கொசுத்தொல்லை! கேஜ்ரிவால்! டில்லித் தேர்தல்கள்!
இந்தக் கொசுத்தொல்லை தாங்கலையே நாராயணா!


டில்லி சட்ட சபைத் தேர்தல்களிலும் கூட இந்தக் கொசு மாதிரித்தான் கேஜ்ரிவால் பிஜேபிக்கு  குடைச்சல் கொடுத்துக் கொண்டிருப்பதாக செய்திகள் சொல்கின்றன.முன்னெச்சரிக்கையாக டில்லித் தேர்தல் முடிவுகள் பிரதமர் நரேந்திர மோடி மீதான மக்களின் தீர்ப்பல்ல என்று வெங்கையா நாயுடு கருத்துத் தெரிவித்திருக்கிறார்.போதாக்குறைக்கு ஊடகங்களில் இதுவரை வெளியான சர்வே முடிவுகள் கேஜ்ரிவால் அண்ட் கம்பனிக்குச் சாதகமாகவே இருப்பதில் கொசு அடிக்க பீரங்கியைத் தூக்கி வந்த கதையாக பிஜேபியின் தேர்தல் பிரசாரங்கள் மாறிக் கொண்டிருக்கிறதாக  பரிதாபக் காட்சி இருக்கிறது..எனக்கும் சர்வே எடுக்கத் தெரியுமே என்று டாக்டர் சுப்ரமணியன் சுவாமி ஒரு கூத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்.

இது ஒனறே  நடப்பு நிலவரம் பிஜேபியைப் பொறுத்தவரை எவ்வளவு கலவரமாக இருக்கிறது என்பதைக் காட்டுவதாகத் தான் தோன்றுகிறது. முன்னாள்  உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய  கட்ஜு வேறு கேஜ்ரிவாலுக்கு ஆதரவு தெரிவித்துப் பதிவு எழுதிக் கொண்டிருக்கிறார். அப்படியானால் கேஜ்ரிவால் நிஜமாகவே ஜெயித்து விடுவார் என்று கேட்கிறீர்களா? அவருக்கு நப்பாசை இருக்கிற அளவுக்கு நம்பிக்கை இருக்கிற மாதிரித்தெரியவில்லை ஓட்டுப்  போடும் இயந்திரங்களில் தில்லுமுல்லு செய்து வைத்திருப்பதாக ஒரு டெம்ப்ளேட் சால்ஜாப்பை ஏற்கெனெவே தயார் செய்து வைத்துவிட்டார்

ஓட்டுப்போடற மெஷின் மேல சந்தேகமா? தேர்தல்ல நிக்காம ஒத்திக்கோ! ஆம் ஆத்மி கட்சிக்கு காங்கிரஸ் அறிவுரை!   


மேலே தி ஹிந்து நாளிதழின் சர்வே முடிவு என்பதை விட அவர்களது ஆசை என்பது மிகப்பொருத்தமாக இருக்கும்.

என்ன தான் விரலை நீட்டி மடக்கிக் கணக்குப் போட்டாலும், திருவிழாவில் தொலைந்துபோன பிள்ளை கதையாகத்தான் காங்கிரஸ் கட்சியின் தொடர் சோகம், தோல்வி பயம்,யார் யார்  கட்சியில் இருந்து வெளியேறி என்னென்ன பிரச்சினைகளைக்  கொண்டு வருவார்களோ என்ற பயம் எல்லாமாகச்  சேர்ந்து பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

எல்லா  சர்வேக்களும் ஒன்றுபடுவது காங்கிரஸ் கட்சி டில்லியிலும் சர்வநாசம் என்பதைத்தான்!  

பிஜேபியைப் பொறுத்தவரை, நரேந்திர மோடி என்ற தனிநபர் எழுப்பிய அதிர்வலைகளில் சவாரி செய்தே ஆட்சியைப் பிடித்திருக்கிறதே தவிர டில்லியில் திறமையற்ற  கட்சி ஸ்தாபன அமைப்பு, உட்கட்சிப் பூசல்கள்,நேற்று வந்த கிரண் பேடியை முதலவராக ஏற்றுக் கொள்வதா என்ற கிளர்ச்சி தவிர இதைப் பயன்படுத்தி, நரேந்திர மோடிக்கு தர்மசங்கடம் விளைவிக்கிற மாதிரி கட்சிக்குள் ஓரம் கட்டப்பட்ட பழம் பெருச்சாளிகளின் திருவிளையாடல்களும் சேர்ந்திருக்கிறதோ என்ற சந்தேகமும் வலுக்கிறது  டில்லியில் ஜெயிப்பது அல்லது தோற்பது என்பது அல்ல உண்மையான சவால். பிஜேபி வாக்களித்த ஜனங்களுடைய நம்பிக்கையைப் பாழாக்காமல் ஆக்கபூர்வமாகச் செயல்பட தங்களைக் கடுமையான சுயபரிசோதனைக்கு தயார் செய்துகொள்ள வேண்டிய தருணமிது. ஒரு கட்டுக் கோப்பான ஸ்தாபனமாகத் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள வேண்டிய தருணமிது.   

காங்கிரசுக்கு மாற்று என்பது காங்கிரசைப் போலவே கோஷ்டி கானம், ஊழல், யாரோ ஒரு தனிநபருடைய செல்வாக்கில் மட்டுமே ஜெயிக்க முடிகிற கூட்டம் என்றிருப்பது அல்ல. அப்படி ஆனதினாலேயே இதற்கு முந்தைய பரிசோதனைகள் எல்லாம் மிகப் பரிதாபமாகத் தோற்று,மறுபடியும் களவாணி காங்கிரசே ஆட்சியைப்  பிடித்த சமீபகால வரலாறும் இருக்கிறது.

அப்படி ஆகுமானால் பிஜேபியை இந்த நாடும் வரலாறும் மன்னிக்காது என்பது மட்டும் நிச்சயம்.
******

4 comments:

 1. உங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி...இனியாவது மக்கள் திருந்தினால் பாப்போம்....

  மலர்

  ReplyDelete
 2. கருத்துச் சொல்ல முனைந்ததற்கு நன்றி. என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதைச் சொல்வதிலும் இன்னும் கொஞ்சம் தெளிவிருந்தால் உபயோகமாக இருந்திருக்கும்.பதிவின் உள்ளடக்கம் என்னவென்று புரிந்து கொண்டீர்களா? மக்கள் திருந்துவதற்கு அல்லது அப்படி நீங்கள் நினைப்பதற்கு இந்தப்பதிவில் எங்கே என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

  ReplyDelete
 3. //மேலே தி ஹிந்து நாளிதழின் சர்வே முடிவு என்பதை விட அவர்களது ஆசை என்பது மிகப்பொருத்தமாக இருக்கும்.//

  ஹஹ்ஹஹ்ஹா... சரியாகச் சொன்னீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ஜீவி சார்!

   என்.ராமுடைய சொந்த அரசியல் சார்பு அரசியல் சார்ந்ததாக தி ஹிந்து நாளிதழ் மாறி நீண்ட வருடங்களாகிறதே!
   #ஊருக்குத்தானடிஉபதேசம்உனக்கும்எனக்கும்இல்லை என்கிற இடதுசாரி அசட்டுத்தனம் இப்போதும் மாறவில்லை

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!