தொலைக்காட்சி விவாதங்கள்! யாருடைய முகம் தெரிகிறது?

எங்கள்Blog ஸ்ரீராமுக்கும் எனக்கும் இங்கே நடந்த பின்னூட்டத் தகவல் பரிமாற்றம்!அவருக்கு நீண்ட நேர வீடியோ இணைப்புக்கள் என்றால் ஏகத்துக்கும் அலெர்ஜி என்பதை நினைவில் வைத்துக் கொண்டு உரையாடலைக் கவனியுங்கள்! அதற்கு முன்னதாக அங்கே நான் சுட்டிக் காட்டியிருந்த விவாதத்தின் வீடியோ, தவிர்ப்பதில் எதையெல்லாம் இழக்கிறோம்?
முழுதாகப் பார்க்க சோம்பலாக இருந்தால் 41 வது நிமிடத்திலிருந்து சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகம் என்ன சொல்கிறார் என்பதையாவது கவனியுங்கள்!

ஒன்றரை மணிநேரமா? அடேங்கப்பா... நான் தொலைக்காட்சிகளில் மிகவும் வேகமாக தாண்டிச்செல்வது இதுபோன்ற டாக் ஷோக்கள்!!

நேற்றைய (அல்லது அதற்கு முதல் நாளோ?) ஹிந்து தமிழில் இது சம்பந்தமாக ஒரு நடுப்பக்கக் கட்டுரை வந்திருந்ததே, கவனித்தீர்களோ?
ReplyDelete
Replies
  1. தமிழில் தொலைகாட்சி விவாதங்கள் இன்னமும் சரியான பக்குவத்துக்கு வரவில்லை என்பது உண்மைதான்! அதற்காக அவைகளைக் கடந்தும் போய்விட முடியாது ஸ்ரீராம்! கழுதைகளுக்கு வெள்ளிமூக்கு முளைத்து இவை குதிரையில்லை என்று ஒவ்வொரு அரசியல்கட்சியின் யோக்கியதையையும் தோலுரிக்கிறமாதிரி, நேற்றிரவு நியூஸ் 7 கேள்விநேரம் நிகழ்ச்சி இருந்தது. அந்த தமாஷாவையும் சேர்த்தே கடந்து போய்விடுகிறீர்கள்!

    சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தின் செந்தில் ஆறுமுகம் எப்படி இரண்டுகழகங்களும் ஒன்று மாற்றி ஒன்று வாக்குவங்கியைக் குறிவைத்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்களைக் கொழுக்க வைத்தன, நிதிநிலைமை எப்படி மோசமானது என்பதை நன்றாகவே தோலுரித்தார்.

    ஹிந்து நடுப்பக்கக் கட்டுரை? இல்லை, பார்க்கிறேன்.

இதுமாதிரி விவாதங்களில் வெளிப்படுவது யாருடைய முகம்? யாருடைய குரல்? எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா? மேலே விவாதத்துக்குத்  தலைப்பு, அரசு ஊழியர்களை பகடைக்காயாக ஆக்குகிறார்களா அரசியல்வாதிகள்? ஆனால் கள யதார்த்தம் என்ன? அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும், அரசியல்வாதிகளுடன் சேர்ந்து கொண்டு கூட்டுக் களவாணிகளாக இருப்பதை ஏன் பேசத் தயங்குகிறார்கள்?

முதலில் ஒரு அரசின் வருமானம் என்பது பெரும்பாலும்  வரிவருவாய் மட்டுமே! அதை ஊழியர்கள் சம்பளம், பென்ஷன் இத்தியாதிகளுக்கே முழுவதும்  செலவிட வேண்டுமென்றால் அரசு என்பது ஜனங்களுக்கானதா? அரசு ஊழியர்களுக்கு அள்ளி இறைப்பதற்கு மட்டுமே ஆனதா? இந்த கேள்விக்கு பதில் சொல்ல யாராவது தயாராக இருக்கிறார்களா?

ஜனங்களுடைய பிரச்சினையை ஒதுக்கி வைத்து விட்டு, இப்படி ஏற்கெனெவே கொழுத்திருக்கும்  பெருச்சாளிகளை மேலும் மேலும் கொழுக்க விடுவது எங்கே போய் முடியும் என்று யோசிப்பதற்கு,யாராவது தயாராக இருக்கிறார்களா?

இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சு பொ அகத்திய லிங்கத்தின் கண்டுபிடிப்பு! அல்லது கண்ணாடியில் பார்க்க முடிகிற கம்யூனிஸ்டுகளின் முகம்! கண்ணாடி உண்மையான முகத்தைத்தான் காட்டுகிறதா?

