Showing posts with label காமெடி டைம். Show all posts
Showing posts with label காமெடி டைம். Show all posts

மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் பார்த்ததும் கேட்டதும்! படித்ததில் பிடித்ததும்!

தேர்தல் கால விநோதங்களில் காயலாங்கடையிலிருக்கும் வாகனங்களுக்கும் கூடக் கொள்ளைப் பணம் கொடுத்து book செய்துகொள்கிற வழக்கமும் ஒன்று. அதுபோல பேச்சாளர்கள் என்று பலருக்கும் கிராக்கி, வாழ்வு கொடுக்கும் காலமும் இதுவே. சோனியா காங்கிரசின் பலம் பலவீனம் இரண்டுமே சோனியா, மகன், மகள், மாப்பிள்ளை என்கிற நாலேபேர்தான். அவர்களைத்தாண்டி முன்னணித் தலைவர்கள், முன்னணிப் பேச்சாளர்கள் என்று வேறு எவருமே இல்லாத மிக வினோதமான ஒரு செட்டப், இங்கே தன்னை ஒரு அரசியல் கட்சியாகப் பாவித்துக் கொண்டு தேர்தல் பரப்புரை செய்யவருவது எவருக்குமே புரியாத இன்னொரு தமாஷா! 


 நெல்லை தூத்துகுடி பக்கம் சுற்றுபயணம் செய்திருக்கும் ராகுல் தன்னை அறியாமல் மிக பெரிய சிக்கலில் சிக்கியிருக்கின்றார் அல்லது சொந்த அறிவே இல்லாமல் யாருடைய ஆலோசனையிலோ ஆடு போல் பின்னால் சென்றிருக்கின்றார் அன்னார் நெல்லையில் எல்லாவற்றையும் விட்டுவிட்டு பாளை சேவியர் கல்லூரி பாதிரிகளை சந்தித்ததும் கத்தீட்ரல் ஆலயம் சென்றதும் அவர் ஒரு அக்மார்க் கிறிஸ்தவர் எனும் பெயரினை பெற்று கொடுத்தாயிற்று

கிறிஸ்தவ கல்வி நிறுவணங்கள் தேசிய விரோதிகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் அதுவும் பாளையங்கோட்டை நிறுவணங்கள் உருவாக்கிய கல்வியாளர் தலைவர்களில் ஒரு தேசியவாதியினை கூட யாரும் காணமுடியாது , அங்கு உருவான அவ்வளவு பேரும் பிரிவினை கோஷ்டிகள்

அங்கு ஒரு தேசிய தலைவராக இல்லாமல் மாநில திராவிட தலைவர் போல் சென்று வழக்கம் போல் மோடி எதிர்ப்பினை கேட்டு ரசித்திருக்கின்றார் ராகுல். இக்கல்லூரி நாட்டுக்கு எந்த தலைவனை உருவாக்கியது , இங்கிருந்து தேசியவாதியாக எந்த தலைவன் எழும்பினான் என்ற கேள்வி இங்கு அவசியம், ராகுல் கேட்காத கேள்வியினை நாம் கேட்கலாம்.அப்படி கேட்டால் பாளை கல்லூரியில் இருந்து என்ன பதில் வருமென்றால் நாங்கள் உருவாக்கியவர்கள் வை.கோ, வலம்புரி ஜாண் என பதில்வருமே தவிர ஒரு தேசாபிமானி பெயர் வராது.

காங்கிரஸ் எனும் தேசிய கட்சி தமிழ்நாட்டில் மங்கி போய் திராவிடம் எழும்ப இக்கல்லூரி ஆதவளித்த காலம் உண்டா என்றால் உண்டு.காமராஜரை வீழ்த்தி திராவிடத்தை உயர்த்தி பிடித்து காங்கிரஸ் மண்ணோடு மண்ணாகி போக இதே கல்லூரி காரணம் என்பதை ராகுல் மறந்து பல்லிளித்தது காங்கிரசின் துரதிருஷ்டம்

தூத்துகுடியில் ஸ்டெர்லைட் பக்கம் அவர் செல்லவுமில்லை நெல்லையில் தாமிரபரணி சம்பவம் பற்றி பேசவுமில்லை.

