Showing posts with label மண்டேன்னா ஒண்ணு. Show all posts
Showing posts with label மண்டேன்னா ஒண்ணு. Show all posts

மண்டேன்னா ஒண்ணு! அரசியல்! அரசியல்!அரசியல்!

`தேசியக் கட்சிகள் மாநில நலனில் சரியாக செயல் பட முடியாமல் இருக்கிறது. காவிரி பிரச்னை, பெரியார் அணை பிரச்னைகளில் வாக்கு வங்கி அரசியலுக்காக நடுநிலையோடு செயல் படவில்லை’ என குமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் டி.டி.வி.தினகரன் சீறினார் என்கிற தலைப்போடு ஆனந்தவிகடன் செய்தி வெளியிட்டிருக்கிறது 
டி.டி.வி.தினகரன்
இங்கே நேரு காலத்தில் மாநிலங்களுடைய பிரச்சினைகள் அடியோடு புறக்கணிக்கப் பட்டதில் தான் மாநிலக்கட்சிகள் கிளைத்தெழுந்தன என்பதை நேற்று சரண்சிங் பிறந்தநாள் எப்படி  விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது என்ற செய்தியைத் தொட்டும், நேரு, சாஸ்திரி, தலைமைப்பண்பு என்கிற குறியீட்டுச் சொற்களில் ஏற்கெனெவே எழுதிய பல பதிவுகளிலும் பேசி இருக்கிறோம். இங்கே சென்னை மாகாணமாக இருந்த நாட்களில் இருந்தே திராவிட அரசியல் எப்படியெல்லாம் சந்தர்ப்பத்துக்கேற்ற மாதிரி முகமூடியுடன் சுயநல அரசியலாகவே வளர்ந்து கழகங்களானது என்பதன் நீட்சிதான் தினகரன் பேச்சு! கழகம் என்றாலேயே சூது, மோசடி, ஊழல், அதிகாரக்கொலைகள், மோசடி, ஊழல் செய்வதற்காகவே கூட்டணி தர்மம் என்கிற அர்த்தங்கள் புரிந்துவிடுகிறது, இல்லையா!!
*******     
இங்கே மூச்சுக்கு மூச்சு இது பெரியார் மண் என்று திராவிடம் பேசிப் பிழைப்பு நடத்துகிறவர்கள் பேசக் கேட்டிருப்பீர்கள்! ஈவெரா நினைவுதினம் இன்று. நண்பர் மாணிக்கம் கூகிள் பிளஸ்சில் பகிர்ந்த ஒரு படம் பழையநினைவுகளைக் கிளறி விட்டதோ?
 பதிவர் மறைந்த டோண்டு ராகவனின் இந்தப் பதிவுக்கு வந்த பின்னூட்டம் இது இதைப்படித்தால் மேலே உள்ள படத்துக்கும் டோண்டு சாரின் பதிவுக்கும் என்ன சம்பந்தம் எனப்புரிந்துவிடும் !


Blogger Suresh Ram said...
கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி என்று தன் வாழ்க்கை முழுவதும் மூடநம்பிக்கை, பார்ப்பன ஆதிக்கம், சாதி வெறி, ஆணாதிக்கம் அனைத்தையும் எதிர்த்து வந்த தந்தை பெரியாருக்கு கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை செய்யும் அதிசயம் தமிழகத்தில் நடந்திருக்கிறது. அந்த அதிசயத்தை ம.க.இ.கவின் தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் செய்து காட்டியிருக்கிறது.

http://www.vinavu.com/2010/09/17/untouchability-in-temples/
September 30, 2010 5:30 PM

அதிசயப்பட்டு மூக்கில் விரலை வைப்பதற்கு முன்னால் அவர் கொடுத்திருக்கும் சுட்டியில் என்ன சொல்லி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டுத் தெளிவாகக் குழம்பவும்! #வினவு வழக்கமாகக் கையாளும் உத்திதான்!   

டோண்டு ராகவனின் ஒரு பின்னூட்டம் 
டோண்டு சாரின் பதிவையும் பதிவுக்கு வந்த 83 பின்னூட்டக்  கணைகளை யும் வாசித்துப் பார்க்கும்போது டோண்டு ராகவனோடு, அந்தநாட்களில் வலைப்பதிவு எழுதுவது எத்தனை சுவாரஸ்யமாக இருந்தது என நினைத்துப்பார்த்து பெருமூச்சு விடத்தான் முடிகிறது 
*******
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அதன் தலைவர்  திருமாவளவனும் தொடர்ந்து  சர்ச்சைகளில், ஊடகவெளிச்சத்தில் சிக்குவது தற்செயலானதுதானா?

இப்போ தெரியுதா ஏன் விடுதலை சிறுத்தைகள் பொன்மாணிக்கவேலை பதவி நீக்கணும்னு சொன்னாங்கனு?  என்று கேள்வி கேட்கிறார்கள்! 

இன்றைய செய்திகள் எழுப்பும் அரசியல் கேள்விகள் இவை! உங்களிடம் விடை இருக்கிறதா? கொஞ்சம் சொல்லுங்களேன்!
     

மண்டேன்னா ஒண்ணு! வேறென்ன அரசியல்தான்!

திராவிட அரசியல்  பழையநெனப்புடா பேராண்டி என்று பேசியே கடந்தகாலத்துக்கே போய் விடலாமென்று பார்க்கிறதோ? திமுக பொருளாளர் துரைமுருகன் கருணாநிதியின் கைராசி பற்றி இப்படிப் பேசியிருக்கிறார்!


2004 இல் கருணாநிதி ஐக்கிய முன்னணிக் கட்சிகள் கூட்டத்தில் சோனியா காந்தி பெயரை பிரதமர் பதவிக்கு முன்மொழிந்த ராசியோ என்னவோ, அவசரமாக UPA எம்பிக்கள் ஆதரவுக் கடிதத்தை ஜனாதிபதி மாளிகைக்கு எடுத்துக் கொண்டு ஓடியதும், அம்மணி தியாகசிகரமாகி ஒதுங்கிக்கொள்ள   டம்மிப்பீஸ் மன்மோகன்சிங் பிரதமரானதும் வரலாறு! அதே ராசிதான் இப்போதும் தொடரப் போகிறதோ? 

