இட ஒதுக்கீடு! தொடர் அறிவிப்புகள்! தொடரும் விவாதங்கள்!

த.நா வெர்ஷன் சமூகநீதி a.k.a  இட ஒதுக்கீடு, சம நீதி என்று (சு)வாசிக்கப்போறேங்க தளத்தில் தொடரும் விவாதங்களாக சில பகிர்வுகளை பார்த்திருக்கிறோம்! 


மாத்ருபூமி சேனலில் நான்கு நாட்களுக்கு முன் இந்த 124 வது திருத்தம் குறித்த விவாதம் இது. கொஞ்சம் கவனித்துக் கேட்டால் மலையாள விவாதத்தைப் புரிந்து கொள்வது கடினமில்லை என்று நினைக்கிறேன்.  

பிஜேபி அரசு அடுத்தடுத்து சில அதிரடியான திருத்தங்களை அறிவித்து வருகிறது. இவை எதிர் வரும்  தேர்தலை மனதில் வைத்துச் செய்யப்படுபவை என்ற ஒற்றைவரியில் எதிர்க்கட்சிகள் நிராகரித்துவிட முடியாதபடி, இந்தத் திருத்தங்கள் வருவது பற்றியும் பேச வேண்டாமா?   

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியா முழுவதும் உள்ள தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது. இதற்கான வரைவுச் சட்டம் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், விரைவில் இந்தச் சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. தனியார் உயர்கல்வி நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டால், அது சமூக நீதி வரலாற்றில் முக்கிய மைல்கல்லாக அமையும்" என வரவேற்றுப் பேசியிருக்கிறார்.இப்படி அடுத்தடுத்து வரும் மாற்றங்கள், செய்திகளை முன்வைத்து தந்திடிவியில் நேற்று ஆயுத எழுத்து விவாதம் இருந்தது. சாமானியன் குரலாக ஒலித்த ரமேஷும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி இரா. முருகனும் மோதிக்கொண்டதில் கூட ஒரு கண்ணியம் இருந்தது.

இங்கே பிபிசி தமிழில் இரா.மன்னர்மன்னன்  தமிழக அரசியல்கட்சிகள் பேசுவதை அப்படியே எதிரொலித்து! 


#வாக்குவங்கி பற்றி இங்கே நிறைய கட்டுக்கதைகள் உண்டு. ஒவ்வொருகட்சியும் தங்களுடைய கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை இத்தனை கோடி, லட்சம் என்று கதைப்பதுண்டு
.
தேர்தலில் அந்தக்கட்சி வாங்குகிற ஓட்டுக்களும் உறுப்பினர் எண்ணிக்கையும் tally ஆகி எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?


இந்தக்கட்சிக்கு #வாக்குவங்கி இவ்வளவு என்று உறுதியாகச் சொல்ல முடியாமல் நிறைய #தப்புக்கணக்கு வருவது ஏனென்று புரிந்து கொள்ள உதவுகிற செய்திக் கட்டுரை.
#உபி.,யில் #பாஜக.,வுக்கு #வெற்றிக்கனி யைப் பரிசளிக்கிறார் #மாயாவதி!
உத்தர பிரதேசத்தில் பிஜேபிக்கு மாபெரும் வெற்றியை அளிக்கிறார் மாயாவதி- வருகின்ற லோக்சபா தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பிஜேபி யை வீழ்த்த அகிலேஷ் யாதவும் மாயாவதியும் கூட்டணி அமைத்துள்ளார்கள்.


2019 தேர்தல் சுருக்கம்:
சோனியா #குடும்பம்
கருணாநிதி #குடும்பம்
முலாயம் #குடும்பம்
லாலு பிரசாத் யாதவ் #குடும்பம்
பிஜு பட்நாயக் #குடும்பம்
ஜெகன் மோகன் ரெட்டி #குடும்பம்
தேவ கெளடா #குடும்பம்
சந்திரபாபு நாயுடு #குடும்பம்
சந்திரசேகர் ராவ் #குடும்பம்
சரத் பவார் #குடும்பம்
பரூக் அப்துல்லா #குடும்பம்
மெஹ்பூபா முப்தி சயீது #குடும்பம்
VS
#நரேந்திரமோடி

இப்படி பொன்மாலைப்பொழுது மாணிக்கம் தனது மனக்கிடக்கையை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வாக்காளர்கள் மனதில் என்ன இருந்தது என்பது முடிவுகள் வெளியான பிறகுதானே தெரியவரும்?!2 comments:

 1. இந்தியத் தேர்தல் என்றாலே 'ஜாதிகள் இருக்குதடி, பாப்பா' தான்.

  ReplyDelete
  Replies
  1. நூற்றுக்கு நூறு சரி ஜீவி சார்! , இந்த நிலை மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்ன செய்திருக்கிறோம்?
   என்று கேள்விகள் எழுகிறதே, அதற்கு என்ன சொல்லப்போகிறோம்?

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!