Showing posts with label மீள்பதிவு. Show all posts
Showing posts with label மீள்பதிவு. Show all posts

போகும் திசை மறந்து போச்சு!

2009 ஆம் ஆண்டிலேயே இரண்டு முறை போகும் திசை மறந்து போனதா என்று என்னை நானே விசாரித்துக் கொண்டு பதிவுகள் எழுதினேன். இன்றும் கூட அந்த விசாரணையை என்னிடம் நடத்திக் கொண்டுதான் ஆக வேண்டும் போல இருக்கிறது என்பதனால் இது ஒரு மீள்பதிவு தான்  

போகும் திசை மறந்து போச்சு-இங்கே

பொய்யே வேதமுன்னு ஆச்!சு

வைரமுத்துநீர்த்துப்போய்விடாமல் கவிதையை கவிதையாகவும்லட்சியக் கனவுகளோடும் எழுதின நாட்களில் இளைய ராஜா இசையமைப்பில் உருவான பாடல் இதுகண் சிவந்தால் மண் சிவக்கும் என்ற படத்தில்இடதுசாரிச் சிந்தனைகளில் இருந்த ஸ்ரீதர்ராஜன் என்ற இளம் இயக்குனரின் படைப்புக்காகஇளையராஜாவைரமுத்துவின் வரிகள் வெற்று வரிகளாகவே போய் விடாமல் கவிதை வரிகளுக்கு இசையால் உயிர் கொடுத்த பாடல் இது.

ஸ்ரீதர் ராஜனுடைய நண்பர்கள் இருவர் எனக்கும் நட்பான நாட்களில்இந்தப் படத்தின் பாடல் ஒலிப்பேழையை சுடச் சுடக் கொண்டுவந்து கொடுத்த நாட்கள்அப்படியே ஸ்ரீதர் ராஜனை ஓரிருதடவை சந்திக்கிற சந்தர்ப்பமும்கிடைத்தது.......இந்தப்பாடலைக் கேட்கும்போதெல்லாம் நினைவுக்கு வரும்ஸ்ரீதர் ராஜன்பின்னாட்களில் ஜெமினி கணேசனுடைய மாப்பிள்ளையாகிப் போனார்அவர் பேசின லட்சியம்கம்யூனிசம் எல்லாம் கனவாய்ப் பழங்கதையாய்ப் போனதும் நினைவுக்கு வரும்போது சிரிப்புத் தான் வருகிறது.ஜெமினிக்கு மாப்பிள்ளை ஜெமினி மாதிரியேபெண்ணுக்கு அடிமையாகத் தானே இருக்க முடியும்இது என்ன புதுக்கதை என்று தோன்றுகிறதா?

ஜெமினி கணேசனைப் பற்றி பேசும்போது வேறொன்றும் வேடிக்கையாக நினைவுக்கு வருகிறதுமனிதனைப் பற்றிப் பெரிய காதல் மன்னன்பெண் பித்தன்இன்னும் என்னென்னவோ நினைத்துக் கொண்டிருக்கிறோம் இல்லையாஉண்மையில்ஜெமினி கணேசன் பெண்ணுக்கு அடிமையாகவே கடைசி வரை வாழ்ந்த ஒரு மனிதன்! ஜெமினியின் சரிதம் எழுத நிறையப்பேர் இருப்பதால், அந்த வேலையை அவர்களே தொடரட்டும்!

இந்த ஒரு தகுதிக்காகவேஜெமினிக்குத் தபால் தலையும் வெளியிட்டுஇந்திய அரசு கவுரவப் படுத்தியது போலிருக்கிறதுபெண்ணடிமைத்தனம் என்று பேசுபவர்கள்பெண்ணுக்கு அடிமைத்தனம் என்று ஒன்று இந்த நாட்டில் இருந்ததையே அறியாதவர்கள்பாவம்!!

காதல் மன்னன் ஜெமினி கணேசனுக்குத் தபால் தலைதமிழ் வளர்த்த சுத்தானந்த பாரதிக்கு இல்லையா என்று ஒருத்தர் குமுறியதையும் இந்தப் பக்கங்களில் ஏற்கெனெவே பேசியிருக்கிறோம்! சுத்தானந்த பாரதியார் என்ற தலைப்பில் தேடுங்கள்கிடைக்கும்!

ஆங்...எதற்காக இப்போது இதைப் பேச ஆரம்பித்தோம்போகும் திசை மறந்து போச்சுபோச்சாஇல்லியான்னு கொஞ்சம் என்னையே விசாரிச்சுக்கத் தான்


கோவி கண்ணன்அவருடைய ஒரு பதிவின் பின்னூட்டங்களில்என்னுடைய ப்ரொபைலைப் பார்த்துவிட்டுவயதுவிவரங்களையும் பார்த்து விட்டுகொடி பிடிப்பதைப் பற்றி எழுதினதில் ஒரு சுய பச்சாதாபம் தெரிந்ததாகச் சொல்லியிருந்தார்அதுவும்...........

இன்னொரு நண்பர் கபீரன்பன் என்ற பெயரில்கபீர்தாசருடைய ஈரடிக் கவிதைகளை எளிய தமிழில்அவருடைய அனுபவத்தில் அறிந்ததையும் சேர்த்து எழுதிக் கொண்டிருக்கிறார்இந்த மாதிரி முயற்சிகளில் தான்சிந்தனை,ஒரு குறுகிய எல்லைகளில் இருந்து விடுபட்டுவிரிந்துபறந்து ஒரு புதிய பரிணாமத்தை அடைகிறதுஎன்னுடைய ஒரு பதிவை ரீடரில் படித்து விட்டுவேறொரு பதிவுக்கு பின்னூட்டம் எழுதினார்எனக்கு ஒரு விஷயத்தை மறைமுகமாகத் தெளிவுபடுத்துகிற மாதிரி எழுதியிருந்ததிலும்.........

போகும் திசை என்ன என்பதைப் பற்றி மறுபடியும் யோசிக்க வேண்டி வந்ததுமுதலில் சொன்ன மாதிரி போகும் திசை நெசமாவே மறந்து போச்சா என்னஅப்படியும் போய்விடுமா என்ன என்ற கேள்வியேஇந்தப் பாடலை நினைவுபடுத்திக் கொள்வதிலிருந்து ஆரம்பித்தது!

"தற்போது தான் (2009இல்) உங்கள் புரொபைல் பார்த்தேன்வயது 55 என்றிருந்ததுஇளையர்கள் பொறுப்பு இல்லாமல் இருக்கிறார்கள் என்று கோபம் வரக் கூடிய வயதுவயதின் காரணமாகவே தமக்கு எல்லாம் தெரிந்திருக்கும் என்றே நினைக்கக் கூடிய வயது."

