சண்டேன்னா மூணு! மோடி! மோடி எதிர்ப்பு! மோடி வெறுப்பு!

நேற்றைக்கு கொல்கத்தாவில் மம்தா பானெர்ஜி மோடி மீது பயம், மோடிக்கு எதிர்ப்பு, மோடி வெறுப்பு என்கிற புள்ளிகளில் வினோதமான சர்க்கஸ் ஒன்றைப் பேரணியாக நடத்தி முடித்திருக்கிறார். புலிக்குப் பயந்தவர்கள் எல்லோரும் என்மேல் விழுந்து படுத்துக் கொள்ளுங்கள் என்ற கதையாக மோடிக்கு பயந்தவர்கள் எல்லோரும் கூடிக்கலைந்த கூட்டம் மட்டுமே அது என்பது சிதம்பர ரகசியமாக பொதுவெளியில் வெளிப்பட்டது.


பிஜேபியின் எஸ் ஆர் சேகர், இந்தக் கூட்டத்தில் தி.மு. கழகத்தின் இசுடாலின் உளறிக் கொட்டியதை எடுத்துச் சொல்வதோடு தொடங்கும் விவாதத்தைக் கொஞ்சம் பாருங்கள்! திமுகவின் சபாபதி மோகன் மோடியைப் பொது எதிரி என்கிறார்! எப்படிப் பொது எதிரியானார் என்பதை அவரோ கூட்டாளிகளோ சொல்லவில்லை என்றாலும், மோடி மீதான பயமே, மோடி மீது வெறுப்பு, மோடிக்கு எதிர்ப்பு என்றாகியிருப்பது புலப்படுகிறது. 

மூன்றாவது அணிக்கு வாய்ப்பில்லை என்று சொல்லிக் கொண்டே, ஒவ்வொரு மாநிலக்கட்சியும் தங்களுடைய இருப்பை மட்டுமே முன்னிறுத்திச் செயல்படுகின்றன என்பது மறுபடியும் கொல்கத்தாவில் வெளிப்பட்டதாக எடுத்துக் கொள்ள முடியுமா?  

இந்தக் கூட்டம், கூட்டாட்சிக்கான அச்சாரமா? தேய்ந்து வரும் மாநிலக்கட்சிகள் தங்கள் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காகத்  தவிப்பதன் வெளிப்பாடா?
மோடிக்கெதிரான கொல்கத்தா பேரணி!   ஒற்றுமை நீடிக்குமா? முரண்பாடுகள் வெடிக்குமா என்ற விவாதம் இங்கே! இன்னும் self எடுக்கவில்லை momentum reach ஆகவில்லை என்கிறார் திமுகவின் வசந்தி ஸ்டாலின்.   


இந்த விவாதத்தில் மாலன் சொல்கிற ஒரு விஷயம் மிக முக்கியமானது.தேசீயக் கட்சிகளுக்கும் மாநிலக் கட்சிகளுக்கும் இடையிலான போட்டியாக 1990 க்குப் பின்னால் மாறிய அரசியல் சூழ்நிலை! எத்தனைபேர் புரிந்து கொண்டு பார்த்தார்கள் என்பதைக் கணிக்க முடியவில்லை! 


கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியை சலீம் நடத்தியதில் பார்வையாளர்களுக்கு அவ்வளவாக ஈர்ப்பில்லையோ? நேற்று H ராஜாவுடன் நேர்காணல் நடத்த ஹரிஹரன் மறுபடியும் வந்துவிட்டார். 10% பொருளாதார அடிப்படையிலான ஒதுக்கீடு பற்றிய கேள்விகள் இங்கே கழகங்கள் திரும்பத்திரும்பச் சொல்லிக் கொண்டே இருப்பது தான்! என்ன பெரிய வித்தியாசமென்றால் ஹரிஹரன் சிரித்துக் கொண்டே கேள்வி கேட்கிறார்! 

ஏன்கா, நீயெல்லாம் பிரதமர் ஆக முடியுமா?

ஏன், நீ மட்டும் ஆயிடுவயா என்ன?

Photo
கொஞ்சம் யோசித்துப் பார்த்து மறுமொழி ஒன்று தாருங்களேன்! 


5 comments:

  1. மோடியை ஜெயிக்க முடியாது என்கிற பயம் இவர்களுக்கெல்லாம் இருக்கிறது. சுடாலின் அங்கே போய் வங்காள மொழி பேசியதாகச் சொல்கிறார்கள், என்ன பேசினாரா... ராகுலை எப்படி பிரதமராக முன்மொழிந்தீர்கள் என்று அவரை யாரும் அங்கு கேட்கவில்லை போலும்! இவருக்கும் அது மறந்திருக்கும்!

    ReplyDelete
  2. ராகுல் : இவர் என்னை சென்னையில் பிரதமராக வழிமொழிந்தார் தீதி...

    தீதி : அதனால என்னப்பா... இங்க அதெல்லாம் பேசறாரான்னு மட்டும் பாரு!

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும். முன்மொழிந்தார் என்றிருந்திருக்க வேண்டும்!

      Delete
  3. ஏன்கா நீயெல்லாம்... சிரிப்பு பொத்துக் கொண்டு வந்தது.

    தீதி இப்படி முக்கியப்படுத்தப் பட்டால் மூன்றாவது அணியில் இடதுசாரி முக்கியஸ்தர்களின் நிலை என்னவாகும் என்பதைய்ம் காலத்தின் அறிவுறுத்தலாக விட்டு விடலாம்.

    ReplyDelete
    Replies
    1. மம்தா பலம்பெறுவதற்கு அணைபோடவேண்டுமென்றால் காங்கிரசோடு கூட்டு வேண்டும் என்கிற நிலையை மார்க்சிஸ்டுகளின் மேற்குவங்கக் கிளை எடுத்தது. கேரள சேட்டன்கள் தடா போட்டுவிட்டார்கள்! மேற்கு வங்கத்திலும் திரிபுராவிலும் மார்க்சிஸ்ட் கட்சி கரைந்து வருகிறது. முக்கியஸ்தர்கள் கையைப்பிசைந்து நிற்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!