Showing posts with label ஊடகங்கள். Show all posts
Showing posts with label ஊடகங்கள். Show all posts

சண்டேன்னா மூணு! மதன் ரவிச்சந்திரன்! நண்பர்கள் போற்றிய பாரதி!

இன்றைய பதிவில் கவனிக்க வேண்டிய விஷயங்களாக சில காணொளிகளைத் தர விரும்புகிறேன். ஒரு ஊடகக் காரராக தன்னுடைய தனித்த அடையாளத்தை WIN News மதன் ரவிச்சந்திரன் எட்டிப்பிடித்து விட்டார் என்றே சொல்ல வேண்டும், அமைச்சர் Mafoi பாண்டிய ராஜனுடன் அவர் நடத்துகிற இந்த வீடியோ 31 நிமிடம்


தன்மீது குத்தப்படும் கட்சிசார்பு முத்திரைகளைப் புறம் தள்ளிவிட்டு, ஒரு ஊடகக்காரராக மதன் ரவிச்சந்திரன் பரிமளிக்கத் தொடங்கியிருக்கிறார் என்பது சந்தோஷப் படவேண்டிய ஒரு நல்ல செய்தி. அதேமாதிரி அமைச்சர் Mafoi பாண்டிய ராஜனும் கேள்விகளை மென்மையாக எதிர்கொள்கிற விதம்கூட  மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கிறது .

கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி! மகாகவி சுப்ரமணிய பாரதியாரைத் தவிர  இப்படி எத்தனை பேரால் சொல்லிக் கொள்ள முடியும் சொல்லுங்கள்! மகாகவியின் 137 வது பிறந்த தினம் டிசம்பர் 11 ஆம் தேதி  வருகிறது. அதையொட்டி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் நேற்று ஏற்பாடு செய்திருந்த பொன் மாலைப்பொழுது நிகழ்ச்சியில் எழுத்தாளர் கடற்கரய் மத்த விலாச அங்கதம் உரையாற்றியதன் காணொளி இங்கே வீடியோ 90 நிமிடம் 



நண்பர்கள் போற்றிய பாரதி என்பது தலைப்பு. எழுத்தாளர் கடற்கரய் ஒரு பத்திரிகையாளர். சமீப காலத்தில் பாரதி, வஉசி, காந்தி இவர்களைப் பற்றிய நூல்களை எழுதி சந்தியா பதிப்பக வெளியீடாக வந்து இருப்பதை நண்பர்களுடைய கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறேன். மாணவர்களிடத்தில் பாரதியார், வ உ  சிதம்பரம் பிள்ளை பற்றி இவர் உரையாற்றி வருவதை அறிந்திருந்தாலும், இவருடைய பேச்சைக் கேட்பது எனக்கும் இதுவே முதல்முறை.

   
கிருஷ்ண பிரபு
கடற்கரய் மத்தவிலாச அங்கதம் இப்படி எழுதியிருக்கிறார்:
ஒரு படம் வந்துவிட்டால் எல்லா எழுத்தாளர்களும் முதல்நாள் முதல் ஷோ பார்த்து எழுதுகிறார்கள். ஆனால் ஆகச் சிறந்த ஒருநூல் வெளியானால் கூட ஒரு சினிமாகாரனும் வாய் திறப்பதில்லை.
KN Senthil கூட இதே போன்ற கருத்தைத் தமிழ்ப் பொதுச் சமூகத்தின் மீதும் வைத்திருந்தார்.
So called இலக்கியவாதிகள் தனது சினிமாவைச் சிலாகிக்க வேண்டும் என்று இயக்குநர்கள் எதிர்பார்ப்பதும், so called திரை ஆளுமைகள் தனது கதைகளையும் புத்தகங்களையும் சிலாகிக்க வேண்டும் என்று இலக்கிய சூழல் எதிர்பார்ப்பதும் நாம் தொடர்ந்து எதிர்கொள்ளும் பிரச்சனைதான்.
மரியாதை நிமித்தமான கொடுக்கல் வாங்கல்கள் இங்கு மிக அரிதாகவே இருக்கிறது.
தொழின்முறை திரைக் கலைஞர்களான நாசருக்கோ, கமல்ஹாசன், கரு. பழனியப்பன், சமுத்திரக் கனி, மனோபாலா, ரோகினிக்கோ, பா. ரஞ்சித்துக்கோ, சசி, விஜய் சேதுபதிக்கோ ஒரு புத்தகத்தை மரியாதை நிமித்தமாக அனுப்புகிறீர்களா!? இதுபோல வாசிப்பில் ஆர்வம் இருக்கும் எத்தனை திரை ஆளுமைகள் இருக்கிறார்கள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் இவர்களுக்குப் புத்தகத்தின் ஒரு பிரதியைக் கொடுக்க வேண்டும் என்று தோன்றி இருக்கிறதா!?
"கொள்ள கொள்ளயா சம்பாதிக்கிறாங்களே. அவங்களே வாங்கிக்க மாட்டாங்களா"
புத்தகம் வாங்கக் காசில்லாமல் இல்லை. விஷயம் வாங்கிக்கொள்வதைப் பொருட்டு இல்லை. விஷயம் மரியாதை நிமித்தமானது.
~~~
விகடன், குமுதம், குங்குமம், வண்ணத்திரைக்கு காம்ப்ளிமெண்ட் டிக்கெட்டை அனுப்பும் - சினிமா தயாரிப்பு நிறுவனங்கள் - பி.ஆர்.ஓக்கள் தீவிர இலக்கிய இதழ்களுக்கு ப்ரிவிவ்யூ ஷோவுக்கான காம்ப்ளிமெண்ட் டிக்கெட்டை அனுப்புகிறார்களா!?
தியேட்டருக்குப் போயி டிக்கெட் எடுத்துப் பார்க்க காசில்லாமல் இல்லை. விஷயம் மரியாதை நிமித்தமானது.
படப்பெட்டி, அயல் சினிமா, படச்சுருள், ஸ்ருதி டிவி என சினிமா சார்ந்த இதழ்களாகட்டும், காலச்சுவடு, உயிர்மை, கணையாழி, ஸ்லேட், கல்குதிரை என இதழ்கள் ஒரு 50 இருக்குமா? இவர்களை ஏன் திரை ஆட்கள் சீண்டுவதில்லை.
~~~
ஓவியம், பரதம், இசை என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.
~~~
யாரும் யாருடனும் இல்லை
இருக்கவும் தேவையில்லை
என சமூகம் நகர்கிறதா?
~~~
படைப்புகளைக் கடுமையாக விமர்சிக்க ஒரு பரஸ்பர மரியாதை இருக்க வேண்டும். அது இங்கு யாருக்கும் இருப்பதுபோலத் தெரியவில்லை. அதுதான் கொடுக்கல் வாங்களில் இருக்கும் பிரச்சனைக்குக் காரணம் என்று நினைக்கிறேன்.
நாம் இன்னும் வெகுதூரம் செல்லவேண்டி இருக்கிறது.  
   
