மண்டேன்னா ஒண்ணு! #2021தேர்தல்களம் படுத்தும் பாடு!

2021 ஆம் ஆண்டு இந்திய அரசியல் களத்தில் பலவித விசித்திரங்கள், குழப்பத்தோடு ஆரம்பித்திருக்கிறது, மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளாட்சி?த் தேர்தல், சில மாநிலங்களில் சட்டசபைக்கான தேர்தல் என வருவதில் நிறைய அரசியல் காமெடிகள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. என்னவென்று கொஞ்சம் பார்க்கலாமா?


முதலாவதாக'மேற்கு வங்கத்தில் மம்தா பானெர்ஜி மூன்றாவது முறையாகவும் ஆட்சியைப் பிடித்துவிட வெறிபிடித்து அலைகிறார் இடதுசாரிகள், காங்கிரஸ் இரண்டையும் ப்பூவென உதறித்தள்ள முடிந்தவருக்கு பிஜேபி கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே பெரும் குடைச்சலைக் கொடுத்தது. 2021 இல் மாநில சட்ட சபைக்கான தேர்தலில், பிஜேபியைத் தனித்து நின்று சமாளிக்க முடியாதென்று நினைத்தோ என்னவோ காங்கிரசும் இடதுசாரிகளும் திரிணாமுல் காங்கிரஸ் பின்னால் அணிவகுத்து பிஜேபியைத் தோற்கடிக்க முன்வரவேண்டுமென்று அழைப்பும் விடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி இடதுசாரிகளுடன்தான் லட்சியக்  கூட்டணி  இன்றைக்குத் அறிவித்ததோடு, அதிர் ரஞ்சன் சவுத்ரி (காங்.நாடாளுமன்றத் கட்சித் தலைவர்) அப்படி பிஜேபியை தோற்கடிக்க வேண்டுமானால் மம்தா காங்கிரசில் வந்து சேர்ந்து கொள்ளட்டும் என்று சொல்ல காமெடிப்பீசாகிப் போனார் மம்தா. 

தன்னிடமிருந்து விலகி பிஜேபிக்குப் போன சுவேந்து அதிகாரியின் கோட்டையான நந்திகிராம் தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்திருக்கிறார் இன்னும் ஒரு தொகுதியிலும் போட்டியிடுவதாகவும் தகவல்! சவாலுக்கு எதிர்சவால் இல்லாவிட்டால் அது அரசியலா? சுவேந்து அதிகாரி மம்தாவை 50000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்போவதாக,அப்படி முடியாமல் தான் தோற்றுவிட்டால் அரசியலை விட்டே வெளியேறுவதாகவும் அறிவித்திருக்கிறார்.

ஆக மேற்கு வாங்காத தேர்தல் களம் சூடு பற்றிக் கொண்டு எரிய ஆரம்பித்து விட்டது. கொல்கத்தாவில் சுவேந்து அதிகாரி ஆதரவாளர்கள் மீது வன்முறை ஏவி விடப்பட்டது தொடர்கதையாகிக் கொண்டே வருவது ஒரு சாட்சி, அடையாளம்!                          

மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித்தேர்தல்கள் நடை பெறும்  தருணம் இது! சிவசேனா தன்னுடைய பலத்தை அதிகரித்துக் கொள்ள நினைப்பதில் முதல்பலி மாநிலங்களுக்கிடையிலான சுமுகமான உறவுகள் தான்! கருநாடக காங்கிரசுக்கு மிகவும் சிக்கலான நிலையை உருவாக்கியிருக்கிறது. மகாராஷ்டிரா - கருநாடகா இரு மாநிலங்களுக்கிடையிலான எல்லைப்பகுதிகளை மொழி ரீதியாகத் தங்களுக்கே சொந்தம், இது பழசு தான்! சிவசேனா இப்போது ஆரம்பித்துவைத்திருக்கும் புது அக்கப்போர், ஆக்கிரமிக்கப்பட்ட மராத்திய மண்ணை மீட்டே தீருவோம் என்பதாக! மகாராஷ்டிரா மாநிலக் காங்கிரஸ் குறட்டை விட்டுத் தூங்குகிறதோ என்னவோ, கருநாடகக் காங்கிரஸ் தனியாக நின்று எதிர்ப்புக்குரல் எழுப்பிக் கொண்டிருக்கிறது. உள்ளாட்சி தேர்தல்களில் சிவசேனாவுக்கு இந்த மராத்தி மண்ணை மீட்பதான ஸ்டன்ட் சிலபல வெற்றிகளைத் தரலாம்! காங்கிரஸ் பாடுதான் திண்டாட்டம்! அது பெயரளவுக்குத் தான் தேசியக் கட்சி! உண்மையில் ஒரு மாநில, அது ஏன், ஒரு மாவட்டக் கட்சியாகக் கூட இருக்க லாயக்கில்லாத குப்பை என்பதை வருகிற ஒவ்வொரு தேர்தலும் நிரூபித்துக் கொண்டே வருகிறதே!  

மேலே வீடியோவில் சுருக்கமாக அரசியல் களம் என்ன மாதிரி மாறிக்கொண்டு வருகிறது என்பதைக் கோடி காட்டினாலும், பதிவின் நீளம் கருதி, இங்கே தமிழக நிலவரம் என்னவென்பதைப் பார்ப்பதோடு முடித்துக் கொள்ளலாம்.

 ஒட்டுமொத்த வாக்கு வீதத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளுடனும் அமைத்துக்கொண்ட கூட்டணியால் சிறிய கட்சிகள் 37% பலனடைந்திருப்பதை நாம் அறிந்துகொள்ளலாம். எனினும், இந்தக் கூட்டணிகளால் திராவிடக் கட்சிகளுக்கு வெறும் 8% கூடுதல் அனுகூலம் மட்டுமே கிடைத்திருக்கிறது.

எல்லாத் தொகுதிகளிலும் வெற்றிக்குக் காரணமான வாக்கு வீதத்துக்கு உரியவை இரண்டு திராவிடக் கட்சிகளும்தான். எந்தக் கட்சியையும் சாராத வாக்காளர்கள் சிறிய கட்சிகளுக்கோ மூன்றாவது அணிக்கோ தங்கள் வாக்குகளைச் செலுத்தி வீணாக்க விரும்பவில்லை. மூன்றாவது அணி என்பது எப்போது சாத்தியம் என்றால் இரண்டு திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியிலும் அவை பாதிப்பு ஏற்படுத்தும்போதுதான். அப்படி பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்றால் சவாலாளிகள் இந்த இரண்டு கட்சிகளின் குட்டிக் கூட்டாளியாக எஞ்சுவதில் திருப்தியடைந்துகொள்ள வேண்டியதுதான்.

இப்படிச் சொல்கிற ஒரு தீர்மானமான கட்டுரையை முழுதாய் இங்கே வாசிக்கலாம்! 

வாசித்துவிட்டு துக்ளக் ஆண்டுவிழாவில் ஆடிட்டர் குருமூர்த்தி சொன்ன கருத்தில் என்ன தவறு இருக்கிறது என்பதைக் கொஞ்சம் யோசித்துச் சொல்லுங்களேன்!

தொடர்புடைய பதிவு:

#துக்ளக் ஆண்டுவிழா! குருமூர்த்தி பேசியதும் தொடரும் சர்ச்சைகளும்!

 

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!