Showing posts with label காங்கிரசும் ஊழல் அரசியலும். Show all posts
Showing posts with label காங்கிரசும் ஊழல் அரசியலும். Show all posts

இட்லி வடை பொங்கல்! #84 #பிரிவினைஅரசியல் #ஊழல்அரசியல் #பரஸ்பரசொறிதல்

கடந்த வியாழக்கிழமை டில்லியில் பிரதமரும் உள்துறை அமைச்சரும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அரசியல் செய்து வரும் கட்சித்தலைவர்களைச் சந்தித்துப் பேசியதில், உள்ளே நடந்த மூன்று மணிநேர விவாதத்தில் என்ன நடந்தது? ஃபரூக் அப்துல்லா, மகன் ஒமர் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி இவர்களெல்லாம் மாநில முதல்வர்களாக இருந்தவர்கள். உண்மையைச் சொல்லப் போனால் காஷ்மீர் பிரச்சினை என மிகைப்படுத்தப் பட்ட  ஒன்றை ஊதிப்பெரிதாக்கியவர்கள் இவர்கள்தான்! மக்களுக்காகப் பேசாமல், சுயநலங்களுக்காக ஆட்சியும் அதிகாரமும் வேறு எவர் கைக்கும் போய்விடக் கூடாது என்பதில் குறியாக இருப்பவர்கள் என்பதை வெளியே வந்து ஊடகங்களிடம் வீராவேசமாகப் பேட்டி அளித்து வெளிப்படுத்தியவர்கள்.  

வீடியோ 12 நிமிடம் 

ஃபரூக் அப்துல்லா ஊர் போய்ச்சேர்ந்ததும் பொது வாக்கெடுப்பு, நேரு முதல் நரசிம்மராவ் வரை பிரதமராக இருந்தவர்கள் கொடுத்த வாக்கை நிறைவேற்றவில்லை என்று கிளிப்பிள்ளை மோடுக்குப் போய்விட்டார். மகன் ஒமர் அப்துல்லாவோ  “It took the BJP 70 years to fulfill its political agenda for (Article) 370. Our struggle has just started. We don’t want to fool people by telling them we will get 370 back in these talks. It will be foolish to expect 370 will be back — there has been no indication it will be restored by the current government.” என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்குப் பேட்டி கொடுக்கிறார் என்றால் எங்களிஷ்டத்துக்கு விடாவிட்டால் பிரிவினை பேசவும், துணைபோகவும்  தயங்கமாட்டோம் என்கிற தொனி அப்பா மகன் இருவருடைய பேச்சிலும் இருக்கிறது. இங்கே தமிழகத்தில் கூட 1920 நீதிக்கட்சி அரசாண்ட கதையின் நீட்சியாக அறிவித்துக் கொண்டது, ஒன்றிய சர்ச்சை முதல் ஜெய்ஹிந்த் இடம் பெறாததற்கு பாராட்டுரை என்று J & K அரசியல் வாதிகளுடைய சாயல் நிறையவே தெரிகிறதோ?


புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமியின் கேள்வியில் நியாயமான சந்தேகம் எழுகிறது. ஆளுநருக்கு இது தொடர்பாகக் கடிதம் ஒன்றையும் அனுப்பியிருக்கிறார். 


சோனியா காந்தி வகையறா ஊழலின் மொத்த உருவம் என்பதை 2004-2014 வரை ஐமுகூட்டணி மன்மோகன் சிங் அரசு நிரூபித்தது. ராஜீவ் காந்தி அறக்கட்டளை என்று சோனியா ஆரம்பித்தற்கு  மன்மோகன் சிங் அரசு 100 கோடி நிதி கொடுத்தது. அரசுநிதி பெறுகிற நிறுவனங்கள் எதுவானாலும் சில நிபந்தனைகளும், அரசின் தணிக்கையும் (audit) உண்டு. ஆனால் ராஜீவ் காந்தி அறக்கட்டளை அரசின் நிபந்தனைகள் தணிக்கை எதற்கும் உடன்படவில்லை. அதுவும்போக வருகிறவன் போகிறவனிடமெல்லாம் நிதி நன்கொடையாக வாங்கி குவித்ததில் சீனர்களின் சார்பு நிறுவனமும் உண்டு. ஜாகிர் நாயக் மாதிரி மலேசியா ஓடிப்போன இஸ்லாமியத் தீவிரவாத ஆதரவுப்  பிரசாரகரும் உண்டு. ஜாகிர் நாயக் எதற்காக இந்த அறக்கட்டளைக்கு 50 லட்சம் நன்கொடை? அதுவும் சும்மாக் கொடுத்தாராமா? 


