ஆயிரம் பொய்கள் ஓங்கி வரும் நேரம்! ஆமாம், தேர்தல் வருதே!

எங்கள்Blog ஸ்ரீராம் கோபித்துக் கொண்டாலும் கூடப் பரவாயில்லை! இங்கே சில வீடியோக்களைப் பகிர்ந்தே ஆகவேண்டும்! ஏனென்றால் இவை சொல்லும் செய்தி மிக மிகத்தெளிவானவை! 2019 தேர்தல் முன்னோட்டம் இவைகளில் வெளிப்படுகிறது என்பதால் செய்திகளில் காணொளிகளில் வெளிப்படுகிற அரசியல் என்ன, என்ன வகையான முன்னோட்டம் தெரிகிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் பரந்து விரிந்த பார்வையில் பார்க்க வேண்டாமா?


சென்னை லயோலா கல்லூரி! தேர்தல் நேரங்களில் தி.மு.கழகத்துக்கு ஆதரவாக மட்டுமே கருத்துக் கணிப்புகளை நடத்தி பல்பு வாங்கி, இப்போது அதே வேலையை முன்னாள் மாணவர்கள் நடத்துவதாக மாற்றிக் கொண்ட தொண்டு நிறுவனம் என்பதாவது நினைவுக்கு வருகிறதா? டில்லியில் JNU என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் என்று, மத்திய அரசு மானியத்தில் இடதுசாரித் தறுதலைகள் ஓசிச்சோத்துல உடல்வளர்த்துப் புரட்சி செய்கிற அதே மாதிரி, இங்கேயும் அரசு மானியத்தில் இயங்கிக் கொண்டு, அரசுக்கு எதிராக விஷமத்தனங்களைச் செய்துவருகிற கல்வி நிறுவனம் லயோலா! மருதை பாஷையில் சிம்பிளாகச் சொல்ல வேண்டுமென்றால் லோலாயி! என்ன செய்துவிட்டார்கள் அப்படி? மேலே வீடியோவில் ஒன்றும் காணோமே என்கிறீர்களா?


பா.ஜ. க வைக் கதறவிட்ட லயோலா என்ற  தலைப்பில் என்ன சொல்கிறார்கள் என்பதையும் பாருங்கள்! தினசரி தளத்தில் லயோலா உள்ளிட்ட சில சிறுபான்மை நிறுவனங்கள் அரசிடமிருந்து பெறும் மானியம் எவ்வளவு என்கிற பட்டியல்! மானியம் வாங்கிக் கொண்டு செய்கிற திருப்பணிகள் என்னென்ன என்பதையும் பட்டியலிடவேண்டாமா? தசமபாகம் (10%) அல்லது அதற்குமேலும் வாங்கிக்கொண்டு @ஊழியம் செய்வது கிறித்தவத்தின் தன்மை என்பது இப்படித் தானா?

      
இப்படி சிறுபான்மை என்ற போர்வைக்குள் இவர்கள் செய்வதை ரசிப்பதற்கும் ஆளில்லையா என்ன?
அந்த ஓவியங்களில் எனக்கு மிக பிடித்தது : நீதி தேவதை, H. ராஜா & SV சேகர்.
உண்மையை, தெளிவான படமாக வரைந்து பதிவு செய்து இருக்கின்றார்கள். வாழ்த்தப்பட வேண்டியவர்கள்.
தெரியாமல் மறைவாகப் போக இருந்ததை எதிர்த்து, எல்லோருக்கும் கொண்டு சென்ற அந்த நல்லவர்கள் 🤭😁
#லயோலா #திருச்சி #ஓவியங்கள்
ஓவியம் கமெண்ட்டில்

Shared publiclyView activity
  
தேர்தல்கள் நெருங்க நெருங்க இன்னும் இதுபோல என்னென்ன கிளம்பியிருக்கின்றன? கிளம்பப் போகின்றன?  

அரசு என்றால் என்ன? இதை எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்பதிலேயே ஏகப்பட்ட குழப்பங்கள்! ஒரு பாட்டாகவே கேட்டீர்களா? அதற்கு இங்கே என்ன சொல்கிறார்கள் என்று பாருங்கள்!  

ஃபிரான்ஸ் ஓபன்ஹீமர்  என்பவர் இப்படிச் சொல்கிறார்:  

"அரசு என்பது அடிமைத்தனத்துக்கும் சுதந்திரத்துக்கும் முறைதவறிப் பிறந்த ஒரு அமைப்பு."

"Franz Oppenheimer argues that the state is a "vehicle of capitalism" and "the bastard offspring of slavery and freedom. He states that "the great task before us is to get rid of the remaining traces of slavery and bring full freedom into being."  


வாக்குச்சீட்டுக்குப் பதிலாக மின்னணு வாக்கு இயந்திரம் பயன்படுத்த ஆரம்பித்த நாட்களிலிருந்தே சர்ச்சைகள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன. EVM களில் தகிடுதத்தம் செய்ய முடியுமா என்பதை ஒரு சவாலாகவே தேர்தல் ஆணையம் முன்வைத்தது. வந்து நிரூபித்துக் காட்டுங்கள் என்று சொன்னபோது, பம்மிப் பின்வாங்கின கதை நினைவுக்கு வருகிறதா?

நேற்று முன்தினம் லண்டனில் மீண்டும் முயற்சித்துப் பார்த்திருக்கிறார் ஒருவர்! காங்கிரசின் காசுக்கார வக்கீல் கபில் சிபல் முன்னிலையில் என்பது விசேஷம்!  Self-declared EVM hacker Syed Shuja was given asylum in the US in March 2018, according to documents released by the Indian Journalists Association (IJA), Europe, which organised his news conference in London on Monday. என்று ஆரம்பிக்கிறது எகனாமிக் டைம்ஸ் செய்தி இன்னொரு செய்தி இங்கே   அந்த ஆசாமி ECIL இல் வேலை செய்ததோ அவருடைய டீம் ஆசாமிகள் கொல்லப் பட்டார்கள் என்ற செய்தியோ உண்மையில்லை என அம்பலப்படுத்தி இருக்கிறார்கள். 

It was billed as a live demonstration of how India’s Electronic Voting Machines could be hacked. But a day after the event in London on Monday at which a masked man claiming to be a cyber expert alleged that EVMs could be manipulated, the organisers of the event distanced themselves from it.
“The speaker at yesterday’s event did not follow up his claims with any proof,” said Deborah Bonetti of the Foreign Press Association, which organised the event along with the Indian Journalists’ Association. “He was not credible and should not have been given a platform.” என்று பொய்கள் அம்பலப்பட்டுப் போன கதையைச் சொல்வது இங்கே
அம்பாரம் அம்பாரமாக பூ சுற்ற இப்படி வந்துகொண்டேதான் இருப்பார்கள்! காது பத்திரம்! என்ன நாஞ்சொல்றது?!! 
   

2 comments:

  1. முதல் காணொளியில் பேசுபவர் "விளா"வில் என்றும் (அது கூட விளா இல்லை, வ்ளா!) சங்கமித்ததா"ள் " லயோளா கல்லூரி ன்று கொலை செய்கிறார்!

    ReplyDelete
    Replies
    1. ஸ்ரீராம்! நீங்க வீடியோவைப் பாத்துட்டீங்கன்னு ஒப்புக் கொள்கிறேன்! ஆனால் பதிவில் என்ன சொல்லவந்தேன் என்பது எனக்கே மறந்து விடுகிறமாதிரி அந்த *ளா* வுக்கு அத்தனை அழுத்தம் தேவைதானா? :))

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!