//கொடி பிடித்த காலம் எல்லாம் எப்பவோ!அது செங்கொடிஅதுகூட லட்சிய வெறியோடு மட்டுமே இருந்ததுநபர்களின் மீது அல்ல.//

அதையும் படித்தேன்சுய பட்சாதாபம் ஓங்கி இருந்தது. 50 வயதுக்கு மேல் சில தீவிர நாத்திகர்கள் கூட தீவிர ஆத்திகர்கள் ஆகிவிடுங்கஅப்போது தான் உலகம் நிலையல்லஉடல் நிலையல்ல என்கிற உண்மை புரியும் போல :)

இது கோவி கண்ணன் சொன்னதுகாயமே இது பொய்யடா-வெறும் காற்றடைத்த பையடா இப்படி நான் பாடிக் கொண்டிருப்பது போலஉலகே மாயம்-வாழ்வே மாயம் என்று ஐம்பதுக்கு மேல்தான் தெரியவரும் என்பது போலஅவர் சொல்கிற மாதிரி இல்லை?!



கபீரன்பன் சொல்லாமல் சொன்னது வேறு மாதிரி இருக்கிறது!

ரொம்ப போரடிக்கிறது-என்ன செய்யலாம்? என்ற பதிவில் ஸ்ரீ அரவிந்த அன்னையின் உரையாடல்களிலிருந்து ஒரு பகுதியை எடுத்து இப்படிச் சொல்லியிருந்தேன்:

இப்படிப் பட்ட சூழ்நிலையை எப்படி எதிர்கொள்வது என்பதைப் பற்றி ஸ்ரீ அரவிந்த அன்னை சொல்கிறார்:

"இப்படிக் கொஞ்சம் நேரம் கிடைக்கும் போதுஅது சிலநிமிடங்களோசில மணி நேரமோ,உனக்குள்ளேயே சொல்லிக் கொள்: " ஒருமுகப்படுத்திக் கொள்ளவும்ஒன்று சேர்த்துக் கொள்ளவும்என்னுடைய வாழ்க்கையின் பொருளை வாழ்ந்து பார்ப்பதிலும்உண்மையும் பரம சத்தியமாகவும் இருக்கும் ஒன்றிடம் என்னை சமர்ப்பிப்பதற்கும்ஒரு வழியாக எனக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது."


கபீரன்பன் said...
August 17, 2009 9:09 AM

//உண்மையும் பரம சத்தியமாகவும் இருக்கும் ஒன்றிடம் என்னை சமர்ப்பிப்பதற்கும்ஒரு வழியாக எனக்குக் கொஞ்சம் நேரம் கிடைத்திருக்கிறது //

மிகவும் பொருள் பொதிந்த சத்தியம்அதை உணர்வதற்கான விவேகம் அவனருளாலேதான் கிடைக்கும்.

சிந்திக்க வேண்டிய அன்னையின் கருத்துகளை எடுத்துக் காட்டியதற்கு நன்றி

கிருஷ்ணமூர்த்தி said...
August 17, 2009 9:19 AM

ஒரு சராசரி மனிதனாக இருந்துஇதைஉணர்வதும் கடைப்பிடிப்பதும் எவ்வளவு கடினமான காரியம் என்பதை சொந்த அனுபவத்திலேயேஅதுவும் கடந்த சில நாட்களிலேயே கண்டுகொண்டேன்.

"அப்போதைக்கிப்போதே சொல்லி வைத்தேன்என்று ஆழ்வார்கள் சொன்னது ஏன் என்றும் தெரிய வர ஆரம்பித்திருக்கிறது!

வருகைக்கும்என்னுடைய இப்போதைய மனநிலையை எனக்கே காட்டி அருளியதற்கும் மிகவும் நன்றி!

கபீரன்பன் சொல்லாமல் சொன்னதென்ன என்பதை அவரவர்கள் அனுபவம்அறிவுக்குத் தகுந்தபடி தாங்களே தெரிந்துகொள்ளட்டும் என்பதைமுதலில் ஒரு தனிப்பதிவாக அன்றைக்கு எழுத ஆரம்பித்துஅப்படியே நிறுத்திக் கொண்டேன்.

Evolution என்ற குறியீட்டுச் சொல்லுடன் தேடினால்,இந்தப் பதிவில் ஆறு இடுகைகளில்மேலே சொன்ன முரண்பட்ட இரண்டு கருத்துக்களைப் பற்றி முன்னமேயே பேசியிருப்பது தான் என்பது தெரியும்.

என்னுடைய சொந்த அனுபவங்களைப்பற்றி ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற தலைப்பில் கொஞ்சம் பேசியிருக்கிறேன்.

நடைமுறை வாழ்க்கையில்பழக்கங்களின் அடிமையாகவே இருந்து விடுவதான'பன்றியோடு சேர்ந்த கன்றுக்குட்டியாக' ஆகி விடாமல் இருப்பதற்குகொஞ்சம் சிரமப் பட்டுத் தான்வெளியே வர வேண்டியிருக்கிறதுஇந்த முயற்சி கூட இல்லை என்றால், 'பகுத்தறிவுஎன்ற சொல் எப்படி இன்றைக்குஅதன் உண்மையான பொருளில் இல்லாமல்வேறு விதமான அசட்டுத்தனமாக இருக்கிறதோஅது மாதிரி ஆகி விடும்நடைமுறை வாழ்க்கையில்இப்படி ஒன்றை எதிர்ப்பது என்பது ஏன் என்று தெரியாமலேயே அதன் பின்னால் கூட்டமாக ஓடுவதுசேரிடம் அறியாமலேயே சேர்ந்துஅதிலேயே சிக்கிக் கொள்வதுதான்ஒரு சிக்கலில் இருந்து விடுபடுகிறேன் என்று இன்னொரு புதைகுழிக்குள் விழுந்து விடுவது மாதிரித்தான்.

அடுத்துகற்றல் என்பது தொடர்ந்து நிகழ்வதுஒரு தடவை குடத்தை நிரப்பியதும் முடிந்து போவதில்லை.நெருப்பு இன்னும் இன்னும் என்று கேட்பது போலசாப்பிட்ட நான்கு அல்லது ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு மறுபடியும் பசி எடுப்பது போல தொடர்ந்து கொண்டே இருப்பதுஉயிர்மையின் ஒரு அடையாளமேஇந்த 'இன்னும்இன்னும்' தான்!

“For the Divine is Freedom and any interference with the freedom of choice, freedom of action, of the evolving soul is against the Truth and Purpose of the manifestation.”

பகுத்தறிவுபகுத்தறிவு என்று சொல்கிறார்களே அது இது தான்இந்த உண்மையைப் புரிந்து கொள்வது தான்.

