இட்லி வடை பொங்கல்! #74 #வாத்திமவன்மக்கு #மாரிதாஸ் #வூஹான்வைரஸ்

ஆனாலும் திமுகவின்  நிலைமை இந்த அளவுக்குப் பரிதாபமாகியிருக்க வேண்டாம்! (உ.நிதி மாதிரி ஒரு அறிவுக்கொழுந்தைப் பெற்றதைச் சொல்லவில்லை, அது வேறு கதை)  வாத்திமவன் மக்கு என்பது கிராமப் புறங்களில் பரவலாகத் தெரிந்த ஒரு சொலவடை! அதையே இங்கே பாட்டாகப்பாடி இசுடாலின் மகிமைக்கு தோத்திரம் சொல்கிறார்கள்! மூன்றரை நிமிடம் தான்! கொஞ்சம்  கேட்டுத்தான் பாருங்களேன்!


மாரிதாஸ் ஓரிரு நாள் ஒதுங்கி ஓய்வெடுத்து வந்தபின் மறுபடியும் அரசியலில் சுறுசுறுப்பாக எழுத, பேச ஆரம்பித்து விட்டார் போல முகநூலில் பார்த்த, நிறைய யோசிக்க வைத்த அவருடைய பகிர்வு, இன்றைக்குப் படித்ததில் பிடித்ததாக:

இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்..!
Trumpஐ இரண்டாவது முறையாக அமெரிக்க காங்கிரஸ் impeach செய்து இருக்கிறது. இம்முறை 10 ரிபப்ளிகன் கட்சியினர் Trumpக்கு எதிராக வாக்களித்து உள்ளனர். இனி அது செனட் சபைக்கு சென்று வெற்றி பெற்றால்தான் Trump வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்படும். ஆனால், செனட் சபை வரும் ஜனவரி 19 வரை கூடப்போவதில்லை. ஜனவரி 20 மதியம் Trumpன் பதவிக்காலம் முடிகிறது. இது டெமாக்ரடிக் கட்சியினருக்குத் தெரியும், இருந்தாலும் ஒருவேளை செனட் சபையால் பதவி விலகலுக்குப் பின் Trump impeachment அங்கீகரிக்கப்பட்டால் (பதவி விலகிய பின், impeach செய்ய முடியாதே!) அடுத்த முறை அவர் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடாமல் தடுக்க உதவும்.
நம் தமிழகத்தின் ஆளும்-எதிர்க் கட்சிகள் தங்களைப் பரம வைரிகளாக பாவித்து அடிக்கும் கூத்துக்கள், ஜெயலலிதா -கருணாநிதி ஒருவரை ஒருவர் பார்க்காமல் தவிர்த்தது போல, ஒருவரை ஒருவர் வசைபாடியதைப் போல, டெமாக்ரட்டிக் – ரிபப்ளிகன் கட்சிகள் அங்கே நடந்து கொள்கின்றன. அதிலும் அமெரிக்க காங்கிரஸ் சபாநாயகர் Nancy Pelosiயின் பேச்சுக்கள், நடவடிக்கைகள் அப்படியே ஜெயலலிதாவை நினைவு படுத்துகின்றன.
இந்த சிண்டு-முடியும் வேலையை செவ்வனே செய்தது சமூக வலைத்தளங்கள் நடத்தும் கம்பனிகள். இப்போது, இந்த கம்பனிகள் ரிபப்ளிகன் கட்சிக்கு ஏற்படுத்திய பாதிப்பு, குறைந்தது அடுத்த 10 – 15 ஆண்டுகளுக்கு ரிபப்ளிகன் கட்சி ஆட்சிக்கு வர முடியாத அளவிற்கு இருக்கலாம்.
இதை எப்படி போகிற போக்கில் சொல்ல முடியும் என்று கேள்வி எழலாம். கீழே சில கம்பனிகள் கட்சி / தேர்தல் நிதிக்காக கொடுத்த பணம் எவ்வளவு என்று பார்த்தால் இப்படித்தான் எண்ணத் தோன்றுகிறது. (*1)
Facebook நிறுவனம் ரிபப்ளிகன் கட்சிக்குக் கொடுத்த நிதி US$40821, டெமாக்ரடிக் கட்சிக்குக் கொடுத்த நிதி US$1570645.
Apple நிறுவனம் ரிபப்ளிகன் கட்சிக்குக் கொடுத்த நிதி US$97902, டெமாக்ரடிக் கட்சிக்குக் கொடுத்த நிதி US$1766724.
Amazon நிறுவனம் ரிபப்ளிகன் கட்சிக்குக் கொடுத்த நிதி US$260140, டெமாக்ரடிக் கட்சிக்குக் கொடுத்த நிதி US$2224487.
Microsoft நிறுவனம் ரிபப்ளிகன் கட்சிக்குக் கொடுத்த நிதி US$247998, டெமாக்ரடிக் கட்சிக்குக் கொடுத்த நிதி US$2397102.
Google நிறுவனம் ரிபப்ளிகன் கட்சிக்குக் கொடுத்த நிதி US$106211, டெமாக்ரடிக் கட்சிக்குக் கொடுத்த நிதி US$4332294.
இதில் இருந்து தெளிவாகத் தெரிவது, சமூக வலைத்தள நிறுவனங்கள் டெமாக்ரடிக் கட்சியை அதிகம் விரும்புகின்றன என்பதே.
Trump நாட்டிற்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டினார் என்று பேசும் மீடியா, அவர் அப்படிப் பேசிய வீடியோவை இதுவரை காட்டவே இல்லை.
“தயவு செய்து திரும்பிப் போங்க” என்று Trump சொன்னதை Facebook எப்படி interpret செய்தது? இவர் வன்முறையாளர்களை மன்னிக்கும் மனப்பாங்கு கொண்டு இருக்கிறார் – to condone rather than condemn – என்றது. “
"நான் Biden பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன்” என்று Trump சொன்னதை, “நான் வரமாட்டேன், என்ன வன்முறை வேண்டுமானாலும் நீங்கள் செய்யலாம்” என்று குறியீட்டில் சொல்கிறார் Trump என்றது Twitter!
Trump கிளர்ச்சியைத் தூண்டிப் பேசி இருந்தால், மீடியா சும்மா விடுமா? நம் ஊர் குப்பனுக்கும் சுப்பனுக்கும் கூட அவர் அப்படிப் பேசிய வீடியோ 100 முறை WhatsAppல் வரும் அளவிற்கு மீடியா பரப்பி இருக்காதா? CNN முதல் NDTV வரை அதனை 10000 முறை போட்டுக் காட்டி இருக்காதா...
Trump எப்படியோ போகட்டும், அது நமக்கு முக்கியமல்ல, நம் இந்தியாவின் பிரச்சனைக்கு வருவோம்.
சமூக வலைத்தளங்களின் தான்தோன்றிதத்தனமான போக்கை இந்தியா கட்டுப்படுத்த முடியுமா? இந்திய அரசியல்வாதிகளுக்கு சில தனியார் நிறுவனங்கள் இப்படி நடந்தால் தங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் வரும் என்று யோசனைகள் வருகிறதா?
