நெஞ்சில் உரமும், நேர்மைத் திறமும் கொண்ட ஒரு தலைவன் தேவை!



இன்று காந்தி ஜெயந்தி! மகாத்மா காந்தியின்  141 ஆவது பிறந்த நாள்! அரசு விடுமுறை, பேரளவுக்கு தில்லியிலும் வேறு சில இடங்களிலும் தலைவர்கள் காந்தி படத்துக்கு மாலை சூட்டுவார்கள். தூர் தர்ஷனில் சில வயதான பெரியவர்கள் ராட்டையில் நூல் நூற்பதைக் காட்டுவார்கள்,தேசத்தந்தை என்றழைக்கப்படுகிறவருக்கு அஞ்சலி செய்கிற கடமை முடிந்தது!

இந்த நாள் காந்தி பிறந்த நாள் மட்டுமில்லை, அவருக்கு முப்பத்தைந்து வருடங்களுக்குப் பின் பிறகு பிறந்த இன்னொரு மகத்தான மனிதரின் பிறந்த நாளும் கூட!

இந்திய வரைபடத்தைக் கொஞ்சம் உற்றுப் பார்த்தால், சுற்றிலும் இந்தியாவைத் தங்கள் எதிரியாகவே கருதும் நாடுகளால் சூழப் பட்டிருப்பதைக் காண முடியும்

பாகிஸ்தான்
வங்காள தேசம்பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர்ஆப்கானிஸ்தான்,மியான்மார் என்று தற்போது அழைக்கப் படும் பர்மாஇலங்கை,நேபாளம்இந்த நாடுகள் அனைத்துமே தோற்றுப் போன அரசு அமைப்புக்கள்அல்லது ரவுடிஅரசுகளாக  (Rogue States) இருப்பதைப் பார்க்க முடியும். ரவுடிகள் சுற்றியிருந்தால் நிம்மதி ஏது? முன்னேற்றம் தானேது?

இயல்பாகவே இந்தியாவோடு விரோதம் பாராட்டி வரும் இந்த நாடுகளில்
திட்டமிட்டு இந்திய இறையாண்மைக்கு எதிரான சதிகளைபாகிஸ்தானும்,சீனாவும் தூண்டிவிட்டுக் கொண்டு இருப்பதைசெய்தித் தாட்களை வழக்கமாகப் படிக்கும் ஒரு சிறுவன் கூட சொல்லிவிட முடியும். இந்த விரோதத்திற்கு வெளிப்படையான காரணங்களை விட இந்தியா வளர்வதும் வலிமையாக இருப்பதும் தங்களுக்கு ஆபத்து என்ற ஒரே காரணம் தான் முக்கியமானது.

ஆனால், ஒரு சிறுவனுக்குத் தெரிகிற அளவு கூட நமது அரசியல் வாதிகளுக்கு இவை புரிவதில்லை. அவர்களுக்குத் தங்கள் சொந்தக் கல்லாவைப் பெருக்கிக் கொள்வதற்கே நேரம் சரியாக இருக்கிறது.
வெளியில் இருந்து வருகிற இந்த விரோதிகளை விட, உள்ளிருந்தே அரிக்கும் வியாதிகளாக இங்கே உள்ள அரசியல் முறை, ஊழல் நிர்வாகம் இருக்கிறது. நேரு காலத்தில் முந்த்ரா ஊழல் என்று தொடங்கி இன்றைக்கு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் எழுபதாயிரம் கோடி செலவு செய்வதில் பெரும் ஊழல் என்ற அளவுக்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது.



அதிகாரிகளுக்கோ, அமைச்சர்களுக்குக் காசுபார்த்துக் கொடுக்கும் சாக்கில், தங்களுடைய பைகளையும் நிரப்பிக் கொள்ளவே நேரம் போதவில்லை. இந்தியக் குடிமகனுக்கோ, எதை எடுத்தாலும் அரசு அல்லது ஒரு தலைவன் தான் வந்து செய்ய வேண்டும்! தானே தனக்காகச் செய்து கொள்கிற சாமர்த்தியம் இன்னமும் வராத நிலையில் தான் சராசரி இந்தியக் குடிமகன் இருக்கிறான் என்றுதான் தோன்றுகிறது.