மார்க்சீய மெய்ஞானம் கீனீஷியன் பொருளாதாரம் சொல்கிற கடன் வாங்கி வளர்ச்சி என்பதைப் பற்றி புரிந்துகொள்ளாமல் பேசுவது இயற்கைதான்! இங்கே இப்படிப் பேசுகிறவர்கள் கடன் வாங்கியாவது அரசு ஊழியர்களுக்கு அள்ளியிறை என்று குதிப்பதில். விவாதங்களில் தெரிகிற முகம் எது? எதுவாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும்! எனக்கென்ன வந்தது என்று ஒதுங்கியோ, அல்லது  

#கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லும் ‘#தமிழ்’ #ஊடகங்கள்! #TamilTV #TVMedia

பிறந்த குழந்தைக்குக் கள்ளிப்பாலைக் கொடுத்துக் கொல்லும் செயலைத்தான் இங்கிருக்கும் ஊடகங்கள் செய்து கொண்டிருக்கின்றன என்பதை – நீண்ட நாட்களுக்குப் பிறகு சில மணி நேரம் இன்று தமிழ் செய்தித் தொலைக்காட்சிகளைப் பார்த்துப் புரிந்து கொண்டேன் –
கள்ளிப்பால் கொடுத்துக் கொல்லும் ‘தமிழ்’ ஊடகங்கள்! - தினசரி

என்று அலுத்துக் கொள்ளவோ வேண்டாம்! செய்திகள், விவாதங்களில்,அவைகளின் வேர் எங்கே இருக்கிறது என்று பார்க்கத் தெரிந்துகொண்டாலே போதும்! அட! இதை முன்னாடியே ரங்கராஜ் பாண்டே சரியாகத்தான் சொல்லி இருக்கிறார்!      


                    

4 comments:

  1. சீமான் சொல்லி இருப்பது போல, அவங்க பக்கத்திலிருந்து பாருங்க அது நியாயமா தெரியும்.... இவங்க பக்கத்திலிருந்து பாருங்க இது நியாயமா தெரியும்...!

    அப்படிதான் இருக்கிறது இந்தப் போராட்டங்களும் அரசின் நிலைப்பாடுகளும்! எம் எல் எம் ஏ சம்பளத்தை எதற்காக உயர்த்தினார்களாம் என்கிற கேள்விக்கும் பதில் சொன்னார் அவர்.

    ReplyDelete
    Replies
    1. எதிரும் புதிருமான நிலைகளைத் தொட்டு இங்கே சொல்ல வந்தது, இங்கேயும் அங்கேயுமாக இருந்து பார்த்தால் குழப்பம் தான் மிஞ்சும்! சீமான் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. அவரவர் இருக்கிற இடத்தில் இருந்தே, இப்படி முரண்படும் விஷயங்களின் வேர் எங்கே இருக்கிறது என்று பார்க்கப் பழகினால் போதும் ஸ்ரீராம்!

      அகத்தியலிங்கம் 82லட்சம் கோடி ரூபாய் கடன் என்று பதைபதைக்கிறார். கீழேயே மாரிதாஸ் கடன் வாங்கி வளர்ச்சித் திட்டங்கள் நடக்கிறதே என்று பொருளாதாரத்தைக் கொஞ்சம் எளிமையாக விளக்குகிறார் இல்லையா? இரண்டையும் உங்கள் நிலையிலிருந்து பார்க்கப்பழகி என்ன தோன்றுகிறது என்று சொல்ல வேண்டாமா? கேட்கிறவன் கேணையனாக இருந்தால் கேப்பையில் கூட நெய்வடியும் என்று சும்மாவா சொன்னார்கள் ?

      Delete
  2. //இதுமாதிரி விவாதங்களில் வெளிப்படுவது யாருடைய முகம்? யாருடைய குரல்? எப்போதாவது யோசித்துப் பார்த்திருக்கிறோமா? //


    அவரவர்களுடைய ஈகோ சாடிஸ்பேக்ஷன்.. அவ்வளவுதான்!கையை காலை ஆட்டி தான் சொல்வது சரி அல்லது தான் சொல்வதுதான் சரி என்று வாதிடவேண்டும். அடிதடி வாக்குவாதம் நடந்தால் நல்லது டி ஆர் பி ஏறும்!

    ReplyDelete
    Replies
    1. டி ஆர் பி ரேட்டிங் என்பதையும் தாண்டி இங்கே ஒவ்வொரு ஊடகத்துக்கும் ஒரு பிரத்தியேகமான அரசியல், அஜெண்டா இருக்கிறது ஸ்ரீராம்! ஒவ்வொருவரும் ஒரு கலர்க்கண்ணாடியை பார்ப்பவர்களுக்கும் மாட்டிவிட முயற்சிக்கிறார்கள் என்பதும் கூட ஒரு வகையில் உண்மைதானென்றாலும் அலுப்போடு கடந்துபோய்விட முடியாது என்பதையும் நான் மதிக்கிற செங்கோட்டை ஸ்ரீராம் தலைச் செய்தியையும் தொடுப்புடன் சொல்லியிருந்தேனே!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!