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மீனாக்ஷி லேகி கொண்டு வந்த Personal Data Protection Bill, 2019 பற்றி மேலும் பேச Facebook, Twitter ஆகிவற்றை summon செய்து அழைத்ததை அக்கம்பனிகள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுத்துப் பார்த்தன என்பது நாம் அறிந்ததே. சிங்கப்பூர் பாராளுமன்றம் அழைத்தால் உடனடியாக எந்த மறுப்பும் சொல்லாமல் அங்கு சென்று ஆஜராகும் இந்தக் கம்பனிகள்,ஏன் இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டின் பாராளுமன்றம் கூப்பிட்டால் வர மறுக்கின்றன? இங்கிருக்கும் ஆட்சியாளர்கள், அரசு நிர்வாகத்தின் மீதான அவர்களின் அபிப்பிராயம் என்னவாக இருந்தால் அவை இப்படி நடந்து கொள்ளும்?
நம் அரசியல்வாதிகள், அதிகார வர்க்கம் மட்டும் என்ன வாழ்கிறது? வெள்ளைக்காரன் நம்மை recognize செய்வானா என்று ஏங்கிக் கிடக்கும் சமூகமாக இருக்கிறது இந்தியா. யாராவது ஒரு வெளிநாட்டுக்கார அரசியல்வாதி நம்மைப் பற்றி ஏதாவது புகழ்ச்சியாக சொன்னால் போதும், இங்கே கோடிக்கணக்கான பேர் புளகாங்கிதம் அடைகிறோம். ஏன் அவ்வளவு தாழ்வு மனப்பான்மை நமக்கு?
Twitterல் தன் handle, blue-tick-mark உடன் இருக்க வேண்டும் என்று முயற்சி செய்யும் அரசியல்வாதிகள் எத்தனை பேர்? அந்த அங்கீகாரம் கிடைத்து என்னவாகப் போகிறது?
இதோ, Joe Biden ஒரு handle உருவாக்கி, ஒரே ஒரு tweet செய்கிறார், உடனடியாக அது verified நிலையை (blue-tick-mark) அடைகிறது, எப்படி? அப்படியானால், இது பலர் பின்-தொடர்வதைக் கருத்தில் கொண்டு, algorithm முடிவு செய்து, பின் Twitter அந்த blue-tick-mark கொடுக்கவில்லை, இது physical verification மட்டுமே. இந்த algorithm, அப்படி ஒன்று இருந்தால், Twitter வெளியிடத் தயாரா? (*3)
இவ்வாறான ஒரு grey-shaded நடைமுறையில் இயங்கும் கம்பனிகள் நாளை நம் நாட்டில் பிரச்சனைகள் செய்யாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?
தாக்குனூண்டு ஊகாண்டா - அது சமூக வலைத்தளங்களை தேர்தல் முடியும் வரை தடை செய்து இருக்கிறது. (*2) Facebook, ஒருதலைப் பட்சமாக செயல்பட்டதாக அவ்வரசு சொல்கிறது. இந்த மனத் திண்மை இந்திய அரசியல் வாதிகளிடம் வரவேண்டும்.
உடனே, இங்கு பலர், சீன செயலிகளைத் தடை செய்ததை சுட்டிக் காட்டலாம். இங்கு நாம் கவனிக்க வேண்டியது, தடை செய்த செயலிகளில் மிகப் பெரியது TikTok. அதில் எந்த அரசியல்வாதியும் இல்லை, அதிகார வர்க்கத்தினரும் இல்லை, அதில் இருந்தவர்கள் அனைவரும் சாதாரணர்கள் என்பதால் அரசியல்வாதிகளால் அப்படி ஒரு முடிவை எளிதாக எடுக்க முடிந்தது.
நாளை இந்தியாவில், எந்தக் கட்சிக்கு வெல்லும் வாய்ப்பு இருக்கிறதோ, அதற்கு சாதகமாக நடப்பது போய், எந்தக் கட்சி வெல்ல வேண்டும் என்று சமூக வலைத்தள கம்பனிகள் தீர்மானிக்கும் நிலை வந்தால்?
Parler என்று ஒரு சமூக வலைத்தள சேவையை Amazon முடக்கியது, காரணம் ரிபப்ளிகன் கட்சியினர் அதிகம் பயன்படுத்தும் வலைத்தளம், அதனால் வன்முறை தூண்டப்படும் என்று காரணம் சொன்னது. Amazonனுடன் சேர்ந்து Google மற்றும் Apple, தன் App Storeல் உள்ள Parler செயலியை நீக்கியது. இது எந்த விதத்தில் நியாயம்? இவ்வாறான குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை எந்தவித ஆதாரங்களும் காட்டப்படவில்லை – டெமாக்ரடிக் கட்சி முதல் தனியார் நிறுவனங்கள் வரை சொல்லும் காரணம் – Trump தேர்தல் முறைகேடுகள் பற்றி திரும்பத்-திரும்பப் பேசினார் என்பதனைத் தவிர வேறில்லை. (Trump தேவையில்லாமல் தேர்தல் தில்லுமுல்லு என்று அதிகமாகப் பேசி, அனைவரையுமே irritate செய்தார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை).
இந்தியாவில் வரும் 2024 பாராளுமன்றத் தேர்தலில் இது போன்ற பிரச்சனைகள் வராது என்பது என்ன நிச்சயம்?
அப்போதைய சூழலுக்கு ஏற்ப, பாஜகவிற்கோ, காங்கிரஸ் கட்சிக்கோ இந்நிறுவனங்கள் சாதகமாக நடந்தால் என்ன செய்வது? கடைசி நிமிடத்தில் Trump போல முழி பிதுங்கி நிற்பதை விட, இப்போதே அரசு தகுந்த முன்னேர்ப்பாடுகளை, சட்டங்களை கொண்டுவருவது நல்லது.
WhatsAppஐ எடுத்துக் கொண்டால், ஐரோப்பிய நாடுகளின் குடிமக்களுக்கு கொடுக்கும் தனியுரிமைகளை இந்தியர்களுக்குக் கொடுப்பதில்லை. (*4) இது பற்றி எந்த ஒரு இந்திய அரசியல்வாதியாவது ஒரு 5 நிமிடங்களுக்குப் பேசும் அளவிற்கு தகுதி உள்ளவரா என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளவும்.
கருத்துரிமை பற்றி பேசும் இடதுசாரி லிபரல்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் Trump முடக்கப்பட்டதை ஆதரிக்கிறார்கள். இதே, இங்கே ராகுல் காந்தி அவர்களின் சமூக வலைத்தள கணக்கு முடக்கப்பட்டால் ஆதரிப்பார்களா?
