இன்னொரு மூணு! சிரிக்க, கொறிக்க, சிந்திக்க!

மல்லுதேசம் கொஞ்சம் விசித்திரமான கிறுக்குத் தனம் கொண்டது என்பதை #KissofLove நடுரோட்டில் முத்தப்போராட்டம், ஜிமிக்கிகம்மல், கண்ணடிக்கிற ப்ரியா வாரியர், இப்படி ஏராளமான விஷயங்களில் பார்த்திருக்கிறோம். அந்த வரிசையில் இது இப்போது!

       
இப்படி திடுதிப்பென்று சம்மன் அனுப்பினால் யாருக்குத்தான் கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்காது?   கோட்டயத்தில் நடைபெறும் தங்கள் திருமணத்திற்கு வரும்படி இப்படி சம்மன்ஸ் அனுப்பிக் களேபரப்படுத்தி இருப்பது வழக்கறிஞர்கள் அல்லாமல் வேறு யாராக இருக்க முடியும்? இது இன்று பார்த்துச் சிரித்தது!

*******

புதன்கிழமை! வானம்! பூமி! அரசியல்!  

இதை நேற்று எழுதிய பிறகு இதேநாளில் நான்கு வருடங்களுக்கு முன் இங்கே எழுதியதைத் திரும்பப்பார்த்தேன்  இப்போது மட்டும் நிலைமை மாறிவிட்டதா? ஜான் பாண்டியன் சொல்கிற மாதிரி திராவிட அரசியலே ஜாதிக்கணக்குகள் தானே!

 

சாதி ஒழிப்பு சாதிமறுப்பு என்பதெல்லாம் பகுத்தறிவு #திராவிடங்கள் செய்கிற கண்துடைப்பு வேலைதான் என்பதை திமுக தலைவர் கருணாநிதி  மாவட்டச் செயலாளர்கள் தேர்தலில்  எத்தனைபேர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதை சாதி வாரியாக பட்டியலிட்டு அறிவித்திருக்கிற செய்தி இங்கே  அரசியல்வாதிகளுக்கு  செலக்டிவாக அம்னீஷியா -ஞாபகமறதி வந்து விடுவதை  ஞாபகப் படுத்திக் கொள்வதற்காக தினமணி நாளிதழில் அடடே!மதி வரைந்த பழைய கேலிச்சித்திரம் இங்கே!


கருணாநிதி அறிவித்திருக்கிற 60 மாவட்டச்செயலாளர்களில் முக்குலத்தோர் 14, கொங்குவேளாளர், வன்னியருக்குத் தலா8, நாயுடு முஸ்லிம் முதலியார் 3,உடையார்,
பிள்ளைமார், ரெட்டியார், மீனவர், எஸ்சி  சாதியினருக்குத் தலா2 அப்புறம் செட்டியார்,   யாதவர், நாடார், கிறித்துவ நாடார், கவுடு,,மருத்துவர் , முத்தரையர் சாதிகளுக்குத் தலா 1 ஆக மொத்தம் அறுபதில் ஒரே ஒரு பெண் அப்புறம் முதல் முறையாக  2 ஆதிதிராவிடர்கள் மாவட்டச் செயலாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்களாம். #திராவிடங்கள் #சாதிஒழிப்பு பற்றி வாய் கிழியப் பேசுவார்களே தவிர சாதிபார்த்துத்தான் எல்லாக் கணக்குகளும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு மேல் வேறென்னவாம்?  

அய்யம்பேட்டை வேலை என்று சொல்வார்களே! அது இதுதானோ என்பதை இன்றைய செய்திகளிலும் பார்த்து அலுத்துக்கொள்ளத்தான் முடிகிறது என்பது சுள்ளென்று உறைக்கும் கொறிப்பு 

*******
இந்த காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்களைப்பற்றி  என்னவென்று கணிப்பீர்கள்?


வரும் மக்களவை தேர்தலில் ஒரு சில மாநிலங்களைத் தவிர மற்ற மாநிலங்களில் தனித்தே போட்டியிடக் காங்கிரஸ் முடிவு செய்ததாகத் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் காங்கிரஸின் தேசிய நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘‘வரும் தேர்தல் அனைத்திலும் மாநிலக் கட்சிகளுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. ஆனால், இதற்கான ஒத்துழைப்பு கிடைக்கும் மாநிலங்களில் மட்டும் பயன்படுத்திக் கொள்வோம். பாஜகவின் செயல்பாடுகள் காரணமாக கூட்டணி வைப்பதன் மூலம் கிடைக்கும் தொகுதிகளை விட, தனித்து போட்டியிட்டாலே காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் நிலை உருவாகி உள்ளதால் இந்த முடிவை ராகுல் எடுத்துள்ளார்’’ எ!னத் தெரிவித்தனர்.

அடடடே! அப்படியா?!!  
சிந்திக்கறீங்களா? சிரிக்கறீங்களா? என்னன்னு சொன்னாத் தானே தெரியும்!!   
   

2 comments:

  1. 'கிடைக்கும் நிலை உருவாகியுள்ளதால்' என்று வெளிப்படையாகத் தானே சொல்லியிருக்கிறார்கள்?..

    எனக்கென்று எந்தத் தகுதியும் இல்லை; இன்னொருவரின் தவறு (அல்லது தவறு போலப் பொய்ப்பிரச்சாரம் செய்தால்) அதுவே எனது வெற்றியாகிறது என்ற உண்மையை இதை விட வேறு எப்படி பகிரங்கப்படுத்துவதாம்?

    ReplyDelete
  2. வணக்கம், ஜீவி சார்! தொடர்ந்து அரசியலைக் கவனித்து வருகிறவன் என்ற வகையில் இதை இன்னொரு விதமாகவும் சொல்லலாம்! காங்கிரஸ் தலைமையை, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளத் தயங்குகிறவர்களுடன் கூட்டு இல்லை என்பதை அவர்களுக்கு முந்திக் கொண்டு சொன்ன மாதிரியும் எடுத்துக் கொள்ளலாமே!

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!