சண்டேன்னா மூணு! கொஞ்சம் அரசியல்! கொஞ்சம் கொதிக்க! ச்சும்மா டமாஷு!

சண்டேன்னா மூணுதானா கொஞ்சம் எக்ஸ்ட்ராவெல்லாம் கிடையாதா என்று யாரும் கேட்க மாட்டீர்கள் என்று நன்றாகவே தெரியும்! இந்த சண்டே அப்படி சாதாரணமாக விட்டுப் போய்விடக் கூடியதா என்ன?!


ஒளியை நோக்கி உயர்வது உயிரின் இயற்கை. இதை இந்தப்படம் எவ்வளவு அழகாக, சுருக்கமாகச் சொல்லிவிடுகிறது! மாற்றங்களுக்குத் தயாராகும் ஒவ்வொரு மனிதனும்   இதே மாதிரிக் கடுமையான போராட்டங்களுக்குப் பிறகே இப்படி உயர்வை, மாற்றத்தை அடைய முடிகிறது. இது தொடர்பாக இந்தப் பக்கங்களில் Creature of habits    என்ற தலைப்பிலும்  Change Management  என்று இன்னொரு வலைப்பூவிலும் கொஞ்சம் விரிவாகவே பேசியிருக்கிறோம். சண்டேன்னா  மூணு என்பது வெற்று அரட்டை என்றாகி விடாமல் நண்பர்கள் தங்களுடைய கருத்தையும் பகிர்ந்து கொண்டால்  ஒரு பயனுள்ள விவாதக்களமாக இந்த வலைப்பக்கங்களும் நல்லதொரு மாற்றத்திற்கு உயரும். என்னுடைய விருப்பமும் அதுவே.  இது முன்னோட்டம்  


1977 இல் இந்திரா காந்தியைத் தோற்கடித்த காங்கிரசுக்கு ஒரு நல்ல மாற்றாக உருவாகும் என்று நம்பப்பட்ட ஜனதாதளம் பரிசோதனை அளவிலேயே தோற்றுப்போனதேன் என்பதைக் குறித்து நிறைய ஆய்வுகள், கருத்துகள்,புத்தகங்கள் வெளிவந்து அந்த மட்டோடு ஓய்ந்தும் போன பழைய கதைகளை, சுவடுகளைத் தேடிக் கொண்டிருந்த சமயம், இணையத்திலேயே நிறையத் தரவுகள் கிடைப்பதைத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தேன். இன்றைய தலைமுறைக்கு பழைய வரலாற்றைத் தேடித் படிப்பதில் எந்தவிதமான ஆர்வமும் இல்லை என்றாலும் கூட, வரலாற்றிலிருந்து படிப்பினைகளைக் கற்றுக் கொள்ளாத வரை வரலாறு  நம்மை விடாது . என்பதையாவது அவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமே!

2014 நாடாளுமன்றத் தேர்தல்கள் பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு நல்ல வாய்ப்பைத் தந்தன. வாஜ்பாய் அல்லது வேறெந்தக் காங்கிரஸ் அல்லாத கட்சிக்கும் கிடைக்காத அளவுக்கு லோக்சபாவில் தனிப்பெரும்பான்மையை அளித்து நரேந்திர மோடி என்ற மனிதர் மீதான தங்களுடைய நம்பிக்கையை வெளிப்படுத்தியதாகவே 2014 தேர்தல் முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் ஆனாலும் இந்தத்தேசத்துக்கு காங்கிரசிடம் இருந்து ழுமையாக விமோசனம் கிடைத்தது என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிற அளவுக்கு பிஜேபியின் செயல்பாடுகள் இருக்கிறதா?

டில்லி சட்டசபைத் தேர்தல்களை ஒட்டி வெளியான இந்த இரண்டு செய்திகளைக் கொஞ்சம் பாருங்களேன்! ஒன்று ஆம் ஆத்மி கட்சிக்கே வெற்றி வாய்ப்பு என்று கூவும் செய்தி. காங்கிரஸ் கட்சி சளைத்து விழுந்தாலும் அவர்கள் இத்தனை நாள் தூக்கிப் பிடித்த சிக்குலர்வியாதியை விட்மாட்டோமென்று தி இந்து தமிழ் நாளிதழில் வந்திருக்கும் கூவல்.

நியூயார்க் டைம்ஸ் தலையங்கம் என்ன மோடியைப் பற்றி என்ன சொல்கிறது என்பதை மிக அக்கறையாகத் தமிழில் மொழிபெயர்த்துப் போட்டிருக்கும் விந்தை.காங்கிரசுக்கு மாற்று என்றுமார்தட்டிக் கொண்டு கிளம்பிய பிஜேபிக்கு நாங்கள் தான் மாற்று என்று மழைக்காலக் கொசு மாதிரி அரசியலில் புதிதாகக்  கிளம்பியிருக்கும் ஆம் ஆத்மி கட்சி தன்னுடைய புஜபல பராக்கிரமத்தைக் காட்டிக் கொண்டிருக்கும் கூத்து, மோடி அலைஓய்ந்துவிட்டது இனி எடுபடாது என்று தெரிந்தே கிரண் பேடியை பலிகடாவாகக் களத்தில்  பிஜேபி இறக்கியிருக்கிறது என்று இப்போது சில ஊடகங்கள் பரபரப்புச்செய்தியாக்கிக் கொண்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

