மண்டேன்னா ஒண்ணு!பதிவர்களின் அரசியல்!

சண்டேன்னா மூணு! வால்பையன்!வரலாறு!அரசியல்! நேற்றைக்கு இந்தத் தலைப்பில்தான் முதலில் எழுத உத்தேசித்திருந்தேன். மேலே மூன்று சொற்களிலும் மூன்று சுட்டிகள்! வரலாறு என்பதைக் க்ளிக் செய்தால் 2009 வாக்கிலேயே வால் பையனுக்கு நேருவின் குடும்ப வரலாறைக் கற்றுக் கொடுக்க முயற்சித்தது பயனில்லாமல் போன கதை நினைவுக்கு வரவே கைவிட்டேன்! கூகிள் பிளஸ்சில் சின்னதாக ஒரு சீண்டலுடன் மறு முயற்சி முடிந்து போனது!
 
வரலாறு என்றால் அலெர்ஜி! வால் பையனுக்கு மட்டும் தானா?
  
உண்மையை விவரிக்கப் போனால், பதிவர்களின் அரசியல் தான் அதில் வெளிப்படும் முதல் உண்மை!  அதற்குமேல் புதிதாக என்ன சொல்லிவிடப் போகிறோம் என்ற எண்ணம் வரவே லயோலா கல்லூரி செய்துவரும் திருப்பணி என்று நேற்றைய பகிர்வு நிகழ்கால நடப்பின் மீதானதாக மாறிப்போனது.

கிறிஸ்துவத்துக்குள் கம்யூனிசமும் அடக்கம் என்பது புதிய செய்தி. சபரிமலை பிரச்சனைக்கு புதிய அர்த்தம் தெரிகிறது.


கிறித்தவம் என்பதே ரோம சாம்ராஜ்யம் சரிய ஆரம்பித்த நாட்களில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் மதம் என்பது வாட்டிகன் சரித்திரத்தைக் கொஞ்சம் பார்த்தாலேயே விளங்கி கொள்ளக் கூடியதுதான்! ஆரம்ப நாட்களில் பாதிரியார்கள் கால் வைத்த ஒவ்வொரு இடத்திலிருந்தும் முக்கியமான பண்பாட்டுக் கூறுகளை லத்தீனில் மொழிபெயர்த்தார்கள். பிறகு லத்தீனில் இருப்பதைக் காட்டியே இதெல்லாம் பைபிளில் ஏற்கெனெவே சொல்லப் பட்டிருப்பது தான் என்று இங்கே டூப்ளிகேட்டுகள் தங்களை காந்தி என்று சொல்லிக் கொள்வதை போல பிரசாரம் செய்தார்கள். இங்கே ராபர்ட் கால்ட்வெல் என்கிற பாதிரி திருநெல்வேலிக்கு வந்து திராவிட மொழிக்குடும்பம் கோட்பாட்டை ஆரம்பித்து வைத்ததும் அந்த நாட்களிலேயே சமுகநீதி காத்த பாதிரியாகக் கொண்டாடப் பட்ட கதையும் கூகிளிட்டுத் தெரிந்து கொள்ளக் கூடியதுதான்!

கிறிஸ்டியன் கம்யூனிசமுமே கூட அந்த மாதிரி கம்யூனிச ஆதிக்கம் வலுத்து வந்த பகுதிகளில் வாடிகன் ஆரம்பித்து வைத்த திருப்பணி! இங்கே பாதிரிகளை மதுரையில் உருவாக்குகிற தியாலஜிகல் கல்லூரி அதைச் செய்வதை நேரடியாகவே பார்த்த கதையைத்தான் பதிவில் கோடிட்டுக் காட்டினேன்!

வி ம ரி ச ன ம் – காவிரிமைந்தன் பதிவு இது! மதுரை விமான நிலையத்துக்கு பசும்பொன் தேவர் பெயரை வைக்கவேண்டுமென்கிற கோரிக்கை இங்கே நீண்ட நாட்களாகவே இருப்பதுதான்! இதற்குப் போட்டியாக இமானுவேல் சேகரன் பெயரைசூட்ட வேண்டுமென்ற கோரிக்கையும் உண்டு! இந்த சிலைவைத்தல், பெயர் சூட்டுதல் அல்லது மாற்றுதல் என்கிற சாங்கியம் எத்தனை அக்கப்போர்களைத் தூண்டக்கூடியது என்பது தெரிந்துதான் விமரிசனமாக எழுதினாரா?   
இந்த முறையற்ற கடன் வழங்கப்பட்டது 2012 இல்! வராக்கடனாக மாறி விஷயம் வெளியே தெரியவந்தது 2017 இல்! சந்தா கோச்சார் மீது CBI இன்று வழக்குப் பதிவு செய்திருக்கிறது. வீடியோகான் வேணுகோபால் தூத் மீதும் தான்!

இப்படி எழுதிய சூடு ஆறுவதற்குள்ளாகவே அருண் ஜெயிட்லி ஆட்டையை கலைக்கிற வேலைகளை ஆரம்பித்து விட்டாரோ? விகடன் தளம் கூட இப்படிப் பொங்குகிறது   கண்டனூர் ஜமீன் கம்பி எண்ணாமல் இன்னமும் வெளியில் பகுமானமாக அலைவதில் கூட அருண் ஜெயிட்லி பங்கு இருக்கிறதோ என்கிற சந்தேகம் எனக்கு மட்டுமல்ல, டாக்டர் சுப்ரமணியன் சுவாமி உட்பட நிறைய பேருக்கு இருக்கிறது. மோடிக்கு எதிரிகள் வெளியே இருந்து வரவேண்டியதே இல்லை! அருண் ஜெயிட்லி, டாக்டர் யக்கோவ் தமிழிசை போல உள்ளேயே !

சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி என்ற தம்பட்டத்தோடு எழுதிவரும் இடதுசாரி LIC ஊழியர் ராமன், நேற்றைக்கு கூட எங்கே எங்கே மோடி எங்கே என்று தெடிக் கொண்டிருந்தவர் அதற்குமேல் எழுத வேறு விஷயம் கிடைக்காமல் நாய்களுக்குப் பதிலாக . . . என்று எழுத வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டிருப்பது பதிவர்களின் அரசியல் எப்படிப்பட்டது, பதிவுகளில் பேசுபொருள் வறட்சியாகிக் கொண்டிருக்கிறதோ என்கிற ரீதியில் இன்றைக்கு சிந்தனையைத் தூண்டி விட்டிருக்கிறது!

    
   

7 comments:

  1. பேருந்து நிலையங்களுக்கும் விமான நிலையங்களுக்கும் அவசியம் ஏதாவது பெயர் கொடுத்தே ஆகவேண்டுமா?!!

    ReplyDelete
    Replies
    1. அப்படி அவசியம், அவசரம் எல்லாம் கிடையாது ஸ்ரீராம்! இங்கேபெயர் வைப்பது. சிலைவைப்பது, தோரணவாயில் கட்டுவதெல்லாம் ஏதோ ஒருதரப்பை தாஜா செய்து வாக்குகளை உறுதி செய்வதற்காகவே! முக்குக்கு முக்கு அண்ணா சிலை அண்ணாநகர் அண்ணா தெரு என்று ஒரு கழகம் செய்தது இன்னொரு கழகம் போக்குவரத்துக்கு கழகங்களுக்கெல்லாம் யாரோ ஒரு ஜாதிக்காரனை திருப்பதி படுத்துவதற்காக பெயர் வைத்துப் பார்த்து அக்கப்போரான பிறகு வெறுமனே அரசு போக்குவரத்துக்கழகம் என்று மாற்றியது.

      முந்தின பதிவில் ராஜா அண்ணாமலைபுரத்தில் ஒரு வீதிக்கு டி ஜி எஸ் தினகரன் பெயரை வைத்தார்களே. ஏதன் அடிப்படையில் என்று கேட்டிருந்தேனே!

      Delete
  2. சில தத்துவங்களுக்கு சொந்தம் கொண்டாடுவோரின் நடைமுறைத் தவறுகளே அந்தத் தத்துவத்தின் தவறாகி விடுமா, சார்?..

    ReplyDelete
    Replies
    1. மேலோட்டமாக பதில் சொல்வதானால், ஆகாது என்பது தான் பதிலாக இருக்கும் ஜீவி சார்! அந்த இடதுசாரி = அபிமானி என்று கூட இல்லை, வெறித்தனமான முன்னணி ஊழியனாக தத்துவத்துக்கும், தொழிற்சங்கத்திலும் இருந்த பழைய அனுபவம், தத்துப்பித்தென்று உளறுவதெல்லாம் தத்துவமாகி விடுமா? ஆகாதே! என்று விரித்துச் சொல்ல வைக்கிறது!

      சொந்தம் கொண்டாடுவதும், தத்துவத்தைப் புரிந்து கொண்டு நடப்பதும் ஒன்றாகிவிடுமா? .

      Delete
  3. //சொந்தம் கொண்டாடுவதும், தத்துவத்தைப் புரிந்து கொண்டு நடப்பதும் ஒன்றாகிவிடுமா? .//

    ஆகாதது தான். பிரச்னைகளில் ஆளுக்கொரு வியாக்கியானம் கொடுப்பதிலிருந்தே
    இது புரிபடும்.


    ReplyDelete
  4. பொதுவாக நான் பார்ப்பது.. யாரும் தன் நிலையிலிருந்து மாற தயாராக இல்லை. தனக்கு சார்பாக எழுதினால் தொடர்வது / பின்னூட்டம் எழுதுவது.. தன் நிலைக்கு சார்பாக பின்னூட்டம் எழுதினால் பதில் சொல்வது. இல்லையேல் கண்டுகொள்ளாமல் விடுவது. அதைவிட கொடுமை, பின்னூட்டத்தை நீக்குவது..

    எல்லா இடத்திலும் காணப்படும் மிகக் குறைவான அளவு maturity யே பதிவுலகிலும் தெரிகிறது!

    ReplyDelete
    Replies
    1. பந்து! இணையத்தில் புழங்கும் போது நான் கற்றுக் கொண்ட முதல் பாடம் மறைந்த டோண்டு ராகவனிடமிருந்து! அவர் மீது வீசப்படாத சேறா? போடா ஜாட்டான் என்று வசை பாடியவர்களைக் போனவிதம்! அப்புறம் முண்டாசுக்கவிஞன் பாரதி வேறு நிறைய சொல்லி வைத்துப் போயிருக்கிறான்.

      நம்முடைய கருத்தில் நேர்மையாக இருப்பதோடு களத்தில் துணிந்து நில்லுங்கள் என்பது மட்டுமே நான் சொல்லக்கூடியது!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!