இசுடாலின் எப்படிப் பேசினார் என்பதையும் கொஞ்சம் கவனியுங்கள்!
   
மம்தா பானெர்ஜி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், ஏன் டெலிவிஷன் காமெரா என்றால் ஓடோடிவரும் கேசரிவாலு உட்பட வடக்கே உள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் எவருமே சொல்லாத  நிலையில் இசுடாலின் மட்டும் முந்திக்கொண்டு ராவுல்பாபா தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று அறிவிக்க வேண்டிய அவசரம், அவசியம் எங்கிருந்து வந்தது? #விசிக வின் திருமாவளவன் அறிக்கை வழியாக வழிமொழிந்த செய்தி இங்கே  

ஒருவார காலத்துக்கு முன்புதான் சந்திரபாபு நாயுடு கூட்டிய  கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் பற்றிய முடிவை, தேர்தலுக்குப்பின் கூடி தீர்மானிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.இசுடாலினுக்குத் தெரியாதா?

இப்படி பல ‘டும் டும்’ -கள் தான் ஸ்டாலினின் அவசர அறிவிப்புக்கான காரணமோ என்று ஐயப்படுகிறார் காவிரிமைந்தன். கூட்டத்தைச் சேர்க்கக் காட்டிய சாமர்த்தியத்தை கூட்டணி அமைப்பதிலும்  சீட் பங்கீட்டிலும் காட்டுவார்களா?

Citing sources, an NDTV report stated that TDP’s Chandrababu Naidu who was present when Stalin made his speech, was among the parties that that were not on board with Stalin’s suggestion. The others include Akhilesh Yadav’s Samajwadi Party, Mamata Banerjee,ய Banerjee’s Trinamool Congress, Farooq Abdullah's National Conference, Lalu Yadav's Rashtriya Janata Dal and the CPI(M). என்று பலகட்சிகளும் இசுடாலின் முழங்கி சிலமணிநேரத்திலேயே தங்களுடைய அதிருப்தியைப் பதிவு செய்திருக்கின்றன.
      
கருணாநிதி எட்டிப்பிடித்ததை எல்லாம் இசுடாலினும் எட்டிப்பிடிப்பார் என்று எதிர்பார்ப்பதே அதிகம் தானோ? 
 *******
மத்தியப்பிரதேசத்தின் 18வது முதல்வராக இன்று பதவியேற்றிருக்கிறார் #கமல்நாத்  யார் இவர்?


1984 #சீக்கியர்கள்படுகொலை காங்கிரஸ் குற்றவாளி சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனையை உறுதி செய்து டில்லி உயர்நீதி மன்றம் இன்று தீர்ப்பு அளித்திருக்கிறது. கீழ்க்கோர்ட்டில் விடுதலை செய்யப்பட்டதை ரத்து செய்து இந்தத் தீர்ப்பு இன்று காலை அறிவிக்கப் பட்டிருக்கிறது. இதேபோல #சீக்கியர்கள்படுகொலை யில் சம்பந்தப்பட்ட காங்கிரசின் ம.பி முதலமைச்சர் #கமல்நாத் தண்டிக்கப்பட இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும் ?
     

மண்டேன்னா ஒண்ணு! கொஞ்சம் கவிதை நிறைய யோசனை!

நான் நிரந்தரமானவன் அழிவதில்லை 
எந்தநிலையிலும் எனக்கு மரணமில்லை 


கண்ணதாசன் மாதிரி ஊக்கமாய்ச்சொல்ல வார்த்தைகள் இல்லைதான்! ஆனாலும் உணர்வுகள் பீறிட்டெழும்போது அழுகையும் வரும், கொஞ்சம்  கவிதையும் வரும். அப்படி வந்த ஒரு தருணத்தையும் இங்கே இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்.

வலிகளை மறக்கக் கவிதையில் வடித்து எழுதிப்பார்த்ததும் ஒரு காலம்
வலிகளைக் கூட்டின கவிதை வரிகளை மறந்துமிருந்தது ஒரு காலம்!
எனக்கு மட்டுமே இப்படி ஏன் என ஏங்கித் தவித்ததும் ஒரு காலம்
தனக்கு மட்டுமே தாயின் பரிவு முழுதாய் வேண்டின சவலைப் பிள்ளையாய்
அழுதால் உன்னைப்பெறலாமே என யாரோ சொன்னதை நம்பினபோதில்
அழுதுபுரண்டு கதறின நேரம் அவள் வரவில்லைஒரு பதில் தரவில்லை!


சவலையழுததுதிவலையளவும் வினையணுகாமல் காத்திடவேண்டும்!
கேட்டது எல்லாம் தந்திட வேண்டும்என்னைத் தனியன் ஆக்கிவிடாமல்
கூடவே இருந்தென்னைப் பார்த்திட வேண்டும்கேட்டதனைத்தும் அதிகம் தான்!
விடையாய்க் கிடைத்ததோ பொருள் பொதிந்தவோர் மௌனம்தான்!
பாராமுகமாய் இருந்தாள் எனப்பெரும் கோபமும் வந்தது வீம்பு வளர்ந்தது.
தாயேநீ இல்லைநீ வெறும் பொய் தான்அழுகை வெடித்தது ஆத்திரம் வந்தது!


இப்படியெல்லாம் வார்த்தைகளில் ஆற்றாமையைக் கொட்டித் தீர்த்ததனால் மட்டுமே விடை கிடைத்து விடுமா? பதில் கிடைத்துக் கொண்டே தான் இருந்தது.ஆனால், அதைப் புரிந்துகொள்கிற பக்குவமும் நேரமும் தான் வாய்க்கவில்லை. 

ராஜாங்கம் தான் அப்படிக் கொஞ்சம் ஆச்சரியப்பட்டுக்  கேட்டது என்று நினைக்கிறேன்!