அற்பப்புழு மீதுள்ள ஆசையால் தூண்டிலில் சிக்கிக் கொள்கிற மீன் மாதிரி, இலவசங்களைக் காட்டி ஏமாற்றுகிற தலைவர்களை
இந்தியக் குடிமகன்கள் நம்புகிறார்கள் என்று சொல்லிவிட முடியாது, ஆனால் அந்த மோசடிக் காரர்களை யாரோ ஒரு ஹீரோ அல்லது வேறொரு தலைவர் வந்து தான் தட்டிக் கேட்கவேண்டும், தாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை என்கிற மாதிரி, பொழுது தவறாமல் மானாட, மயிலாட, சினிமாக் காரிகள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்த்துக் கொண்டு மிச்சமிருப்பதையும் தொலைத்துக் கொண்டு இருக்கிறார்கள். 

அறுபது வருடங்களுக்கு முன்னால்
விடுதலை பெற்ற இந்த நாடுகள்பிரதேச ஆதிக்கப் போட்டியில் எவ்வளவு மோசமான எதிரிகளாக மாறிப் போயின என்பதையும்ஒவ்வொரு நாட்டின் பொருளாதார வளர்ச்சியையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பார்க்கும் போது தான்எவ்வளவு ஆபத்தான சூழலில் நாம் இருக்கிறோம் என்பது புரியும்

பிரிட்டன் தனது காலனி ஆதிக்கத்தை விட வேண்டிய நிர்பந்தம் வந்தபோதுஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு குட்டையைக் குழப்ப முடியுமோ அந்த அளவுக்குக் குழப்பி விட்டு
இருக்கிறவர்கள் அடித்துக் கொண்டு சாகட்டும் என்று குள்ளநரித் தனமாக வெளியேறியது என்பதையும்

இரண்டு உலகப் போர்கள்
,அதன் பின்னால்ஆங்கிலேயர்களுடைய மவுசு காலிப் பெருங்காய டப்பா என்ற அளவுக்கே சுருங்கிப்போன நிலையில்புதிய வில்லனாக அமெரிக்கா சர்வ தேச நிகழ்வு ஒவ்வொன்றிலும் நாட்டாமை செய்ய ஆரம்பித்த கதையையும் சேர்த்துப் பார்க்கத் தெரிந்தால்நம்முடைய நாடு எதிர்கொள்ள வேண்டி இருக்கிற சவால்களைப் புரிந்து கொள்ள முடியும்.

எதிரிகள் என்று சொல்லும் போது
வெளியே இருக்கும் எதிரிகள்நமக்குள்ளேயே இருந்து கொண்டு அற்பத்தனமான காரணங்களுக்காக தேசத்தைத் துண்டாட நினைக்கும் எதிரிகள் என்று பிரித்துப் பார்க்க வேண்டும்

இங்கே எழும் கலகக் குரல்கள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு வெளி எதிரியின் தூண்டுதல்பங்கு,பயிற்சிபண உதவி இப்படி நிறைய இருக்கிறது
 

ஒரு அரசை நடத்துகிற அடிப்படைத் தகுதி கொஞ்சமும் இல்லாத நபர்களைத் தேர்ந்தெடுத்த ஒரே பாவம்
பொறுப்பு இல்லாத நிர்வாக இயந்திரம் என்று பிரச்சினைகளை இன்னமும் பூதாகாரமாக்கிக் கொண்டிருக்கும் அவலத்தைத் தொட்டுச் சொல்கிற முகமாகத் தான்சீனப் பெருமிதம் வயது அறுபது என்ற தலைப்பில் ஒரு பதிவை எழுதினேன்.

மகாத்மா காந்தியைஇங்கே ஒருவர் தீவீரமாக வெறுத்தாலும் சரிஆதரித்தாலும் சரி, காந்திஜி தவிர்க்க முடியாத ஆளுமையாக இந்த தேசத்தின் சமீப கால வரலாறோடு பின்னிப் பிணைந்திருக்கிறார்

காந்தியின் ஆளுமையின் மீது சவாரி செய்து ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஜவஹர்லால் நேருஅடிப்படையில் நல்ல எண்ணம் உள்ளவராக இருந்தபோதிலும்ஜனநாயகத்தை மதித்து நடந்த போதிலும்அவருடைய சில பலவீனங்கள்தேசத்திற்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தின.இன்னமும் சேதங்கள் தொடர்கின்றன.

