முந்தின பதிவில் சொல்லியிருந்த மாதிரி டில்லி சட்டசபைத் தேர்தல்களில் கொசுவை விரட்ட பீரங்கியைத் தூக்கின கதையாக பிஜேபி ஒரு கசப்பான தேர்தல் முடிவை சந்திக்க வேண்டியிருக்கும் என்றே கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. பிஜேபிபாடம் கற்றுக்கொள்ளப் போகிறதா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அந்த இடைப்பட்ட நேரத்தில்
சனிக்கிழமை! இட்லி வடை பொங்கல்!
#stalinfor2016 என்று கோஷமெழுப்பி ஸ்டாலின் தரப்பு ஓய்ந்துபோய்க் கிடந்தாலும் அழகிரி தரப்பு விடுவதாயில்லை. சென்ற ஜனவரி 30 அழகிரி பிறந்த நாளுக்கு மதுரை அடிப்பொடிகள் வைத்த கட்அவுட், போஸ்டர்களில் அடித்தே சொல்லிவிட்டார்கள். எப்படி என்கிறீர்களா?
நம் மரபே நமக்குக் கற்பு என்பதற்கு இரு வரையறையை அளிக்கிறது. ’கற்பெனப்படுவது சொல் திறம்பாமை’ என்பது ஒன்று. ‘கற்பென்பது ஒருவனைப்பற்றி ஓர் அகத்திருத்தல்’ என்பது இரண்டாவது. நாம் எடுத்துக் கொள்ளவேண்டியது முதல் வரையறையைத்தான். ஓரகத்தில் இருக்கவேண்டுமா ஒருவனைப்பற்றிக் கொள்ளவேண்டுமா என்பதெல்லாம் பெண்கள் அவர்களே முடிவுசெய்யட்டும்.
சனிக்கிழமை! இட்லி வடை பொங்கல்!
#stalinfor2016 என்று கோஷமெழுப்பி ஸ்டாலின் தரப்பு ஓய்ந்துபோய்க் கிடந்தாலும் அழகிரி தரப்பு விடுவதாயில்லை. சென்ற ஜனவரி 30 அழகிரி பிறந்த நாளுக்கு மதுரை அடிப்பொடிகள் வைத்த கட்அவுட், போஸ்டர்களில் அடித்தே சொல்லிவிட்டார்கள். எப்படி என்கிறீர்களா?
மதுரைக்கூத்து இப்படியென்றால் அறிவாலயக்கூத்து அதைவிடக் கொஞ்சம் மேலே தி இந்து நாளிதழ் வாசகர் கருத்து, இப்படிப் படமாக! #ஆராசா #கனிமொழி #தயாநிதிமாறன் இவர்களை வைத்து சம்பாதித்து வைத்த நல்ல பெயரை #ஓபிஎஸ்கெடுத்து விட்டாராம்! நக்கல் கொஞ்சம் தூக்கல்தான்! ஆனால் உண்மை ஏகத்துக்கும் சுடுகிறதே!
#KDbrothers ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் தங்களுக்கு அனுப்பப்பட்ட சம்மன் செல்லாது, ரத்து செய்ய வேண்டுமென்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பெஞ்ச் முதலில் மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு வெளியான சில மணி நேரத்துக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஆஜரான, சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், `2ஜி அலைக்கற்றை தொடர்பாக எழும் அனைத்து வழக்குகளும் நேரடியாக உச்ச நீதிமன்ற விசாரணைக்கே வர வேண்டும். வேறு நீதிமன்றங்களில் விசாரிக்கக் கூடாது’ என ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டினார். இதையடுத்து, மாறன் சகோதரர் களின் மனுவை ஏற்க முடியாது என்ற தங்களது முந்தைய உத்தரவை நீதிபதிகள் திரும்பப் பெற்றனர். அம்மனு, தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து தலைமையிலான அமர்வு முன்பு வரும் 9-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனவும் அறிவித்தனர். ஆக, உலை தயாராகிவிட்டது பொங்கல் வைக்கும் நேரம் மட்டுமே தள்ளிப்போயிருக்கிறது. நன்றாகப் பொங்கட்டுமே!
