இன்னொரு குஜ்ரால் or தேவே கவுடா? என்ன சொல்கிறார் ரகுராம் ராஜன்?
என்று இங்கே நேற்று எழுதியதில் பின்னூட்ட விவாதம்! நீங்களும் கூட இணைப்பில் போய் விவாதத்தைத் தொடரலாம்!-
- ஊழலுக்கு கைகொடுப்போம்... வழக்கிலிருந்து தப்பிக்கக் குரல் கொடுப்போம் என்று சொல்லலாம்!ReplyDelete
ரகுராம் ராஜன் சொல்லி இருப்பது "சில சமயங்களில் சில உண்மைகளை மறைக்க முடியாது" என்று சொல்லலாம்.! - முதல் படத்தைப் பார்த்தவுடனேயே, கோவிந்தசாமி, மதியழகன், அண்ணா என்று அமர்ந்திருப்பவர்களிடம் பார்வை தாவியது. அதுவும் மதியழகன் என்றால் அந்த நாள் சட்டசபை கலவர ஞாபகம் தான் நினைவுகளில் படிகிறது.ReplyDelete
எக்காலத்தும் வலிமையான தனித்த பெரும்பான்மை கொண்ட நடுவண் அரசு அமைவது தான் நாட்டுக்கு நல்லது. கொள்கை முடிவுகளை எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் தீர்மானமாக எடுக்க முடியும்.
வெகுஜன மக்களுக்கு ஆதரவாகக் கொள்கைகளை வகுத்துக் கொண்டால் சரித்திரத்தில் இடம் பெறுகிற உன்னதம் கிடைக்கும். 5 ஆண்டுகளுக்கு நிலையான ஆட்சி அடுத்துத் தொடர்வதற்குக் கூட இட்டுச் செல்லும்.
அப்படித் தனித்த பெரும்பான்மை கிடைத்தாலும் ஏதாவது காரணங்களுக்காக நெருங்கிய கட்சிகள் என்று வேண்டப்பட்டவர்களாய் சிலருடன் ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதும் சில சங்கடங்களை விளைவிக்கும். தனித்த பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால் ஆட்சி அமைப்பதைப் பற்றி நினைத்துக் கூடப் பார்க்காத அதே நேரத்தில் மக்கள் பணிகளில் கவனம் செலுத்துகிற 'புனிதக் கட்சிகள்' இந்த நாட்டில்
தழைத்தோங்கினால் நாட்டுக்கு நல்லது. குறிப்பிட்ட அப்படியான கட்சிகளின் அசைக்க முடியாத எதிர்கால பலத்திற்கும் வழி கோலும்.உங்களுடைய பதில் இந்த விவாதத்தை எப்படி முன்னெடுத்துச் செல்லப் போகிறது என்பதைத் தெரிந்துகொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்!
கருத்துக்கணிப்புகள் ஆரம்பம்! தேர்தல் களம் ரெடியாகிறது!
4 comments:
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!
Subscribe to:
Post Comments (Atom)
என் பதில் கொஞ்சம் சம்பந்தமில்லாமல் இருக்கும்!
ReplyDeleteசில கட்சிகளுக்கு வேறு வழி இல்லாமல் வாக்களித்திருக்கிறேன். ஆனால் என்ன செய்தாலும் வாக்களிக்க மாட்டேன் என்று நான் நினைக்கும் கட்சியும் உண்டு!
சம்பந்தமில்லாததை புரிந்துகொள்கிறேன் ஸ்ரீராம்!
Deleteஇன்னார் வரவேண்டுமென்று விரும்பி வாக்களிப்பது ஒருவிதம்! அன்னார் வந்துவிடக்கூடாதென்று வாக்களிப்பது இன்னொரு விதம்!
மேலே உள்ள படத்தைப் பார்த்தால் ஏதோ அந்நாளைய லாட்டரி டிக்கெட் கடையின் முகப்பு மாதிரி இருக்கிறது! தேர்தல் கூட இந்நாளைய லாட்டரி தானோ?..
ReplyDeletePaid News காசுக்கு கூவுகிற ஊடகங்கள் கிட்டத்தட்ட லாட்டரிச் சீட்டுக்கடை மாதிரித்தான் display செய்கிறார்கள் ஜீவி சார்! அந்த நிகழ்ச்சியின் வீடியோவைப் போட்டிருக்கலாம் என்றால் பரக்கத் சோம்பல்படுகிறவர்கள் எண்ணிக்கைதான் இங்கே அதிகம் என்று படத்தைப் போட்டாலும் கேள்வி இப்படி வருகிறதே! :))
Delete