நெல்லையின் இதர சிக்கல் உள்ளிட்டவை பற்றி தெரிந்து கொள்ள அவருக்கு ஆர்வமுமில்லை

நெல்லையில் தேசிய அடையாளமான கட்டபொம்மனின் பாஞ்சாலங்குறிச்சி, பாரதி இல்லம், வ.உ.சி நினைவகம், வாஞ்சிநாதன் இல்லம், வ.வே.சு அய்யர் ஆசிரமம் என தேசிய அடையாளம் எதையும் அவர் கண்டு கொள்ளவில்லை பாளை கல்லூரிக்கு சென்ற அவருக்கு தான் ஒரு சமயவாதி அல்ல என்பதை காட்ட நெல்லையப்பர் கோவிலுக்கு செல்ல தெரிந்திருக்கின்றது.ஆனால் அங்கு கோவிலை சுற்றி இருக்கும் ஆக்கிரமிப்பும், காலில் நீர் ஊற்றிவிட்டு ஆலயம் உள்ளே செல்லமுடியாத அவலம் புரியவில்லை

கோவிலின் எதிரே திட்டமிட்டு உருவாக்கிய சாலைகளும் திட்டமிட்டு உருவாக்கபட்டு அழிக்கபட்டு குப்பை மேடான கோவில் குளங்களும் தெரியவில்லை

ஆம் தான் ஒரு கிறிஸ்தவன் என்பதையும் இந்து ஆலயமெல்லாம் பற்றி தனக்கு கவலை இல்லை அல்லது அதுபற்றி தெரியாது என்பதையும் தான் யாரோ இழுத்து வந்த ஆடு என்பதையும் சொல்லிவிட்டார் ராகுல்

நெல்லையிலும் தூத்துகுடியிலும் காங்கிரஸ் செத்தே விட்டது அதன் இடத்தை திமுக மிக அழகாக கைபற்றி காங்கிரஸை கழுத்தறுத்துவிட்டதுஆனாலும் திமுகவுக்கு ஆதரவான பயணத்தை அவர்கள் சொன்னபடியே செய்திருக்கின்றார் ராகுல், காங்கிரஸ் அபிமானிகள் தலையில் அடித்து அழுது கொண்டிருக்கின்றனர்.

ஒரு தேசியவாதியாக அல்லாமல் ஒரு தேசிய சிந்தனாவாதியாக அல்லாமல் ஒரு கிறிஸ்துவ திராவிடனாக திருநெல்வேலி வந்து சென்றிருக்கின்றார் ராகுல் என்பதை விட சொல்ல ஒன்றுமில்லை. திராவிட கைகூலிகள் அவரை மிக மிக தவறாக வழிநடத்துகின்றனர்.

நெல்லை வந்த ராகுல் செய்த ஒரே ஒரு முன்னெச்செரிக்கையான விஷயம் பிரபல தீவிரவாதியும் அமித்ஷாவினயே சோலி முடிக்க சதி செய்தவருமான "நெல்லை கண்ணன்" என்பவரை சந்திக்காமலே ஓடிவிட்டார், அதில் மட்டும் மிக சரியாக இருந்திருக்கின்றார்.

ராகுல் காண்டி பற்றி மனிதருக்கு இத்தனை ஒசத்தியான  அபிப்பிராயமா என்று தப்புக்கணக்குப் போட்டு விடாதீர்கள்!   ஸ்டேன்லி ராஜன் முகநூலில் ராகுல் காண்டியின் மூன்று நாள் தேர்தல் சூறாவளிப் பயணம் குறித்து நன்றாகவே பகடி செய்து எழுதியிருக்கிறார். இன்றைக்குப்  படித்ததில் பிடித்ததான ஒரு அரசியல் பதிவு இது. கீழே இதுவும்! 
  