  

வாசிக்க விரும்புகிற புத்தகம் இது. 

மூணுன்னு சொல்லி ரெண்டுதானே இருக்கு என்று கேட்க நினைக்கிறீர்களா? மூன்றாவதாக  எழுத்தாளர் கடற்கரய் எழுதிய இரண்டு புத்தகங்கள் இருக்கின்றன.
  
மீண்டும் சந்திப்போம். 

சண்டேன்னா மூணு! ஆடிட்டர் குருமூர்த்தி! திருமாவளவன்! News 18

தமிழக அரசியலில் நரேந்திர மோடிக்குப் பிறகு மிக அதிகமாக வெறுப்புடன் உச்சரிக்கப்பட்ட பெயர் என்றால் அது ஆடிட்டர் குருமூர்த்தி, H ராஜா இருவராகத் தான் இருக்கும்! தமிழிசையை மீம்ஸ் போட்டுக் கலாய்த்தார்களே தவிர, அவரை யாரும் சீரியசாக எப்போதும் எடுத்துக் கொள்ளவில்லை! விவரமாக அரசியல் பேசினால் வெறுப்பு வன்மத்தைக் கக்குவதும் கூட  திராவிடங்களின் இயல்புதானே!


Oct 21    இரு சட்டசபைத்  தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் வருவதை ஒட்டி இங்கே சேனல்களில் பிஜேபி அதிமுக உறவில் விரிசலா உரசலா என்றே விவாதங்கள் போய்க்கொண்டிருந்த சூழ்நிலையில். ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்தை ஆதரிக்கிற, அது பிஜேபியுடன் தான் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிற ஆடிட்டர் குருமூர்த்தியிடம் தந்திடிவி ஹரிஹரன் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில் ஒரு நேர்காணலை நடத்தியிருக்கிறார். ஹரிஹரனுடைய கேள்விகள் சரியாக, கூர்மையாக இருந்ததா, ஆடிட்டர் குருமூர்த்தி தன்னுடைய பதில்களை நேர்மையாக, நேரடியாக சொன்னாரா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்! ரகசியங்களை யாராவது வெளியில் சொல்வார்களா? அதுவும் தந்திடிவியில்? என்று சிரிக்காமல் ஹரிஹரனிடம் கேட்கிறார் என்ற ஒரு இடத்திலேயே சுவாரசியம் தொற்றிக் கொள்கிறது! வீடியோ 40 நிமிடம்


காமெராவோடு  மைக் நீட்டப்படுகிற இடங்களைத் தேடிப்  போகிற அரசியல்வாதியாக விசிகவின் திருமாவளவன் மாறி நீண்டகாலமாகிறது என்றாலும், எம்பியான பிறகு ஊடக வெளிச்சத்தில் அடிக்கடி கண்ணில் படுகிறார், எல்லாம் தெரிந்த ஏகாம்பரமாக எல்லாவிஷயங்களைப் பற்றியும் கருத்து சொல்கிறார் என்பது தமிழக அரசியலுக்கு இப்போது வந்திருக்கிற புதிய சோதனை! அண்மையில்   அமெரிக்காவுக்குப் போன திருமா, முகநூலில் புகைப்படங்களையும்  கலாய்க்கப் படுவதையும் பார்த்த போது, எப்படி இருந்தவர் எப்படி ஆகி விட்டார் என்று பரிதாபம் தான் எழுந்தது. வீடியோ 41 நிமிடம் 


News 18 தமிழ்நாடு  சேனலை நான் அதிகம் பார்ப்பதில்லை. குணசேகரன் நெறியாளராக இருந்து நெறி தவறி நடத்தும் விவாதங்கள் ஒரு முக்கியமான காரணம் . காலத்தின் குரல் நிகழ்ச்சியை இப்போது செந்தில் நடத்துகிறார் என்பதால் பெரிய மாற்றங்கள் எதுவும் இல்லை. நெறியாளர் கடனே என்று மாரடிக்கிறார்! பங்கேற்கிறவர்கள் எப்போதும்போலக் கூவுகிறார்கள்! வீடியோ 52 நிமிடம்.

