உலகத்திலேயே மிக மோசமான முதலமைச்சர் யார்?
இதைக் கூகிளில் தேடினால் வருகிற விடை என்னவாக இருக்கும்?
இதைக் கூகிளில் தேடினால் வருகிற விடை என்னவாக இருக்கும்?
bad என்கிற வார்த்தைக்குப் பதில் worst என்று தேடினாலுமே கூட பிணரயி விஜயன்தான் முன்னால் வந்து நிற்கிறார்! சபரிமலை விவகாரத்தில் மட்டும் மார்க்சிஸ்டுகள் காட்டும் அதீத அக்கறையில் நேற்று ஞாயிறு மாலை நிலவரப்படி மாநிலம் முழுவதுமாக 1772 வழக்குகளில் 5397 நபர்களைக் கைது செய்திருப்பதாகச் செய்திகள் சொல்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் By standing firm on Sabarimala, CPI(M) hopes to win support of silent majority in Kerala என்கிறது இந்தச் செய்தி
அமைதியாகப்பார்த்துக் கொண்டிருக்கிறவர்களில் அப்படி எத்தனை பேர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரிக்கப்போகிறார்கள் என்பதற்கு கூகிள் தேடல் முடிவுகளே ஒரு கட்டியமோ?
*******
ஐந்து மாநிலத் தேர்தல்களுக்கு அப்புறம் நாடு முழுதும் மக்களுடைய மனநிலை எப்படி, இப்போது தேர்தல் வந்தால் யார் யாருக்கு எவ்வளவு இடங்கள் கிடைக்கும் என்று ஒரு கருத்துக் கணிப்பு முடிவுகளை இந்தியா டுடே நேற்றைக்கு வெளியிட்டிருக்கிறது.
According to the survey, conducted between December 15-25 at the fag end of last year in all 543 parliamentary constituencies, the NDA may get 257 seats and the Congress-led UPA (minus SP and BSP) may get 146 seats, far off the magic mark.
ராவுல் பாபா காங்கிரஸ் கட்சிக்குத் தலைவர் ஆனது மாதிரியே நாட்டுக்குப் பிரதமராகவும் ஆகிவிட முடியுமா என்ன? இசுடாலின் முன்மொழிந்ததே வேஸ்ட் தானோ?
அதைவிடக் கொடுமையான காமெடியாக, உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடக் காங்கிரசுக்குப் போனால் போகிறதென்று இரண்டே இரண்டு சீட்டுகள் மட்டும் தருவதாக அகிலேஷ் யாதவும், மாயாவதியும் கூட்டாக அறிவித்திருக்கிறார்கள்
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 2 தொகுதி களில் மட்டும் போட்டியிடுவதாக இருந்தால் தங்களுடன் கூட்டணி அமைக்கலாம் என காங்கிரஸுக்கு பகுஜன் சமாஜும், சமாஜ்வாதி கட்சியும் நிபந்தனை விதித்திருப்பதாக கூறப்படுகிறது.
அதுவே காங்கிரசுக்கு லாபமாம்!
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் சமாஜ்வாதி கட்சி வட்டாரம் கூறுகையில், "காங்கிரசுக்கு ஒதுக்குவதாக இருந்த 6 தொகுதிகள் தற்போது 2-ஆக குறைக்கப் பட்டிருக்கிறது. எங்கள் கூட்டணியில் சேர்வதால் காங்கிரசுக்குதான் அதிக லாபம்" எனத் தெரிவித்தன.
*******
புத்தகக் கண்காட்சி என்றால் புத்தகங்களோடு, சாரு நிவேதிதா, அரசியல் எல்லாம் சேர்ந்துதான் வரும்!
இல்லையா?!
நீங்கள் சொல்லிருப்பதைப் பார்த்ததும் நானும் கூகிளில் சென்று தேடிவிட்டு வந்தேன்! ஆமாம்.. அப்படிதான் வருகிறது!
ReplyDeleteஇசுடாலின் ராகுலைமுன்மொழிந்து அசடு வழிந்திருப்பதோடு சிலரது எதிர்ப்புகளையும் சம்பாதித்திருக்கிறார் என்று தெரிகிறது.
புத்தகக் கண்காட்சி... ம்ம்ம்ம்.....
இப்படியெல்லாம் சந்தேகம் வரக்கூடாதே என்பதற்காகத்தான் screenshot போடுவது! இன்னொரு விதத்தில் நாமே தேடி சொல்லப்பட்டது உண்மைதானா என்பதைச் சோதித்துப் பார்த்துக்கொள்கிற மாதிரியும்!
Deleteநம்மூர் அரசியல்வியாதிகள் உளறுவதையும் கூட ஜனங்களே உடனுக்குடன் உரசிப்பார்க்கிற வசதி மட்டும் இருந்தால்....!