சனிக்கிழமை! இட்லி வடை பொங்கல்! #6

#இட்லிவடைபொங்கல் என்ற தலைப்பு பதிவர் உண்மைத் தமிழன் ஆரம்பித்து வைத்தது. சனிக்கிழமை! இட்லிவடைபொங்கல்! என்று தலைப்பிட்டு ஐந்து பதிவுகளே எழுத முடிந்தது.
ஐந்தாவதாக எழுதியது இங்கே     நல்லதலைப்பு என்பதால் தொடர்ந்துவரும் ஆறாவது பதிவு இது. நான் மறந்து விட்டாலுமே கூட கூகிள் தேடலில் நினைவு படுத்துகிற விதமாக இப்படி எடுத்துக் கொடுக்கிறது!
******* 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசைக் கண்டித்து  #வைகோ ஒரு மேடையில் பேசியது இது.  . #வைகோ வை சமாதானப்படுத்த  திருமாவளவன் முயற்சித்தார் என்றாலும் அதைத் தொடர்ந்த விவாதங்களும் சர்ச்சைகளும் இன்னமும்  ஓய்ந்தபாடில்லை என்பதை இந்தக் கட்டுரை சொல்கிறது    என்னுடைய நம்பகத்தன்மையையே கேள்விக்குள்ளாக்குகிறார் #வைகோ என ஆவேசப்படுகிறார்  திருமாவளவன் என்று  இந்தத் தொலைகாட்சி விவாதத்துக்குத் தலைப்பு!பாருங்கள்!
  
திருமாவளவன் தன்னுடைய நிலை என்ன என்பதைப்  புரிந்துகொண்டு தான் பேசுகிறார் என்றால் இயக்குனர் பா.ரஞ்சித் இன்னொரு புறத்திலிருந்து  பேசுவது வெறும் ஆர்வக்கோளாறு என்று தள்ளிவிடமுடியுமா? ரஞ்சித்  அம்பேத்கரை காரணத்தோடு தான் முன்னெடுக்கிறார். திருமாவளவனும் கூட தேர்தல், கட்சி  அரசியலுக்காகத் தான் ரஞ்சித் அழைப்பை நிராகரித்திருக்கிறார் என்பது அரசியலைக் கவனித்து வருகிறவர்களுக்குப் புரியும்.

*******

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரங்களில் காங்கிரஸ் தலைவர் அதிகம் கையிலெடுத்தது ரஃபேல் விமான பேர ஊழல்! உச்சநீதிமன்றத்தில் மோடி எதிர்ப்பாளர்கள்  5 பேர் முறையிட்டதன் மீதான தீர்ப்பு, அரசு முடிவெடுத்ததில் எந்தத்தவறையும் காண முடியவில்லை என்று வந்திருக்கிறது. அதைக்குறித்த கேலிச்சித்திரம் ஒன்று இது.

    
காங்கிரஸ் தலைவர் எந்த அளவுக்குப் பொறுப்பானவர் என்று சொல்வதாகவும் கூட!

வலையெழுத்து பிடித்திருக்கிறதா? உங்கள் கருத்து என்ன என்பதைச் சொன்னால் தானே தெரியும்? சொல்வீர்களா?    

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!