Parlor செயலியை நீக்கியது போல, 2024 தேர்தலுக்கு முன் MyGovIndia செயலியை, பாஜக பிரச்சாரதிற்குப் பயன்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக சொல்லி, Google தனது play storeல் இருந்து நீக்கினால் ஏற்றுக் கொள்வோமா?
அவ்வளவு ஏன், நம் ஒவ்வொருவரின் சமூக வலைத்தள கருத்துக்களை வைத்து, நாம் பயன்படுத்தும் Jio அல்லது Airtel கம்பனிகள், தனது கொள்கைக்கு ஒவ்வாத முறையில் எழுதுகிறவன் என்று சொல்லி தனது internet அல்லது mobile சேவைகளை நிறுத்தினால் எப்படி இருக்கும்?
“நீ வலது சாரிச் சிந்தனையுடன் எழுதுகிறாய்”, என்று VISA நிறுவனம், எனது debit card சேவையை நிறுத்தினால் எப்படி இருக்கும்? வங்கி என் கணக்கினை முடக்கினால் என்ன ஆகும்?
இதே காரணத்தைச் சொல்லி, எனது internet service provider, இனி உனக்கு 56 kbps தான், இந்தக் கருத்து கொண்டவர்களுக்கு இந்தெந்த வேகத்தில் internet சேவை கொடுக்கப்படும் என சொன்னால் என்ன ஆகும்?
உடனடியாக இந்தியா செய்ய வேண்டியது.
1. இந்தியாவில் விற்கப்படும் கைபேசிகள் அனைத்தும், அது Android, iOS, KaiOS என எந்த இயக்க முறைமை கொண்டதாக இருந்தாலும் சரி, Indian App Store அதில் இருக்க வேண்டும். அதனை அந்த மென்பொருள் நிறுவனம் எந்த சூழநிலையிலும் நீக்க முடியாத அளவிற்கு இருக்க வேண்டும், நீக்கிகனால் இயக்க முறைமை / கைபேசி செயல்படக் கூடாது. Indian App Storeல் தான் இந்திய அரசுசார் செயலிகள் இருக்கவேண்டும், தரவிறக்கம் செய்யப்பட வேண்டும்.
2. எந்த சமூக வலைத்தள நிறுவனமும், இந்திய நாட்டின் IP addressல் வரும் தரவுகளை இந்திய serverகளில் மட்டுமே சேமிக்க வேண்டும்.
3. உடனடியாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் போல, தனியுரிமைச் சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும்.
4. முடிந்தவரை open source மென்பொருட்களை இந்திய அரசு ஊக்குவிக்க வேண்டும். முடிந்தால், சில incentives கூடக் கொடுக்கலாம்.
5. சமூக வலைத்தளங்களில் anonymous ஆக இருக்க முடியலாம், ஆனால், identity இல்லாமல் இருக்கக் கூடாது. அதற்கேற்றவாறு இந்தியாவில் சமூக வலைத்தள நிறுவனங்கள் செயல்படுமாறு கொள்கைகளை வகுக்க வேண்டும்.
6. பேச்சுக்கு, எழுத்துக்குத் தடை விதிப்பதை இந்த மண்ணின் சட்டங்கள் தான் செய்ய வேண்டும், தனியார் நிறுவனங்கள் அல்ல. அப்படி செய்ய விழையும் தனியார் சமூக வலைத்தள நிறுவனங்கள், அதில் வரும் கருத்துக்களுக்கும் எழுதுபாவரோடு சேர்ந்து சம பொறுப்பினை ஏற்க வேண்டும்.
7. தனிநபர், தனியார் அல்லது அரசு கட்டுப்படில்லாத ஒரே ஒரு சமூக வலைத்தளமாவது இம்மண்ணில் செயல்பட வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை அரசு செய்ய வேண்டும்.
Critical theories என்பது 1920களில் உருவானது. அதில் இருந்துதான் சில சமூக பிரச்சனைகள் தீர்க்கப்பட்டது, அதே சமயம் தீர்க்க முடியாத பிரச்சனைகளும் உருவானது. இதனைப் பற்றி பலர் படித்து இருப்போம் - ஈ.வெ.ரா கூட இதில் இருந்து தான் பல கருத்துக்களை எடுத்து, தனக்கு ஏற்றவாறு யோசித்து சொல்லி இருக்க வேண்டும். இதன் பரிணாம வளர்ச்சியாகத்தான் cynical theories வந்திருக்கும். இதன் பலனை இப்போது அமெரிக்கா அனுபவிக்கறது, இந்தியா சரியான நடவடிக்கைகளை எடுக்க சரியான நேரம் இதுவே, எடுக்காமல் போனால் கூடிய விரைவில் அதன் பலனை அனுபவிக்கும். (*5)
தனியுரிமை மற்றும் சமூக வலைத்தள செயல்பாடுகளை அரசுகள் சரியாகக் கையாளாமல் போனால், பின்னாளில் பெரும் பிரச்சனைகளை மனித சமுதாயம் சந்திக்க நேரிடும். (*6).
------------------------------------
References:-
(*1) Open Secrets: Who are the Biggest Organization Donors?
(*2) The New York Post: Uganda bans all social media ahead of election, sparking outrage
(*3) Inspiration Search: Verified in one tweet: Joe Biden launches new Twitter handle to build following before taking command of White House
(*4) Wion: WhatsApp pushes new rules on Indian users, but Europeans are exempt
(*5) Book: Cynical Theories, by Helen Pluckrose & James Lindsay
(*6) Book: Artificial Intelligence and the Future of Power, by Rajiv Malhotra

