ஒரு புதன்கிழமை! நண்பர் ராஜசங்கர்! தோழர் வரதராஜன்!

ஆடிட்டர் குருமூர்த்தி பேசியதன் அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை என்பதைப் பல இடங்களிலும் பார்த்து ஆச்சரியப்பட்டுக் கொண்டே இருக்கிறேன். அந்த அளவுக்கு அவர் பேச்சின் தாக்கம் நீடிக்கிறது என்றே நினைக்க வேண்டியிருக்கிறது.


குனா மூனா அப்போது அதை செய்தார் பெரும் சாதனைகளை செய்தார் என சொல்லிக் கொண்டிருப்பர்களுக்கு சில பல கேள்விகள்.
சச்சின் டெண்டுல்கர் பெரும் ஆட்டக்காரர். கிரிக்கெட் உலகின் கடவுள் என்றே மதிக்கப்படுகிறார். அவரை இன்றைக்கு அழைத்து ஒரு போட்டிக்கு கேப்டனாகவ இருக்க சொன்னால் என்னாகும்?
இசைஞானி இளையராஜா ஆகச்சிறந்த இசை மேதை. இசையின் நெளிவு சுளிவுகளிலே பாட்டிசைத்து பாமரனுக்கு காட்டியவர். அவரை அழைத்து இன்றைக்கு ஒரு படத்தை இயக்க சொன்னால் எப்படியிருக்கும்?
இதே தான் குனா முனாவுக்கும்.
அவர் ஒரு காலத்திலே பெரும் அரசியல் விமர்சகராக இருந்திருக்கலாம் தான். ஒரு ஆட்சியை கவிழ்க்க தோற்கடிக்க வேலை செஞ்சிருக்கலாம் தான். அதையெல்லாம் யாரும் இல்லை என மறுக்கவில்லை.
ஆனால் அவர் ஏதேனும் தேர்தலிலெ நின்றாரா?
ஏதேனும் வேட்பாளரையோ அல்லது கட்சியையோ தேர்தலிலே நிற்கவைத்து ஜெயிக்க வைத்தாரா?
ஒரு எம் எல் ஏ பதவி அல்லது எம் பி பதவிக்கு யாரேனும் பொதுத்தேர்தலிலே நிக்கவைத்து ஜெயிக்கவைத்து காட்டினாரா?
தேர்தல் பணி செய்த குழுவையோ அல்லது ஒரு கட்சியையோ நடத்தினாரா?
பொதுமக்களிடம் இயங்கும் இயக்கம் ஏதேனும் ஒன்றை நடத்தினாரா? அதற்கு திட்டங்கள் வகுத்தாரா? அவை வென்றதா?
தமிழகத்திலே கட்சிகள் தேர்தல் பணி எப்படி செய்கிறது என தெரியுமா?
பணப்பட்டுவாடா எப்படி நடக்கிறது என புரியுமா?
இதுக்கு எல்லாம் பதில் இல்லை, செய்யவில்லை, நடக்கவில்லை என்பது தான்.
பெரும்பாலான பெண்கள் வீட்டிலே சமைப்பார்கள் தான். நன்றாக ருசியாகவே சமைப்பார்கள் தான். பல ஆண்களூம் வீட்டிலே சமைக்கலாம் தான்.
ஆனால் அவர்களால் ஒரு ஹோட்டல் நடத்தமுடியுமா? அல்லது ஒரு நூறு பேருக்கு சமைத்து போடமுடியுமா?
ஹோட்டலிலே பரோட்டா மாஸ்டர், வடை மாஸ்டர் போன்றோருக்கு நன்றாக வடை சுட தெரியும் பரோட்டா போட தெரியும் என்பதற்காக அவர்கள் ஹோட்டல் நடத்திவிட முடியுமா?
நுண்ணிய நூல் பல கற்பினும் மற்றும் தன் உண்மை அறிவே மிகும் என வள்ளுவர் சொல்லிவிட்டு போயிருக்கிறார்.
இது மகான் கவுண்டர் ஒரு அழகான உரை சொல்லியிருக்கிறார். அவனவனுக்கு என்ன வருமோ அதை மட்டும் செய்யுங்கடா என .
எனவே குனா மூனாவுக்கு மட்டுமல்ல எல்லோருக்குமே என்ன வருமோ அதை மட்டும் செய்வது நல்லது.
சில முறை பலமுறை செய்து பார்த்தும் செய்ய முடியவில்லையா? விட்டுவிட்டு அடுத்தவேலையை பார்ப்பதும் நல்லது.