"நீங்க ரெண்டு பெரும் உண்மையிலேயே பகையாளிங்களா, இல்லே பங்காளிங்களா? இப்படி அடிச்சுக்கறீங்க, ஆனா உங்களைப் பத்தி யாராவது தப்பாப் பேசினா அவரு அவங்களோட மல்லுக் கட்ட ஆரம்பிச்சிடறாரு!"

எனக்கே அந்த சந்தேகம் அவ்வப்போது வரும்! நாங்கள் இருவரும் நண்பர்களா? அல்லது சண்டைக்காரர்களா? அவனிடமே ஒருதரம் கேட்டபோது சிலிர்த்துக் கொண்டே சொன்னான், "நாயே! இன்னும் இது கூடத் தெரியலை! நீ சண்டைக்கரானாக இருக்கவும் லாயக்கில்லை! சிநேகிதக்காரனாகவும் இருக்க லாயக்கில்லை!" 

உடனே அங்கே வார்த்தைகளில் அக்கப்போர் ஆரம்பித்து விடும்! 

இன்றைக்கு அவன் பிறந்தநாள். ஆனால் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்ல முடியாது பதிமூன்று வருடங்களுக்கு முன்னமே அவன் இறந்துவிட்டான். சாகிற வயது இல்லைதான்! ஆனால் தானே தேடிக்கொள்ளும் ஆசைகள், கோபதாபங்கள், ஏமாற்றங்கள் அதிலெழும் குரோதங்கள் என்று ஏதோ ஒரு வடிவத்தில் நாமே இடம் கொடுத்துவிடும் மரணத்தை யார்தான் தடுத்துவிட முடியும்?    


நான் யார்? இந்தக் கேள்விக்கு ஷ்ரத்தாலு ரானடே  மிக அழகாக பதில் சொல்கிறார். ரமண மகரிஷியின் நான் யார் விசாரம் மிகக் கடினமானது. ஆனால் அந்தக் கேள்விக்கு விடைதேடுவதில் தான் வாழ்க்கையின் சாரமே .அடங்கியிருக்கிறது.

 

ராபர்ட்  ஃப்ராஸ்ட்  ஒரு அமெரிக்கக் கவிஞன்! அவர் எழுதிய  Mending Wall  என்றொரு கவிதை!   ஃப்ராஸ்ட் இங்கிலாந்துக்குப் போயிருந்தபோது, க்ரஹாம் கிரீன் என்ற எழுத்தாளர் அவரிடம் கேட்டாராம்!

"மீபகாலத்திய இலக்கியங்களில், நீங்கள் எழுதிய இந்தக் கவிதையில் " நல்ல வேலிகள் நல்ல அண்டைவீட்டுக்காரனை உருவாக்குகின்றன"  என்று சொல்லியிருப்பதை மாதிரிப் புரிந்து கொள்ளக் கடினமான வேறு ஒன்று இல்லையே!"

ஃப்ராஸ்ட் சொன்ன பதில், " என்னுடைய உதவி இல்லாமலேயே அதை நீங்கள் புரிந்து கொள்ளவேண்டும்  என்று தான் விரும்புகிறேன்."

விஞரும், எழுத்தாளரும் சிரித்தபடியே அந்த விவாதத்தை அப்படியே விட்டு விடுகிறார்கள். அமெரிக்க இலக்கியத்தில்  ஃப்ராஸ்டின் இந்தக் கவிதை மாதிரி அக்குவேறு ஆணிவேராக அலசப்பட்ட கவிதை எதுவும் கிடையாது என்று விமரிசகர்கள் சொல்கிறார்கள். நிறையவே தப்பாகப் புரிந்து கொள்ளப்பட்ட கவிதையும் இதுவாகத் தான் இருக்கும்! 



ப்பாகப் புரிந்து கொள்ளப் பட்ட நிலையிலும் கூட, ஒரு அழகான கேள்வியை, இந்தக் கவிதைஇன்னமும் தொடர்ந்து எழுப்பிக் கொண்டு தான்  இருக்கிறது!

 
Something there is that doesn't love a wall, 
That sends the frozen-ground-swell under it,
And spills the upper boulders in the sun,
And makes gaps even two can pass abreast

ன்று ஆரம்பிக்கிற இந்தக் கவிதை, இரண்டு பேர் ஒரு குறுக்குச் சுவரைப் பற்றி பேசுவதாக உருவகத்தை எடுத்துக் கொண்டு நாற்பத்தாறு வரிகளில் கொஞ்சம் யோசிக்க வைக்கிறது. வேலியை ஒட்டி  அனுபவத்தைச் சொல்பவனும், அண்டைவீட்டுக்காரனும் பேசிக் கொண்டே நடக்கிறார்கள். வேலி எதற்கு, என்னுடைய பக்கத்தில் இருப்பது, உன்பக்கம் வந்து என்ன செய்து விடும் என்று கேட்பதற்கு, அண்டைவீட்டுக் காரன் சொல்கிறான், நல்லவேலிகள் நல்ல அண்டைவீட்டுக்காரனை உருவாக்கும்!  


Before I built a wall I'd ask to know
What I was walling in or walling out,
And to whom I was like to give offense.
Something there is that doesn't love a wall,
That wants it down.'

விஞருடைய  வாதம் எல்லாம் இது தான்! 
 
தோ ஒன்று, குறுக்குச் சுவர் ஒன்று இருப்பதை விரும்புவதில்லை. வேலியைக் கீழே தள்ளவே அது விரும்புகிறது! கவிஞருடைய வாதங்களை எல்லாம் அண்டைவீட்டுக்காரன் கேட்டுக் கொண்டே இருக்கிறான். ஆனால், கடைசியாக மறுபடியும்,'Good fences make good neighbors' என்று சொல்வதோடு கவிதை முடிகிறது.
ற்கெனெவே இந்தக் கவிதையை இந்தப் பக்கங்களில் பார்த்திருக்கிறோம்!இரண்டு எதிரெதிரான  மன நிலைகள் இங்கே உருவகிக்கப் படுவதைப் பேசியிருக்கிறோம்!