இந்த மூன்று விவாதங்களிலும் சில பொதுவான விஷயங்கள் வேறு வேறு விதமான குரல்களில் கிடக்கின்றன. ஆடிட்டர் குருமூர்த்தியும் ரஜினிகாந்தும் முதலாவது மற்றும் மூன்றாவது வீடியோ விவாதங்களின் பிரதானமான பேசுபொருளாக இருப்பது தற்செயல் அல்ல.

இதுதான் தமிழக அரசியலின், ஊடகங்களின்  யோக்கியதை என்பதைத் தனியாகக் கோடிட்டுச் சொல்ல வேண்டியதில்லை! ஆனால் உலகம் போகிற போக்கும் இவர்களுடைய போக்கும் ஒன்றாக இருப்பதே இல்லை!

மீண்டும் சந்திப்போம்.                      

ஊடகங்கள்! தேதிமுக! கமல் காசர்! அபசுரங்கள்!

மனைவி சொல்லே மந்திரம்! அரசியலுக்காகுமா?  மகளிர் தினத்தன்று இந்தப்பகிர்வை நினைவு படுத்துவது கொஞ்சம் சங்கடமாகத்தான் இருக்கிறது. தேதிமுக பொருளாளர் பிரேமலதா பேசுவதைக் கேட்கையில் அரசியலுக்கு இதெல்லாம் ஆகாது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அவர்களுடைய அரசியல் நிலைபாட்டைத் தெளிவாகத்தான் சொல்கிறார். ஆனால் ஊடகங்களை எதிர்கொள்வதில் இங்கே ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் ஏதோ பிரச்சினை இருப்பதும், ஊடகங்கள் இங்கே கேள்வி கேட்கிற விதமே செய்தி சேகரிப்பதற்காக மட்டுமே என்றில்லாமல் சேனல் அரசியல் சண்டையை நடத்துவதற்காகவா என்ற கேள்வியும் எழுகிறது.


இந்த வீடியோவுக்கு சேனல் கொடுத்திருக்கிற தலைப்புக்கும் நடப்புக்கும் சம்பந்தம் ஏதாவது இருக்கிறதா? பிரேமலதா சிலரை ஒருமையில் விளிக்கிறார் என்பதில் சம்பந்தப்பட்ட ஊடகக்காரர் எவரும் ஆட்சேபணை தெரிவித்தமாதிரி எங்குமில்லை. ஆனால், சிலர் கேள்விகேட்ட விதமே, ஒரு சண்டையை ஆரம்பிப்பதற்காகத்தானோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறதா, இல்லையா? 


(வாட்ஸப்பில் வந்தது)
எவ்ளோ சீட்டு எதிர்பாக்கற..?
ஏழு..
உன்னையெல்லாம் எதிர்க்கட்சி தலைவரா நாங்க வர வச்சோம் பாரு... அதுக்கு ரெண்டு கழிச்சிக்கோ..
அஞ்சி...
எங்களை பாத்து சட்டையையில நாக்கு துருத்திட்டு பேசினியே, அதுக்கு ரெண்டு கொறச்சிக்கோ...
மூணு...
அப்பறம்.. "இந்தம்மா தான் எனக்கு சரக்கு ஊத்திக் கொடுத்தாங்களா" ன்னு எகத்தாளம் பண்ணேல்லே... அதுல ரெண்டு கழிச்சிக்கோ...
ஒண்ணு...
தம்மாத்துண்டு பையனை வச்சி பொதுக்கூட்டத்துல "அதிமுக கூட்டணிக்கு எங்க கால்ல விழுது" ன்னு சொல்ல வச்சேல்லே.. அதுக்கு ரெண்டு சீட்டு...
இப்ப இன்னா பண்றே, நேரா துரைமுருகன் வீட்டுக்கு போய் மீதி ஒரு சீட்டை வாங்கியாந்து நாளைக்குள்ள செட்டில் பண்ணு..
கருத்துகள்
  • Ram Swami பாதி மெஸேஜ் மட்டும்தான் இருக்கு. வாட்ஸப்ல் இன்னுமொரு வெர்ஷனும் வருதாம்..

இப்படிஒரு நையாண்டி முகநூலில் உலா வருகிறது என்பதாலேயே பிரேமலதா வில்லியாகாவோ, ரெண்டு முருகன் என்னமோ தெனாலிராமன் ரேஞ்சுக்கு புத்திசாலியான விகடகவி ஆகிவிட்டதாகவோ அர்த்தமில்லை! 

பிரேமலதாவின் மிக மோசமான பேட்டியை இன்று பார்த்தேன். அத்தனை பேரையும் சகட்டு மேனிக்கு நீ போ என்கிறார். ஆனால் தம்பி சுதீஷை வாங்க போங்க என்கிறார். திமுகவை தில்லு முல்லு கட்சி என்றும் திருட்டுக் கட்சி என்றும் சொல்கிறார். துரைமுருகன், ஸ்டாலின் என யாரையும் விட்டு வைக்கவில்லை. திமுகவுக்கு திமுக பாணியிலேயே ஒரு அடி! இனி திமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்பே இல்லை.
இந்நிலையில் அதிமுக பாஜக பாமக புத கூட்டணி ஒன்றே வாய்ப்பு. கொஞ்சம் சமயோசிதமாக இவர்கள் ஒருங்கிணைந்து தேமுதிகவைக் கழற்றி விட்டால் இந்தத் தேர்தலோடு இக்கட்சியை ஏறக்கட்டிவிடலாம். விஜய்காந்த் சென்ற தேர்தலில் உதவினார், இந்தத் தேர்தலில் முதலிலேயே பேசினார், மோடிக்காக பிரசாரம் முன்பு செய்தவர் என்ற அழுவாச்சி காரணங்களையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு, யதார்த்தத்தை மனதில் வைத்துக் கூட்டணி பேசுவது நல்லது.
இத்தனை குழப்பமும், அக்குழப்பத்தில் ஆதாயமும் தேடும் ஒரு கட்சியுடன் கூட்டணி வைப்பது ஆபத்தானது. பாஜகவுக்கு இது தேவையில்லாத ஆணி. திமுக கூட்டணி வைத்துவிடுமோ என்ற நிலையில் தேமுக தேவை. இனி தேவையில்லை.
பிரேமலதா பத்திரிகையாளர்களை நீ போ வா என்று பேசியது எரிச்சலாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.  