Courtesy: Karthik Srinivasan         

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளைப் பற்றி நிறையக் குழப்பங்கள் இருக்கின்றன. வாக்குகளால் டொனால்ட் ட்ரம்ப் தோற்றார் என்பதை விட ஊடகங்களை ஒதுக்கி விட்டு 2016 இல் ட்ரம்ப் ஜெயித்ததில் அதிபருக்கும் ஊடகங்களுக்கும் நீயா நானா போட்டிநடந்து அதில்  , ஊடகங்கள் ஜெயித்திருக்கின்றன என்பது நன்றாகவே தெரிகிறது. ஜோ பைடன் அல்லது டெமாக்ரட்டுகள் ஜனங்களுடைய ஆதரவினால் வென்றார்கள் என்று சொல்ல முடியாதபடி நிறையாக குழப்பங்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன உலகத்தின் பெரிய நாட்டாமை ஆவதற்கு சீனா முண்டா தட்டிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஜோ பைடன் மாதிரி ஒரு இரண்டுங்கெட்டான் அமெரிக்க அதிபராகி இருப்பது அமெரிக்காவுக்கோ உலகுக்கோ  நல்ல செய்தியே அல்ல.


அமெரிக்கர்களுடைய மெத்தனம் சீனாவின் எக்காளம், எகத்தாளமாகியிருப்பது எப்படி என்பதை மேலே நான்கு நிமிட வீடியோவில் பாருங்கள்! ஷி ஜின்பிங் என்கிற ஒரு கம்யூனிஸ்ட் சர்வாதிகாரியின் ஆதிக்கக் கனவுகளுக்கு 2020 ஆம் ஆண்டில் உலகம் கொடுத்த விலை என்ன? வூஹானிலிருந்து பரவிய கொரோனா வைரசின் தாக்கத்திலிருந்து உலகம் இன்னமும் முழுதாய் விடுபடவில்லை.

மீண்டும் சந்திப்போம்        

2 comments:

  1. varied subjects. அனைத்தும் உபயோகமான தகவல்கள். பாராட்டுகள், இங்கு படிக்கக் கொடுத்ததற்கு

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சந்தோஷம் நெல்லைத்தமிழன் சார்! இந்தப்பக்கங்களில் எப்போதுமே குறைந்தது மூன்று விஷயங்களாவது விவாதிப்பதற்காக முன்வைக்கப்படுவது வழக்கம்தானே!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!