அதைக் குறித்து என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி இந்த உருவகத்தில் தொக்கி நிற்கிறது.
 அதுதான் முக்கியம்!

   

மண்டேன்னா ஒண்ணு! இலவசங்கள் என்ற மாயை!


இந்தப்படத்தைப் போட்டு ஒரு கிரேக்கப் பழங்கதையை தி கார்டியன் நாளிதழ் நினவு படுத்துகிறதாம்! கடவுள்களால் சபிக்கப்பட்ட ஒரு அரசன் .ஒரு பெரும்பாறையைத் தோளில் சுமந்துகொண்டு  செங்குத்தான மலைமேல் ஏறவேண்டும்.அப்படி ஏறுகிற சமயம் உச்சியை நெருங்குகிற ஒவ்வொரு சமயமும் பாறை நழுவிக் கீழே விழ இந்த அரசனும் மறுபடி அந்தப்பாறையைக்  கீழே இருந்து தூக்கிச்சுமந்து மேலேறவேண்டும். இந்தக் கதை மாதிரியே கிரீஸ் நாட்டின் கடன்சுமையும் தீராத தொடகதையாக இருக்கிறது என்று கதை சொல்கிறது.  

இப்படி ஆனதற்கு யார், எது காரணம்  என்று ஆராயப்போனால் இன்னொரு கிரேக்க இதிகாசமாகிவிடக் கூடும் சுருக்கமாக கிரீஸ், மிகப்புராதானமான பேரரசாக இருந்தது எப்படிக் கீழே சரிந்து பத்தோடு பதினொன்றாக ஆகிப்போனது என்று பார்த்தால் முறையான கட்டுப்பாடு, மதிப்பீடுகள் இல்லாத பொருளாதாரம், வரவுக்கு மீறிய செலவு, ஜனங்களிடம் சேமிப்புப் பழக்கம் இல்லாதது என்று ஏகப்பட்ட சீக்குகளுடன் இருந்தது. விரிவாகத் தெரிந்துகொள்ள இங்கே 

இலவசங்கள் என்ற மாயைஎப்படி எப்படிப்பல்வேறு நாடுகள், பொருளாதாரங்களை ஆட்டிப் படைத்து, அழித்திருக்கிறது என்பதை இங்கே பல்வேறு சமயங்களில் உள்ளூர் நடப்பைத் தொட்டுப் பார்த்திருக்கிறோம். பொதுவுடைமை பேசிய சோவியத் யூனியன் சிதறிப்போனது, சோஷலிசக்கனவுகளில் சிதறுண்டு போன பல சிறு தேசங்கள், கடைசியாக சீனாவில்  கம்யூனிஸ்ட்கட்சி  தான் ஆட்சி செய்கிறது என்றாலும் கம்யூனிசத்துக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாது போன கதை  எல்லாம் சொல்கிற  பாடம் ஒன்றே  ஒன்று தான்!இலவசங்கள் என்பதே மாயை என்பது மட்டும் தான்! கிரீஸ் நாட்டில் நடந்து கொண்டிருப்பது ஒரு புதிய பாடம், படிப்பினையாக வளரக்கூடும். கிரீஸில் தொடரும் சிக்கல்



 இலவசங்கள், ஊதாரித்தனமான அரசுச்செலவினங்களால் திவாலாகிப் போகிற அளவுக்கு வந்தபிறகு பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த எடுத்த சிக்கன நடவடிக்கைகளில் வெறுத்துப்போன கிரீஸ் நாட்டு மக்கள் ஒரு இடதுசாரி அரசைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதில் மிகவும் மகிழ்ந்துபோனவர் ஒரே ஒரு பதிவர் தான். அவருடைய பதிவில் எப்படி இந்த சாதனை நிகழ்ந்தது என்பதற்கான அடிப்படை விவரங்கள் இல்லை.பதிவின் முடிவில் ஒரு பதினைந்து நிமிட வீடியோ ஒன்றை  பார்த்ததிலும் கூட ஊதாரிகளாகச்  சீரழிந்தபொருளாதாரத்தை எப்படிச் சரி செய்யப்போகிறார்கள் கடன்சுமையை எப்படிக் குறைக்கப்போகிறார்கள் என்பதற்கான விடை கிடைக்கவில்லை.ஆனால் வெற்று வாக்குறுதிகள் நிறைய!


சீரிசா எவ்வாறு வெற்றியை நோக்கிப் பயணித்தது? அந்தக் கட்சியின் தேர்தலுக்கு முந்திய நடவடிக்கைகளை ஆய்வு செய்யும் ஆவணப் படம்: 

ஐரோப்பிய ஒன்றியத்தில் கிரேக்க நாட்டுக்குக் கடன்கொடுத்த மற்ற நாடுகளுடன் ஒரு மோதல் போக்கையே புதிதாகத்தேர்ந்தேடுக்கப் பட்டிருக்கும் சிறிசா இடதுசாரிகள் கடைப்பிடிக்கப் போவது தெளிவாகி இருக்கும் நிலையில் ஜெர்மனி அரசு கிரேக்க நாட்டுக்குப்  புதுசலுகைகள் எதையும் தரப் போவதில்லை என்பதில் மிகுந்த கண்டிப்புடன்  அறிவித்திருக்கிறது.


When asked in a newspaper interview published yesterday whether there could be further concessions for Greece, Merkel said Athens had already been forgiven billions of euros by private creditors. “I don’t see a further debt haircut,” she said.



Her comments echoed those made the previous day by the German finance minister, Wolfgang Schäuble, who told Die Welt: “If I were a responsible Greek politician, I wouldn’t lead any debates over a debt haircut.”

கிரீஸ் அரசியல்வாதிகள் ஒரு ஆபத்தான விளையாட்டில் இறங்கியிருப்பதாகவே தோன்றுகிறது.எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுகிற மாதிரி அமெரிக்க அதிபர் ஒபாமா கிரீசுக்குத்தேவை வளர்ச்சிதானே ஒழிய சிக்கன நடவடிக்கைகள் அல்ல என்று சொல்லியிருக்கிறார்.தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளைப் புதிய அரசு  கிடப்பில் போட்டிருக்கிறது.