இறைநிலை நம்முடைய போக்கில் ஒருபோதும் தலையிடுவது இல்லைஒவ்வொரு முக்கியமான தருணத்திலும் நேர் எதிரான பாதைகள் பிரிவதைஅதில் எதைத் தேர்ந்தெடுப்பது என்று தேர்ந்தெடுக்கிற சுதந்திரத்தை இறையருள் நமக்கு வழங்கியிருக்கிறதுதேர்ந்தெடுத்தது எதுவோ அதற்குரிய வகையில் அடுத்தடுத்த அனுபவங்கள்படிப்பினைகள் என்று நம்மைநமக்குத் தெரிந்தோ அல்லது தெரியாமலோ வழிநடத்திக் கொண்டே இருக்கிறதுவிளையாட்டில் மும்முரமாக இருக்கிற குழந்தையைஅதன் போக்கிலேயே அம்மாக்காரி விட்டு விடுவதைப் போலத் தான் இது.

அன்று பார்த்த சாரதியாக வந்தவனேநமக்கும் ஆத்ம சாரதியாக இருந்து கொண்டு நம்மையும்நமக்குத் தெரிந்தோதெரியாமலோநம்முடைய சம்மதத்துடனோஇல்லாமலோவழிநடத்திக் கொண்டிருக்கிறான்.

அவனையே பற்றிக் கொள்கிற தருணமும் வரும்காலைப் பற்றிக் கொள்கிற குழந்தையை அள்ளி அணைத்துக் கொள்கிற தாயைப்போல அவன் நமக்காகக் காத்திருக்கிறான்!

அப்புறம் வேறென்ன வேண்டும்!




1984 போபால் விஷவாயு சம்பவம்! குற்றவாளி யார்?

போபால் விஷவாயு துயரசம்பவம் நடந்ததன் 35 வது ஆண்டு நிறைகிற தருணம் இன்று டிசம்பர் 3. 1984 ஆம் ஆண்டு ராஜீவ் காண்டி பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு நடந்த முதல் விபரீதம் டில்லியில் காங்கிரஸ் காரர்கள் சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறையில்  ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டது என்றால் அடுத்து டிசம்பர் 3 அன்று யூனியன் கார்பைட் ஆலையிலிருந்ந்து வெளியேறிய சயனைட் விஷவாயு தாக்குதலில் 3900 பேர் மரணம் என்று முதல்நாளில் ஆரம்பித்தது வரிசையாக 25000 எண்ணிக்கைக்கு உயர்ந்ததும், பல லட்சம் பேர் இன்று வரை பெருத்த பாதிப்புக்கு உள்ளாகியிருந்தும் கூட சரியான சிகிச்சை கூடப் பெறமுடியாமல் தவித்து வருவதும் ராஜீவ் காண்டி ஆட்சி செய்ய ஆரம்பித்த நாட்களின் அடுத்த பெரிய விபரீதம்.



   NatGeo 2014 போபால் டாகுமெண்டரி வீடியோ 62 நிமிடம் 

யார் குற்றவாளி?

தினமணி தலையங்கத்தின் கேள்வி! சரியான விடை, கயவர்களைத் தேர்ந்தெடுத்த நாம் தான்!
 

போபால் விஷவாயு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு நிவாரணம் கிடைக்க உளப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் மத்திய அரசால் எடுக்கப் படவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிகிறது.

சுமார் 23,000 பேரின் மரணத்துக்குக் காரணமாக இருந்த சம்பவத்தில் அந்நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கையை எடுக்காமல் மெத்தனமாக இருந்தது என்பதும், குறைந்தபட்ச  இழப்பீட்டைத்தான் அரசு பெற்றுத்தந்தது என்பதும்தான் இதுவரையிலும் விவாதமாக இருந்து வந்தது. ஆனால் இப்போதுதான் அம்பலமாகியிருக்கிறது, குதிரை குப்புறத் தள்ளியதோடு குழியும் பறித்த கதை. 

 
வாரன் ஆன்டர்சனை போபாலிலிருந்து தனி விமானத்தில் தில்லிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து அமெரிக்காவுக்குத் தப்பவிட்டனர் என்ற உண்மை இப்போது வெளியுலகுக்குத் தெரிந்த பிறகு, அதற்குக் காரணமே அப்போதைய மத்தியப் பிரதேச முதலமைச்சர் அர்ஜுன் சிங்தான் என்று கூசாமல் பழிகூறி பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறது காங்கிரஸ். ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளும் இந்தப் பதிலை கேட்டுக்கொண்டு சும்மா இருக்கின்றன.

அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்திக்கு இதில் என்ன பங்கு என்று யாரும் கேள்வி எழுப்புவதற்கு முன்னதாகவே ""ராஜீவ் காந்தி குற்றமற்றவர், அவர் இதில் சம்பந்தப்படவே இல்லை'' என்று மறுக்கிறார் கட்சியின் செய்தித் தொடர்பாளர். ஏன் இந்த அவசரம், எதற்காக இத்தனை பதற்றம்? "எங்க அப்பன் குதிருக்குள் இல்லை' என்று சொல்வதைப்போலத்தான் இதுவும்.

காங்கிரஸ் கட்சியின் முதல்வர் என்ற முறையில், மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாமல் அர்ஜுன் சிங் இத்தகைய முடிவை எடுத்திருக்க மாட்டார். ஆனாலும், பழி ஓரிடம் பாவம் ஓரிடம் என்பது தானே வழக்கம். 
பதில் ஏதும் அளிக்காமல். அர்ஜுன் சிங்கும் சும்மா இருக்கிறார்,  அர்ஜுன் சிங்குக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி "சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படுமே என்று அஞ்சியே வாரன் ஆன்டர்சன் அனுப்பி வைக்கப்பட்டதாக'வும் அர்ஜுன் சிங் அந்த நோக்கிலேயே செயல் பட்டதாகவும் கூறி அவரையும் காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறார். இது  இந்திய அரசின் நிர்வாக லட்சணம் எப்படி இருக்கிறது என்பதையே பறைசாற்றுகிறது.
 

யூனியன் கார்பைடு நிறுவனப் பங்குகளை "டவ் ' நிறுவனத்துக்கு விற்பனை செய்தபோது, கார்பைடு நிறுவனத்தின் இழப்பீடுகளில் "டவ் ' நிறுவனத்தைத் தொடர்புபடுத்த மாட்டோம் என்று அப்போதைய காங்கிரஸ் அரசு உறுதி அளித்ததாக சில தினங்களுக்கு முன்பு ஒரு புகார் எழுந்தது. இந்தப் புகாரும் நிரூபிக்கப்படுமேயானால், அதைவிட மோசமான விவகாரம் எதுவும் இருக்க முடியாது.