சில கூகிள் வலைக்குழுமங்களில் இயங்கிக் கொண்டு இருந்த நாட்களிலிருந்தே ராஜசங்கர் என்கிற இந்த இளைஞர் எனக்குப் பரிச்சயம் கொஞ்சம் விஷயம் தெரிந்து எழுதுகிறவர் என்று எனக்குப்படுவதால் இவர் பகிர்வுகள் சில இந்தப்பக்கங்களில் இடம்பெற்றதும் உண்டு ஆனால் மேலே சொன்ன விஷயத்தில் எனக்கு உடன்பாடு இல்லை நமக்குப் பிடிக்கவில்லையா, ஒதுங்கிக் கொள்வதுஉத்தமம் தனக்குச் சரியெனப் படுவதை எழுத ராஜசிங்கருக்கு எப்படித் தடை விதிக்க முடியாதோ, அதுபோலவே குருமூர்த்தி என்ன செய்ய வேண்டும் என்பதையும் பிறர் அவருக்குச் சொல்லித் தரவும் முடியாது. திமுக தான் பிரதான எதிரி என்று உறுதியாக எதிர்க்கிறவர்கள் இப்படித் திசைமாறிப் பேசுவது, எழுதுவது நன்றாகவா இருக்கிறது?


நண்பர் செங்கோட்டை ஸ்ரீராம் நடத்திவரும் தினசரி தளத்தில் வெளியாகியிருக்கும் ஒரு செய்தி மீதான கீச்சு இது.


ஸ்ரீராம் நல்ல எண்ணத்தோடுதான் இதை எழுதியிருக்கிறார் என்பதில் எனக்குச் சிறிதளவும் சந்தேகமில்லை. சுத்தானந்த பாரதியார் படைத்த நூல்கள் மீண்டும் தமிழகத்தில் பவனிவர வேண்டும் என்ற எண்ணத்தோடு நானும் சில முயற்சிகளைச் செய்ததுண்டு கிடைத்த அனுபவங்கள் மிகவும் கசப்பானவை சுத்தானந்த பாரதியார் என்ற குறியீட்டுச் சொல்லில் அதைக் கொஞ்சம் இந்தப் பக்கங்களிலேயே வெகுநாட்களுக்கு முன்பே எழுதி இருக்கிறேன். நல்ல எண்ணங்கள் என்ற படிக்கட்டு மீதேறியே நரகத்துக்கும் போகலாம் என்று தயிர் வடையைச் சாப்பிட்டுக்கொண்டே அந்தநாட்களில் தோழர் வரதராஜன் சொன்னது இப்போது சொல்வது போல காதில் கேட்கிறது