ராகுல் காண்டி இப்படித் தமிழ் நாட்டில் மூன்றாவது முறையாகத் தனித்தே தேர்தல் பிரசாரம் செய்வதில் இருக்கிற உள்குத்து சாமானியர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, கேட்பதில் மூன்றில் ஒருபங்குக்கு மேல் முடியாது என்று கொடாக்கண்டனாக  இருக்கிற திமுகவுக்கு நன்றாகவே புரிந்துதான் இருக்கிறது. ஆக, நேரடியாகப் பேசிக்கொள்ளாமலே இசுடாலினுக்கும் ராகுலுக்கும் ஒரு இழுபறி நடந்துகொண்டுதான்  இருக்கிறது போல
   

சென்ற முறை மாதிரியே 2021 தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் பாமக தன்னுடைய இருப்பை உறுதி செய்வதில் முந்திக்கொண்டு விட்டது. போனமுறை மாதிரி அங்குமிங்கும் ஊசலாடாமல் தேமுதிக, அதிமுகவின் கடைக்கண் பார்வைக்குக் காத்திருந்த பிரேமலதாவுக்கு இந்தநிமிடம் வரை அந்தரத்தில் தொங்குகிற பரிதாபமான நிலைமை. வைட்டமின்  இருந்திருந்தால் தனித்தே களம்காணுவோம்  என்ற வாய்ச்சவடாலை நிஜமாக்கியிருக்கலாம். அரசியலில் அதிர்ஷ்டமும் நிறைய வேண்டியிருப்பது தேர்தல்கால நகைமுரண்! 


புதிய தலைமுறை சேனல் ஓனர் திமுக கூட்டணியில் இருந்து விலகி விட்டார். ஆனால் நெறியாளருக்கு பழைய மயக்கம் இன்னமும் தெளியவில்லை. செய்தியாளரிடம் கேள்வி கேட்டுக்   குறுக்கீடு செய்துகொண்டே இருக்கிறார், அவரோ தகவலைச் சொல்லிக்கொண்டே போகிறார். பரிதாபமாக மேலே பார்த்து என்ன இது என்று சைகையால் பரிதாபமாகக் கேட்கிற நெறியாளர் கார்த்திகேயன் மீது எனக்கே பாவமாக இருந்தது 2.30 நிமிடத்திலிருந்து தொடரும் இந்த வேடிக்கையைப் பார்த்தபோது கவண் திரைப்படத்தில் விஜய் சேதுபதி பேட்டியெடுக்கிற காமெடி நினைவுக்கு வந்தது.

ஊடகங்கள் இன்னும் திருந்துவதாயில்லை. உண்மையை இவர்களிடம் ஒருநாளும் எதிர்பார்க்க முடியாது  என்கிற நிலையில் இந்தத்தேர்தலை  எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்களுடைய அணுகுமுறை என்னவாக இருக்கும்?

மீண்டும் சந்திப்போம்.

மண்டேன்னா ஒண்ணு! #2021தேர்தல்களம் படுத்தும் பாடு!

2021 ஆம் ஆண்டு இந்திய அரசியல் களத்தில் பலவித விசித்திரங்கள், குழப்பத்தோடு ஆரம்பித்திருக்கிறது, மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி?த் தேர்தல், சில மாநிலங்களில் சட்டசபைக்கான தேர்தல் என வருவதில் நிறைய அரசியல் காமெடிகள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. என்னவென்று கொஞ்சம் பார்க்கலாமா?


முதலாவதாக'மேற்கு வங்கத்தில் மம்தா பானெர்ஜி மூன்றாவது முறையாகவும் ஆட்சியைப் பிடித்துவிட வெறிபிடித்து அலைகிறார் இடதுசாரிகள், காங்கிரஸ் இரண்டையும் ப்பூவென உதறித்தள்ள முடிந்தவருக்கு பிஜேபி கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே பெரும் குடைச்சலைக் கொடுத்தது. 2021 இல் மாநில சட்ட சபைக்கான தேர்தலில், பிஜேபியைத் தனித்து நின்று சமாளிக்க முடியாதென்று நினைத்தோ என்னவோ காங்கிரசும் இடதுசாரிகளும் திரிணாமுல் காங்கிரஸ் பின்னால் அணிவகுத்து பிஜேபியைத் தோற்கடிக்க முன்வரவேண்டுமென்று அழைப்பும் விடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி இடதுசாரிகளுடன்தான் லட்சியக்  கூட்டணி  இன்றைக்குத் அறிவித்ததோடு, அதிர் ரஞ்சன் சவுத்ரி (காங்.நாடாளுமன்றத் கட்சித் தலைவர்) அப்படி பிஜேபியை தோற்கடிக்க வேண்டுமானால் மம்தா காங்கிரசில் வந்து சேர்ந்து கொள்ளட்டும் என்று சொல்ல காமெடிப்பீசாகிப் போனார் மம்தா. 

