இன்றும் நாளையும் பொதுவேலைநிறுத்தம் என்று இடதுசாரிக் கட்சிகள் முன்னிருந்து இயக்கும் மத்திய தொழிற்சங்கங்களோடு பின்னிருந்து இயக்கும் வங்கி, காப்பீட்டு ஊழியர் சங்கங்கள், காங்கிரஸ் கட்சியின் INTUC திமுகவின் தொ.மு ச அப்புறம் நிறைய உதிரிகளும் சேர்ந்திருக்கிறார்கள். சுமார் 20 கோடி ஊழியர்கள் பங்கேற்கிறார்கள் என்று AITUC பொதுச்செயலாளர் அமர்ஜீத் கவுர் சொல்கிறாராம்!(அத்தனை வாக்குகள் விழுந்திருந்தால், மத்தியில் ஆட்சியையே பிடித்திருக்கலாமே! யாரும் கேட்க மாட்டீர்களா?)
Trade Union activists protesting while courting arrest during two day long Bharat Bandh called by Trade Unions, at Hazra in Kolkata on Tuesday 8th January 2019. செய்தி மற்றும் படத்துக்கு நன்றியுடன் (ARIJIT SEN / Hindustan Times)
Why do people go on strike?
Trade Union activists protesting while courting arrest during two day long Bharat Bandh called by Trade Unions, at Hazra in Kolkata on Tuesday 8th January 2019. செய்தி மற்றும் படத்துக்கு நன்றியுடன் (ARIJIT SEN / Hindustan Times)
மாற்றங்களை எதிர்கொள்வது! தடுமாறும் வங்கி ஊழியர்கள்! என்று இங்கும்,
வேலைநிறுத்தங்கள்! அர்த்தமிழந்து போன சாங்கியம்!
Why do people go on strike?
What makes or breaks a strike?
Aren’t strikes a bit unfair to customers or service users?
What’s the role of governments in all this?
How else could workers express their dissatisfaction with the way they’re being treated?
Is there an ideal set-up anywhere in the world?
Have you ever been on, or considered going on, strike?
இப்படி ஏழு கேள்விகளை முன்வைத்து எழுதியிருந்ததை ஒருமுறை வாசித்துவிட்டு , உங்களுக்கு என்ன மனதில் படுகிறதோ அதைக் கொஞ்சம் வாய்திறந்து பேசுங்கள்!
ஆனால் மேற்குவங்க முதல்வர் மம்தா பானெர்ஜி இடது சாரிகளுக்கு பந்த் அதுஇது என்று நடத்தி 34 வருடங்களாக மாநிலத்தைச் சீரழித்தது போதுமென்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். செய்தி இங்கே
*******
சென்னை புத்தககாட்சியில் புத்தகம் வாங்கிவிட்டீர்களா? புத்தகம் வாசிப்பது பற்றி ஜோதிடம் கூறும் ரகசியங்கள்!
இப்படி இதற்கும் ஜோதிடம் பார்க்கச் சொல்கிறது தினமணி. பொன்மாலைப்பொழுது பதிவர் நண்பர் மாணிக்கம் கூகிள் பிளஸ்சில் கலாய்த்துக் கொண்டிருக்கிறார்!
எலக்கியவாதிகளையெல்லாம் தெரிகிறது
ReplyDeleteஇலக்கியம் எதுவென்று தான் தெரியவில்லை.
வாங்க ஜீவி சார்! இலக்கியம் என்று இதைச் சொல்வது? ஆங்கிலேயர்களிடமிருந்து நாம் ஊழலைக் கற்றுக் கொண்டோம்! தொலைகிறது, #Literature என்றால் என்ன #LiteraryCriticism என்றால் என்ன என்பதைக் கொஞ்சமாவது கற்றுக்கொண்டோமா என்கிற ஆதங்கம் எனக்கும் உண்டு! ஆனால் யாரிடம் சொல்வது?
Deleteஸ்ட்ரைக் செய்தால் ஒழிய அரசாங்கங்கள் கோரிக்கைகளைக் கவனிப்பதில்லை. அதனால் வேலைநிறுத்தம். என் சர்வீஸில் ஒரே ஒரு முறை வேலைநிறுத்தம் செய்திருக்கிறேன் / றோம். ஒரு அனுபவம் போதும். ஜப்பானில் தங்கள் எதிர்ப்பைக் காட்ட ஓவர்டைம் வேலை செய்து அதிக தயாரிப்பில் ஈடுபடுவார்களாம்!
ReplyDeleteவாருங்கள் ஸ்ரீராம்! 30+ வருடங்கள் தொழிற்சங்கப் பணியில் இருந்துவிட்டு இப்போது ஏற்பட்ட திடீர் ஞானோதயத்தில் இதை எழுதவில்லை. முந்தைய இரண்டுபதிவுகளின் சுட்டியைக் கொடுத்துவிட்டு வேலைநிறுத்தங்கள் எப்படி ஒரு அர்த்த்தமிழந்த சாங்கியமாக மட்டுமே போய்க் கொண்டிருக்கிறது என்பதை என் கருத்தை மேலேற்றாமல் ஒரு ஏழு கேள்விகளை முன்வைத்திருப்பதில்,கடைசிக்கு கேள்விக்கு மட்டும் பதில் சொல்லியிருக்கிறீர்கள்.
Deleteநீண்ட நாட்களுக்கு முன்னால் இனியெங்கிலும் என்று ஒரு மலையாளப்படம் மம்மூட்டி சீமா நடித்து ஐவி சசி இயக்கிய படம், வேலைநிறுத்தங்கள், பந் என்று பொழுதை வீணாக்கிக் கொண்டிருக்கிற சிலர் ஜப்பானுக்குப் போய்த் தொழில் கற்றுக் கொண்டு, திரும்பவும் இங்கே வந்து தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிற மாதிரி! நிறையப்பேருக்கு மறந்தே போயிருக்கும்.இன்னொரு மலையாளப்படம், ஹர்த்தால், பந்த் என்று ஜனங்களுக்கு இடைஞ்சல் கொடுக்கிற மாதிரி இருப்பதன் பேரில் கேரளா உயர்நீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்பை வைத்து ஒரு கோர்ட் ரூம் டிராமாவாகவும் வந்தது.
ஆனால் எதையாவது கற்றுக் கொண்டிருக்கிறோமா என்ற கேள்வி இன்னமும் என்னை உறுத்திக்கொண்டே இருக்கிறது!
புத்தகக்கண்காட்சியில் வாசகர்களை விட புத்தகம் வெளியிட்ட எழுத்தாளர்கள் கூட்டம் அதிகம் என்று இந்த வருடமும் வழக்கமான ஜோக்'கடி'க்கிறார்கள்! கக்கு மாணிக்கம் கலாய் ரசனை!
ReplyDeleteதருமமிகு சென்னைக்கு வெகுதூரத்தில் இருப்பதால் எது வழக்கமான, பழைய ஜோக், எது புதுசு என்கிற தகவல் எனக்குத் தெரிவதே இல்லை! புத்தகங்களைக் கண்காட்சிக்கு வைப்பதை விட்டுவிட்டு, எழுத்தாளர்களும் பார்வையாளர்களுமே கண்காட்சி என்று ஆகிவிட்டதில், புத்தகங்கள் வாசிக்கும் வழக்கம் வளர்கிறதா அல்லது தேய்ந்து கொண்டிருக்கிறதா? தினமணி செய்திக்கு லிங்க் இருக்கிறதே!
Delete