சட்டம் என் கையில்! போராட்டம் 4-வது நாளாக நீடிப்பு: சென்னை அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் 12 பேர் காலவரையற்ற உண்ணாவிரதம் என்கிறது இந்தச்செய்தி
மாலன் புதியதலைமுறை ஆசிரியராக வந்தபிறகு அவர் எழுதுவதைப் படிப்பதில் இடைவெளி விழுந்தது. தற்செயலாக அவர் முகநூலில் சென்னை சட்டக்கல்லூரி விவகாரம் தொடர்பாக எழுதியிருந்தது கண்ணில் பட்டது.. சில அடிப்படையான சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார். நீங்களும் வாசிக்கலாமே
சில அடிப்படையான கேள்விகள்
1.சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தின் பின்னணி என்ன?
2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரி மாணவர்களில் இருபிரிவினர் ஆயுதங்களோடு கல்லூரியில் பயங்கரமாக மோதிக் கொண்டனர். அதையடுத்து அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு நீதிபதி பி.சண்முகம் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்தது. 2009ஆம் ஆண்டு ஜூன் 9ஆம் தேதி கமிஷன் தனது அறிக்கையை அன்றைய முதல்வர் கருணாநிதியிடம் அளித்தது. அந்த அறிக்கை ஜூலை 21ஆம் தேதி சட்டமன்றத்தில் வைக்கப்பட்டது. (திரு.ரவிகுமார் அப்போது சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் இது குறித்து மேலும் தகவல் தரலாம்) அந்த அறிக்கை,வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் தொடராமல் இருக்க சென்னையில் 3 மருத்துவ கல்லூரி இருப்பது போல சட்டக் கல்லூரியை பிரித்து தாம்பரம், திருவள்ளூர், எண்ணூர் அல்லது பூந்தமல்லி ஆகிய இடங்களில் சட்டக்கல்லூரியை உருவாக்க வேண்டும் என்ப் பரிந்துரைத்தது
இதையடுத்து 2013ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி மாநில அரசின் ஐந்தாண்டுத் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், “Government has accepted the recommendation made in the report of Justice P Shanmugam Commission of Inquiry to shift TN Dr Ambedkar Government Law College, Chennai to a location within the city and open three new Law Colleges in and around the city of Chennai. The estimated outlay for this relocation and construction would be Rs 75 crore (Rs 25 crore per college),” என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. 2013ல் வெளியான அறிக்கைக்குத்தான் இரண்டாண்டுகள் கழித்து இப்போது மாணவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.
தமிழ்நாட்டு நிலவரத்தில் ஆறிப்போன பொங்கலே இப்படி இருக்கிறதே என்று அலுத்துக் கொள்கிறீர்களா? அதுவும் சரிதான்!
******
பட்டி மன்றங்கள் என்றாலே வெறும் வெட்டி மன்றங்கள், வெட்டி விவாதங்கள் என்றாகிப் போன காலம் இது.பட்டிமன்றங்களுக்குக் கொஞ்சம் மவுசு இருந்த நாட்களில் அடிக்கடி பழகிப்போன தலைப்பு:
கற்பில் சிறந்தவள்
கண்ணகியா ? மாதவியா ?
இந்த வீடியோவைப் பார்த்துவிட்டு இன்னுமொரு பட்டிமன்றத்தை ஆரம்பித்து விட வேண்டாம்! காலம் நிறைய விஷயங்களில் புதுப்புது மாற்றங்களைக் கொண்டு வந்து சேர்த்துக்கொண்டே இருக்கிறது. அதற்கு மேல் பெரிதாக அலட்டிக் கொள்வதற்கு என்ன இருக்கிறது? இதில் கருத்துச் சொன்னவர்களில் எவருமே பொய் சொல்லவில்லை, வெறும் ஊடக வெளிச்சத்துக்காக மாற்றிச் சொல்லவில்லை, மனதில் பட்டதை, தங்களுக்குத் தெரிந்ததைச் சொன்னார்கள் என்றே எனக்குப் படுகிறது.
தற்செயலாக எழுத்தாளர் ஜெயமோகன் தனது தளத்தில் இதுபற்றிப் பேசியிருந்தது கண்ணில் பட்டது. அவர் முடிவாகச் சொல்வதிது:
என் பார்வையில் ‘நிலத்தில் யார்க்கும் அஞ்சா நெறி’ கொண்டு தன் வாழ்க்கையைத் தானே தீர்மானித்துக்கொள்ளும் சுதந்திரமான பெண்ணே கற்புள்ளவள். கற்பு என்பது அந்த நெறியைக் கற்றுக்கொள்வதுமட்டும்தான்
ஜெயமோகன் சொல்வது நியாயமாகத்தான் படுகிறது.
..
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!