தன்னிடமிருந்து விலகி பிஜேபிக்குப் போன சுவேந்து அதிகாரியின் கோட்டையான நந்திகிராம் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார் இன்னும் ஒரு தொகுதியிலும் போட்டியிடுவதாகவும் தகவல்! சவாலுக்கு எதிர்சவால் இல்லாவிட்டால் அது அரசியலா? சுவேந்து அதிகாரி மம்தாவை 50000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்போவதாக,அப்படி முடியாமல் தான் தோற்றுவிட்டால் அரசியலை விட்டே வெளியேறுவதாகவும் அறிவித்திருக்கிறார்.

ஆக மேற்கு வாங்காத தேர்தல் களம் சூடு பற்றிக் கொண்டு எரிய ஆரம்பித்து விட்டது. கொல்கத்தாவில் சுவேந்து அதிகாரி ஆதரவாளர்கள் மீது வன்முறை ஏவி விடப்பட்டது தொடர்கதையாகிக் கொண்டே வருவது ஒரு சாட்சி, அடையாளம்!                          

மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித்தேர்தல்கள் நடை பெறும்  தருணம் இது! சிவசேனா தன்னுடைய பலத்தை அதிகரித்துக் கொள்ள நினைப்பதில் முதல்பலி மாநிலங்களுக்கிடையிலான சுமுகமான உறவுகள் தான்! கருநாடக காங்கிரசுக்கு மிகவும் சிக்கலான நிலையை உருவாக்கியிருக்கிறது. மகாராஷ்டிரா - கருநாடகா இரு மாநிலங்களுக்கிடையிலான எல்லைப்பகுதிகளை மொழி ரீதியாகத் தங்களுக்கே சொந்தம், இது பழசு தான்! சிவசேனா இப்போது ஆரம்பித்துவைத்திருக்கும் புது அக்கப்போர், ஆக்கிரமிக்கப்பட்ட மராத்திய மண்ணை மீட்டே தீருவோம் என்பதாக! மகாராஷ்டிரா மாநிலக் காங்கிரஸ் குறட்டை விட்டுத் தூங்குகிறதோ என்னவோ, கருநாடகக் காங்கிரஸ் தனியாக நின்று எதிர்ப்புக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறது. உள்ளாட்சி தேர்தல்களில் சிவசேனாவுக்கு இந்த மராத்தி மண்ணை மீட்பதான ஸ்டன்ட் சிலபல வெற்றிகளைத் தரலாம்! காங்கிரஸ் பாடுதான் திண்டாட்டம்! அது பெயரளவுக்குத் தான் தேசியக் கட்சி! உண்மையில் ஒரு மாநில, அது ஏன், ஒரு மாவட்டக் கட்சியாகக் கூட இருக்க லாயக்கில்லாத குப்பை என்பதை வருகிற ஒவ்வொரு தேர்தலும் நிரூபித்துக் கொண்டே வருகிறதே!  

மேலே வீடியோவில் சுருக்கமாக அரசியல் களம் என்ன மாதிரி மாறிக்கொண்டு வருகிறது என்பதைக் கோடி காட்டினாலும், பதிவின் நீளம் கருதி, இங்கே தமிழக நிலவரம் என்னவென்பதைப் பார்ப்பதோடு முடித்துக் கொள்ளலாம்.

 ஒட்டுமொத்த வாக்கு வீதத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளுடனும் அமைத்துக்கொண்ட கூட்டணியால் சிறிய கட்சிகள் 37% பலனடைந்திருப்பதை நாம் அறிந்துகொள்ளலாம். எனினும், இந்தக் கூட்டணிகளால் திராவிடக் கட்சிகளுக்கு வெறும் 8% கூடுதல் அனுகூலம் மட்டுமே கிடைத்திருக்கிறது.

