சனிக்கிழமை! இட்லி வடை பொங்கல்! #7

நடிகர் கமல்ஹாசன் கடந்த 19 ஆம் தேதி ரிபப்ளிக் டிவி விவாதத்தில் சொதப்பியதை சமூக வலைத் தளங்களில் மிக்க கடுமையாக விமரிசித்துக் கொண்டிருப்பதை இன்றைக்கு #மிளகுப்பொங்கல் அயிட்டமாக முதலில் எடுத்துக் கொள்ளலாமா? அந்த தொலைகாட்சி விவாத வீடியோவைப்  பார்த்துவிட்டு கமல் ஹாசன் முன்னெடுக்கிற அரசியல் எப்படிப் பட்டது? அரசியலில் கமல்ஹாசன் தேறுவாரா? தசாவதார நடிகர் அடுத்த அ(வ)ரிதாரம் பூசியிருப்பது மட்டுமே தான் அவருடைய அரசியலா? 2019 நாடாளு மன்றத் தேர்தல்கள் எப்படியிருக்கும் என்று சொல்கிறார்கள்? என்று நேற்றைக்குப் பதிவில் எழுப்பிய கேள்விக்கு பதில்கள் வரவில்லை என்றாலும் சமூகவலைத்தளங்கள் மிகத்தெளிவான கருத்தைப் பதிவுசெய்திருக்கிறார்கள்! ஒருசாம்பிளுக்கு இங்கே

இந்த வீடியோவில் அவ்வளவு சாரமில்லை. ஆனாலும் யூட்யூபில் இந்த வீடியோவுக்கு வந்திருக்கிற கமென்டுகள் என்ன சொல்கின்றன என்பதை நீங்களே பார்த்துக் கொள்ளலாம்! ஒரு சோறு பதமாக!  

Mohanasundaram M.R
என்னடா காரசார விவாதம். நம்ம ஆண்டவருக்கு நல்லா சுண்ணாம்பு தடவி அனுப்பிட்டானுக. நம்மவரு அந்த அம்மாகிட்ட சல்லி சல்லியா நொறுங்கிட்டாரு 😂 😂 😂 மொத்தத்தில உலக நாயகன் உளறல் நாயகன் ஆனதுதான் மிச்சம்.
Show less
ஆனால் கமல் ஹாசன் அசருவதாயில்லை! தேர்தலில் குதித்தே தீருவேன் என்று இன்றைக்கு மீடியாவில் பேட்டி கொடுத்திருக்கிறார்!

    
Kamal Haasan also said that he would not collaborate with any party that "tries to change Tamil Nadu's DNA".  என்று சொல்லியிருப்பதில் வழக்கம்போலவே குழப்பிவிட்டுப் போயிருக்கிறார் என்பதற்குமேல் விஷயமில்லை.  அதென்ன தமிழ்நாட்டின் #DNA ?
*******

ரங்கராஜ் பாண்டே தந்திடிவியை விட்டு வெளியே வந்தபிறகும் கூட இன்னமும் பரபரப்புச்செய்தியாகவே இருக்கிறாரோ? இந்த வீடியோவைப் பாருங்கள்!

  
என்றைக்கும் ஒரு ஊடகக்காரனாகவே இருப்பேன் என்கிறார்! பொதுவெளியில் கருத்து சொல்வதிலும் கொஞ்சம் சுயகட்டுப்பாடு இருக்கவேண்டும் என்றும்
சொல்கிறார்!  

******* 

ஹிந்து தமிழ் நாளிதழுக்கு ராவுல் பாபா மீதென்ன கோபமோ? இப்படி ஒரு கருத்துப்படம்!


அவர் ஒண்ணும் பப்பு இல்லை. வயசுக்கு வந்துட்டார்னு ஃபரூக் அப்துல்லா சர்டிபிகேட் கொடுத்தது செல்லுபடி ஆகலையோ?

  *******
இவ்வளவு தூரம் வந்துவிட்டு கருத்து எதுவும் சொல்லாமல் போனால் எப்படி?

1 comment:

  1. பாண்டே பேட்டிக்கு நன்றி!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!