கைநீட்டி கவர் வாங்கும் ஊடகக்காரர்கள் என்ன சொல்வார்களாம்?  
 
வாங்க! கமல் காசர் காமெடியைக் கொஞ்சம் பார்த்து விடலாம்! கமல் காசருடன் புதிதாகச் சேர்ந்து கொண்ட நபர்களைத் தேடுவதை விட, சேர்ந்து சிலகாலத்திலேயே கழன்று கொண்டவர்களைக் கவனிப்பது இப்போது எனக்குப் புது விளையாட்டாக ஆகிக் கொண்டிருக்கிறதோ? ஒரு பெயர் உங்களுக்கும் தெரிந்திருக்கலாம்! பாரதி கிருஷ்ணகுமார்

இதுவரை 10000 ரூபாய் கட்டி  732  விண்ணப்பங்கள் வந்திருக்கிறதாம்! போகிற ஜோரைப்பார்த்தால் மருத நாயகம் படத்தை எடுப்பதற்குத் தேவையான மூலதனம் விரைவில் சேர்ந்துவிடும்போல என்றொரு நையாண்டி முகநூலில் உலவிக்கொண்டிருக்கிறது!

ஆக அரசியல்களம் அதற்கே உண்டான அபசுரங்களோடு களைகட்ட ஆரம்பித்துவிட்டது!
           

தேதிமுக! தேய்ந்துபோன திமுக! பெருமைப்பட விஷயம் இருக்கா?

தேதிமுகவை ரெண்டு முருகன் வச்சு செஞ்சுட்டதாக நேற்று முழுக்க துரைமுருகனும் தேதிமுகவும் தான் ஊடகங்களில் அதிகவெளிச்சம் பெற்றார்கள். அதே அளவுக்கு இசுடாலின் விருதுநகரில் நடத்திய தென்மண்டல மாநாடுகூட  கவனத்தைப் பெறவில்லை என்றுதான் சொல்லவேண்டும்! கருணாநிதியின் மூத்தமகன் முக அழகிரி ஒரேகடிதத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அதுவும் அவருடைய மகள் அஞ்சுகச்செல்வி வருமானவரி செலுத்தாத வழக்கில் ஆஜராகாததால் ஜாமீன் இல்லாத பிடிவாரன்ட்  பிறப்பிக்கப் பட்டிருப்பதாகச் செய்திகள் வந்துகொண்டிருந்த நேரத்திலேயே!

Oneupmanship என்று சொல்கிற மாதிரி ஊடக கவனம் எப்படியோ, எழும்பூர் ரயில்வே நிலையத்துக்கு கருணாநிதி பெயரை வைக்கவேண்டும் என்கிற கோரிக்கை அரசியலை முந்திக்கொண்டு செய்த அழகிரி, தான் இன்னமும் அரசியல் களத்தை விட்டுப் போய்விடவில்லை என்ற செய்தியை மிக அழுத்தமாகப் பதிவு செய்தியிருக்கிறார்!

ஒரு திறமையான ஊடகக்காரன், நிறுவனபலம் எதுவும் இல்லாமலேயே தனித்து நிற்க முடியும்! ரங்கராஜ் பாண்டே அதைத்தான் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது. யாழினி பர்வதம் எழுப்பிய கேள்விக்குப் பாண்டேவின் பதில் என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள எனக்கும் ஆசைதான்!எஸ்ஏபி ஆசிரியராக இருந்த நாட்களிலேயே அச்சுபிச்சு குமுதமாக இருந்ததில் வாங்குவது, வாசிப்பது இரண்டையும் நிறுத்தியாகி விட்டதே! என்ன செய்யலாம்?

தேதிமுக அன்றும் இன்றும்! கார்டூனிஸ்ட் G பாலா என்ன அர்த்தத்தில் இரண்டையும் முகநூலில் பகிர்ந்தாரென்று தெரியாது! ஆனால் கருணாநிதி தெம்பாக இருந்த நாட்களிலேயே திமுகவின் அஸ்தமனம் ஆரம்பித்து விட்டதென்று தான் சொல்ல வேண்டும்! நேற்று KKSSR தென்மண்டல மாநாட்டில் நிறைந்த அமாவாசை இனிமேல் வளர்ச்சிதான் என்று பேசியது காமெடியா? காமெடிக் கொடுமையா? தேதிமுகவுக்கு வச்சு செஞ்சது மாதிரியே, சூரியன் சின்னத்தில்தான் போட்டி என்ற நிபந்தனைக்கு விசிக மதிமுக என்ன சொல்லப் போகின்றன? ஆசியாநெட்தமிழ் செய்தி ஊகமாக! 

தன்னுடைய Source யாரென்று காட்டிக்கொடுக்க மாட்டேன் என்று வீரவசனம் எழுதியிருக்கிறார் என் ராம்! ஹிந்து நாளிதழ் India's National Newspaper என்று முகப்பில் போட்டுக்கொள்வதும், என் ராமுடைய ஊடக அறம் கேள்விக்குள்ளானதும் கேலிக்கூத்தானதும் பழங் கதைதான்! இந்த வீரவசனம் எத்தனை போலியானது என்பதை Bofors ஊழலை அம்பலப்படுத்திய சித்ரா தோலுரித்துக் காட்டியிருக்கிறார்.