இது தான் சுதந்திர இந்தியாவின் நவீன சிற்பி நேருவின் பதினேழு ஆண்டு கால சாதனை

நேருவிடம் இருந்த தனிநபர் ஆளுமை
பிறரது எண்ணங்களை வெளிப் படையாகச் சொல்ல முடியாத சூழ்நிலையைக் காங்கிரஸ் கட்சிக்குள்ளும்,ஆட்சியிலும் ஏற்படுத்தியதுகாந்திஜியின் மீது இருந்த அபிமானத்தால் நேருவோடு முரண் பட்டவர்கள், காந்திஜி மனம் புண் பட்டுவிடக் கூடாதே என்று ஒதுங்கிப் போன தருணங்கள்சுதந்திர இந்தியாவின் வரலாற்றில்,மாறாத வடுக்களாக இன்றைக்கும் இருக்கின்றன. 

நல்லதை நினைத்தவர்கள் ஒதுங்கிப்போனார்கள்சம்சா அடித்தேஆளுபவரைஅதிகார மையத்தில் இருப்பவரைச் சுற்றியே கும்மி டிக்கும் பேர்வழிகள் காங்கிரசுக்குள் அதிகமாகப் புகுந்து கொண்டார்கள் இன்றைக்குக் காங்கிரஸ்காரன் என்று தன்னைச் சொல்லிக் கொள்கிறவர்களில் பெரும்பகுதி அல்லது அத்தனை பேருமே நேரு பரம்பரைக்கு மட்டுமே மொத்த விசுவாசிகளாகத் தன்னைக் காட்டிக் கொண்டு, அப்படிக் காட்டிக் கொள்வதால் பதவி ஏதாவது கிடைக்குமா என்று எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் தான். இவர்களுக்கு தேசீயம், நாட்டுப் பற்று என்பதும்,மதச் சார்பின்மை, ஜன நாயக சோஷலிசம் (இப்படி ஒன்றைக் காங்கிரஸ் சொல்லிக் கொண்டிருந்தது இன்றைய காங்கிரஸ்காரர்களுக்குத் தெரியவே தெரியாது!) இவையெல்லாம் வெற்றுக் கோஷங்கள் மட்டுமே.

இன்றைய காங்கிரஸ் தான் இந்த தேசத்தின் முதல் எதிரி, உள்ளிருந்தே கெடுக்கும் எதிரி என்பதை எமெர்ஜென்சி காலம் தொடங்கி தொடர்ந்து நடந்து வரும் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் நிருபித்துக் கொண்டே வருகின்றன.

காங்கிரஸ் கட்சியின் வரலாறேஆளுபவரோடு இசைந்து போய்க் கொஞ்சம் சலுகைகளைக் கூட்டிக் கொடுக்க முடியுமா என்று பவ்யமாகப் பணிந்து கேட்கும் மிதவாதத்தினரால் நிரப்ப பட்டது தான்!

1937 களில் இந்தப் போக்கிற்கு நேருவின் தந்தை மோதிலால் நேருவே முன்னணியில் இருந்து நடத்தியதும், காந்தி சிறையில் இருக்கும்போதே இவர் தன்போக்கிற்குப் பதவியைத் தேடி ஓடியதும் இங்கே நிறையப் பேருக்குத் தெரியாத தியாக வரலாறு

காங்கிரசில் விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரேசுதந்திரத்தைப் பற்றிப் பேசினார்கள்அப்படிப்பட்ட சிலருமே,கண்முன்னால் இருந்த யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாமல்வெவ்வேறு வழிகளில் பயணப்பட்டுக் காணாமலும் போனார்கள்

காங்கிரசின் பழைய வரலாறு, முரண்பாடுகளின் மொத்த உருவம். அத்தனை கோளாறுகளையும் மீறி, காந்தி என்றொரு ஆளுமை, ஜனங்கள் அவர் சொன்னதை அப்படியே கேட்டு நடந்த விந்தை தான், காங்கிரசை இன்றைக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சியாகச் சொல்லிப் பெருமிதப் பட்டுக் கொள்ள முடிகிறது. ஆனால், சுதந்திரத்தைக் காப்பாற்றிக் கொள்ள வழிநடத்தும் தலைவர்கள் கிடைத்தார்களா என்று பார்த்தால், காந்தியை மறந்த காங்கிரஸ் ஜீரோவாகி நிற்கிறது.

