சண்டேன்னா மூணு! என்னன்னுதான் வந்து பாருங்களேன்!

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகம் நடத்தும் பொன்மாலைப்பொழுது நிகழ்ச்சியில் கடந்தவருடம் மார்ச் கடைசி நாளன்று பேசியதன் ஒருபகுதியை தன் அதிகாரப் பூர்வமான யூட்யூப் சேனலில் #ரங்கராஜ்பாண்டே பகிர்ந்து இருக்கிறார். ஒரிஜினல் நிகழ்ச்சி ஒன்றரை ஒன்றேமுக்கால் மணி நேரம் என்று நினைவு. இப்போது தேடியதில் லிங்க் இருக்கிறது ஆனால் வீடியோவைக் காணோம்!



சுவாரசியம் என்று வந்தார் எங்கள் பிளாக் ஸ்ரீராம்! அவருக்கு சுவாரசியமாக எந்தப்பகுதி இருந்ததோ எனக்குத் தெரியாது!

நீங்கள் முதலமைச்சராக வந்தால்.... என்று கேள்வியை ஆரம்பிக்கிறார் ஒருவர். கற்பனைக் கேள்விகளுக்குள் போகவிருப்பம் இல்லை என்கிறார் பாண்டே. அதையும் மீறி அதே கேள்வி மறுபடியும்! ரங்கராஜ் பாண்டே என்ன பதில் சொன்னார் என்பது தான் சுவாரசியம்! தன்னுடைய உயரம், எல்லை என்ன என்பதில் தெளிவாக இருக்கும் மீடியாக் காரர் ஒருவரைப் பார்த்ததில் சுவாரசியம், சந்தோஷம் எல்லாமே வருகிறது. இத்தனைக்கும் இது அவர் தந்தி டிவியில் இருந்த சமயம் என்பதையும் நினைவில் வைத்துக் கொண்டு ஊடகம், ஊடகக்காரர் இரண்டையும் ஒப்பு நோக்கிப் பாருங்கள்!
*******
மோடியை மீடியா கிட்ட பேசச் சொல்லுங்க சார்! இதுதான் செல்வின் H ராஜாவிடம் கேட்டதாக வைத்திருக்க வேண்டிய தலைப்பு! ஜனங்களுடைய குரலை மீடியாக்கள் தான் அரசுக்கு எடுத்துச் செல்வதாக நேர்காணல் நடத்தும் செல்வின் சொல்வதே அபத்தமானது. நரேந்திரமோடி ஏதோ ஒருவகையில் வெகுஜனத் தொடர்பில் இருந்து கொண்டே தான் இருக்கிறார். ஜனங்களை ஒதுக்கி வைத்துவிட்டு மோடி மட்டுமல்ல, எந்த அரசியல்வாதியும் பொதுவெளியில் நீடிக்க முடியாது.


#ஊடகங்கள் இன்னமும் #ஐமுகூ காலத்தைய மீடியா சுப்ரீமசி #அதிகாரத்தரகு வேலைகளில் #பர்க்காதத் போன்றவர்கள் கொழித்த பழைய நினைப்பிலேயே இருக்கின்றன என்பதற்கு #behindwoods செல்வின் கேள்வி கேட்ட விதமே கூட ஒருவகையான ஒப்புதல் வாக்குமூலம் தான்!


