சண்டேன்னா மூணு! கேஜ்ரிவால்! முகுல் ராய்! நேரு!

எதிர்பார்த்தபடியே டில்லி சட்டசபைத் தேர்தல் முடிவுகள் பாரதீய ஜனதாக் கட்சிக்குக் கொஞ்சம் கசப்பு மருந்தைப் புகட்டியிருக்கிறது. எதிர்பாராத தகவல் என்னவென்றால் கேஜ்ரிவால் முதல்வராக இருப்பார், ஆனால் எந்த இலாகாப் பொறுப்புமில்லாதவராக இருப்பார் என்பது மட்டும் தான்! மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 67 இல் ஆம்ஆத்மிகட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்பதும் பதிவான வாக்குகளில் சுமார் 54% ஆம் ஆத்மி கட்சிக்கே கிடைத்திருக்கிறது என்பதும் மேலோட்டமாக கேஜ்ரிவால் ஆதரவாளர்களுக்கு இனிப்பான சேதியாக இருக்கலாம்.ஆனால்,டில்லி மக்களுடைய எதிர்பார்ப்புகளை வரு எந்த சாக்கும் சொல்லி திசைதிருப்பிப் பழைய மாதிரி, தப்பித்துக் கொண்டு ஓட முடியாது என்பது இந்தத்தேர்தல் முடிவுகள் கேஜ்ரிவால் அண்ட் கம்பனிக்குக் கொடுத்திருக்கும் எச்சரிக்கை! படத்தில் போஸ், ஸ்டன்ட் நன்றாக இருக்கிறது, இல்லையா? ஆனால் ப்ராக்டிகலாக முடியாது என்பது புரிகிறதா? இதே மாதிரித்தான் #கேஜ்ரிவால் அடிக்கிற கூத்துகள், ஸ்டன்ட் எல்லாமே! நடைமுறைக்கு உதவாது என்பது டில்லி வாசிகளுக்குப் புரியாமல் போனதேனோ? 1. Delhi 2015 Election Results: Has BJP strategized its own defeat ?

  Tehelka-14-Feb-2015
  ... BJP strategized its own defeat ? | Tehelka.com ... TehelkaEditorial · IT and Systems · Tehelka.com · Home · Current Affairs · Investigations ...
நேற்றைக்கு தெஹெல்கா தளத்தில் பிஜேபி  டில்லியில் திட்டமிட்டே தோற்றது என்ற ரீதியில் ஒரு புலனாய்வுக் கட்டுரையை வாசித்தேன். தற்சமயம்  அந்தத் தளம் இயங்கவில்லை. தளம் இயங்க ஆரம்பிக்கும்போது மேலே உள்ள லிங்கில் புலனாய்வு லட்சணத்தைப் படித்துக் கொள்ளலாம் 


கிட்டத்தட்ட அதே பல்லவியை காங்கிரசின் உளறுவாயர் திக்விஜய் சிங் பாடியிருக்கிறார். Kejriwal Part of RSS Plan for Congress-Free India: Digvijay என்ற தலைப்பிட்டு வந்திருக்கிற இந்தச்செய்தியில்  காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குகிற ஆர்எஸ்எஸ் திட்டத்தின் ஒரு அங்கமே கேஜ்ரிவால் என்ற மிகப்பெரிய கண்டுபிடிப்பை டிக்கிசிங் கண்டு சொல்லியிருக்கிறார். போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் டெபாசிட் இழந்திருக்கிறது என்பதும் கூட  ஆர்எஸ்எஸ் இயக்கத்துடன் டில்லி வாக்காளர்களும் சேர்ந்தே செய்த சதியாக இருக்கலாம் என்பதை டிக்கி சிங்குக்கு யார் புரிய வைப்பது? இதை வாசிக்கிற நீங்கள் கூட முயற்சிக்கலாம்! 

******
டில்லித் தேர்தல் முடிவுகள் ஒருசிலருக்குக் கொஞ்சம் இதமாக,ஆறுதலாக இருந்திருக்கக் கூடுமோ?

சாரதா சிட்  ஃபண்ட் ஊழல் விவகாரம் திரிணமுல்   காங்கிரஸ்  கட்சியை விடாது கருப்பு என்று துரத்திக் கொண்டு வருவதில் கட்சியே கலகலத்துப் போய்க் கிடக்கிறது. 

The relationship between Mamata and Mukul had gone from bad to worse ever since he had publicly distanced himself from a railway-linked deal with a Saradha company but today's snub was the most resounding yet. "The party chief has appointed another all-India general secretary for the party.... Subrata Bakshi will have the additional responsibility as all-India general secretary," Chatterjee announced after a 75-minute meeting at Mamata's Kalighat residence.