நேருவின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பித்துஇன்று வரை தீர்வு காணப் படாமல்பெரும் அச்சுறுத்தலாகக் கூட மாறிக் கொண்டு வரும் பிரச்சினைகள்இன்றைய ஆட்சியாளர்களுடைய திறமைக் குறைவுஅலட்சியத்தால் தேசத்திற்கு ஏற்படக் கூடிய சேதம் இவைகளைத் தொட்டும் எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் தான் சென்ற அக்டோபரில் மூன்று பதிவுகளுமே ஒரு அச்சாரமாக ஆரம்பித்தன.


காந்தி பிறந்த அதே நாளில் தான்முப்பத்தைந்து வருடம் கழித்து 1904 ஆம் வருடம்  அக்டோபர் இரண்டாம் தேதிலால் பஹதூர் சாஸ்திரியும் பிறந்தார்நேருவின் மறைவுக்குப் பின்னால்அடுத்த பிரதமராகப் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் அடையாளம் காட்டப்பட்டவர்பதவியில் இருந்த காலம் சிறிதே என்றாலும் கூடநேருவின் காலத்தில் இருந்த தரித்திர இமேஜை உடைத்துஇந்தியா அவ்வளவு எளிதில் புறக்கணித்துவிட முடியாத ஒரு நாடுவருங்காலத்தில் வலிமையான நாடாக வளரக்கூடிய நாடு என்பதைச் செயலில் காட்டிய மிக உயர்ந்த மனிதர்

ஜெய் ஜவான்ஜெய் கிசான்! என்ற கோஷம் அவருக்குப் பின் கொஞ்ச காலம் வரை நினைவு இருந்தது

நல்லவர்களைத் தான் நாம் சீக்கிரம் மறந்து விடுவோமே!

நேருவைப்போல மிகப் பெரிய பணக்காரக் குடும்பத்தில் பிறக்கவில்லைஏழ்மையில் மிகவும் கஷ்டப்பட்டு முன்னேறியவர் சாஸ்திரிஅரசியலில் கூடநேருவுக்குக் கிட்டத்தட்டமுடிசூடா இளவரசர் அந்தஸ்தை காந்தி வழங்கியிருந்ததுபோலசாஸ்திரிக்கு எவரும் காட்பாதர் ஆக இருந்ததில்லைஆனாலும்நேர்மையான செயல்பாடுகள்திறமை மதிக்கப்பட்ட காலம் அது என்பதனால்விடுதலைப்போராட்டத்தில் மிகவும் கவனிக்கப் பட்ட தலைவராக வளர்வதில் லால் பஹதூர் சாஸ்திரிக்கு எந்தத் தடையும் இருக்கவில்லை.

இன்றைய நவீன இந்தியாவின் சிற்பியாக நேருவை மட்டுமே காங்கிரஸ் கட்சி முன்னிறுத்துகிறதே தவிர,லால் பஹதூர் சாஸ்திரி மாதிரித் திறமையான நபர்களின் பங்களிப்பைஅவர்கள் இந்த தேசத்தின் முன்னேற்றத்திற்கு ஆற்றியிருக்கும் பணிகளை வாய் விட்டுக் கூட நாலு வார்த்தை சொல்வதில்லை.