எல்லாத் தொகுதிகளிலும் வெற்றிக்குக் காரணமான வாக்கு வீதத்துக்கு உரியவை இரண்டு திராவிடக் கட்சிகளும்தான். எந்தக் கட்சியையும் சாராத வாக்காளர்கள் சிறிய கட்சிகளுக்கோ மூன்றாவது அணிக்கோ தங்கள் வாக்குகளைச் செலுத்தி வீணாக்க விரும்பவில்லை. மூன்றாவது அணி என்பது எப்போது சாத்தியம் என்றால் இரண்டு திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியிலும் அவை பாதிப்பு ஏற்படுத்தும்போதுதான். அப்படி பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்றால் சவாலாளிகள் இந்த இரண்டு கட்சிகளின் குட்டிக் கூட்டாளியாக எஞ்சுவதில் திருப்தியடைந்துகொள்ள வேண்டியதுதான்.

இப்படிச் சொல்கிற ஒரு தீர்மானமான கட்டுரையை முழுதாய் இங்கே வாசிக்கலாம்! 

வாசித்துவிட்டு துக்ளக் ஆண்டுவிழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி சொன்ன கருத்தில் என்ன தவறு இருக்கிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்களேன்!

தொடர்புடைய பதிவு:

#துக்ளக் ஆண்டுவிழா! குருமூர்த்தி பேசியதும் தொடரும் சர்ச்சைகளும்!

 

சண்டேன்னா மூணு! #அரசியல் #ரஜனி #தந்திடிவி

தமிழக அரசியல் களம் இன்னமும் சூடேறவில்லை என்பதை இங்கே பலமுறை சொல்லிவந்திருக்கிறேன். அதுவும் போக இங்கே அதிமுக அரசு'பத்தாண்டுகளாக ஆட்சி செய்து வருகிற போதிலும்  அரசுக்கெதிரான எந்த ஒரு அதிருப்தி அலையும் காணோம்! கோடிக்கணக்கில் செலவு செய்து இசுடாலினை முன்னிறுத்தி எல்லா இடங்களிலும் தேர்தல் விளம்பரம், பரப்புரை என்று திமுக மாதக்கணக்கில் தம்பட்டம் அடித்து வருவதிலும் கூட  இசுடாலினுக்கு ஆதரவு அலை ஜெயிக்கிற அளவுக்கு எங்கேயும் காணோம் என்பது இப்போதைய கள நிலவரம். இரண்டு அணிகளும் கூட்டணியை முடிவு செய்து போட்டியிடும் தொகுதி, வேட்பாளர்களை அறிவிக்கிற வரை அரசியல் களத்தில் எந்தவொரு பரபரப்பும் இருக்காதென்பதை, வழக்கமாக திமுகவுக்கு ஆதரவாகக் குரல்கொடுக்கும் ஊடகங்கள் கூடக் கொஞ்சம் அடக்கி வாசிப்பதற்கு அதிமுக தரும் விளம்பரங்கள் காரணமாக இருக்கலாம்!


இது இன்றைக்கு தந்திடிவியில் ஒளிபரப்பான ஆயுத நிகழ்ச்சி! அரசியலுக்கு வரமாட்டேன் மன்னித்து விடுங்கள் என்று வீட்டுக்குள் பதுங்கிவிட்ட ரஜனியை, #தலைவா_வா என்றழைத்து ரசிகர்கள் ஆங்காங்கே நடத்திய போராட்டம், அல்லது அழுவாச்சி காவியத்தை வைத்து நிகழ்ச்சி நடத்துகிற அளவுக்குத்தான், அரசியல் களம் சூடு பிடிக்காமலேயே இன்னும் இருக்கிறது.

இந்த 46 நிமிட விவாதத்தைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தால், வராமல் ஓடிப்போன ரஜனிகாந்தைப் பற்றி தந்திடிவி ஒரு உள்நோக்கத்துடனேயே இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பியிருக்கிறது. #தலைவா_வா என்று கூவுகிறவர்கள் ரஜனியின் அரசியல் வருகையில் ஆதாயத்தை எதிர்பார்த்துச் செலவு செய்தவர்கள் என்பதை நெறியாளர் ஹரிஹரன் வெளிப்ப்டையாகவே கேள்வி எழுப்புகிறார்.. அந்த வகையில் ரஜனியைப் பங்ச்சர் செய்த மாதிரியும் ஆயிற்று , திமுகவைத் திருப்தி செய்வது போலவும் ஆயிற்று.