25 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கை நடத்தி, முதல் குற்றவாளியான வாரன் ஆன்டர்சன் பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்லாமலேயே தீர்ப்பு வழங்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதன் காரணமாக, இது குறித்து 10 நாள்களுக்குள் அறிக்கை அளிக்கும்படி அமைச்சர் குழுவை பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். இதெல்லாம், கொதித்துப்போய்க் கிடக்கும் மக்கள் மனதை சற்று குளிர வைக்க மட்டுமே. இதனால் ஏதோ புதிதாக ஒரு குற்றப்பத்திரிகை தயாரித்து, தண்டனை பெற்றுவிடுவார்கள் என்று நம்புவதற்கில்லை.

ஏனென்றால் யூனியன் கார்பைடு நிறுவனத்துக்கு போபால் விஷ வாயு விபத்து வழக்கில் சட்ட ஆலோசனை அளித்த அபிஷேக் மனு சிங்வி, அதில் என்ன தவறு என்று கேட்டுக்கொண்டே காங்கிரஸ் கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளராக இருக்கும்போது நாம்தான் மத்திய அரசைப் புரிந்து நடக்க வேண்டும்.  இனியும் இந்த தேசத்தை இவர்கள்தான் காப்பாற்றப் போகிறார்கள் என்று நினைத்தால் அது அவர்களின் தவறு அல்ல.
 

நிலம், நீர், காற்று என்று அனைத்தையும் பாழாக்கும் தோல் பதனிடும் ஆலைகளும் சாயப்பட்டறைகளும் ரசாயன உர ஆலைகளும் நிறுவப்பட உகந்த இடம் இந்தியாதான் என்று மேற்கத்திய நாடுகள் எப்போதோ தீர்மானித்துவிட்டன. அன்னியச் செலாவணி கிடைக்கிறது, வேலைவாய்ப்பு பெருகுகிறது என்று புளகாங்கிதம் அடைந்து நம்முடைய அரசியல் தலைவர்கள் அவற்றுக்கு நடைபாவாடை விரிக்கின்றனர் என்று நம்மை நம்ப வைக்கிறார்கள் என்றாலும், அரசியல்வாதிகளுக்கு மட்டுமே இதில் லாபம், கமிஷன் எல்லாமும் என்பது நாம் சொல்லாமலேயே விளங்கும்.
 

மேற்கத்திய நாடுகள் இந்தியாவைத் தங்களுடைய குப்பைத் தொட்டியாகவே நினைப்பதை அவ்வப்போது அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் நகரக் கழிவுகளையும் சுத்திகரிக்கப்படாத மருத்துவமனைக் கழிவுகளையும் கன்டெய்னர்களில் ஏற்றிவரும் வெளிநாட்டுக் கப்பல்கள் உறுதிப்படுத்தி வருகின்றன.

அமெரிக்காவில் ஒரு சாதாரணமான சத்துமாவை, ஊட்டச்சத்து மாவு என்று விற்பனை செய்ய வேண்டும் என்றால் அந்த நாட்டின் உணவுத் துறையின் கடுமையான நிபந்தனைகளுக்கு உட்பட்டாக வேண்டும். அமெரிக்காவுக்கு ஒரு உணவுப் பொருள் அல்லது மருந்தை ஏற்றுமதி செய்ய வேண்டும் என்றால், இந்தியாவில் உள்ள அந்த ஏற்றுமதி நிறுவனம், சீரிய தயாரிப்பு முறைகளை (குட் மானுபேக்சரிங் புராஸஸ்) அமெரிக்கா நிபந்தனைகளுக்கு ஏற்ப கொண்டிருக்க வேண்டும்.  


ஆனால் அமெரிக்கர்கள் இந்தியாவில் தொழில் செய்ய வேண்டும் என்றால் இந்தியச் சட்டம் அவர்களைக் கட்டுப்படுத்தாது. இதுதான் யதார்த்த நிலைமை.

விஷவாயு கசிவு நேர்ந்தபோது, ஆன்டர்சன் போபாலில் இருந்திருந்தால், விஷவாயு இந்தியர்களை மட்டுமே கொன்றிருக்குமா, இல்லை, அவரைக் கட்டுப்படுத்தவோ, அவருக்குப் பாதிப்பு ஏற்படுத்தவோ தனக்கு அதிகாரம் இல்லை என்று சும்மா கடந்துபோயிருக்குமா?


oooOooo 

தங்களால் ஒன்றும் செய்ய முடியாது , எதையும் கட்டுப் படுத்தவோ, சரியான முறையில் நிர்வகிக்கவோ முடியாது என்பதைத் தெரிந்து வைத்துக் கொண்டே இன்னொரு பேரழிவுக்கு இந்த நாட்டை அணு உலை விபத்து நட்ட ஈடு  வரையறை செய்யும் சட்ட முன்வரைவு என்று தைரியமாக, அடிப்படை நாணயமோ, நேர்மையோ, குறைந்தபட்சம் முதுகெலும்போ இல்லாத காங்கிரஸ் கட்சி அரசு, ஐ மு கூட்டணிக் குழப்பமாக முயல்கிறது என்றால்............

அதற்கு முதல் காரணம், இந்தக் கையாலாகாதவர்களைத் தேர்ந்தெடுத்த நாம் தான் முதல் குற்றவாளி!

தவறைத் திருத்திக் கொள்ளக் கொஞ்சமாவது முயற்சிக்கப் போகிறோமா?

நீங்கள் தான் சொல்ல வேண்டும்! உங்களுக்குத் தெரிந்த அத்தனை பேரிடமும்! அழுத்தமாக!

கார்டூன்கள், தலையங்கத்திற்கு தினமணி நாளிதழுக்கு நன்றியுடன்! இப்படி எழுதியது ஜூன் 2010 இல். ஒரு மீள் நினைவாக. கொலைகாரக் காங்கிரஸ் கட்சியை மீண்டும் தலையெடுக்க விடக்கூடாதென்ற வெறியை விதைத்த பல்வேறு காரணங்களில் போபால் விஷவாயு சம்பவத்தைக் காங்கிரஸ் அலட்சியமாகக் கையாண்ட விதமும் ஒன்று.

   

சாண் ஏறி முழம் சறுக்கிய கதை!