ஆகஸ்ட் 31, 1965-நூறு டாங்குகளுடன் பாகிஸ்தான் காஷ்மீரின் சம்ப் பகுதிக்குள் ஊடுருவி விட்டதாகத் தகவல் வருகிறதுகுறைந்த நேரத்திற்குள்ளாகவேஇந்தியாவிலிருந்து காஷ்மீரைத் துண்டித்து விட முடிகிற நோக்கத்தோடு பாகிஸ்தான் படைகள் தயாராகதிட்டமிட்டு நடத்திய தாக்குதல் அது

நேருவின் மறைவுக்குப் பின்னால்லால் பஹதூர் சாஸ்திரி பிரதமர் பொறுப்பை ஏற்றுக் கொண்டு முழுதாக அப்போது மூன்று மாதங்கள் கூட ஆகியிருக்கவில்லை!

குள்ளமான மனிதர் தான்இமயமலையை விட உயர்ந்து நின்ற உறுதியோடு கூடிய பிரதமர் அவர் என்பது பாகிஸ்தானுக்கு மட்டும் அல்ல இந்தியாவிலேயே நிறையப்பேருக்குத் தெரியாமல் தான் இருந்ததுபுதிய தாக்குதல் முனை ஒன்றை ஆயத்தம் செய்ய உத்தரவிட்டார்லாகூர் மீது தாக்குதல் நடத்துவது என்று முடிவெடுக்க ஐந்தே நிமிடங்கள் தான் ஆனது.

1965 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் யுத்தம் ஒருவிதமான முடிவுக்கு வந்தபோதுமேற்கத்திய நாட்டின் தூதர் ஒருவர் இப்படிச் சொன்னதாகஅமெரிக்க டைம் பத்திரிக்கைஅக்டோபர் முதல் தேதியிட்ட இந்த செய்தியில் எழுதுகிறது:

”It used to be you could feed the word 'India' into the machine and it would spit out 'Maharajahs, snakes, too many babies, too many cows, spindly-legged Hindus.' Now it's apparent to everybody that India is going to emerge as an Asian power in its own right."

ரயில்வே ஸ்டேஷனில் எடைகாட்டும் மெஷினில் காசைப் போட்ட டன் அட்டையைத் துப்புவது போல,இந்தியா என்று சொன்ன டனேயேமகா ராஜாக்கள்பாம்பாட்டிகள்எக்கச் சக்கமாகக் குழந்தைகள்ஏகப்பட்ட பசு மாடுகள்தொடைகள் வலுவில்லாத கால்களோடு கூடின இந்துக்கள் என்று தான் நினைப்பு வரும். தன்னளவிலேயே ஆசியாவின் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா உருவாகப் போகிறது என்பது எல்லோருக்குமே இப்போது புரிகிறது.

காந்தியைப் பற்றி
அவர் நடத்திய சத்தியாக்கிரகப்போராட்டத்தைப் பற்றிக் கொஞ்சம் மரியாதையுடனேயே மேற்கத்திய நாட்டவர் பேசினாலும் கூடஇந்தியா என்றால் பாம்பாட்டிகள்சாமியார்கள்மகாராஜாக்கள்,பிச்சைக்காரர்கள்கசகசவென்று எங்கு பார்த்தாலும் சனத்தொகைக் கூட்டம்நாகரீகமற்றவர்கள் என்ற எண்ணம் தான் இருந்தது.

போதாக்குறைக்கு 1948 இல் பாகிஸ்தானுடனான காஷ்மீர் ஆக்கிரமிப்புஅதில் சமாதானத் தூதுவராகக் காட்டிக் கொள்ள நேரு செய்த அசட்டுத்தனம் அப்புறம்,1962 சீனாவுடன் எல்லைத் தகராறு இதெல்லாம் சேர்ந்து இந்தியர்கள் என்றாலே தொடை நடுங்கிகள்  (ஸ்பின்ட்லி லெக்ட் என்ற வார்த்தைப் பிரயோகம் )அப்படித்தான் பொருள் தருகிறது.) நேருவின் பலவீனங்களை வைத்தே அப்படி எடைபோட்டார்கள் என்றும் சொல்லலாம். 

அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தார்கள்!

வீரர்கள் பரம்பரையாகத் தங்களை எண்ணிக் கொண்டதும்இந்தியர்கள் கோழைகள் என்று கருதியதுமே நடந்து முடிந்த யுத்தத்தின் படிப்பினைகள் என்று புலம்புகிறது பாகிஸ்தானிய டிஃபென்ஸ்  ஜார்னல் கட்டுரை ஒன்று!