  • Manickam Sattainathan's profile photo
    வேறெந்த பிரதமரை விடவும் மோடி அவர்கள்மீடியாவில் இருந்து கொண்டுள்ளார் மக்களிடமும் வெகு அருகில் இருக்கிறார் . இவைபோன்ற மீடியாக்கள் இனிமேல் தேவையே இல்லை என்ற நிலை வந்துவிட்டதை இவர்கள் உணர்ந்தாகவே தெர்யுயவில்லை. வெறும் மோடி வெறுப்பு பருப்பெல்லாம் இனிமேல் வேலைக்கு ஆகாது என்று இவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது.
    REPLY
    17h
  • Krishna Moorthy S's profile photo
    +Manickam Sattainathan நீங்கள் மோடி மீது மீடியாக்கள் வைக்கும் குற்றச்சாட்டை முழுதாக, சரியாகப் புரிந்து கொள்ளவில்லையோ? மோடி மீடியா வெளிச்சத்தில் இருக்கிறார் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவு அவர்களிடமிருந்து விலகியும் இருக்கிறார். #பரபரப்பு மட்டுமே ஊடகங்களின் மூலதனம். உண்மை அல்ல.2004 முதல் 2014 வரையிலான #ஐமுகூ அரசில், ஊடகங்கள் #காசுக்காகக்கூவுவது #தரகுவேலை பார்த்தது எல்லாம் குறைவற நடந்தது. #நரேந்திரமோடி பதவிக்கு வந்தவுடன் அந்த நிலைமை மாறியதை ஊடகங்கள் இன்னமும் புரிந்துகொள்ளவில்லை.

    இன்றைக்கு #ஊடகங்கள் பார்த்து ஒருவரைத் தூக்கி நிறுத்துவது, அல்லது கீழேபோட்டு மிதிப்பது என்பது நேற்றையநாட்களில் நடந்தது போலவே சாத்தியமில்லை. #சமூகவலைத்தளங்கள் #cameraphones பெருகிய பிறகு #மீடியா அதனுடைய #fourthpillar #நாலாவதுதூண் அந்தஸ்து, முக்கியத்துவம் எல்லாமே போய்விட்டது. #ஊடகங்கள் இன்னமும் வலிமையாக இருக்கிற அமெரிக்காவிலேயே ஊடகங்களைப் புறம் தள்ளி #twitter செய்திகளிலேயே தண்ணி காட்டிக் கொண்டிருக்கிற #டொனால்ட்ட்ரம்ப் ஒரு நல்ல உதாரணம் .
    REPLY
    18h
  • Manickam Sattainathan's profile photo
    இந்த மீடியாக்கள் பிரதமர் மீது வைக்கும் குற்றச்சாட்டில் எனக்கு அக்கறையே இல்லை. அவர்கள் எதுவேனாலும் சொல்லட்டும். பதவிக்கு அந்த பின்னர் இவர்களை சரியாக புரிந்து வைத்திருந்த மோடியும் இந்த மீடியாக்களை திரும்பிக்கூட பார்ப்பதில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதானே. மீடியாக்களின் பணிகளை சமூக வலைத்தளங்கள் எடுத்துக்கொண்ட பின்னர் மோடி ஏன் இவர்களைப்பற்றி அலட்டிக்கொள்ளவேண்டும். இவர்களுக்கும் மோடியை விட்டால் இங்கே வேறு யாருமில்லை கட்டிக்கொண்டு அழ. அந்த ஆற்றாமையைத்தான் இந்த பேட்டி எடுப்பவர் வெளிப்படுத்துகிறார் போல.:-))
து கூகிள் பிளஸ்சில் நடந்த பின்னூட்ட விவாதம். விவாதம் செய்வதற்கு இன்னும் பலவிஷயங்கள் இருக்கிறதே! உதாரணமாக, சபரிமலையை வைத்து நடக்கும் பிரச்சினைகள்!

பரிமலை பிரச்சினை ஆரம்பித்தபிறகு மென்டல்கள் எண்ணிக்கை அதிகமாகி விட்டது என்று ஆரம்பிக்கிறார் பிஜேபியின் தேசியக் செயலாளர் H ராஜா


இந்த விவாதத்தில் இன்னொரு பெண்குரலையும் கேட்டு விடலாம்! சபரிமலை நம்பிக்கை சார்ந்ததா?
அல்லது சும்மா சுற்றிப்பார்த்துவருகிற இடமா?



விவாதம் மேடையேறிப் பேசுகிறவர்களோடு முடிந்து விடுகிற ஒன்றுதானா? இதை பார்த்துக் கொண்டிருக்கிற நீங்களும் நானும் சொல்வதற்கு ஏதுமில்லையா? வந்து கொஞ்சம் சொல்லுங்களேன்!