ஒரு புதன்கிழமை! A Wednesday

அன்று பிரிட்டிஷ் இந்தியாவில் கபார் கான் என்றொருவர் இருந்தார், காந்தியின் நெருங்கிய நண்பர் அவர், ஆப்கன் எல்லை பக்கம் பிறந்து வளர்ந்தவர், அவரின் தேசாபிமானம் மிக சிலாகிப்பானது (எல்லை காந்தி என்றே அன்புடன் அழைக்கப்பட்டவர்)
யாருக்கும் குறையாத சுதந்திர போரட்ட வரலாறு அவருக்கும் உண்டு. பட்டேல் நேரு காந்தி காமராஜர் வரிசையில் அவருக்கும் இடம் உண்டு
காந்தியோடு சிறைசென்று போராடினார். பிரிவினை வந்தபொழுது அது முடியாது என மல்லுகட்டியவர். தேசம் பிரிய கூடாது இஸ்லாமியர்கள் இந்தியர்களாக தங்களை முதலில் உணரவேண்டும் என உறுதியாக சொன்னவர்
அது முடியாத பொழுது "காந்தி எங்களை கைவிடாதீர்கள், அந்த நரகத்தில் எங்களை தள்ளிவிடாதீர்கள் என கண்ணீர் விட்டு அழுதார்."
எங்களை இந்தியாவோடு சேர்ந்த மேற்கு இந்தியா அமைத்து கொடுங்கள் என கதறினார், ஆம் அவர் இஸ்லாமியர் ஆனால் ஜின்னாவின் பாகிஸ்தானின் உள்நோக்கமும் அதில் இஸ்லாமியர் அமைதியாக வாழமுடியாது என்ற தீர்க்கதரிசன கவலையும் அவருக்கு இருந்தது
மூன்று துண்டாக உடைந்த இந்தியா 4 துண்டுகளாக உடையும் நிலை வந்தது.
நாங்கள் தனிநாடாக இயங்கமாட்டோம் மேற்கு இந்தியா கிழக்கு இந்தியா என இயங்குவோம் என கபார்கான் சொன்னதெல்லாம் யார் காதிலும் விழவில்லை
இவ்வளவிற்கும் அவர் கோரிக்கைக்கு பலுசிஸ்தான் பக்கம் பெரும் வரவேற்பு இருந்தது
ஜின்னா கோஷ்டி தவிர யாருக்கும் பாகிஸ்தான் என்றொரு நாடு உருவாவது பிடிக்க்கவே இல்லை என்பதுதான் அன்றைய நிலை
அந்த கபார்கானின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்திருந்தால் நிச்சயம் இப்பொழுது பாகிஸ்தானுக்கு அடுத்து ஆப்கனுக்கும் அதற்கும் இடையில் ஒரு குட்டி இந்தியா இருந்திருக்கும்
பாகிஸ்தான் இன்னும் சுருங்கி இருக்கும், யுத்தம் என வந்தால் பாக்குவெட்டிக்குள் சிக்கிய எலிபோல் பாகிஸ்தான் மாட்டியிருக்க்கும்
அவர் குரலை யாரும் கேட்கவில்லை
"இந்த ஓநாய்களிடம் எங்களை ஒப்படைக்காதீர்கள், இவர்கள் ஒருநாளும் உருப்படாத கொடூரமான கூட்டம்" என அவர் கதறியது பிரிட்டன் காதிலும் விழவில்லை
காந்தி அதுபற்றி கவலைகொண்டாலும் அத்தோடு அவர்காலமும் முடிந்தது, காந்தி நினைத்திருந்தால் இரு பாகிஸ்தான் உருவானது போல் இரு இந்தியாவினை உருவாக்கியிருக்கலாம்
நேரு அந்த நேரம் காத்த கள்ளமவுனமும் சந்தேகமே, படேலின் குரலும் எடுபடவில்லை
ஆனால் கபார்கான் தொடர்ந்து கேட்டுகொண்டேதான் இருந்தார், பிடிக்காத மருகளுடன் வாழ்வது போல அவர் முதிர்ந்த வயதுவரை அழுது கொண்டேதான் இருந்தார்
வங்கதேசத்தை உடைத்தபின் இந்திராவின் பார்வை பலுசிஸ்தான் மேல் விழுந்தது, தன் கடைசி நம்பிக்கையாக இந்திராவினை கண்டார் கான்
வங்கவெற்றிக்கு பின் இந்திராவின் கவனம் பாகிஸ்தானை இன்னும் உடைப்பதில் இருந்தபொழுதுதான் அரசியல் நெருக்கடி அவருக்கு ஆரம்பித்தது
இந்திரா எமர்ஜென்ஸி கொண்டுவந்ததில் இந்த உள்நோக்கமும் இருந்தது, பாகிஸ்தானை மேற்கொண்டு உடைத்து போட அவர் கடும் நோக்கம்கொண்டிருந்தார்
ஆனால் அது சர்வாதிகாரம் என சொல்லி உள்நாட்டு குழப்பம் இன்னும் பல குழப்பங்களுக்கு பின் அவர் ஆட்சிக்கு வர சில ஆண்டுகள் ஆனது
அவர் மறுபடி வந்தபொழுது பஞ்சாப் பற்றி எரிய அதிலே கவனம் செலுத்தி உயிரையும் விட்டார் இந்திரா
இதனால்தான் இந்திரா மறையும் பொழுது ஜியா உல்கக் எனும் ராணுவ பாகிஸ்தானிய ஆட்சியாளர் சொன்னான்