PaidMedia காசுக்கு கூவும் ஊடகங்கள் என்று விலைக்குப் போன ஊடகங்கள் குறித்து இங்கே நாலாவது தூண் விமரிசனமாகப் பார்த்திருக்கிறோம்! 

அரசியல் களம் அதுதன் பாட்டுக்குத் தயாராகிக் கொண்டே வருகிறது என்பது புதிய செய்தியல்ல.

நாம் தயாராகிவிட்டோமா என்பதே இப்போதைய கேள்வி!   
     
             

இட்லி வடை பொங்கல்! #15 சனிக்கிழமை ஸ்பெஷல்

பாகிஸ்தான் தனது குள்ளநரித்தன வேலைகளோடு ஒரு வழியாக விங் கமாண்டர் அபிநந்தனை இந்தியாவிடம் ஒப்படைத்துவிட்டது. ஒருபக்கம் நேற்று மாலைமுதலே காஷ்மீர் எல்லைப்பகுதிகளில் பலத்த பீரங்கித் தாக்குதல், அபிநந்தனை வைத்து பிரசார வீடியோ ஒன்றைத் தயாரிக்க முயற்சி இப்படி சவடால் வைத்தி கேரக்டருக்கெல்லாம் நோபல் பரிசு உண்டென்றால், தயங்காமல் அதை இம்ரான் கானுக்குக் கொடுத்து விடலாம்!

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அபிநந்தனை வாழ்த்தியிருக்கிறார். அவருடன் சேர்ந்து நாமும் அபிநந்தனுக்கு சல்யூட்  செய்வோம்!

ஒருபக்கம் பாகிஸ்தானிய அரசும் ஊடகங்களும் ஒரு மாதிரியான திருகல்வேலையைச் செய்து கொண்டு இருந்த அதே நேரத்தில் இங்கே சளைக்காமல் Paid Media வும் காங்கிரஸ், கழக அபிமானிகளும் அதே திருகல் வேலையை வெட்கமில்லாமல் செய்வதை என்னவென்று சொல்வது?தாங்கள் செய்த தவறு அம்பலமாகிவிட்டதால் உடனடியாக அந்த வீடியோக்களை சமூக வலைத்தங்களில் இருந்து பாகிஸ்தான் அகற்றிவிட்டது. அங்குள்ள மூத்த பத்திரிக்கையாளர்களும் அகற்றிவிட்டனர் என்கிறது ஒன் இந்தியா தமிழ்! ஆனால் இங்கே காசுக்குக் கூவுகிறவர்கள் இன்னமும் திருந்தியபாடில்லை 

இவர்களை அறிவுஜீவிகள் என்று சொன்னால் எத்தால் சிரிப்பது? மாயவரத்தான் கி ரமேஷ்குமார் 10 மணி நேரம்
//இத்தனை செல்வாக்குடைய அறிஞர் அண்ணா அன்றைய காலகட்டத்தில் "நமது ஆட்கள் நமது இன எதிரிகளில் ஒருவரைக் கொல்லுங்கள்" என்று ஒரே ஒரு வார்த்தை பேசி இருந்தால் என்னாகி இருந்திருக்கும்? ஒரே ஒரு நிமிடத்தில் எல்லாம் முடிந்து இருக்கும்! அனைவரும் இறந்த பிறகு இந்திய ராணுவமோ அல்லது மத்திய படையோ வந்து இருக்கும். But no use...
- எம்.எம். அப்துல்லா //
ஏதோ திமுகக்காரங்க புண்ணியத்திலேதான் எல்லாரும் உசிரோட திரிஞ்சுக்கிட்டிருக்கீங்க சாக்கிரதை. 😂😂  


கழகக்கண்மணிகள் காமெடியெல்லாம் ஒரேமாதிரி ஸ்டீரியோ டைப்! எதிர்க்கேள்வி கேட்டால் ஹிஸ்டீரியா டைப்  ஆகிவிடும்! அதனால் அந்தநாளைய ஆனந்த விகடனில் ஸ்ரீதர் கார்ட்டூனில்!   
அடைந்தால் திராவிடநாடு இல்லையேல் இடுகாடு என்று வீரவசனம் பேசிய அண்ணாதுரை, பிரிவினை பேசினால் சிறையில் போடுவேன் என்ற நேரு.. முடிந்தது இப்படித்தானாம்!     
அப்படியே திராவிடம் வளர்ந்து ஈழம் வரை பரந்து விரிந்த திராவிடமாயையை துக்ளக் அட்டைப்பட நையாண்டி சொன்னதுமாதிரி வருமா?


அது போகட்டும், வாங்க! கமல் காசர் காமெடியையும் பாத்துடலாம்!


அரசியல் பேசினதைக் கூடப் பொறுத்துக் கொண்டு விடலாம்! இந்த ஆசாமி அத்வைதம், centrism எல்லாம் பேசுகிற  கொடுமையை என்னவென்று சொல்வது?

நீங்கள் தான் சொல்லவேண்டும்! எப்படியென்று மறுபடி தனியாகச் சொல்லவும் வேண்டுமா?


                

ஊடகச் சாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

லிபரலிசம் என்பது ஒரு மனநலப் பிறழ்வு! The Wire தளத்தில் புல்வாமா தாக்குதல் குறித்து சமீபத்தில் எழுதியிருப்பதே அதன் நிரூபணம் என்று இங்கே எழுதி இருப்பதை  இப்போதுதான் வாசித்து முடித்தேன்.