தகவல் ஒளிபரப்புத்துறை ராஜாங்க அமைச்சராக இருந்த மனீஷ் திவாரிக்கு, சிறுபான்மையினர் விவகார அமைச்சர் 2013 இல் எழுதிய சிபாரிசுக்கடிதத்தின் இரு பாராக்களும் விஷயம் இன்னதென்று பல்லிளித்துச் சொல்கிறதே! 


நம்மூரில் அப்படி கடிதம் மூலம் எதுவும் சொல்லக் கூட வேண்டியதே இல்லை! நம்புங்கள்! இது திமுக ஆட்சி!  


இது 2009 இல் நக்கீரன் இதழில் வெளியான கொங்கு ஈ
ஸ்வரன் வாழ்க்கை வரலாறு. பெருமாள் முருகன் நாவலை விட அந்தநாட்களிலேயே பரபரப்பான செய்தியாகத் தான் இருந்திருக்கும் போல! நக்கீரனே 2பக்கச் செய்தி போட்டிருக்கிறதென்றால்! படத்தைப் பெரிதாக்கிப் படித்துப் பாருங்கள். 

கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் திமுகவிடம் இருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ரூ. 15 கோடி, மார்க்சிஸ்டுகளுக்கு ரூ. 10 கோடி, கொங்கு ஈஸ்வரன் கட்சிக்கு ரூ. 15 கோடி நன்கொடை அளிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையத்திடம் கணக்கு காட்டப்பட்ட கதை நினைவிருக்கிறதா? பரஸ்பர சொறிதல்கள், முன்களப் பணியாளர்களுக்கு  நீண்டகாலமாகவே கிடைத்து வருகிறது என்பதைத் தாண்டி வேறென்ன சொல்ல?

மீண்டும் சந்திப்போம்.                       

ராகுல் காந்திக்கு அரசியல் சரிப்பட்டு வரவில்லையா? வேறு வேலை பார்க்கப்போகலாமே!



ராகுல் காண்டி  சும்மா இருந்தாலும் விட மாட்டார்கள் போலிருக்கிறது! காங்கிரசின் உதவித் தலைவராம்! சோனியாவுக்கு அடுத்தபடி அதிக அதிகாரம் படைத்தவராம்!அதைவிடப் பெரிய தமாஷ், காங்கிரசை மாற்றிவிட முடியுமென்று தனக்கு நம்பிக்கை இருப்பதாக ராகுல் பேசியிருப்பதுதான்! காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்களின் அலப்பறை, கும்மிச்சத்தம் தாங்க முடியவில்லை! இவ்வளவு கஷ்டப்பட்டாவது கூஜா தூக்கவில்லை என்று யார் அழுதது?


சென்ற மாதம் பதினேழாம் தேதி திரு ராமச்சந்திர குஹா தன்னுடைய புத்தகமான Patriots and Partisans வெளியிடப்பட்டதை  ஒட்டி திரு விவேக் கௌலுக்கு ஒரு பேட்டி அளித்திருந்தார். அதில் மிக வெளிப்படையாகவே, ராகுல் சராசரிக்கும் மிகவும் கீழே! (அரசியல் தவிர) வேறு வேலை பார்க்கப் போகட்டும்  என்று சொல்லியிருந்தார். இந்தப் பேட்டியில்,திரு ராமச்சந்திர குஹா வேறு சில முக்கியமான விஷயங்களையும் குறிப்பிட்டுச் சொல்லி ருக்கிறார். புத்தகம் இப்போது வாசிப்பில் இருக்கிறது.இரண்டு வருடங்களுக்கு முந்தி எழுதிய ஒரு பதிவு, பொருத்தம் கருதி, இப்போது மீள்பதிவாக.
ooOoo

 
 