ஏற்கெனெவே சீனப்பொருளாதாரம் மந்தமடைந்து வரும் செய்தியோடு சேர்த்துப் பார்த்தால்,கிரேக்கப் பொருளாதாரச்சுமையும் கடனும் கூட ஐரோப்பிய ஒன்றியத்தையும், குறிப்பாக ஜெர்மனியையும் பாதிப்பதாக  இருக்கலாம். கிரீஸ் மாதிரியே ஸ்பானிஷ் பொருளாதாரமும் கடும் நெருக்கடியில் இருக்கிறது. அங்கும் ிக்கன நடவடிக்கைகள் வேண்டாம் எனக் கண்டனக்குரல்கள் கலகக்குரல்களாக மாறி ஒலி த்துக் கொண்டிருக்கின்றன.

இவ்வளவு பேசிவிட்டு, இந்தியாவுக்கு இதில் என்ன சம்பந்தம் என்றும் சேர்த்துப் பார்க்காவிட்டால் இந்தப்பதிவு எதற்காக? 

நரசிம்மராவ் பிரதமராகப் பொறுப்பேற்ற தருணங்களில் இந்தியா கிட்டத்தட்ட திவாலான நிலைமையில் தான் இருந்தது.அர்த்தமில்லாத சோஷலிசம் பேசிப் பேசியே பற்றாக்குறை பட்ஜெட், ஊதாரித்தனமான செலவுகளைக் கட்டுப்படுத்தாமல்,பொதுத்துறை என்றால் பொறுப்பில்லாத துறை இப்படிப் பொருளாதாரம் விவஸ்தை கெட்ட நிலையில்இருந்த தருணங்கள் அவை. கசப்பு முந்துதான், ஆனால் கொடுத்துத்தானாக வேண்டும் என்ற நிலையில் நரசிம்மராவ் துணிந்து பொருளாதரச் சீர்திருத்தங்களைக் கையிலெடுத்தார் முதலில் வந்தது வங்கித்துறை சீர்திருத்தம் அதற்கு முன்னோட்டமாக இருந்தது 1991 இல் ஏற்பட்ட  ஏற்றுமதி இறக்குமதிக்கிடையிலான வித்தியாசத்தைக் கொடுக்க முடியாமல் கையிருப்பில்லாமல் போன அவலம் தான் 
A Balance of Payments crisis in 1991 pushed the country to near bankruptcy. In return for an IMF bailout, gold was transferred to London as collateral, the rupee devalued and economic reforms were forced upon India. That low point was the catalyst required to transform the economy through badly needed reforms to unshackle the economy. Controls started to be dismantled, tariffs, duties and taxes progressively lowered, state monopolies broken, the economy was opened to trade and investment, private sector enterprise and competition were encouraged and globalisation was slowly embraced. The reforms process continues today and is accepted by all political parties, but the speed is often held hostage by coalition politics and vested interests.
— India Report, Astaire Research
நரசிம்மராவுக்கு இதில் உறுதுணையாக எந்த மன்மோஹன்சிங் இருந்தாரோ அவரே பின்னாட்களில் பிரதமராக ஆகி வெறும் டம்மிப்பீசாக மட்டுமே இருந்த பத்தாண்டுகளில் தானும்சேர்ந்து  பாடு பட்டுக் கொண்டு வந்த சீர்திருத்தங்களின் பலனை முறிக்கிற மாதிரி சீரழிக்கிற மாதிரிஅமைச்சரவை சகாக்கள்செயல்பாடுகள், மற்றும் ஓட்டுவங்கி அரசியலுக்காக இலவசங்களை வாரியிறைத்துப் பாழ்படுத்திய வரலாற்றுச்சோகம் நகைமுரண் வேறெதுவும் இருக்க முடியாது. 

கிரேக்கப் பொருளாதாரச்சிக்கல்  கடன்சுமை கலகக்குரல்கள் எல்லாம் 25 வருடங்களுக்கு முன்னால்  நாம் கற்றுக்கொண்டு மறந்துபோன விஷயத்தை மறுபடியும் நினைவு படுத்துகிற மாதிரி இருப்பது புரிகிறதா?

இலவசங்கள் என்பதே வெறும் மாயைதான்! There is  no free lunch!

******


மண்டேன்னா ஒண்ணு! சொதப்பல்கள் பலவிதம்! ஒவ்வொன்றும் ஒருவிதம்!

மண்டேன்னா ஒண்ணு! சொதப்பல்கள் பலவிதம்! இப்படி சொதப்புகிற விதமாக சிலவிஷயங்களை இங்கே சொல்லியிருந்தது நினைவிருக்கிறதா? நினைவில் இல்லை என்றாலும் பரவாயில்லை சொதப்புவதையே தங்கள் முழுநேரத்தொழிலாக வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சியும், இடதுசாரிகளும் இருக்கும் வரை நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது கொஞ்சம் கேலிக்கூத்தாக மட்டுமே இருக்கும். தி ஹிந்து நாளிதழில் வந்திருக்கும் இந்தச் செய்தி அதை உறுதிப்படுத்துகிற மாதிரி!  பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறைகளை அப்படியே இன்னமும் பின்பற்றுவதில், எழுந்திருக்கும் சொதப்பல் இது.

ஜெயிக்கிறவனே தோற்றவனுடைய பங்கையும் சேர்த்து எடுத்துக் கொள்வான் என்கிற வெஸ்ட்மினிஸ்டர் தேர்தல் முறைகளில் இருந்து விடுபட்டு தகுந்த தேர்தல் சீர்திர்த்தங்களைச் செய்தே ஆகவேண்டிய தருணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.  
******

சொதப்புவது மனித சுபாவம்!ஆனால் சொதப்பிக் கொண்டே இருப்பது மனித பலவீனம்!  இதற்கு அழகான உதாரணம் இந்த வீடியோ! அம்மா! தம்பி என்விரலைக் கடிச்சுட்டான் என்று புலம்பிக்கொண்டே விரலைக் கடிக்க மறுபடி மறுபடி தருகிற மாதிரி! ஐந்து வருடப் பழசானாலும் கூட இந்த வீடியோவை இதுவரை 809,031,229 தரம் பார்க்கப்பட்டிருப்பதில் இருந்தே சொதப்புவது எப்படி என்பது தான்  மனிதனுடைய மிகப்பெரிய சாதனையாகத் தெரிகிறதோ?
 