இந்த இடதுசாரிச் சார்புள்ள அறிவுக்கொழுந்து தன்னுடைய தளத்தில் எழுதியிருப்பது இப்படி!காஷ்மீர் விவகாரம் குறித்து அவருடைய அறியாமை வெளிப்படுகிற மாதிரி!
The fact is that the post-Pulwama situation is too tempting for the Bharatiya Janata Party not to exploit it for political ends. It would clearly make sense for Modi to completely divert attention from the lack of jobs and agrarian crises to the question of who is best suited to preserve national security. The BJP will be further tempted to mix with national security the right quantity of majoritarian angst over Kashmir. This could be a potent cocktail and the opposition parties must be ready to counter this in their election campaign two months from now என்று எம்கே வேணு எழுதியிருப்பது முழுக்க முழுக்க ஊகத்தின் அடிப்படையில்! வெற்று ஊகங்களுக்கு என்ன மரியாதை கொடுக்க முடியும்? நேரெதிர் கருத்துக்கள் இரண்டையும் உங்கள்முன் சுட்டி கொடுத்து வாசிக்கும்படி பரிந்துரை செய்கிறேன்! உண்மைபோல சித்தரிக்கப்படும் செய்திகளில் ஒரு உள்நோக்கம், திரித்தல் இருப்பதை வேறு எப்படிப் புரிந்து கொள்வதாம்? ட்வீட்டரிலும் முகநூலிலும் புல்வாமா தாக்குதல் நடந்ததருணம் நரேந்திர மோடி வேறு ஒரு (விளம்பர) ஷூட்டிங்கில் இருந்தாரென்ற கட்டுக்கதை அவிழ்த்து விடப்பட்டதும், பதிலடி நிறைய ஆரம்பிக்கவே  காணாமல்போனதும் சற்றுமுன் நடந்த கதை!       
#TheWire எம்கேவேணு என்ற ஹேஷ்டாகுகளில் சிலவிஷயங்களை கூகிள் பிளஸ்சில் எழுதிய பகிர்வுகளிலிருந்து இரண்டு மட்டும் இங்கே!

2014 இல் நரேந்திரமோடி பிரதமரான பிறகு #மோடிஎதிர்ப்பு ஒன்றை மட்டுமே மையப் புள்ளியாக வைத்து #இணையப்பத்திரிகைகள் இங்கே கல்லாக்கட்ட ஆரம்பித்ததில் #thewire #scrolldotin #quint போன்றவை சில #உதாரணஊடகங்கள் ஒரு செய்தியில் உண்மையிருக்கிறதா என்பதைவிட பரபரப்புக்கே முக்கியத்துவம் கொடுக்கிற #பப்பரப்பேஊடகங்கள் என்பதில் தான் இவற்றின் #விஷம் #விஷமம் #வியாபாரம் எல்லாமே அடக்கம்! யார் யார் பின்னணியில் இருக்கிறார்கள் எங்கேயிருந்து வருமானம் வருகிறது என்பதைத் தெரிந்துகொள்வது அத்தனை கடினமானதொன்றும் இல்லை.
#CBIvsCBI என்று பரபரப்பாக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் அலோக்வர்மா confidentialityயை மதிக்காததன் மீது அதிருப்தியைப் பதிவு செய்திருக்கிறது. அஜித் டோவல் மற்றும் RAW அதிகாரி ஒருவர் மீது சேறு பூசும் செய்திகளை இரண்டொருநாட்களாகவே ஊடகங்கள் வெளியிட்டது அலோக் வர்மாதான் என்பதும் வெளியே வந்திருக்கிறது Disinformation is intentionally false or inaccurate information that is spread deliberately. It is an act of deception and false statements to convince someone of untruth. Disinformation should not be confused with misinformation, information that is unintentionally false
நீங்கள் வாசிக்கிற செய்திகளில் எது எதெல்லாம் #disinformation திட்டமிட்டே பரப்பப்படும் பொய்கள் என்பதை எப்போதாவது யோசனை செய்து பார்த்திருக்கிறீர்களா? எழுதியது நவம்பர் 20, 2018


#காங்கிரஸ்கட்சி யின் மணிசங்கர் ஐயருடைய பிறந்தவீடு பாகிஸ்தான் என்பதோ வாழ்கிற இந்தியாவை விட பாகிஸ்தான் மீதுதான் மணிசங்கர அய்யருக்குப் பாசமும் பிணைப்பும் அதிகம் என்பதோ இங்கே பலருக்கும் தெரியாத விஷயம். #TheWireதளத்தில்விஷமும் விஷமமும் கலந்து எழுதியிருக்கிற கட்டுரை

Instead of soundly running foreign policy through sober, institutionalised mechanisms, it is the misuse of foreign affairs to build a personality cult that has been at the root of the Modi Diplomatic Disaster in South Asia என்று ஆரம்பிக்கிறது.

இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை காங்கிரஸ் ஆண்ட அறுபது சொச்சம் வருடங்களில் எப்படியிருந்தது? விடுதலை அடைந்த நாட்களில் நேருவும் கிருஷ்ணமேனனும் மணிசங்கர் அய்யர் சொல்கிறபடிதான் வெளியுறவுக் கொள்கையை ஸ்தாபனப் படுத்தப்பட்ட மெக்கானிசத்தில் தான் வகுத்தார்களாமா? 1962 இல் நேருவின் ராஜதந்திரமும் அணிசேராக்கொள்கையும் பல்லிளித்து நின்றது அய்யருக்குத் தெரியாமல் நடந்துவிட்டதோ? #நேருமகள்ஆட்சிக்கு வந்த பிறகாவது அண்டைநாடுகளுடனான உறவுகள் மேம்பட்டதா என்றால் அதுவுமில்லை.தாத்தன், அம்மா வகுத்த பாதையிலிருந்து விலகிக் கொஞ்சம் pragmatic ஆகச் சிந்தித்த ஒரேகாங்கிரஸ் பிரதமர் ராஜீவ் காந்திதான்! ஆனாலும் கூட அவராலும் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. #பாகிஸ்தான் #இலங்கை இரண்டுமே இன்னமும் அதிகமாக விலகிப்போனதுதான் மிச்சம். 