ஜான் பிட் ஜெரால்ட் கென்னெடி! ஒரு சகாப்தம் என்று சொல்லிக் கொள்ளலாம்! ஆனால் அந்த சகாப்தத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கு என்ன பலன் இருந்தது என்பதை மட்டுமே அடிப் படையாக வைத்துப் பார்த்தால், இந்த மாதிரி சகாப்தங்கள் என்று சொல்லப்பட்டவர்கள் ஒரு சாபமாகவே இருந்திருக்கிறார்கள் என்பதை வரலாறு சொல்லும். அமெரிக்க அரசியலில், ஜனநாயகக் கட்சியின் வரலாற்றில் ஏறத்தாழ ஐம்பத்தைந்து வருடங்களுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்த கென்னெடி குடும்பத்தில் இருந்து, வருகிற 2011 ஆம் ஆண்டில் எவருமே இருக்க மாட்டார்களாம்! இதை ஒரு சகாப்தத்தின் முடிவு என்று  வைத்துக் கொண்டாலும் சரி! ஒரு சாபத்தின் முடிவு என்று வைத்துக் கொண்டாலும் சரி!



இந்த
செய்தியைப் பார்த்த போது முதலில் கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது! அப்புறமாக, "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே" என்று நன்னூல் சூத்திரம் மாற்றங்களைக் குறித்துச் சொல்வது எவ்வளவு பொருத்தமானது என்பதும் யோசித்துப் பார்க்கையில் தெளிவாகப் புரிந்தது!  


கடைசிப் பாராவைக் கொஞ்சம் கவனியுங்கள்! நேருவின் அமெரிக்க விஜயம் கென்னடியைப் பொறுத்தவரை மிகக் கசப்பானதாகவே இருந்ததாம்.. நேருவின் பார்வை, கரங்கள் தன் மனைவியின் மீது படுவதை சகித்துக் கொள்ள முடியாத எரிச்சல் கென்னடிக்கு இருந்ததையும்  இந்தப் பாரா சொல்கிறது. பெண்கள் என்றாலே நேருவுக்கு ஒரு "கிறக்கம்" இருந்ததையும் சொல்கிறது.



இங்கேயும், நேரு குடும்பத்து வாரிசுகள் எவருமே அரசியலில் இல்லாமல் போகிற ஒரு காலம், இந்த தேசத்தைப் பிடித்த சாபத்தில் இருந்து விடுதலை என்ற திருநாளும் வாராதோ என்று எண்ணத் தோன்றுகிறதல்லவா!

மாற்றங்கள் வரும்! புதிய மொந்தையில் பழைய கள்ளை மட்டுமே பரிமாறத் தெரிந்த, ஊழல் முடை நாற்றம் பிடித்த காங்கிரஸ் கட்சியின் பிடியில் இருந்து இந்த தேசம் விடுதலை பெறும் திருநாளும் வரும்!

நம்பிக்கையாகவும், பிரார்த்தனையாகவும்!


*******
தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் என்றால் என்ன?
 
பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்னால், குறிப்பாக, நரசிம்ம ராவ் காலத்தில் அறிமுகமான பொருளாதார சீர்திருத்தங்கள் சமயத்தில் இந்த வார்த்தைகளை விளக்குவது, விளங்கிக் கொள்வது கடினமாகவே இருந்தது.இணையத்தில் சில வருடங்களுக்கு முன்னால், பிரிட்டிஷ் இளவரசி டயானா தன்னுடைய காதலர் டோடி பேயட் உடன் கார் விபத்தில் பரிதாபமான முறையில் இறந்துபோன சம்பவத்தைத் தொட்டு, குரூரமாக இருந்தாலும் கூட அதிலும் கூட கொஞ்சம் நகைச்சுவை கலந்து ஒரு வியாக்கியானம் உலாவந்து கொண்டிருந்தது, இன்றைக்கு மறுபடி கண்ணில் பட்டது.
ஒருவர் கேட்கிறார்: தாரளமயமாக்கல், உலகமயமாக்கல் என்றால் என்ன?

அதற்குப் பதில் வருகிறது பாருங்கள்!! "இளவரசி டயானாதான்!"

எப்படி என்று மேலும் விளக்கம் கேட்பதற்கு முன்னாலேயே வருகிறது.

"ஒரு பழமைவாதப் பெருமை பேசும் ஆங்கிலேய அரச குடும்பத்துப் பெண், இளவரசி தன்னுடைய எகிப்துக் காதலனோடு, பிரெஞ்சு  சுரங்கப்பாதையில் டச்சு எஞ்சின் பொருத்திய ஜெர்மன் காரை
, பெல்ஜியத்தை சேர்ந்த டிரைவர் ஸ்காட்ச் விஸ்கியைக் குடித்துவிட்டு ஓட்ட, இத்தாலியப் பத்திரிகையாளர் துரத்த எங்கேயோ எப்படியோ இடிபட்டு விபத்தாகிக் காயப்பட்டு,  அமெரிக்க டாக்டர் பிரேசிலிய மருந்தைக் கொடுத்து சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் இறந்து போனாரே அது தான்!"