இதுவே இப்படியென்றால் காதலில் சொதப்புவது எப்படி என்று கேட்கவா வேண்டும்?

  .... ஆனா இந்தப் பொண்ணுங்க மனசை சைனாக்காரன் தயார் செஞ்சுருக்கான்  -இது சிம்பு.

மாட்டினாண்டா சிலம்பரசன்  -இது சூரி டயலாக்! எங்கே எப்படி என்று கேட்கிறீர்களா? இந்த ட்ரைலரில்தான்! காதல் சொதப்பல் என்றால் சிம்பு இல்லாமலா? 
   


இதெல்லாம் இப்படி இருக்க அமீர்கான் அனுஷ்கா ஷர்மா நடித்து சமீபத்தில் வெளியான PK  திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் குறித்து யூட்யூப் தளத்தில் பார்த்த ஒரு வீடியோவைப் பகிர்ந்து கொண்ட தருணங்களில் ஐயா நீங்கள் காதலில் தோல்வியடைந்தவரோ என்றொரு கேள்வி வந்தது.


#loveiswasteoftime  என்பதை நூறுவருஷ சினிமா எத்தனையோ விதங்களில் சொல்லியாகிவிட்டது என்று இந்த வீடியோவில் சொல்வது நிஜம் தான்!  #யார்சார்கேக்கறாங்க  என்று கடைசியில் கருத்துக்கள் வேறு! இப்படிப் பகிர்ந்திருந்ததில் தான் அப்படி ஒரு கேள்வி காதலில் ஜெயித்தவர்கள் கூட இப்படித் தங்களுடைய அனுபவத்தை உள்ளது உள்ளபடி உடைத்துச் சொல்லியிருக்கலாமே  என்று சொல்லியும் பார்த்தேன்.காதில் வாங்கிக் கொண்டார்களா என்பதே இன்னும்ம் சொதப்புகிற விஷயம் தான்! 

மண்டேன்னா ஒண்ணு! ஒரு புது வாரத்தின் தொடக்கம். ஆரம்பத்தில் கொஞ்சம் சோம்பல், சோகத்துடன் ஆரம்பித்தாலும் ,,அதாச்சும் காங்கிரசில் ஆரம்பிச்சு   #loveiswasteoftime வரை ஜாலியாக வந்தாச்சு இல்லியா?

வர்ட்டா? :-)))))

மண்டேன்னா ஒண்ணு! புத்தகக் கண்காட்சியும், புத்தகம் படிப்பதும்!


மண்டேன்னா ஒண்ணு என்ற தலைப்பில் இங்கே எழுதிக் கொண்டிருந்தது இடையில் விடுபட்டுப் போனது. முக்கியமான அரசியல்பொருளாதாரம் சம்பந்தப்பட்ட சில விஷயங்களை எடுத்துக் கொண்டு மறுபடி ஆரம்பித்தால் என்ன என்று சில வாரங்களாகவே ஒரு யோசனை! இப்படி இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஜனவரிமுதல் வாரத்தில் எழுதியதற்குப் பின்னால் உடல் நலக் குறைவினால் பதிவுகள் எழுதுவதே இயலாமல் போனது 



புத்தகக் கண்காட்சியும், புத்தகம் படிப்பதும்!  என்று இந்தப்பக்கங்களில் எழுதியதை, அதில் பின்னோக்கி என்ற பதிவருடன் நடத்திய பின்னூட்ட விவாதங்களை நினைவுபடுத்திக்கொள்கிற மாதிரி கூகிள் ப்ளஸ் 

விவாதம் ஒன்றைப் பார்க்க, பின்னூட்டமிடுகிற மாதிரி ஆனது. இந்தவருட சென்னைப்புத்தகக் கண்காட்சியில் சிலபல அசௌகரியங்களைப் பற்றிக் குறை சொல்லி வந்திருந்த பகிர்வு அது. 


      

முகநூலில் பிவி ராமசாமி என்பவர் மேலே உள்ள படத்தைப் ப்கிர்ந்திருந்ததை அப்புறமாகத்தான் பார்த்தேன். இங்கே மலினமான உத்திகளில் புத்தகங்களைவ வாங்குபவர் தலையில் கட்டிவிடுகிற திருவிழா வியாபாரிகளாக மட்டுமே பதிப்பகங்களும் பதிப்பாளர்கள் சங்கமும் இருக்கிறார்களே தவிர நேர்மையான, வாசிப்புப் பழக்கத்தைத் தூண்டுகிற சமூக அக்கறை, பொறுப்புள்ளவர்களாக இருந்ததில்லை.

தமிழ்ப்பதிப்புத் துறைக்கு மதிப்புக் கிட்டுமா?  என்ற இந்தப்பதிவில் 


வருடந்தோறும் புத்தகக் கண்காட்சிகள் நடத்தி, திருவிழாக் கூட்டத்திற்கு வருகிற கூட்டம் கலர் அப்பளம், ரிப்பன் போலத் தேவை இல்லாததெல்லாம் வங்கி வருவதைப் போலப் புத்தகங்களை விற்பனை செய்வதை விடுத்து, இந்த மாதிரிக் கண்காட்சிகளில் வாசிக்கும் பழக்கத்தை ஊக்கப் படுத்தும் நிகழ்ச்சிகளாகவும், எழுத்தாளர்கள் தங்களது படைப்புக்களைப் பற்றி  வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிற மாதிரியான நிகழ்வுகளாகவும் நடத்த பபாசி போன்ற புத்தக வெளியீட்டாளர்கள் அமைப்பு யோசிக்கத் தயாராயிருக்கிறதா? கண்காட்சி நடக்கும் நாட்களில் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வித்தியாசமான தீம், வரலாற்றுப் புதினங்களுக்கு ஒரு நாள், அறிவியல் புனைகதைகளுக்கு ஒரு நாள் இப்படி வித்தியாசமாக சிந்திக்கவும் செயல் படுத்தவும் இங்கே கண்காட்சி ஏற்பாடு செய்பவர்களுக்கு மனமிருக்கிறதா?