#நேருபாரம்பரியம் மோசமானதுதான்! ஆனால் அண்டை நாடுகளுடனான உறவுகளில் விரிசல்,பின்னடைவு ஏற்பட்டு இருப்பதற்கு அவர்களை மட்டுமே குறைசொல்வது இந்தப் பகிர்வின் நோக்கமல்ல. முழுக்க முழுக்க விரோதமனப்பான்மை கொண்ட நாடுகளால் சூழப்பட்டிருக்கிற நாடு இந்தியா. நேபாளம் மட்டும் விதிவிலக்காக இருந்தது. மாவோயிஸ்டுகள் அங்கே தலையெடுத்து ஆட்சியையும் பிடித்தபிறகு நிலைமை முற்றிலும் விரோதமானதாக மாறிப்போனது.

#தாராளமயமாக்கல் #உலகமயமாக்கல் இரண்டும் சேர்ந்து ராஜீய உறவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றன. சீனா மாதிரி #கந்துவட்டிஏகாதிபத்தியம் கூட தாக்கத்திற்குள்ளாகி இருக்கிறது. மணிசங்கர அய்யர் குறிப்பிட்டிருக்கிற சின்னஞ்சிறு நாடுகளுடனான உறவுகளில் ஏற்பட்டிருக்கிற தேக்கம், தொய்வுக்கு பின்னணியில் சீனா ஒரு வலுவான காரணம் என்பதை மறந்து விட்டுத் தனியாகப் பார்க்க முடியாது. #தேக்கம் தற்காலிகமானது அங்கேயே தேங்கி நின்றுவிடுவது அல்ல என்பதை புரிந்து கொண்டால் மணிசங்கர் அய்யர் சித்தரிக்க முற்படுகிற #விஷமவலை அறுந்துபோகும். எழுதியது 26 மே, 2018 
Modi's Neighbourhood Policy: Chronicling Four Wasted Years: Mani Shankar Aiyar
A general with no foot soldiers, Modi has been unable to see foreign policy beyond the photo-op Instead of soundly running foreign policy through sober, institutionalised mechanisms, it is the misuse of foreign affairs to build a personality cult that has b...


சண்டேன்னா மூணு! என்னன்னுதான் வந்து பாருங்களேன்!

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் நடத்தும் பொன்மாலைப்பொழுது நிகழ்ச்சியில் கடந்தவருடம் மார்ச் கடைசி நாளன்று பேசியதன் ஒருபகுதியை தன் அதிகாரப் பூர்வமான யூட்யூப் சேனலில் #ரங்கராஜ்பாண்டே பகிர்ந்து இருக்கிறார். ஒரிஜினல் நிகழ்ச்சி ஒன்றரை ஒன்றேமுக்கால் மணி நேரம் என்று நினைவு. இப்போது தேடியதில் லிங்க் இருக்கிறது ஆனால் வீடியோவைக் காணோம்!



சுவாரசியம் என்று வந்தார் எங்கள் பிளாக் ஸ்ரீராம்! அவருக்கு சுவாரசியமாக எந்தப்பகுதி இருந்ததோ எனக்குத் தெரியாது!

நீங்கள் முதலமைச்சராக வந்தால்.... என்று கேள்வியை ஆரம்பிக்கிறார் ஒருவர். கற்பனைக் கேள்விகளுக்குள் போகவிருப்பம் இல்லை என்கிறார் பாண்டே. அதையும் மீறி அதே கேள்வி மறுபடியும்! ரங்கராஜ் பாண்டே என்ன பதில் சொன்னார் என்பது தான் சுவாரசியம்! தன்னுடைய உயரம், எல்லை என்ன என்பதில் தெளிவாக இருக்கும் மீடியாக் காரர் ஒருவரைப் பார்த்ததில் சுவாரசியம், சந்தோஷம் எல்லாமே வருகிறது. இத்தனைக்கும் இது அவர் தந்தி டிவியில் இருந்த சமயம் என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டு ஊடகம், ஊடகக்காரர் இரண்டையும் ஒப்பு நோக்கிப் பாருங்கள்!
*******
மோடியை மீடியா கிட்ட பேசச் சொல்லுங்க சார்! இதுதான் செல்வின் H ராஜாவிடம் கேட்டதாக வைத்திருக்க வேண்டிய தலைப்பு! ஜனங்களுடைய குரலை மீடியாக்கள் தான் அரசுக்கு எடுத்துச் செல்வதாக நேர்காணல் நடத்தும் செல்வின் சொல்வதே அபத்தமானது. நரேந்திரமோடி ஏதோ ஒருவகையில் வெகுஜனத் தொடர்பில் இருந்து கொண்டே தான் இருக்கிறார். ஜனங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மோடி மட்டுமல்ல, எந்த அரசியல்வாதியும் பொதுவெளியில் நீடிக்க முடியாது.


#ஊடகங்கள் இன்னமும் #ஐமுகூ காலத்தைய மீடியா சுப்ரீமசி #அதிகாரத்தரகு வேலைகளில் #பர்க்காதத் போன்றவர்கள் கொழித்த பழைய நினைப்பிலேயே இருக்கின்றன என்பதற்கு #behindwoods செல்வின் கேள்வி கேட்ட விதமே கூட ஒருவகையான ஒப்புதல் வாக்குமூலம் தான்!