"ஓரடி முன்னால்- ஈரடி பின்னால்"


ஸத்சங்கத்வே நிஸ்ஸங்கத்வம்
நிஸ்ஸங்கத்வே நிர்மோகத்வம்
நிர் மோகத்வே நிஸ் சல தத்வம்
நிஸ் சல தத்வே ஜீவன் முக்தி:

ஆனந்த விகடனில் திரு பரணீதரன் அவர்கள் அருணாசல மகிமை தொடரை எழுதி வந்த நேரம்சத்குரு சேஷாத்ரி சுவாமிகள் சரித்திரத்தை எழுதி வந்த பகுதியில்ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய இந்த ஸ்லோகத்தை முதன் முதலாகப் படிக்கிற வாய்ப்புக் கிடைத்தது.
ஒன்றை விடுவதற்கோஅல்லது ஒன்றைப் பிடித்துக் கொள்வதற்கோ மனிதனுக்கு ஒரு இடைப்பட்ட சாதனம் தேவையாக இருக்கிறது.

நேரடியாகவே முழு உண்மையைசத்தியத்தை அறிந்து கொள்கிற வகையில் மனிதகுலம் சிருஷ்டிக்கப்படவில்லை

For man is not intended to grasp the whole truth of his being at once, but to move towards it through a succession of experiences and a constant, though not by any means perfectly continuous self -enlargement.

The first business of reason then is to justify and enlighten to him his various experiences and to give him faith and conviction in holding on to his self-enlargings.

It justifies to him now this, now that, the experiences of the moment, the receding light of the past, the half-seen vision of the future. Its inconstancy, its divisibility against itself, its power of sustaining opposite views are the wohle secret of its value. It would not do indeed for it to support too conflicting views in the same individual, except at moments of awakening and transition, but in the collective body of men and in the successions of Time that is its whole business. “
The Future Evolution of Man என்ற நூலில் ஸ்ரீ அரவிந்தர் மனிதனுடைய பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டம் எப்படி இருக்கும் என்பதை விவரிக்கும் சில பகுதிகளைமுந்தைய பதிவுகளில் பார்த்திருக்கிறோம்இந்த விஷயத்தைமுழு மொழிபெயர்ப்பாகவோவிமரிசனமாகவோ இங்கு எழுத முற்படவில்லைஇதைப் படிக்கிற போது எனக்குள் எழுகிற சிந்தனையின் தாக்கமே இந்தப் பதிவுஎன்னோடுஇதை படிக்க முன்வரும் நண்பர்களுக்கும் ஒரு சிறிய அறிமுகம்அவ்வளவு தான்.

ஒரு சிறு குழந்தையைப் போலதட்டுத் தடுமாறிகுளறிதடுக்கி விழுந்துஇப்படியாக trial and error ரீதியில் ஒவ்வொரு அனுபவமாகஅதன் படிப்பினையாகபிறகு வேறொரு அனுபவம் அதன் மேல் படிப்பினை என்ற தொடர் சுழற்சியிலேமனிதன் உண்மையை நோக்கி முன்னேறுகிறான்.
உண்மையைத் தேடுகிறேன் என்று எல்லோரும் தான் சொல்கிறார்கள்ஆனால் ஒவ்வொரு விதமாகச் சொல்கிறார்களே என்று தோற்றும்.குருடர்கள் கூடியானையைத் தடவியானை இப்படித் தான் இருக்கும் என்று தனக்கு அனுபவமாகப் பட்டது மட்டுமே உண்மை என்கிற கதை தான்ஒவ்வொருவருவர் சொல்வதிலும் ஒரு பகுதிமட்டுமே உண்மைஆனாலும் முழுமையான உண்மை அல்லஅதனால்சொல்லப் பட்ட பகுதி உண்மையில் கூட சந்தேகம் எழத்தான் செய்யும்.

எதை எதையோ தெரிந்து கொண்டிருப்பதாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்ஆனால், "நான் யார்என்று கேட்டால் தடுமாறுகிறோம். "நான்என்று எண்ணிக் கொண்டிருப்பது எல்லாம் உண்மையான "நான்அல்ல என்பதைகொஞ்சம் தடுமாற்றத்திற்குப் பிறகு நமக்கே புரிய வரும்.

இந்த வலைப் பதிவின் முக்கியமான நோக்கமே "நான் யார்இங்கு என்ன செய்கிறேன்என்னுடைய உண்மையான கடமை எதுஎன்ற தேடல் தான்.

எதிலும் முழுமையான ஈடுபாடோ முயற்சியோ இல்லாத இவனுக்கும் அனுபவங்கள் நிறைய பாடங்களை கற்றுக் கொடுத்தனகற்றது என்ன என்பதை புரிந்து கொள்ள முடியாத மண்டுவாக இருந்த போதிலும்அனுபவங்கள் இவனை ஒரு திசையிலேயே இழுத்து வந்ததை இப்போது நினைத்துப் பார்த்தால்இறைவன் எவ்வளவு கருணையோடு இவனது வாழ்வில் அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறான் என்பது நெகிழ்ந்து உருக்குகிறது

தாயிற் சிறந்த தயாவான சத்துவன்அவனது தொண்டர்கள் வழியாகவே இறங்கி வந்து இவனையும் ஒரு பொருளாக நயந்து ஏற்றுக் கொண்ட அற்புதம் நிகழ்ந்தது 1975, 1976 ஆம் ஆண்டுகளிலே. பரணீதரன் எழுதிய தொடரைப் படித்து விட்டுஏதோ ஒரு உந்துதலில்.சத்குரு சாது பார்த்தசாரதி பின்னாளில் சுவாமி அண்வானந்தா என்று அறியப்பட்ட வைஷ்ணவியின் அருட் குழந்தைக்குத் தன்னுடைய கவலைகளை வெளியிட்டுக் கடிதம் எழுதினான்.
அது தான் இவன் எடுத்து வைத்த முதல் அடி.

அடுத்துவைஷ்ணவிதேவியின் அணுக்கத்தொண்டர் குழாத்தில் முதல்வரான சத்குரு சாது ராம் சுவாமிகளை மதுரையில் நேரடியாகச் சந்தித்து வணங்கும் பெரும்பேறு கிடைத்ததுஇவ்விருவரே இவனுக்கும் சத்குரு ஸ்ரீ சேஷாத்ரி சுவாமிகள்,ஸ்ரீ ரமண மஹரிஷி, [வள்ளிமலைதிருப்புகழ் ஸ்வாமிகள் இவர்களுடனான சம்பந்தத்தை அருளியவர்கள்.
தந்தையின் மரணம்இவனை வேறு ஒரு திசைக்கு இட்டுச் சென்றது.

இடது சாரிச் சிந்தனைகள்நாத்திகம்எதையும் எதிர்மறை ஆகவே பார்க்கிற ஒரு வரட்டுப் பிடிவாதம் இப்படி ஏகப்பட்ட முரண்பாடுகள்லெனினுடைய வார்த்தைகளில் சொல்வதானால் "ஓரடி முன்னால்ஈரடி பின்னால்என்று சாண் ஏறி முழம் வழுக்குகிற கதையும் அரங்கேறியது.

