #பிஜேபி யின் வசுந்தராராஜே முயற்சித்தார். அது  கைகூடவில்லை என்பதாலேயே ராவுல்பாபா ஜெயிக்கிற தலைவராக ஆகிவிட்டாரா? தமாஷ்தான்! 

சத்திஸ்கர் காங்கிரசுக்கே ஒரு சர்ப்ரைஸ் வெற்றிதான் என்பதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். 
.
மத்தியப் பிரதேசத்தில் neck to neck என்று தான் இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி அமைத்தாலுமே கூட அதிருப்தியாளர்கள் ஆட்டத்தைக் கலைத்துவிடுகிற வாய்ப்பே அதிகம்.

மிசோரத்தில், தெலங்கானாவில் காங்கிரஸ் தோற்றிருக்கிறது. தெலங்கானாவில் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் மற்றும் உதிரிகளுடன் கூட்டணி வைத்தும் கூட 20 சீட்தான்!  The People’s Front – a combine of the Congress, the TDP, the TJS and CPI – is likely to get around 20 என்கிறது செய்தி   

அப்படியானால் பிஜேபியைப் பற்றிச் சொல்ல ஒன்றுமே இல்லையா என்று கேட்கிறீர்களா? இருக்கிறது.

நரேந்திரமோடி என்கிற ஒற்றைப்புள்ளியின் மீதே நீண்டதூரம் பயணிக்க முடியாது என்கிற பாடம்! அவர்களாகக் கற்றுக் கொண்டார்களானால் நல்லது! 2019 நாடாளுமன்றத்தேர்தல்களுக்கு முன்னால் கற்றுக் கொள்ள குறைவான அவகாசமே இருக்கிறது.

ஊடகங்களைப்பற்றிக் கூவுகிற பதிவில் இதையும் பகிர்ந்துகொள்ளாவிட்டால் எப்படி? தனி சேனலா என்ன என்பது விரைவிலேயே தெரிந்துவிடும்!