தாராளமயம், உலகமயம் என்பதை இதை விட சுருக்கமாக, பொருத்தமாக சொல்லிவிட முடியாது என்று தான் தோன்றுகிறது.



இங்கே உலகமயம்,தாராளமயம்  என்றால், எங்கோ ஒரு வெளிநாட்டில் பிறந்தவர்  இங்கே வாழ்க்கைப்பட்ட  ஒரே காரணத்தால், அந்தக் குடும்பத்துக்குக் கூஜா தூக்குவதற்கென்றே ஆட்களும் அதிகாரிகளில் சிலரும் இருப்பதால் கட்சி ஆட்சி இரண்டையும் கைப்பற்ற முடிகிறது.அந்தக் குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்தால் அனுபவமே இல்லாத ஒரு சிறுபிள்ளை, வருங்காலப் பிரதமராக சித்தரிக்கப்படுகிறார். இத்தனை தாராளம், உலகமயம் வேறெந்த நாட்டில் நடக்கும்?
 

உங்களுக்கு எப்படியோ...?!

2G ஸ்பெக்ட்ரம் ஊழலும், இணையப் பரப்புரைகளும்! #செஞ்சது சரியா சொல்லு ராசா!



.ராசா, ஜாமீனில் வெளியே வந்து, சில நாட்களில் புதிய தலை முறை தொலைக் காட்சிக்கு, தான் எந்தத் தவறுமே செய்யவில்லை என்ற ரீதியில் ஒரு பேட்டி கொடுத்திருந்தார்.உடனே 2G வழக்கும், திரு.ஆ.ராசா அவர்கள் நேர்காணலும் பின்னே ஒரு புஸ்ஸ் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.... ஆன மாய பலூனும்! தகத்தகாய சூரியன் புறப்பட்டு விட்டார், ஊடகங்களின் பொய்யைக் கிழித்தெறிந்து விட்டாரென்ற ரீதியில் சில திமுக நண்பர்கள் கூகிள் ப்ளஸ், முகநூல் முதலான சமூக வலைத்தளங்களில் பரப்புரை செய்ய ஆரம்பித்தார்கள். 

இணையத்தில் கட்சி  வளர்ப்பதோடு, இணையத்திலேயே ஆ.ராசாவைக் குற்றமற்றவர் என்று நிரூபிக்க அவர்கள் செய்த பரப்புரை முயற்சிகள், கொஞ்ச நாட்களிலேயே சுருதி குறைந்து, சுத்தமாகக் காணாமலும் போய்விட்டது! ஆ.ராசா பேட்டியை அடுத்து அடுத்து, நாடாளுமன்றக் குழு முன்னால் சிபிஐ, அமலாக்கத் துறை  கொடுத்த அறிக்கையில் கலைஞர் தொலைக் காட்சிக்குப் பணம் வந்த விதம் லஞ்சமாகத்தான் என்றும், கனிமொழி, தயாளு இருவரையும் கைது செய்ய முகாந்திரம் இருப்பதாகச் சொன்னதில் சுருதிப்பெட்டியே தொலைந்து விட்டதோ என்னவோ! 

அப்புறம் ரிசர்ச் அண்ட் அனலிசிஸ்  விங் எனப்படும் இந்திய உளவுத் துறை ஆராசா  சட்டவிரோதமாக ஹவாலா மோசடி செய்து சுமார் நூற்றுப்பத்துக் கோடி ரூபாய் வெளிநாட்டில் முதலீடு செய்தார் என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டது! இப்போது அதன் மீது சிபிஐ விசாரனை தொடங்கியிருப்பதில் சென்னையை சேர்ந்த ராஜேஷ் ஜெயின் என்பவர் கொஞ்சம் வித்தியாசமாக அலறியிருக்கிறார்.

ஆ.ராசா அவரது  நண்பரோ, உறவினரோ, கூடப் படித்தவரோ, ஒரே பொதுவான மொழி பேசுபவரோ, ஒரே மதத்தை சேர்ந்தவரோ இல்லையாம்! ஊழல் என்பது இதையெல்லாம் கடந்தது, கூட்டாளிகளாக்குவது என்பது இவருக்குத் தெரியாதோ?