ஆனாலும்இந்த சாபமும் ஒரு வரமே என்பது இப்போது திரும்பிப் பார்க்கையில் புரிகிறதுகுரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்றாலும்பரிணாமச் சக்கரத்தைப் பின்னோக்கிச் சுழற்ற முடியாதுகுரங்குச் சேட்டைகள் கொஞ்சம் மீதமிருந்தாலும்மனிதன் குரங்கின் நிலைக்கு ஒருபோதும் கீழிறங்கி விட முடியாது.

Forward, for ever forward!
At the end of the tunnel is the light…
At the end of the fight is the victory!

1948 ஆம் ஆண்டுத் தொடக்கத்தின் வாழ்த்துச் செய்தியாக ஸ்ரீ அரவிந்த அன்னை அருளிய இந்த வார்த்தைகள்

"முன்னேறு முன்னேறிக்கொண்டே இரு
பயணத்தின் முடிவில் வெளிச்சம்
போராட்டங்களின் முடிவில் வெற்றி!"

சாண் ஏறி முழம் சறுக்குகிறது ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்பதெல்லாம் ஆக்க மாட்டாதவன்தன்னுடைய இயலாமையை மூடி மறைக்கும் வார்த்தைகள் மட்டுமே.
நாம் எதிர் கொள்ளும் ஒவ்வொரு தருணமும்நிகழ்வும் தெய்வ சித்தத்தினாலேயே தீர்மானிக்கப் படுபவைஇன்றைய வலிதுயரம்,தோல்வி என்பதெல்லாம்உண்மையில் வெற்றிக்கான படிக்கட்டுகளே என்கிறார் ஸ்ரீ அரவிந்த அன்னை.

எனது அறியாமையில் எழுகிற ஆசைகளின் படியல்லதெய்வ சங்கல்பப் படியே எல்லாம் நடந்தேறட்டும்தெய்வ சங்கல்பத்தை நிறைவேற்றுகிற ஒரு கருவியாகஇவனையும் திருத்திப் பணி கொள்வாய் என்பதே ஸ்ரீ அரவிந்த அன்னையிடத்தில்இன்றைக்கு வேண்டிக்கொள்ளும் வரம்.

**2009 ஜனவரியில் எழுதியதன் மீள்பதிவு 

பழசேதான் புதுசு! சும்மா ஒரு வெளம்பரந்தான்! #2

இன்றைய சந்தைப்படுத்துதலில், ப்ராண்ட் என்பது, ஒரு பொருளின், அதன் தயாரிப்பாளரின், ஒரு நிறுவனத்தின், அப்புறம் அன்றாடம் அதைப் பயன் படுத்துகிறவர்களின் அடிப்படைப் பண்பு எத்தகையது என்பதன் அளவீடாக இருக்கிறது. எங்கே இருந்தோம், எங்கே போகிறோம் என்பதன் வெளிப்பாடாகவும் மாறி வருகிறது.

ப்ராண்ட் என்பது ஏதோ ஏமாந்தவன் தொடையில் கயிறு திரிக்கிற விஷயமல்ல!


இதெல்லாம் லுலுளாயிக்குத்தான் என்றே இருந்தால் யாருக்கு நஷ்டம்? 

ப்ராண்ட் என்பது தரத்தின் வெளிப்பாடு! தொடர்ந்து உறுதிப் படுத்தும் அடையாளம்!
ப்ராண்ட் என்பது, தவறான சித்திரத்தையோ, பொய்யான வாக்குறுதியையோ அளிப்பதுமல்ல.
ப்ராண்ட் என்பது, பயன்படுத்துபவருடைய  நம்பிக்கை! அதைக் காப்பாற்கிற தயாரிப்பாளரின் முழு உத்தரவாதம்!
ஒரு நல்ல ப்ராண்ட் என்பது நேற்றைய காலத்தின் அடையாளமாக நின்று விடுவது அல்ல! நாளை வரும் நாட்களிலும் நிலைத்து நிற்பது! என்று இந்தப் பக்கங்களில்  எழுதி எட்டு வருடங்களுக்கும் மேலாகிறது. தேடித் தேடி வாசிப்பதும் வலைப் பதிவுகள் எழுதுவதும் சுவாசிப்பது போல என்னுடைய இருப்பின் வெளிப்பாடாக இருந்த தருணங்கள் அவை.

ஆனால் கடந்த ஐந்து வருடங்களில் என்னுடைய செயல்பாடுகளை டயபடீஸ், டிஸ்க் ப்ரோலாப்ஸ் கோளாறுகள் அனேகமாக முடக்கி வைத்து விட்டன என்றே சொல்ல வேண்டும். உடல் உபாதைகள் அப்படியே இருந்தாலும் அவைகளை ஒதுக்கி வைத்து விட்டு என்னுடைய கவனத்தை மறுபடியும் வாசிப்பில், அதைத்தொட்டு எழுதுவதில் இப்போதுதான் செலுத்த முடிந்திருக்கிறது. இந்தப்பக்கங்களில் இந்த ஆண்டில் எழுதும் எட்டாவது பதிவு இது.

எழுதத்தூண்டுதலாக இருந்தது இந்து தமிழ் நாளிதழில் நான்கு வருடங்களுக்கு முன்  படித்த இந்தக் கட்டுரை  

சர்ஃப் கொடுத்த பதிலடி  என்ற தலைப்பில் மிகவும்  மேலோட்டமாக எழுதப் பட்ட கட்டுரையாக இது  தோன்றினாலும் வாசித்ததைத்தாண்டி யோசிக்க வைக்கிற விஷயம் இது. கட்டுரையாளர் நிர்மா வாஷிங் பவுடர் கொடுத்த கடுமையான போட்டியை எப்படி சர்ஃப் சமாளித்தது என்று சொல்லிப் போவதில் மிகவும் முக்கியமானது brand positioning என்ற அம்சம். அதைக் கொஞ்சம் பார்ப்பதற்கு முன்னால் பதிலடி கொடுப்பது எப்படி  என்பதை கோல்கேட் - பெப்சொடெனட் இடையில் நடந்த விளம்பர யுத்தம் ஒன்றை விரிவாகவே பேசியிருப்பதை முடிந்தால் ஒருதரம் வாசித்து விடுங்கள். 

 

சுருக்கமாகச் சொன்னால் கூட்டத்தில் தனித்துத் தெரிகிற வித்தைக்குப் பெயர்தான் brand positioning. தனித்துத் தெரிய வேண்டியது விளம்பரப்படுத்தப் படுகிற பொருளாகத்தான் இருக்க வேண்டுமென்கிற அவசியம் இல்லை. விளம்பரத்தைப் பார்க்கிற உங்களுடைய மனதில் போட்டியாளர் தரும் பொருளைப் பற்றி ஒரு சின்ன சந்தேகத்தை ஏற்படுத்த முடிவதில் கூட உங்களுடைய தயாரிப்பைக் குறித்து ஒரு உயர்வான பிம்பத்தை ஏற்படுத்துவது தான் brand positioning.