"அல்லா இருக்கின்றார், இந்திரா மறைந்தார்"
ஆம் இந்திரா ஆட்சிகாலத்தில் அஞ்சிய பாகிஸ்தான் கபார்கானை படாதபாடு படுத்தியது, அவர் இந்திய உளவாளி என 85 வயதிலும் சிறையில் வைத்து கொடுமைபடுத்தியது
இந்திரா கொஞ்சம் காலம் இருந்தால் நிச்சயம் கபார்கானின் நினைவு நிறைவேறியிருக்கும்
அவர் மறைந்த‌ பின் பலுசிஸ்தான் பக்கம் இந்திய பார்வை குறைந்ததென்றாலும் ரகசிய ஆதரவு உண்டு
1988ல் தன் 98ம் வயதுவரை வாழ்ந்த கபார்கான் தான் விரும்பிய இந்தியாவுடன் இணையாமலே மறைந்தார்
அவர் தன் உடலை பாகிஸ்தானில் புதைக்க விரும்பாமல் ஆப்கனில் தன் முன்னோர்கள் ஊரிலே புதைக்க சொன்னார்
ஆம் இந்தியா தங்களை கைவிட்ட சோகம் அவரை வெகுவாக பாதித்தது, அதனால் அவர் கல்லறை ஆப்கானிலே இன்றும் உண்டு
அந்த மனிதரின் கண்ணீருக்கும் கதறலுக்கும் செவிசாய்த்திருந்தால் இன்று இந்தியா பாகிஸ்தான் என்றொரு மிரட்டலை சந்தித்திருக்காது
மிக சிறிய நாடாக பாகிஸ்தான் சுருங்கி இந்தியா இடையே சிக்கியிருக்கும்
தியாகிகளின் கண்ணீரை உதாசீனபடுத்தினால் என்னாகும் என்பதற்கு கபார் கானின் கண்ணீரே சாட்சி
எனினும் இந்தியா 1988ல் அவர் இறந்தபின் அவருக்கு பாரத ரத்னா எனும் உயரிய விருது வழங்கபட்டது. இந்தியனாக பிறந்து அந்நியராக அந்த விருதை வாங்கியர் அவர்தான்
காஷ்மீர் பாகிஸ்தான் சிக்கல்கள் வரும்பொழுதெல்லாம் அம்மனிதரின் நினைவு வந்துவிட்டே செல்லும்
அந்த எல்லைகாந்தியின் கோரிக்கை நிறைவேறியிருந்தால் இந்த அளவு மோசமான நிலை வந்திருக்காது
வேண்டாத பிள்ளைகளிடம் சிக்கிவிட்ட பாசமிக்க தந்தையாக அவர் அழுது ஏங்கி செத்திருக்கவும் மாட்டார்
பாவம் அந்த மனிதன்.
அவனுக்கு செய்த துரோகமோ என்னமோ இந்தியா இன்னும் எல்லையில் ரத்தம் சிந்தி கொண்டேதான் இருக்கின்றது
காங்கிரசாலும் காந்தியாலும் நேருவாலும் கைவிடபட்ட அந்த தேசபற்றாளனுக்கு இன்று நினைவுநாள்
முஜிபுர் ரகுமானுக்கு உதவியது போல இந்தியா பலுசிஸ்தானியருக்கும் தனக்கும் உதவுவார் என எண்ணி ஏமாந்துபோன அந்த அப்பாவி மனிதனுக்கு நினைவு நாள்
நல்ல இந்தியன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு கலாமுக்கு முன்பே வாழ்ந்த இஸ்லாமியன் அந்த பெருமகன்
நேதாஜி போலவே வெள்ளையனுக்கு அஞ்சி காங்கிரஸ் தலைவர்களால் கைவிடபட்டு வதைத்து கொல்லபட்ட அந்த பெருமகனுக்கு வீரவணக்கம்
உங்களை காக்க முடியாத எங்களை, இந்நாட்டின் தேசபற்றாளனை கைவிட்ட எங்களை மன்னித்துவிடுங்கள், நாட்டுபற்றில்லா காங்கிரஸ் இந்நாட்டுக்கு எவ்வளவு ஆபத்தாக இருந்தது என்பதை நீங்களும் நேதாஜியும் எக்காலமும் சொல்லிகொண்டே இருப்பீர்கள்
கட்டினோர் விலக்கிய கல்லே மூலகல்லாய் அடையளமாய் நிற்கும் என்றார் இயேசுநாதார், அப்படி நீங்களும் நேதாஜியும் விலக்கி வைக்கபட்டு காங்கிரசின் துரோகத்தை, காந்தியின் உள்நோக்கத்தை, ஜின்னாவுக்கு நெருக்கடி கொடுக்க கூடாது எனும் நேருவின் சதிகளை எக்காலமும் சொல்லிகொண்டே இருப்பீர்கள்
ஒருநாள் கபார்கானின் நினைவுநாள் இந்தியாவில் பிரிவினைக்கு எதிரான ஒருமைபாட்டு நாளாக அறிவிக்கபடும், அது நடக்கும்
ஒருகாலமும் உம் புகழ் ஓயாது, ஒரு நன்னாளில் உங்கள் சிலையும் இத்தேசத்தில் நிறுவி உங்களுக்கு பெரும் அஞ்சலி செலுத்தபடும், இது சத்தியம்
படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர்
495
28 கருத்துக்கள்
168 பகிர்வுகள்
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!