  • Manickam Sattainathan's profile photo
    வேறெந்த பிரதமரை விடவும் மோடி அவர்கள்மீடியாவில் இருந்து கொண்டுள்ளார் மக்களிடமும் வெகு அருகில் இருக்கிறார் . இவைபோன்ற மீடியாக்கள் இனிமேல் தேவையே இல்லை என்ற நிலை வந்துவிட்டதை இவர்கள் உணர்ந்தாகவே தெர்யுயவில்லை. வெறும் மோடி வெறுப்பு பருப்பெல்லாம் இனிமேல் வேலைக்கு ஆகாது என்று இவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது.
    REPLY
    17h
  • Krishna Moorthy S's profile photo
    +Manickam Sattainathan நீங்கள் மோடி மீது மீடியாக்கள் வைக்கும் குற்றச்சாட்டை முழுதாக, சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ? மோடி மீடியா வெளிச்சத்தில் இருக்கிறார் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு அவர்களிடமிருந்து விலகியும் இருக்கிறார். #பரபரப்பு மட்டுமே ஊடகங்களின் மூலதனம். உண்மை அல்ல.2004 முதல் 2014 வரையிலான #ஐமுகூ அரசில், ஊடகங்கள் #காசுக்காகக்கூவுவது #தரகுவேலை பார்த்தது எல்லாம் குறைவற நடந்தது. #நரேந்திரமோடி பதவிக்கு வந்தவுடன் அந்த நிலைமை மாறியதை ஊடகங்கள் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை.

    இன்றைக்கு #ஊடகங்கள் பார்த்து ஒருவரைத் தூக்கி நிறுத்துவது, அல்லது கீழேபோட்டு மிதிப்பது என்பது நேற்றையநாட்களில் நடந்தது போலவே சாத்தியமில்லை. #சமூகவலைத்தளங்கள் #cameraphones பெருகிய பிறகு #மீடியா அதனுடைய #fourthpillar #நாலாவதுதூண் அந்தஸ்து, முக்கியத்துவம் எல்லாமே போய்விட்டது. #ஊடகங்கள் இன்னமும் வலிமையாக இருக்கிற அமெரிக்காவிலேயே ஊடகங்களைப் புறம் தள்ளி #twitter செய்திகளிலேயே தண்ணி காட்டிக் கொண்டிருக்கிற #டொனால்ட்ட்ரம்ப் ஒரு நல்ல உதாரணம் .
    REPLY
    18h
  • Manickam Sattainathan's profile photo
    இந்த மீடியாக்கள் பிரதமர் மீது வைக்கும் குற்றச்சாட்டில் எனக்கு அக்கறையே இல்லை. அவர்கள் எதுவேனாலும் சொல்லட்டும். பதவிக்கு அந்த பின்னர் இவர்களை சரியாக புரிந்து வைத்திருந்த மோடியும் இந்த மீடியாக்களை திரும்பிக்கூட பார்ப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதானே. மீடியாக்களின் பணிகளை சமூக வலைத்தளங்கள் எடுத்துக்கொண்ட பின்னர் மோடி ஏன் இவர்களைப்பற்றி அலட்டிக்கொள்ளவேண்டும். இவர்களுக்கும் மோடியை விட்டால் இங்கே வேறு யாருமில்லை கட்டிக்கொண்டு அழ. அந்த ஆற்றாமையைத்தான் இந்த பேட்டி எடுப்பவர் வெளிப்படுத்துகிறார் போல.:-))
து கூகிள் பிளஸ்சில் நடந்த பின்னூட்ட விவாதம். விவாதம் செய்வதற்கு இன்னும் பலவிஷயங்கள் இருக்கிறதே! உதாரணமாக, சபரிமலையை வைத்து நடக்கும் பிரச்சினைகள்!

பரிமலை பிரச்சினை ஆரம்பித்தபிறகு மென்டல்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது என்று ஆரம்பிக்கிறார் பிஜேபியின் தேசியக் செயலாளர் H ராஜா


இந்த விவாதத்தில் இன்னொரு பெண்குரலையும் கேட்டு விடலாம்! சபரிமலை நம்பிக்கை சார்ந்ததா?
அல்லது சும்மா சுற்றிப்பார்த்துவருகிற இடமா?



விவாதம் மேடையேறிப் பேசுகிறவர்களோடு முடிந்து விடுகிற ஒன்றுதானா? இதை பார்த்துக் கொண்டிருக்கிற நீங்களும் நானும் சொல்வதற்கு ஏதுமில்லையா? வந்து கொஞ்சம் சொல்லுங்களேன்!

ந்தவருடத்துவக்கத்தில் மூன்று பதிவர்கள் 2018 இல் வாசித்த புத்தகங்கள் என்று பட்டியல் போட்டிருப்பது ஒரு நல்ல ஆரம்பம் ஜனவரி என்றால் புத்தகக் கண்காட்சியும் ஆரம்பித்து விட்டதென்று அர்த்தம்!



புதிய வரவுகளில்.... நீண்ட நாட்களாக வாங்க ஆசைப்பட்டவை இரண்டு.
திருவரங்கன் உலா.
பாண்டவர் பூமி.
Book Fair, Chennai.
Photo
Shared privatelyView activity
சண்டேன்னா மூணுன்னு சொல்லி என்னென்னவோ சொல்கிறேனே என்று பார்க்கிறீர்களா?

#ஊடகங்களின்அரசியல் #சபரிமலை #புத்தகங்கள் இவைதானென்று கோனார் நோட்சும் தந்துவிடுகிறேன்!