டில்லித்  தேர்தல் முடிவுகளை ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தாலும் கூட பதவியேற்ற நாட்களில் இருந்து இன்று வரை பிஜேபி என்ன செய்திருக்கிறது என்ற கேள்விக்குமே கூடக் கொஞ்சம் குழப்பமான விடைதான் கிடைக்கிறது. ஒருசரியான அரசியல் மாற்றாகத் தன்னை நிலை நிறுத்திக் கொள்வதில் கூட பிஜேபி இதுவரை ஜெயித்திருக்கிற மாதிரித் தெரியவில்லை. இதுவரை வெறும் சவுண்டு விடுகிற கட்சியாகவே தொடர்ந்து சர்ச்சைகளுக்குள் சிக்கிக் கொண்டிருப்பதான தோற்றத்தை சரி செய்ய எந்த முயற்சிகளையும் பிஜேபி மற்றும் சங்க பரிவார் மேற்கொள்ளவில்லை. ஒரு முழுமையான சித்திரம் கிடைக்க இன்னும் கொஞ்ச காலம் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.   

******
ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல்  முன்பு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை சொத்துவரி பாக்கியை வசூலிக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 2 திருநங்கைகளை அழைத்துவந்து  நடனமாட வைத்துள்ளனர். இதனையடுத்து ஹோட்டல் நிர்வாகத்தினர், 33 லட்ச ரூபாய் வரிபாக்கியை ஒரே செக்கில் அளித்துள்ளனர்.


வரிபாக்கியை அரசு அதிகாரிகளே ஆடி வசூலிக்க வேண்டியதுதானே..? - கொந்தளிக்கும் ரோஸ்  இன்னும் கொஞ்சம் விரிவாக 
******
நண்பனாக இரு அல்லது காதலனாக இரு! ரெண்டு ரோலும் ஓர் ஆள் செய்ய முடியாது என்று ஒரு விசித்திரமான சர்வே முடிவு  இங்கே!

 

சர்வே சொல்வதற்கும் இந்த வால்போஸ்டருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை! ச்சும்மா  டமாஷு!


.. 

6 comments:

  1. நீண்ட இடைவேளைக்குப்பிறகு வந்து பிளாக்கில் தங்களின் கருத்துக்கள் படிக்க இதம்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் மாணிக்கம்! உடல் உபாதையோடு முடங்கி விடாமல் இருக்க வாசிப்பும் எழுத்தும் இறைவன் கொடுத்திருக்கும் வரம்.அதைக் கூடப் பயன்படுத்தாமல் இருந்தால் எப்படி?

      Delete
  2. தங்களின் பதிவு மிகவும் அருமையாக உள்ளது....அதுவும் அந்த வரிபாக்கியை அரசு அதிகாரிகளே ஆடி வசூலிக்க வேண்டியதுதானே..? ரொம்ப ரொம்ப நல்லா இருக்கிறது....பகிர்வுக்கு மிக்க நன்றி....

    மலர்

    ReplyDelete
    Replies
    1. அப்படிக் கொதித்திருப்பது திருநங்கைகள் என்ற செய்தி லிங்கைக் க்ளிக் செய்து பார்த்திருந்தால் தெரிந்திருக்குமே! அதிகாரிகளுக்கு இப்படி அரசுக்காக ஆடிக் கறக்கிற வித்தை தெரிந்திருந்தால் செய்திருக்க மாட்டார்களா என்ன?!

      Delete
  3. பதிவுகளுக்கு வரும் கமெண்டுகளை வைத்து எழுதுவதைத் தீர்மானிப்பதா, அல்லது எழுதும் பதிவுகள் எந்தளவுக்கு ரீச்சாகியிருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்காக கமெண்டுகளை எதிர்பார்ப்பதா என்பதே இன்றைய சிக்கலாக இருப்பினும் உங்களுக்கென்று ஒரு தனிப்பாணியை பொறுமையுடன் கையாள்வதற்கு மனம் நிறைந்த பாராட்டுகள், எஸ்.கே. சார்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ஜீவி சார்! பின்னூட்டங்களை வைத்து எழுதுவதைத் தீர்மானிப்பது எப்போதுமே என்னுடைய வழக்கமாக இருந்ததில்லை. உண்மையைச் சொல்லப்போனால், வந்து பார்க்கிறவர்களில் நாலில் ஒருவர், அதிகபட்சமாக மூன்றில் ஒருவரே பதிவை முழுதாகப் படிக்கிறார். சுமார் முன்னூறு பார்வைகள் ஒரு பதிவுக்கு என்று வைத்துக் கொண்டால் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே பின்னூட்டம் எழுதுகிறார்கள்.பெரும்பாலான பதிவுகள் இரண்டு மடங்கு அதிகமாகப் பார்க்கப்பட்டிருக்கும் ஆனால் பின்னூட்டங்களேதும் இருக்காது. இதெல்லாம் மிகவும் பழகிப் போனதால், யார் வந்து படிக்கிறார்கள், என்ன கருத்து சொல்வார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசை இருந்தாலும் எதையும் எதிர்பார்ப்பதில்லை பதிவுகளில் ஒரு ஆரோக்கியமான விவாதக் களமாக ஆக்குவதில் கடை விரித்திருக்கிறேன். கொள்வாரில்லையே என்று வள்ளலார் போல ஏங்குவதில்லை!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!