According to Jack Trout and Al Ries in their bestseller from 1981 “Positioning: The Battle for your mind”, brand positioning is a battle for “the minds of your customers”.
”Positioning starts with a product. A piece of merchandise, a service, a company an institution, or even a person. Perhaps yourself. But positioning is not what you do to a product. Positioning is what you do to the mind of the prospect. That is, you position the product in the mind of the prospect”.
In other words it’s not what you do to a product, it’s how ,you position that product in the mind of your customers.
பழைய திரைப்படங்களைக் கொஞ்சம் நினைவு படுத்திக் கொண்டு கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கதாநாயகனை மிகவும் உத்தமனாகக் காட்டிக் கொண்டே இருக்க  வேண்டிய அவசியமே இல்லை. மற்றக் கதா பாத்திரங்களை குறிப்பாக வில்லன் மற்றும் கோஷ்டியை கொஞ்சம் கெட்டவர்களாக, கேணையர்களாகச் சித்தரிக்க முடிந்தாலே இங்கே போதுமானது. இப்போது தான் அதெல்லாம் ரொம்ப மாறிப்போச்சே! #நான்ரொம்பக்கெட்டவன் என்றே சொல்லிக்கொள்கிற காலமாகிவிட்டதே என்கிறீர்களா? அடிப்படை அம்சம் என்னவோ அதே பழைய டெக்னிக் தான்!  

#இருகோடுகள் படத்தின் ஆரம்பக்காட்சி நினைவுக்கு வருகிறதா? 

ரொம்பவுமே பழைய  டெக்னிக்காக இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா?

பழசுதான்! ஆனால் புதுசை எல்லாம் தூக்கிச்சாப்பிட்டு விடுகிற டெக் னிக். என்ன சொல்கிறீர்கள்? 

இந்தக்கேள்வியுடன் எழுதப்பட்ட மீள்பதிவுதான்! பதில்களைத் தேடி மறுபடியும்! சொல்லுங்களேன்! பதில்களின் மீது மேலும் விரிவாகப் பேசுவோம்!  

மதுரை மீனாக்ஷிக்கு இன்று பட்டாபிஷேகம்!



மதுரை சித்திரைத் திருவிழாவில் இன்றைய விசேஷம் மீனாட்சிக்கு பட்டாபிஷேகம்! மதுரை அரசாளும்  மீனாக்ஷியாக இன்றைக்கு முடிசூட்டிக் கொள்கிறவள் நாளை திக்விஜயமாக ஒவ்வொரு உலகமாக வெற்றி கண்டு வருகையி ல் சோமசுந்தரனிடம்  சண்டையிட முடியாமல் அவனையே மணவாளனாகக் கைத்தலம் பற்றுகிற கோலாகலம் நாளை மறுநாள்!

முன்பெல்லாம் சித்திரைத்திருநாள்  என்று வந்துவிட்டால் வெயிலைப் பொருட்படுத்தாமல் திருவிழாவின் ஒவ்வொரு நிகழ்வையும் நேரில் தரிசனம் செய்கிற நல்ல வழக்கம், உடல் நலம் கொஞ்சம் மக்கர் செய்ய ஆரம்பித்த பிறகு இயலாமலேயே போனது . கேபிள் டிவி,செய்தித்தாட்களில் பார்த்தே பழைய நினைவுகளைக் கொஞ்சம் அசைபோட்டு அவளை வணங்குவது ஒன்றுதான் இப்போதைக்குக் கொடுப்பினை!  
  
மலையத்துவசன் என்று ஒரு பாண்டிய ராஜா!

நீண்ட நாட்களாகப் பிள்ளை இல்லைதவமிருந்துஅப்புறம் ஒரு பெண் பிள்ளை பிறந்தது..பிறக்கும் போதே மூன்று ஸ்தனங்களோடு பிறந்த பெண்பிள்ளையைப் பார்த்துஐயோ,இப்படி இருக்கிறதே என்று பாண்டியன் கலங்கினானாம்இந்தப் பெண்பிள்ளை வளர்ந்து பெரியவளானால் யார் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற கவலை வாட்ட ஆரம்பித்ததுஅசரீரியாக, "வருந்தாதேஅவளுக்குத் திருமண நேரம் வரும்போதுஅவளைத் தேடி மணாளன் வருவான்அவனைப் பார்த்ததுமேமூன்றாவதாக இருக்கும் ஸ்தனம் மறைந்துவிடும்!" என்று ஆறுதல் சொல்லியுமே கூடமன்னனுக்குத் துயரம் தாங்கவில்லைஅந்தக் கவலையுடனேயே மரணமடைந்தான்.

கண் ஊஞ்சல் ஆட்டினாள் காஞ்சனமாலை என்று தாலாட்டுப் பாட்டெல்லாம் கேட்டு வளர்ந்த பெண்பிள்ளை
 மீனாக்ஷி பெரிய ராவடியாகவே இருந்தாள் என்று திருவிளையாடல் புராணம் சொல்கிறது. இப்படித் தாலாட்டுப் பாடியே, அவளை ராவடியாக்கி விட்டார்களோ?! 

ஒவ்வொருத்தரிடமாகப் போய்
என்னுடன் சண்டைக்கு வருகிறாயா என்று கூப்பிட்டுக் கூப்பிட்டுச் சண்டை செய்வதற்காகவே திக்விஜயம் செய்ய  ஆரம்பித்தாள். பூலோகம், மேலோகம் என்று இவளது ராவடியை கண்டு அத்தனை பேருமே அரண்டு போய்த் தோல்வியை ஒப்புக் கொண்டார்களாம்!தனி ஆவர்த்தனமாகவே போய்க் கொண்டிருந்த போது, இவளை விடப் பெரிய ராவடியாகஅந்தப் பரமேஸ்வரனே சோம சுந்தரனாக மதுரைக்கு வந்தானாம்! அப்படி  வந்தவனைக் கண்டவுடன், ராவடி, சண்டை போடுவதை எல்லாம் மறந்து மீனாக்ஷி  வெட்கம் என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டாளாம்!மூன்றாவது ஸ்தனமும், ஏற்கெனெவே அசரீரி சொல்லியிருந்ததைப் போல, மறைந்தது.

மூன்றாவது ஸ்தனம் மறைந்ததைக் கண்டு
காஞ்சனமாலை மாப்பிள்ளை ஒருத்தன் வசமாக மாட்டிக் கொண்டான் என்று தெரிந்துகொண்டுமுப்பத்து முக்கோடி தேவர்களோடு சேர்ந்து பெண்ணுக்குத் திருமண ஏற்பாட்டைச் செய்ய ஆரம்பித்தாள்


மதுரையில் மீனாட்சிக்குக் கல்யாணம்! 

