தி.மு.கழகத் தலீவர் என்று ஆனபின்னாலும் ஸ்டாலின் செயல்பாடுகளில் வேகமுமில்லை, விவேகமுமில்லை என்பதுதான் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறதோ?
ஏற்கெனெவே கமல்ஹாசன் நடத்தி முடித்துவிட்ட கிராமசபை கூட்டங்களை, இப்போது நகலெடுத்து நடத்திக் கொண்டிருப்பது, என்ன சாதித்திருக்கிறது?
செயலு என்றைக்கும் முதலு ஆக முடியாது..
என்று பாட்டே எழுதிவிட்டார்! அதற்கேற்ற மாதிரியே
என்று இசுடாலின் தினகரனைச் சீண்டிவிட தினகரன் பதிலுக்கு நக்கலும் நையாண்டியுமாக பதில் சொல்லி இருக்கிறார்.
இனி, தி.மு.க-வில் ஸ்டாலின் கை ஓங்க வாய்ப்பு உள்ளதா?
முதலில், தி.மு.க-வின் கை ஓங்க வாய்ப்பு உள்ளதா என்று பாருங்கள். அதன் பிறகுதான் ஸ்டாலின்!
இப்போதும் அப்பாவின் முதுகுக்குப் பின்னால் ஒளிந்துகொள்ளும் சங்கோஜப் பிள்ளையாகவே ஸ்டாலின் இருந்தால்... அவர் எப்போது தான் தளபதி ஆவது? எந்தப் பிரச்னையிலும் தன் சொந்தக் கருத்தை ஸ்டாலின் சொல்லியது இல்லை. அறிமுகம் இருப்பவர் களை பார்த்துக்கூட சிரிக்கத் தயங்குகிறார். இயக்கப் பொறுப்பாளர்களை உட்காரவைத்து இது வரை எந்த யோசனையும் கேட்டதும் இல்லை. மாஜி மந்திரிகளுக்கு, மாவட்டச் செயலாளர்களுக்கு, யார் எல்லாம் எதிர் கோஷ்டியோ... அவர்களைத் தன்னுடைய எதிர் கோஷ்டியாக நினைக்கிறார்.
இத்தனை மனோபாவங்களையும் மாற்றிக்கொண்டால்தான், ஸ்டாலின் கை ஓங்கும். இல்லாவிட்டால்...
இப்படிச் சொல்லியிருந்தது இன்றைக்கும் மாறவில்லை என்பது கழகத்தின் சோகம்!
*******
கழகங்களைப் பற்றிப்பேசி வீண்பொழுதுபோக்கவோ வலையெழுத்தில் வந்தது? காக்கைப்பொன்னையே மினுமினுப்பாகக் காட்டியே அசல் பொன்னை மறைத்து விட்டார்களே என்கிற ஆதங்கம், கொதிப்பு அன்றி வேறு இல்லை.
இன்று லால்பகதூர் சாஸ்திரி நினைவுதினம்.
காங்கிரஸ் கட்சியின் வரலாறே, ஆளுபவரோடு இசைந்து போய்க் கொஞ்சம் சலுகைகளைக் கூட்டிக் கொடுக்க முடியுமா என்று பவ்யமாகப் பணிந்து கேட்கும் மிதவாதத்தினரால் நிரப்ப பட்டது தான்!
1937 களில் இந்தப் போக்கிற்கு நேருவின் தந்தை மோதிலால் நேருவே முன்னணியில் இருந்து நடத்தியதும், காந்தி சிறையில் இருக்கும்போதே இவர் தன்போக்கிற்குப் பதவியைத் தேடி ஓடியதும் இங்கே நிறையப் பேருக்குத் தெரியாத தியாக வரலாறு!
காங்கிரசில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே, சுதந்திரத்தைப் பற்றிப் பேசினார்கள், அப்படிப்பட்ட சிலருமே,கண்முன்னால் இருந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல், வெவ்வேறு வழிகளில் பயணப்பட்டுக் காணாமலும் போனார்கள்.
காங்கிரசின் பழைய வரலாறு, முரண்பாடுகளின் மொத்த உருவம். அத்தனை கோளாறுகளையும் மீறி, காந்தி என்றொரு ஆளுமை, ஜனங்கள் அவர் சொன்னதை அப்படியே கேட்டு நடந்த விந்தை தான், காங்கிரசை இன்றைக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சியாகச் சொல்லிப் பெருமிதப் பட்டுக் கொள்ள முடிகிறது. ஆனால், சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வழிநடத்தும் தலைவர்கள் கிடைத்தார்களா என்று பார்த்தால், காந்தியை மறந்த காங்கிரஸ் ஜீரோவாகி நிற்கிறது.
இசுடாலினுக்கு இவ்வளவு முக்கியத்துவம் தரவேண்டாமே... பாவம் அவர் எ தி பி தெ என்று அலைந்து கொண்டிருக்கிறார். எனக்கு தினகரனைக் கண்டாலே ஆகாது!!!
ReplyDeleteவாருங்கள் ஸ்ரீராம்! இசுடாலினுக்கு முக்கியத்துவம்? காக்கைப்பொன்னையே தூக்கிவைத்துத் தமிழ்நாட்டில் கொண்டாடவும் ஒரு கூட்டம் இருக்கிறதே ., சாஸ்திரி மாதிரியானவர்களை ஆளில்லையே என்கிற கோபம். அவ்வளவுதான்!
ReplyDeleteதினகரன் மட்டுமில்லை, எனக்கு அரசியலில் எந்தக் கழகத்தையும் பிடிக்காது! ஆனால் கழகங்களுக்குள்ளேயே நடக்கும் முட்டல் மோதல்களை ரசிக்காமல் இருக்க முடியுமா?