ரஜனிகாந்த் தன்னுடைய தலைவிதியை நொந்து கொண்டு சும்மா இருக்கவேண்டியதுதான்! இனிமேல் வாய்ஸ் கொடுத்தாலும் இதற்கு மேலும் அவமானப் பட வேண்டியதுதான்! வாய்ஸ் கொடுக்க மாட்டார் என்பதை  சின்னக் குழந்தைகூடச் சொல்லிவிடும்!

இதனால் ரஜனியை மலைபோல பிஜேபி நம்பி இருந்த மாதிரி, மலை காணாமல் போனதால் அதிமுக பொதுக் குழுவில் கேபி முனுசாமி அதிமுகவோ திமுகவோ தேசியக் கட்சிகளை நம்பி இல்லை என்று மீண்டும் சீண்டிப் பார்க்கிற மாதிரிப்  பேசியதில், வாய்ச்சவடால் தெரிகிறது, அவ்வளவுதான்!

2024 நாடாளுமன்றத் தேர்தல் வருகிற வரை அதிமுகவால் பிஜேபிக்கு எந்தப் பிரயோசனமுமில்லை கழற்றி விடப் படுமேயானால் திமுக எளிதாக ஜெயித்து விடமுடியும் என்பது கூடப்புரியாமல் கேபி முனுசாமிகள் பேசலாம்! எடப்பாடி தரப்புக்கு அது புரிந்திருக்கிறதா இல்லையா என்பதில் பிஜேபி கூட்டணியில் அதிமுக நீடிக்குமா என்பதற்கான விடையும் இருக்கிறது.

இந்த விடுகதையையில்  முதலில் விடுபடப் போவது பாமக தானா என்பதும் பொறுத்திருந்து பார்க்க வேண்டிய வேடிக்கை! 

மீணடும் சந்திப்போம் 

             

#காமெடிடைம் கொஞ்சம் அமெரிக்கா! கொஞ்சம் நம்மூர் அரசியல்!

நண்பர் பந்து எனக்குப் பரிந்துரை செய்திருந்த The Great Hack என்கிற Netflix documentary குறித்து இந்தப்பதிவில் கொஞ்சம் பேசியிருந்தது நினைவிருக்கிறதா? இப்போது அதன் இரண்டாவது வெர்ஷனா அல்லது சீரியசாகவே காமெடி செய்கிறார்களா என்று புரியவில்லை, அதே மாதிரி வடிவம் ஒன்றைப் பற்றிய செய்தி ஒன்றை இன்று காலை படித்தேன். அதாவது 2020 அதிபர் தேர்தலிலும் டொனால்ட் ட்ரம்ப் தான் வெற்றி பெறுவார் என்ற மாதிரியான கணிப்பு! நிஜமாகவே இது கணிப்பா? அல்லது அமெரிக்க மக்கள் மீதான சாபமா?


If this plays out it will prove five trends America first has deep resonance The deep state is shallow American media is way way out of touch Globalization is in full retreat International relations precarious like in 1914 one spark and boom!

சில ஆனால்/இப்படி இருந்தால் என்கிற நிபந்தனைகளும் இந்தக் கணிப்புக்கும் இருக்கத்தான் செய்கின்றன என்பதை அவர்களே ஒப்புக் கொள்கிறார்கள்.  "If voters were to vote primarily on the basis of their pocketbooks, the president would steamroll the competition, taking home 351 electoral votes to the Democrats’ 187, assuming average voter turnout," the document states. "This shows the importance that prevailing economic sentiment at the household level could hold in the next election."The caveat comes in the form of voter turnout. The report claims that if turnout among Democrats and independents match their maximum historical highs, Trump would lose in a tight race." என்று அந்தக் கணிப்பு சொல்கிறதாம்! Moody's said they have corrected their turnout models from 2016, which caused the forecast to incorrectly predict a victory by Hillary Clinton. என முந்தைய தேர்தலில் தவறாகக் கணித்த விதத்தை சரிசெய்துகொண்டுவிட்டதாகவும் சொல்வதைக் கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.இத்தனைக்கும் சிரியா விவகாரம் உட்படப் பல விஷயங்களில்    டொனால்ட் ட்ரம்பின் முடிவுகளுக்கு  அவரது ரிபப்லிகன் கட்சியிலேயே ஆதரவில்லை என்பதையெல்லாம் வாக்களிக்கும் ஜனங்கள் கணக்கிலேயே எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்பது அமெரிக்கத் தேர்தல் முறையின் வினோதம்! அதை விட பராக் ஒபாமா கனடாவில் மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக்கு வரவேண்டும் என்று ட்வீட்டி இருந்தது செம காமெடி!

