மண்டேன்னா ஒண்ணு! அரசியல்! அரசியல்!அரசியல்!

`தேசியக் கட்சிகள் மாநில நலனில் சரியாக செயல் பட முடியாமல் இருக்கிறது. காவிரி பிரச்னை, பெரியார் அணை பிரச்னைகளில் வாக்கு வங்கி அரசியலுக்காக நடுநிலையோடு செயல் படவில்லை’ என குமரி மாவட்டம் அருமனையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் டி.டி.வி.தினகரன் சீறினார் என்கிற தலைப்போடு ஆனந்தவிகடன் செய்தி வெளியிட்டிருக்கிறது 
டி.டி.வி.தினகரன்
இங்கே நேரு காலத்தில் மாநிலங்களுடைய பிரச்சினைகள் அடியோடு புறக்கணிக்கப் பட்டதில் தான் மாநிலக்கட்சிகள் கிளைத்தெழுந்தன என்பதை நேற்று சரண்சிங் பிறந்தநாள் எப்படி  விவசாயிகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது என்ற செய்தியைத் தொட்டும், நேரு, சாஸ்திரி, தலைமைப்பண்பு என்கிற குறியீட்டுச் சொற்களில் ஏற்கெனெவே எழுதிய பல பதிவுகளிலும் பேசி இருக்கிறோம். இங்கே சென்னை மாகாணமாக இருந்த நாட்களில் இருந்தே திராவிட அரசியல் எப்படியெல்லாம் சந்தர்ப்பத்துக்கேற்ற மாதிரி முகமூடியுடன் சுயநல அரசியலாகவே வளர்ந்து கழகங்களானது என்பதன் நீட்சிதான் தினகரன் பேச்சு! கழகம் என்றாலேயே சூது, மோசடி, ஊழல், அதிகாரக்கொலைகள், மோசடி, ஊழல் செய்வதற்காகவே கூட்டணி தர்மம் என்கிற அர்த்தங்கள் புரிந்துவிடுகிறது, இல்லையா!!
*******     
இங்கே மூச்சுக்கு மூச்சு இது பெரியார் மண் என்று திராவிடம் பேசிப் பிழைப்பு நடத்துகிறவர்கள் பேசக் கேட்டிருப்பீர்கள்! ஈவெரா நினைவுதினம் இன்று. நண்பர் மாணிக்கம் கூகிள் பிளஸ்சில் பகிர்ந்த ஒரு படம் பழையநினைவுகளைக் கிளறி விட்டதோ?
 பதிவர் மறைந்த டோண்டு ராகவனின் இந்தப் பதிவுக்கு வந்த பின்னூட்டம் இது இதைப்படித்தால் மேலே உள்ள படத்துக்கும் டோண்டு சாரின் பதிவுக்கும் என்ன சம்பந்தம் எனப்புரிந்துவிடும் !


Blogger Suresh Ram said...
கடவுளைக் கற்பித்தவன் காட்டுமிராண்டி என்று தன் வாழ்க்கை முழுவதும் மூடநம்பிக்கை, பார்ப்பன ஆதிக்கம், சாதி வெறி, ஆணாதிக்கம் அனைத்தையும் எதிர்த்து வந்த தந்தை பெரியாருக்கு கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர்கள் மாலை சூட்டி மரியாதை செய்யும் அதிசயம் தமிழகத்தில் நடந்திருக்கிறது. அந்த அதிசயத்தை ம.க.இ.கவின் தோழமை அமைப்பான மனித உரிமை பாதுகாப்பு மையம் செய்து காட்டியிருக்கிறது.

http://www.vinavu.com/2010/09/17/untouchability-in-temples/
September 30, 2010 5:30 PM

அதிசயப்பட்டு மூக்கில் விரலை வைப்பதற்கு முன்னால் அவர் கொடுத்திருக்கும் சுட்டியில் என்ன சொல்லி இருக்கிறது என்பதை பார்த்துவிட்டுத் தெளிவாகக் குழம்பவும்! #வினவு வழக்கமாகக் கையாளும் உத்திதான்!   

டோண்டு ராகவனின் ஒரு பின்னூட்டம் 
டோண்டு சாரின் பதிவையும் பதிவுக்கு வந்த 83 பின்னூட்டக்  கணைகளை யும் வாசித்துப் பார்க்கும்போது டோண்டு ராகவனோடு, அந்தநாட்களில் வலைப்பதிவு எழுதுவது எத்தனை சுவாரஸ்யமாக இருந்தது என நினைத்துப்பார்த்து பெருமூச்சு விடத்தான் முடிகிறது 
*******
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அதன் தலைவர்  திருமாவளவனும் தொடர்ந்து  சர்ச்சைகளில், ஊடகவெளிச்சத்தில் சிக்குவது தற்செயலானதுதானா?

இப்போ தெரியுதா ஏன் விடுதலை சிறுத்தைகள் பொன்மாணிக்கவேலை பதவி நீக்கணும்னு சொன்னாங்கனு?  என்று கேள்வி கேட்கிறார்கள்! 

இன்றைய செய்திகள் எழுப்பும் அரசியல் கேள்விகள் இவை! உங்களிடம் விடை இருக்கிறதா? கொஞ்சம் சொல்லுங்களேன்!
     

3 comments:

  1. 'வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது' கோஷங்களை நினைவுபடுத்தி விட்டீர்கள்.

    இங்குள்ள பத்திரிகைகளின் 'அரசியல்' வேடிக்கையானது.

    ReplyDelete
  2. பத்திரிகைகளை மட்டுமே குறை சொல்லுவானேன்? அவைகளுக்குத் தீனி போடுகிற எல்லாந்தெரிஞ்ச ஏகாம்பரங்களாக இருக்கும் அரசியல்வாதிகள், அவர்கள் சொல்வதை அப்படியே நம்பி ரட்சகர்களாக ஏற்கும் ஏமாளிஜனங்கள் , பட்டும் கெட்டும் கூடத் திருந்தாமல் இருக்கும் அசமந்தத்தனம் இவைகளை எல்லாம் என்னவென்று சொல்வதாம்?

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!