இன்றைய தினமணி தலையங்கம், இணைய உளுந்துகள் பரப்புரை முயற்சியை தவிடுபோடியாக்கியிருக்கிறது. கொஞ்சம் அல்ல! மொத்தமாகவே!
கலையும் ஒப்பனைகள்..!

First Published : 09 Aug 2012 01:52:58 AM IST



2ஜிஅலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்டது என்பது சுத்தப் பொய். இது தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் (சி.ஏ.ஜி.) கற்பனைக் கணக்கு' என்று வாதம் செய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகள், தற்போது அது கற்பனை அல்ல, உண்மைதான் என்று ஒப்புக்கொள்ளும் நிலைமைக்கு ஆளாகியுள்ளன.

முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்கிற பாஜக அரசின் கொள்கை முடிவின்படியே அலைக்கற்றை ஒதுக்கப்பட்டது என்று ஐக்கிய முற் போக்குக் கூட்டணிக் கட்சிகள் கூறின. ஆனால், முதலில் விண்ணப்பம் கொடுத்தவர்கள் என்ற அடிப்படையை, முதலில் பணம் அல்லது காசோலை கொடுத்தவர்கள் என்று மாற்றியது தவறு என்று நீதிமன்றம் தெளிவாகக் கூறிவிட்டதால், இதற்குப் பதில் சொல்லத் தெரியாமல் மத்திய அரசு திணறிக் கொண்டிருக்கும் வேளையில், இப்போது சி.ஏ.ஜி. போட்ட கணக்கில் தவறில்லை என்பதைச் சொல்லாமல் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

செல்போன் நிறுவனங்களின் 122 உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்ததால், அந்த அலைக்கற்றைகளுக்கு மறுஏலம் நடத்தவுள்ள மத்திய அரசு, தற்போது நிர்ணயித்துள்ள அடிப்படைத் தொகை ஜிஎஸ்எம் (குளோபல் சிஸ்டம் ஆப் மொபைல்) சேவைக்கு 5 மெகாஹெர்ட்ஸ் ரூ.14,000 கோடி! சிஎம்டிஏ (கோட் டிவிஷன் மல்டிபிள் அக்ஸஸ்) சேவைக்கு ரூ.18,200 கோடி!

சிஏஜி போட்ட கணக்கு முழுக்க முழுக்க சரி என்பதை இதன் மூலம் நாம் அளவிட முடியும். தற்போது ஜிஎஸ்எம் சேவைக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ள கட்டணத்தின்படி 1,800 மெகா ஹெர்ட்ஸ் விற்பதால் அரசுக்குக் கிடைக்கக் கூடிய அடிப்படைத் தொகை ரூ. 2.52 லட்சம் கோடி.

2008-ல் நடந்த 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில், ஒரு மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றை ரூ.1,658 கோடிக்கு விற்கப்பட்டது. 1,800 மெகா ஹெர்ட்ஸ் மூலம் அரசுக்குக் கிடைத்த வருவாய் ரூ.1.02 லட்சம் கோடி மட்டுமே! ஆனால் தற்போது, 1.50 லட்சம் கோடி அரசுக்கு கூடுதலாக கிடைக்கிறது.

இன்னும் சொல்லப்போனால், இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் பரிந்துரைத்த தொகை, ஜிஎஸ்எம் சேவையில் 5 மெகா ஹெர்ட்சுக்கு ரூ.18,000 கோடி. இதை அப்படியே நிர்ணயம் செய்திருந்தால் அரசுக்குக் கிடைத்திருக்கக்கூடிய தொகை ரூ. 3.24 லட்சம் கோடி!

 2010-ல் மத்திய அரசு 3ஜி அலைக்கற்றைக்கு நிர்ணயித்த தொகையை அடிப்படையாகக் கொண்டு, 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் இந்திய அரசுக்கு ரூ.1.39 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், உரிமம் பெற்ற நிறுவனங்கள், ஒதுக்கப்பட்ட 6.2 மெகா ஹெர்ட்சுக்கும் கூடுதலாக அலைக்கற்றையைப் பயன்படுத்தியதற்கான கட்டணம் வசூலிக்காத வகையில் அரசுக்கு இழப்பு ரூ.36,000 கோடி என்றும், ஆக மொத்தம் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு இழப்பு' என்று இதைத்தானே தலைமைக்கணக்குத் தணிக்கைத் துறையினரும் சரியாகக் கணக்கிட்டுச் சொன்னார்கள்!