எந்த நேரத்தில், எவர்  காலைவாருவார், யார் மாட்டிக்கொள்வார் என்பது தெளிவில்லாமல் இருக்கும் சூழ்நிலையில் மம்தா பானெர்ஜி துணிந்து ஒரு அதிரடி ஆட்டத்தைக் கட்சிக்குள் ஆரம்பித்து வைத்திருக்கிறார். கட்சியின் அகில இந்தியப் பொதுச்செயலாளராகவும் தீதியின் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்த முகுல் ராய்க்கும் சமயம் பார்த்து வேலி  தாண்டக்  காத்திருந்தவர்களுக்கும் அதிர்ச்சி வைத்தியம் செய்கிற மாதிரி கட்சிப் பொறுப்புக்களை தன்னுடைய விசுவாசிகளுக்கு மாற்றிக் கொடுத்திருக்கிறார். பலன் தருமா என்பதிக் கொஞ்சம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால், மேற்கு வங்கத்தில் பிஜேபி காலை ஊன்றிக் கொள்ளக் கிடைத்த வாய்ப்பைக் கொஞ்சமும் தவறவிடவில்லை,

******


நேரு என்றால் வழிசல் என்பதைத்  தனியாகச் சொல்லவே வேண்டாம்!

கொஞ்சம் பழைய கதைதான்! மேலே கடைசிப் பாராவைப் படித்து விடுங்கள்! உலக உத்தமர்களுடைய வரலாற்றைவேறு  எப்படித் தெரிந்து கொள்வதாம்?

******

என்னை அறிந்தால் திரைப்படம் பார்க்கப்போய்க் கசப்பான அனுபவம் தான்!முதல்குறை தன்னுடைய சொந்தப்படங்களில்  இருந்தே ரீமிக்ஸ் மசாலா தயாரிக்கும் இயக்குனருடைய obsession அடுத்துப் படத்தின் நீளம். மூன்று படங்களைத் தொடர்ச்சியாகப் பார்க்கிற அலுப்பு இந்த ஒருபடத்தைக் கொஞ்சம் பார்ப்பதற்குள்ளாகவே வந்து விடுகிறது. சென்ற வாரம் மகன் வீட்டுக்கு வந்திருந்தபோது அவனுடன் மீண்டும் பார்த்த படம் Dead Poets Society அதில் வித்தியாசமான ஆசிரியராக நடித்திருந்த ராபின் வில்லியம்ஸ் பேசுகிற வசனம் ஒன்று தான் மேலே நீங்கள்  பார்த்தது.

உங்களுக்கு என்ன தோன்றுகிறது? கொஞ்சம் சொல்லுங்களேன்!  

4 comments:

 1. நேரு என்றால் பக்ராநங்கல் அணையை நாட்டுக்கு அர்ப்பணித்து இம் மாதிரியான கட்டுமானப் பணிகளே இந்தியாவின் கோயில்கள் என்று அவர் வர்ணித்தது தான் நினைவுக்கு வருகிறது..

  ReplyDelete
  Replies
  1. அப்படிச் சொன்னது மட்டுமே நேருவின் முழுமையான பிம்பம் என்று நீங்கள் நம்பினால் நான் அதற்குக் குறுக்கே நிற்கவிரும்பவில்லை. மிகப்பரந்த ஜனநாயகவாதியாகக் காட்டிக் கொண்டவரின் மகள் காங்கிரஸ் அக்ராசனராக இருந்தபோது தான் கேரளாவில் மன்னத் பத்மநாபன் கொலை வழக்கு, அதைச்சாக்காக வைத்து நடந்த கலவரங்கள் என்று 1959 இல் ஈ எம் எஸ் நம்பூதிரிபாத் அரசை 356வது பிரிவின் கீழ் கலைத்த ஜனநாயகப் படுகொலை நடந்தது, இந்த மகானுபவன் கண்ணை மூடிக் கொண்டிருந்தார் என்பது நடந்த வரலாறு.

   Delete
 2. வரலாறுகள் நிரம்ப செய்திகள் நிரம்பியது. ஆக்கப்பூர்வமான மற்றும் அழிவின் பாற்பட்டு என்று நிறைய பக்கங்கள் அதற்கு உண்டு. வரலாற்று நாயகர்களும் ப்ளஸ் மைனஸ் கலந்தவர்கள் தாம். ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல தனிநபர் குறைபாடுகள், சாதனையின் சிறப்புகள் என்று எல்லாம் கலந்த கலவையில் ஒரு பக்கம் மட்டும் வெளிச்சத்தைப் பாய்ச்சி 'இதுவே அவர்' என்கிற மாதிரியான பிம்பம் ஏற்பட்டுவிடலாகாது என்பதற்காகத் தான் இன்னொரு பக்கமும் பார்க்க நினைத்தேன். அந்த இன்னொரு பக்கத்திலும் நிறைய வெளிச்சப் பகுதிகள் உண்டு என்பதையும் அறிவேன்.

  ReplyDelete
 3. இந்தப்பக்கங்களில் நேரு என்று தேடினால் இந்திய சீன எல்லைப்போர் உள்ளிட்டு இவரும் விகே கிருஷ்ண மேனனும் வெளியுறவுக்கொள்கை வகுத்த லட்சணங்களும் உள்ளிட்டு நிறைய விஷயங்கள் எழுதினேன்.நேரு பற்றி எழுதும்போதே ஒருவிதமான அலுப்பு வந்து விடுகிறது

  ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!