காசு கொடுத்து வாங்கிப் படிக்கத் தயாராக இருக்கும் வாசகர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது. அப்படிப்பட்ட வாசகர்களை ஏமாற்றாமல், நேர்மையாக தங்களுடைய படைப்புக்களைப் பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொள்ளப் பதிப்பாளர்கள் முன்வரும் போது, வாசகர்களுடைய ஆதரவு நிச்சயமாகப் பதிப்பகங்களுக்குக் கிடைக்கும். 

  என்று சொல்லியிருந்ததில் இப்போதும் எந்த மாற்றமுமில்லை.

பதிப்பகங்களே! எழுத்தாளர்களே! ஓசியில் அனுப்பி வைத்தாலும் கொஞ்சம் கவரோடு அனுப்பி வைத்தாலும் உங்களுடைய எழுத்துக்களை, புத்தகங்களை  எனக்கு அனுப்பி வைக்க வேண்டாமென்று  மிக்க அன்போடு வேண்டிக் கொள்கிறேன். எனக்கு வேண்டிய புத்தகங்களை எப்பாடு பட்டாவது காசு கொடுத்தே வாங்குகிறவன் நான் என்பது உங்களுக்குத் தெரியாவிட்டால் இப்போது அதைத் தெரிவிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதென்றே எண்ணுகிறேன். கிழக்குமேற்கென்று எட்டுத்திசைகளிலும் குப்பை கொட்டுகிறவர்கள் வெளியீடுகளை வாங்குவதில்லை என்று சபதம் எடுத்திருக்கிறேன். ஓசியில் கொடுத்து மதிப்புரை கேட்கிறவர்கள் பக்கம் தலைவைத்துக்கூடப் படுப்பதில்லை. மதிப்புரை என்பது மதிப்பு உள்ள புத்தகங்களுக்கு மட்டுமே! வெறும்பேச்சு, வெட்டி மதிப்புரைகளை விட நான் படித்த நல்ல விஷயங்களை, புத்தகங்களை, எழுத்தாளர்களை என்னுடைய நண்பர்களுக்குப் பரிந்துரை செய்வதுடன், பரிசாகவும் அளிப்பது என்னுடைய பழக்கம். கண்காட்சிக்! இந்த குப் போனேன் இத்தனை புத்தகங்கள் வாங்கினேன் காரபோண்டா சாப்பிட்டேன் கண்ணில் பட்டவர்களுடன் எல்லாம் கை குலுக்கினேன் ஆட்டோகிராப் போட்டேன் என்றெல்லாம் கதைத்து விட்டு  படிக்காமல் இருப்பதையே பெருமையாகப் பீற்றிக் கொள்ள விருப்பமில்லை.

#டிஸ்கி  : இது  யாருக்கும் போட்டியாக எழுதப்பட்டது  அல்ல. ஏற்கெனெவே என் பதிவுகளிலும், பகிர்வுகளிலும் நிறையத்தரம் பேசி அலுத்துப்போனது தான்!   
மண்டேன்னா ஒண்ணு! இந்த ஒண்ணு ;போதுமா? இன்னும் கொஞ்சம் வோணுமா? கொஞ்சம் சொல்லுங்க பாஸ்!

மண்டேன்னா ஒண்ணு!வாசிக்க நினைக்கும் புத்தகம்!





மண்டேன்னா ஒண்ணு என்ற தலைப்பில் இங்கே எழுதிக் கொண்டிருந்தது இடையில் விடுபட்டுப் போனது. முக்கியமான அரசியல், பொருளாதாரம் சம்பந்தப்பட்ட சில விஷயங்களை எடுத்துக் கொண்டு மறுபடி ஆரம்பித்தால் என்ன என்று சில வாரங்களாகவே ஒரு யோசனை! ஏற்கெனெவே இந்தப் பக்கங்களில் அரசியல் பேசும் போது, ஒரு மையக் கருத்தை முன்வைத்தே பேசிக் கொண்டிருப்பதை நண்பர்களில் ஒரு சிலர் நினைவு வைத்திருக்கக் கூடும்

இந்த தேசத்தைப் பீடித்திருக்கிற மிகப்பெரிய ரோகம் ஊழல் தான் ! ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பது எது என்று பார்த்தால் இப்போதுள்ள தேர்தல் முறையே! இப்போது மிகவும் அவசரமானதும் அவசியமானதும் தேர்தல் சீர்திருத்தங்களே என்ற ஒரு மையக் கருத்தை வைத்துப் பதிவுகள் எழுதிக் கொண்டிருக்கிறேன் பல பதிவர்களிடம் தொடர்ந்து என்னுடைய கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டு வருவதை உங்களில் பலர் நினைவு வைத்திருக்கக் கூடும்.

 

நான் மதிக்கும் வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவர் திரு ராமசந்திர குஹா! ஐம்பத்து நான்கே வயதான இந்த ஐ ஐ எம் பட்டதாரி, நேரு மீது அளவு கடந்த மரியாதை அபிமானம் வைத்திருப்பவர் நேரு மீது, காங்கிரஸ் கட்சி மீது  ஒரு மென்மையான அணுகுமுறை கொண்டவர். ஆனாலும் கூட வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்யும் போது விமரிசிக்கும்போது தகுந்த ஆதாரங்களோடு எழுதுகிறவர் என்பதால் நம்பகத்தன்மை உள்ளவர். இவருடன் கருத்து வேறுபாடு கொள்பவர்கள் கூட இவரைப் புறக்கணித்து விட முடியாதபடி எழுதுகிறவர்.   