அந்த அறிக்கையைத்தானே வெறும் கற்பனை என்று மத்திய அமைச்சர்கள் கூறினார்கள்! கூட்டணிக் கட்சியின் மேடைகளில் எள்ளி நகையாடினர்! முறைகேடு நடந்தபோது அதற்கு அனுமதி மறுக்காத அன்றைய நிதியமைச்சரும், இப்போது உள் துறையிலிருந்து மீண்டும் நிதித்துறை பொறுப்பேற்றிருக்கும் ப. சிதம்பரமும், ஏனைய அமைச்சர்களும், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கப் படாதபாடு பட்டார்கள்!

3ஜி அலைக்கற்றை விலையை 2ஜி விலையோடு ஒப்பிடலாமா, அம்பாஸிடர் காரையும் பிஎம்டபிள்யு காரையும் ஒப்பிட முடியுமா என்று கேலி பேசினார்கள்! மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சராக, ஆ.ராசாவுக்குப் பிறகு பொறுப்பேற்ற, கபில் சிபல், அலைக்கற்றை ஒதுக்கீட்டில் "இழப்பு ஒன்றுமே இல்லை' (ஜீரோ லாஸ்) என்று சொன்னாரே! ஆனால், இப்போது அதே அமைச்சர் இடம் பெற்றுள்ள மத்திய அமைச்சரவைதான் இந்தத் தொகையை நிர்ணயம் செய்திருக்கிறது!

ஜீரோ லாஸ் (இழப்பு ஒன்றுமே இல்லை) என்று அமைச்சர் கபில் குறிப்பிட்டாலும், ஏழைகளும் செல்போன் பயன்படுத்தவே குறைந்த கட்டணத்தில் விற்றோம் என்று ஆ. ராசா கூறினாலும், அந்த வாதங்கள் எடுபடவில்லை. ஏனென்றால், 2008 அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்றவர்கள் தங்கள் நிறுவனத்தின் பங்குகளை விற்று பல மடங்கு லாபம் பெற முடிந்தது.

ஸ்வான் டெலிகாம் 340 மில்லியன் டாலருக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்று, வெறும் 45% பங்குகளை 900 மில்லியன் டாலருக்கு விற்றது. யூனிடெக் நிறுவனம் 365 மில்லியன் டாலருக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு பெற்று, 60% பங்குகளை 1.36 பில்லியன் டாலருக்கு டெலினார் நிறுவனத்துக்கு விற்றது.

பொன்முட்டையிடும் வாத்து என்பது தெரிந்தே, அதைப் பற்றி கவலைப்படாமல் அல்லது அந்த உண்மையை வேண்டுமென்றே மறைத்து, சாதாரண வாத்துகளுக்கான விலைக்கு விற்றால், அதற்குப் பெயர் ஊழல் அல்லாமல் வேறென்ன?


 பிப்ரவரி 2012-ல் உச்ச நீதிமன்றம் 122 உரிமங்களை ரத்து செய்தது. இன்னமும் மத்திய அரசு ஏலம் நடத்தவில்லை. நடத்தவிடாமல் சில சுயநல சக்திகள் தடுக்கின்றன என்கிற சந்தேகமும் எழாமல் இல்லை. ஆகஸ்ட் 3-ம் தேதிதான் விலையை நிர்ணயித்துள்ளனர். ஏற்கெனவே இருக்கும் நிறுவனங்களைத் தவிர, புதிய நபர்கள் யாரும் ஏலத்தில் பங்குகொள்ள முன்வரவில்லையே ஏன் என்பதும் புதிராக இருக்கிறது. இதுகூடக் கூட்டு சதியோ என்னவோ, யார் கண்டது?

இந்த ஏலம் மேலும் சில மாதங்கள் தள்ளிப்போகலாம் என்று சொல்லப் படுகிறது. ஒப்பனைகள் யாவும் கலைந்துபோன நிலையில், புது ஒப்பனையுடன் தோன்றுவதற்காக இந்தக் காலநீட்டிப்பு அவசியமாக இருக்கிறதோ என்னவோ?