ஊரெல்லாம் கொண்டாட்டம்!


கல்யாணமும் ஆகிசாப்பாட்டுப் பந்தியெல்லாம் முடிந்தபிறகுசமைத்ததெல்லாம் நிறைய மீந்து போனது! முப்பத்து முக்கோடி தேவர்களும் சாப்பிட்டும் மீந்துபோனால் எப்படி! சமைத்து வைத்த உணவெல்லாம் மீந்து போய்விட்டதுஉம்முடைய உறவினர்கள் எண்ணிக்கை அவ்வளவுதானா என்று கொஞ்சம் நக்கலாகக்  கேட்கிறாள் மதுரைக்கு அரசி, முத்து மீனாக்ஷி! 

அதுவரை அடக்க ஒடுக்கமாக இருந்த மாப்பிள்ளை சோமசுந்தரன்தன்னுடைய ராவடியை ஆரம்பித்தானாம்

இரு! ஒரே ஒரு குட்டிப் பூதத்தை அனுப்புகிறேன்
அவன் சாப்பிட்ட பிறகு மிச்சம் மீதி ஏதாவது இருந்தால்அப்புறம் மற்றவர்களைக் கூப்பிடுவதைப் பற்றி யோசித்துக் கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு குண்டோதரன் என்ற ஒரு பூதத்தை அனுப்பி வைத்தானாம் 


குண்டோதரனும் சமைத்து வைத்திருந்த அத்தனை உணவையும் சாப்பிட்டுபசிஇன்னும் வேண்டும்பசி, இன்னும் வேண்டும் என்று அரிசிகாய்கறி இப்படி சமைப்பதற்கு வைத்திருந்த அத்தனையையும் சாப்பிட்ட வேகத்தைப் பார்த்து மீனாட்சியே பயந்து போனாளாம்போதும் போதுமென்று வீட்டுக்காரனிடம் கெஞ்சுகிறாள் மீனாக்ஷி!

ராவடி மன்னனான சுந்தரேசப் பெருமானும் குண்டோதரனின் பசி அடக்கித் தாகத்தை உண்டு பண்ணினானாம்தண்ணீர்தண்ணீர் என்று அலைந்த குண்டோதரனிடம் இதோ வை கை என்று சொல்ல, வைகை நதி உண்டாயிற்றாம்! இது திருவிளையாடல்  புராணத்தில் வருகிற கதை!



வையை என்னும் பொய்யாக் குலக்கொடி என்று மகிழ்ந்து கொள்கிறது திரு விளையாடற் புராணம்! வை கை என்று சொன்னதினாலோ என்னவோ கை நனைக்கிற அளவுக்குக் கூடவைகையில்பெரும்பாலான தருணங்களில் தண்ணீர் இருப்பதில்லை! சிறு கூடற்பட்டியில் பிறந்த எங்கள் கவிஞன் கண்ணதாசன் ஒரு திரைப் படப் பாடலில் சொன்னபடி,

மலைமேலே மழை விழுந்து வைகையிலே வெள்ளம் வந்து
வயலேறிப் பாயுமுன்னே வந்த வெள்ளம் போனது ராசா!


இப்படி, அன்றையிலிருந்து இன்றைக்கு வரைக்கும், வைகையின் கதை மட்டுமல்ல, பாண்டிய நாட்டின் கதையே அப்படித்தான் இருக்கிறது!
அம்மையும் அப்பனுமே ராவடி பண்ணிக் கொண்டிருந்தால் எப்படி? 
அடிப்பொடிகளோடு அட்டகாசம் பண்ணஅடுத்து ஒரு 'னா வர வேண்டாமா!

ராவடி பண்ணிய  மீனாட்சியும், ராவடி மன்னன் சுந்தரேசனுமே  
அ' றங்காவலர் குழு செய்வது தான் சரி என்று அடக்கி வாசித்துக் கொண்டிருக்கிறார்கள்! மதுரைக்கு அரசி மீனாக்ஷி என்பதெல்லாம் முப்பதாண்டுகளுக்கு முந்தைய பழைய நம்பிக்கை!  என்னை மாதிரிப் பழைய நினைவுகளைக் கொஞ்சம் சுமந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமே,  இன்னமும் அப்படி நம்பிக் கொண்டிருக்கிறோம்!




பண்டிகை என்ற மட்டுக்கு சித்திரைத் திருவிழாவின் போது  மீனாக்ஷி கையிலும் ஆவணி மாதத்தில் சோமசுந்தரர் கையிலும் மதுரையின் ஆட்சி இருப்பதாக ஒரு கற்பனை மட்டும் பண்ணிக் கொண்டு, செங்கோல் கொடுக்கிற படலம் ஒரு சடங்காக மட்டுமே இருக்கிறது!
 
ஆகமதுரை என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது மூணு 
அப்புறம் ராவடிஒரு ராவடியை அடக்கஅதற்குக் கொஞ்சம் அதிகமான ராவடி என்று அராத்தாகராவடியாக இப்படித் தொடர்ந்து இருப்பதே மதுரையின் கதையாக, புராணமாக இருக்கிறது!

தடி எடுத்தவனெல்லாம்  தண்டல்காரனா என்று கேட்கிற மாதிரி  ராவடி செய்யத் தெரிந்தவனை எல்லாம் பாண்டியனாக ஆக்கிப் பார்ப்பதே மதுரைக்கு உள்ள தனிச் சிறுமை! கலக்டராக இருந்த ஒரு ஆங்கிலேயன், மீனாட்சிக்கு ஆபரணம் செய்து போட்டானாம்! அவனையும் பீட்டர் பாண்டியன் என்பார்கள்! பெரிய மருது, சின்ன மருது என்று இரு சகோதரர்கள்! அவர்களையும் பாண்டியன் என்பார்கள்! பிற்கால பாண்டிய வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் பாண்டியன் என்று எவர் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்! என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்!

திருநெல்வேலி தாண்டி தெற்கே, பாண்டியன் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று கேட்டுப் பாருங்கள்!

மதுரைக்கு அரசி நீயல்லவோ என்று அவளிடத்தில் கேட்க ஆசைதான்! 

அவள் என்றைக்கடா வாயைத் திறந்து பேசினாள் என்ற  வசனம் நினைவுக்கு வந்து தொலைக்கிறது!

ஐந்து வருடங்களுக்கு முன்பு எழுதிய பதிவின் மீள்பதிவுதான்! இன்றைய  நிலவரங்களோடு கொஞ்சம் திருத்தங்களுடன்