Patriots and partisans இது சென்ற நவம்பரில் வெளியான இவரது புத்தகம், இந்த ஜனவரிக்குள் நான் படிக்க உத்தேசித்திருக்கும் புத்தகங்களுள் ஒன்று. இந்தப் புத்தக வெளியீட்டை ஒட்டி திரு ராமசந்திர குஹாவின் பேட்டிகள் சில தளங்களில் வெளியான விமரிசனங்களைப் படித்த பிறகு ப்ளிப்கார்டில் ஆர்டர் செய்து விட வேண்டியதுதான் என்ற எண்ணம் இன்னும் கொஞ்சம் வலுப்பட்டது இந்தப் புத்தகத்தில் வலதுசாரி-இடதுசாரி இரண்டு தரப்புக்கும் நடுவில் நின்று திரு குஹா, இந்திய அரசியல், வரலாற்றைக் குறித்த  தன்னுடைய  கண்ணோட்டம் விமரிசனத்தைப் பதிவு செய்திருக்கிறார். ஹிந்து மதம், மரபுகளைப் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாத அல்லது சட்டை செய்யாமல் எழுதுவதால் இவரைப் பற்றிய ஒரு நெகடிவ் இமேஜ், அவநம்பிக்கை பிஜேபி மாதிரியான  வலதுசாரி களிடம்  இருப்பதும் புரிந்துகொள்ளக் கூடியதே.

வலதுசாரி, இடதுசாரி வரட்டுத்தனத்தைக் கண்டிக்கிற மாதிரி புத்தகம் தொடங்குகிறது. ஹிந்துத்துவா என்று கிளம்பும் வெறிக் கூச்சலையும் கண்டிக்கிறார், இடதுசாரி அதி தீவீர வாதத்தையும் கண்டிக்கிறார். காங்கிரஸ் கட்சி கூஜாக்களின் கட்சியாக மாறிப்போய்விட்டது என்றும் சொல்கிறார்.

தன்னை  ஒரு வலதுசாரியாகவோ இடதுசாரியாகவோ  முன்னிலைப் படுத்திக் கொள்ளாமல்,ஒரு லிபரலாக, தன்னுடைய கருத்தை நேர்மையாகவும்  மிக வெளிப்படையாகவும் எல்லாத் தளங்களிலும் பதிவு செய்து வருகிற திரு குஹா மாதிரியான சிந்தனையாளர்களை, நாம் மறுக்கலாம், நிராகரிக்கலாம் ஆனால் முற்றிலுமாகப் புறக்கணித்து விட முடியாது.

தி டெலிகிராப்
நாளிதழில் சென்ற வருடம் நவம்பரில் வெளியான திரு ராமச்சந்திர குஹாவின் கட்டுரையில் 2009 பொதுத் தேர்தல்களின் போது முன் வைத்த சில கருத்துக்களை மறுபடியும் முன்வைப்பது போல, ஒரு நான்கு விஷயங்களை, இந்திய அரசியல் மேம்பட உதவும் என்று சொல்கிறார். இந்தக் கட்டுரையை வாசித்து விட்டு எழுதி வைத்த குறிப்புக்கள் என்னுடைய யோசனையில் நாற்பது நாட்களுக்கும் மேலாக, இன்னமும் ஒரு முழுமையான வடிவத்தை எட்டவில்லை

சுருக்கமாக, இந்திய ஜனநாயகம் முதிர்ச்சி பெற, மேம்பட நான்கு விஷயங்கள் நடந்தே ஆகவேண்டும் என்று திரு ராமச்சந்திர குஹா சொல்வது இதுதான்:

முதலாவதாக,காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தையே நம்பி
ருப்பதில் இருந்து வெளிவர, விடுபட வேண்டும் ராகுல் காந்திக்கு அரசியலில் ஈடுபட முழு உரிமையும் இருக்கிறதென்றாலும் அவரோ இத்தாலிய மம்மியோ மட்டும் தான் கட்சியில் முக்கியமானவர்கள், அதிக சக்தி அதிகாரம் படைத்தவர்கள் என்ற மாயையில் இருந்து  விடுபட வேண்டும்

இரண்டாவதாக,பிஜேபி ஆர்எஸ்எஸ்சை நம்பியிருப்பதில் இருந்து அல்லது பிடியிலிருந்து விடுபட்டுத் தன்னை வலதுசாரி மையமாகப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய ஜிஹாதிகள் மாதிரி ஆகிவிடாமல், ஜெர்மனியில் கிறிஸ்டியன் டெமாக்ரட்டுக்களைப் போல மிதவாதக் கட்சியாக தன்னை புதுப்பித்துக் கொள்ளவேண்டும் 

மூன்றாவதாக, இடதுசாரிகள் மாறிவரும் தொழில்நுட்பம், அவசியத்துகேற்றபடி தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும். காலாவதியாகிப்போன, ஜனநாயகத்துக்கு முரணான லெனின் ஸ்டாலினிசத்தையே நம்பியிருப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இடது, வலது என்று பிரிந்து கிடக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்று பட வேண்டும்.உதிரிக் குழுக்களாக சிதறுண்டு போயிருக்கும் மாவோயிஸ்டுகள் நக்சலைட்டுகளை வன்முறை தீவீரவாதத்தைக் கைவிடும்படி கன்வின்ஸ் செய்ய வேண்டும்.

நான்காவதாக எண்ணிக்கையிலும் செல்வாக்கிலும் அதிகரித்து வரும் மத்திமர் (மிடில் கிளாஸ்) தங்களுக்கென்று ஒரு புதிய கட்சியை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.

இந்த நான்கும் நடந்தால் என்று சொல்லி முடிப்பதற்கு முன்னாலேயே இது நடக்கக் கூடியதுதானா  தானா என்ற சந்தேகம், கேள்வியாக எழுவதைப் பார்த்தேன் இன்னமும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

உங்களுக்கு எப்படிப்படுகிறது என்பதைக் கொஞ்சம் சொல்லுங்களேன்!