கோழைத்தனமான தலைமை மாறினதும் அதே இந்தியாவைப் பற்றிய கண்ணோட்டமே தலைகீழாக மாறிப்போனது என்பதற்காக மட்டுமே இதைச் சொல்கிறேன்.


உள்ளது உள்ளபடிஅறிந்துகொள்வதற்கான ஒரு படிக்கட்டு மட்டுமேசாஸ்திரி எனும் அற்புதமான மனிதரை இன்னமும் அறிந்துகொள்ள வேண்டும்! இன்றைக்கு சோனியாகிப் போன அல்லது சோனியா குடும்பக் கட்சி என்றாகிப் போன காங்கிரசில் இப்படிப்பட்ட மகத்தான மனிதர்களும் ஒருகாலத்தில் இருந்தார்கள் என்பதை நினைவு படுத்திக் கொள்ள வேண்டாமா!

தொடர்ந்து பேசுவோம்!

**சென்ற வருடம் அக்டோபரில் எழுதியதன் மீள்பதிவு இது.  மிகச் சமீப காலத்திய வரலாற்றையே எவ்வளவு தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் அல்லது எதுவுமே தெரியாமல் இருக்கிறோம் என்பதற்காக, கொஞ்சம் தேவையான திருத்தங்களுடன்!



3 comments:

  1. சாஸ்திரியை திட்டமிட்டே மறைக்க ஆரம்பித்தவர் இந்திராகாந்தி குழுவினர். அதன் பின்னர் அதுவே அவர்களின் "தர்மமாய் ' போனது. நேரு குடும்ப வாரிசுகளை தவிர வேறு எவரும் ஆட்சி பீடத்தில் அமர்ந்துவிடாத படி இந்த 'இந்த " தர்மம் இன்றுவரை அவர்களால் கடைபிடிக்கபடுவது கண்கூடு.
    புதியவர்களுக்கு உங்கள் விளக்கம் படிப்பினையை தர வேண்டும்.

    ReplyDelete
  2. வாருங்கள் மாணிக்கம்!

    நேருவின் கவர்ச்சிகரமான, அல்லது தளுக்கான அரசியல் நிழலில் தான் பிற்காலக் காங்கிரஸ்காரர்கள் பிழைப்பை நடத்த வேண்டிவந்தது. தன்னளவில் தேசீய அல்லது மாநில அளவில் செல்வாக்குடன் இருந்த தலைவர்கள் மிகக் குறைவு. இந்திரா காண்டி பதவிக்கு வந்த பிறகு, மாநில அளவில், மாவட்ட அளவில் கூட காங்கிரசில் செல்வாக்குடன் எவரும் வளர்ந்து விடாமல் இருப்பதைக் கவனமாகப் பார்த்துக் கொண்டார். காங்கிரஸ் கட்சி சீரழிய ஆரம்பித்ததும் இந்திரா காண்டி ஒரு சர்வாதிகாரியாக மாறியதும், ஒரு சரியான மாற்று வடிவத்தை முன்னெடுத்து வைக்க இங்கே உள்ள அரசியல் தலைவர்கள், கட்சிகள் எதுவும் விசுவாசத்தோடு முயற்சி செய்யாமல் இருந்ததும், எமெர்ஜென்சி காலக் கொடுமைகளை அவ்வளவு எளிதாக மறக்க வைத்து, ஆளத் தெரியாதவர்கள் கையிலேயே ஆட்சியைக் கொடுத்த அவலமும் இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது.

    சாஸ்திரி பெயரை வேண்டுமென்றே மறக்கடித்தார்கள் என்பதை விட, அப்படிப் பட்டவர்கள் தேவையே இல்லை என்பது தான் இன்றைக்கும் காங்கிரஸ் கட்சிக்காரர்கள் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிற அரசியல்! அவ்வளவு தான்!

    ReplyDelete
  3. In 1965 we won the war in battlefield not in the diplomacy. India lost so many and gained nothing.

    Lal bahadur is another good for nothing guy. What we can expect from a nehru congress leaders

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!