I was proud to work with Justin Trudeau as President. He's a hard-working, effective leader who takes on big issues like climate change. The world needs his progressive leadership now, and I hope our neighbors to the north support him for another term.
11:28 PM · Oct 16, 2019 
ஒபாமா சொன்னால் போதுமா?

On the one hand, was very popular with Canadians, so this probably helps . On the other hand, he repeatedly endorsed too, and that didn’t help at all. #cdnpoli
#elxn43
#USPolitics
1:25 AM · Oct 17, 2019 
பதில் எப்படி வருதுன்னும் பாருங்க!


ராகுல் காண்டி இன்னமும் ஒரு பொறுப்பான அரசியல் செய்யத் தெரிந்தவராக முதிர்ச்சி பெறவே இல்லை. ஆதாரம் இல்லாத விஷயங்களைப்பேசுகிறார், களத்தில் நிற்காமல் அவ்வப்போது வெளிநாடுகளுக்கு ஓடிப்போய்விடுகிறார் இந்த மாதிரி கல்லெறிந்துவிட்டு ஓடுகிற சிறுபிள்ளைத்தனத்தை எத்தனைகாலம் தான் சகித்துக் கொண்டிருப்பதாம்? நீங்களே சொல்லுங்கள்! மஹாராஷ்டிரா தேர்தல் பிரசாரத்துக்கு வந்த ராகுல் காண்டிக்கு, லோக்சபா தேர்தல்களில் எடுபடாமல் போன அதே பல்லவி, மோடி ஒரு திருடன் என்று கூவுவதைத் தவிர வேறொன்றும் தெரியவில்லையாம்! இந்தமுறை பிக்பாக்கெட் என்று சொன்னாராம்! பிஜேபி தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்திருக்கிறது. செய்து என்ன புண்ணியம்? ராகுல் காண்டி வயசுக்கு வந்துவிடப் போகிறாரா என்ன!!  காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் பரப்புரை என்று நேரடியாகக் களத்தில் இறங்காவிட்டாலும் , மும்பையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மீடியாவிடம் பேசிக் கொண்டிருக்கிறார் என்பது நிகழ்நேரக் காமெடியாக நேரலையில் நடந்து கொண்டிருக்கிறது. 

    
பிரதமராக இருந்த பத்தாண்டுகளில் வாயைத்திறந்து பேசாதவராக சோனியா கும்பலால் அடக்கி  வைக்கப்பட்டு இருந்த மன்மோகன்சிங்குக்கு  இப்போதுதான் பேச அனுமதி கொடுத்திருக்கிறார்கள் போல! ஆனால் பிரதமராக இருந்த நாட்களிலேயே எதுவும் செய்யமுடியாதவராக இருந்தவரிடம் நிருபர்கள் ரிசர்வ் வங்கி கவர்னரிடம் பேசச் சொல்கிறார்கள், பஞ்சாப் மஹாராஷ்டிரா கூட்டுறவு வங்கி விவகாரம்  பற்றிக் கேட்கிறார்கள் என்பது ஆகப்பெரிய காமெடி! சோனியாG  காங்கிரசுக்கு வாய்த்த அடிமைகள் இப்படி என்றால், காசுக்கு கூவும் ஊடகங்கள்   நிருபர்களின்  யோக்கியதை அதைவிடப் படுமோசம்!  

மீண்டும் சந்திப்போம்.