ந்தவருடத்துவக்கத்தில் மூன்று பதிவர்கள் 2018 இல் வாசித்த புத்தகங்கள் என்று பட்டியல் போட்டிருப்பது ஒரு நல்ல ஆரம்பம் ஜனவரி என்றால் புத்தகக் கண்காட்சியும் ஆரம்பித்து விட்டதென்று அர்த்தம்!



புதிய வரவுகளில்.... நீண்ட நாட்களாக வாங்க ஆசைப்பட்டவை இரண்டு.
திருவரங்கன் உலா.
பாண்டவர் பூமி.
Book Fair, Chennai.
Photo
Shared privatelyView activity
சண்டேன்னா மூணுன்னு சொல்லி என்னென்னவோ சொல்கிறேனே என்று பார்க்கிறீர்களா?

#ஊடகங்களின்அரசியல் #சபரிமலை #புத்தகங்கள் இவைதானென்று கோனார் நோட்சும் தந்துவிடுகிறேன்!



4 comments:

  1. புத்தாண்டு தான். ஆனால் வாசகர்கள் வாங்கிப் படிக்கும் புத்தகங்களோ அதர பழசா?

    நிறைய புதுசு புதுசாக நூல்கள் வெளியாகியிருக்கின்றனவே?..

    எஸ்.கே. சார்! உங்களுக்கான தகவல் ஒன்று. சந்தியா நடராஜன் மொழ்பெயர்ப்பில்
    'சாணக்கிய நீதி: அரசியலும் அந்தரங்கமும்' என்று சந்தியா பதிப்பகத்தின் வெளியீடாக வந்திருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இங்கே நண்பர் அசோக்குமார் ஆசைப்பட்டு நிறைய புத்தகங்களை வாங்கியிருக்கிறார். ஊர் ஊராக அலைகிற தமிழ்நாடு அரசுப்பணியில் இருந்து தற்போதுதான் ஓய்வு பெற்றிருக்கிறார். அரதப்பழசோ புதுசோ வாசிக்க ஆரம்பிக்கட்டுமே!

      சந்தியா நடராஜனுடன் பேசிப் பல வருடங்கள் ஆகிவிட்டன. மனிதர் திருவாசகம் பற்றி பேசிய யூட்யூப் உரைகளை ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் சுட்டி கொடுத்துப் பார்த்ததோடு சரி, அவரிடம் தொலைபேசியில் அதைப்பகற்றி பேசவேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்ததும் நடக்கவில்லை.

      Delete
  2. ஏதோ ஒரு பதிலுக்கு அவருடைய (ரங்கராஜ் பாண்டே ) முகநூல் பக்கத்தைப் பார்த்துத் தெரிந்துகொள்ளச் சொன்னார். அதனால் அவர் பார்வை அதில் என்ன என்று தெரியாமல் போனது. நிஜமாக சுவாரஸ்யமாக, தெளிவாகப் பேசினார். ஆனால் நான் இவரது பேட்டிகள் ஏதோ ஒன்றிரண்டு தவிர பார்த்ததில்லை! அவர் சொன்னதில் சில குறிப்புகள் கவர்ந்தன.

    ReplyDelete
    Replies
    1. தமிழில் செய்தி வாசிப்பதில் பிரபலங்கள் இருந்ததுண்டு. ஆனால் தொலைகாட்சி நேர்காணல், விவாதத்தை initiate செய்வதோடு கண்ணயமான நெறிப்படுத்துதல் என்று தந்திடிவியை கொண்டுபோனவர் பாண்டே. தந்திடிவிக்கு முன்னால் தினத்தந்தி நாளிதழுக்குப் பெரிய மரியாதை என்றிருந்ததில்லை. சென்னையில் மட்டும் அதிகபட்ச சர்க்குலேஷன், அதுவும் டீக்கடை இன்னபிற இடங்களில் பொட்டலம் கட்ட உபயோகம் என்று இருந்ததனால்!

      பொதுவாக எல்லா ஊடகங்களையும் தொடர்ந்து கவனித்து வருவதில் ரங்கராஜ் பாண்டே தனித்துத் தெரிகிறார்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!