இன்னிக்குப் புதன் கிழமை! அந்த ஒரு புதன் கிழமை இல்லீங்கோ!

எழுதி எழுதி ஏட்டைக் கெடுத்தானாம்-போதாது போதாதுன்னு
பாட்டும் படிச்சுப் பாட்டைக் கெடுத்தானாம்!

வலைப்பதிவுகளாகட்டும், கூகிள் பஸ்ஸில் வருகிற கும்மிகளாகட்டும் மேலே சொன்ன கதை மாதிரித் தான் கந்தலாகிக் கொண்டிருக்கிறது. அதனால் கொஞ்சம் படம் காட்டப் போறேன்! படத்தோடு கொஞ்சம் கமெண்டும்! 


மேலே பாருங்கள்! நீருக்கு உள்ளே  பாதுகாப்பாக நீந்திக் கொண்டு பார்க்க வேண்டிய ஆமையார், வெளியே இருந்து நீரைப் பார்க்கிறாராம்! இதைத் தான் கலி முத்திப் போச்சுன்னு சொல்றாங்களோ! எப்படியோ உள்ளே-வெளியே பொருத்தம் நல்லாத் தான் இருக்கு இல்லே!


**********

ஜாய்   டிவிஷன்! விவாகரத்து வழக்கறிஞர்களாம்! இந்தப் பெயர்ப்பலகை இன்னும் என்னென்னமோ அர்த்தங்களைச் சொல்கிறதே!

பிரிப்பதனால் சந்தோஷம்! பிரிப்பதில் சந்தோஷம்! இப்படிப்பட்ட ஆசாமிகள் இருந்தால், குடும்பம், நாடு வெளங்கிடும்!

**********
 




சுத்துமுத்தும் ஏகப்பட்ட சத்தம்! அம்மிணி ரெண்டு காதுகளையும் பொத்திக்கிட்டு, ம்யூட் பண்ணிக் கிட்டாங்களாம்! இப்படிச் சொல்லும்போதே, அம்மிணி அசலூராத் தான் இருக்கணும்னு தனியா சொல்லவா வேணும்!

நம்மூர் அம்மிணிகளா இருந்தாக்க, அவங்க போடற சத்தத்தில நாம இல்ல ம்யூட் பண்ணி ஒக்காந்துக்கிடணும்! போதாக்குறைக்கு ஆணாதிக்க வக்கிரம்னும், த்தூத்தூ த்தூத்து த்தூத்துத்தூனு துப்பிக் கிட்டே வர்ற ஆதரவுக் கூட்டமுமா படா பேஜாரால்ல கதை போகும்!


**********


புள்ளிராசா வங்கி தந்த புள்ளிவிவரச் சிங்கம் நம்ம அண்ணாச்சி இந்தப் புள்ளிவிவரப் படத்தை அனுப்பிருக்கிறார்.

23.08.2010 தேதியிட்ட இந்தியா டுடே பத்திரிகையில் பட்டத்து இளவரசர்  ராகுல் காண்டிக்கு செல்வாக்கு உயர்ந்துகொண்டே போகிறது என்ற ரீதியில், ஒரு கருத்துக் கணிப்பு முடிவை வெளியிட்டிருக்கிறது. கொஞ்சம் கூர்ந்து கவனித்தீர்கள் என்றால், இளவரசருக்குப் பெருகி வரும் ஆதரவு என்பது,  சோனியா காண்டி, மன்மோகன் சிங் இருவருக்கும் இருந்த ஆதரவு மங்கி வருவதில் இருந்து கூடி வருகிறது என்பதை இந்த வரைபடமே சொல்கிறது, பார் என்று அண்ணாச்சி உத்தரவு போட்டு படத்தை அனுப்பியிருக்கிறார்.

படத்தை நன்றாகப் பாருங்கள்! 14,15,18 சதவீதம் என்று கடந்த மூன்று வருடங்களில் மன்மோகன் சிங்குக்கு இருந்த ஆதரவு 2010 ஆகஸ்டில் ஒரே ஒரு சதவீதமாகக் குறைந்திருக்கிறது. சோனியாவுக்கு இருந்த ஆதரவும் குறைந்து வருவதை இந்தியா டுடே கருத்துக் கணிப்பு காட்டுகிறது.

மன்மோகன்சிங்கை டம்மிப்பீஸ் சிங்காக்கித் தான் வீட்டுக்கு அனுப்பபோகிறார்கள் போல!


**********


டம்மிப் பீஸ்களைப் பற்றிய கவலை கிடக்கட்டும்! கடந்த பதிவுகளில், பிராண்ட், பிராண்ட் இமேஜ் பற்றி உங்கள் கருத்துக்களைக் கேட்டிருந்தேனே!

கொஞ்சம் உங்கள் அனுபவம், கருத்துக்களை சொல்லுங்களேன்!




4 comments:

  1. இது உங்க புரிதலுக்காக அனுப்புகிறேன் ..

    பதிவுலகில் என்ன நடக்குதுன்னு அனைவரும் புரிய..

    புரளி கிளப்புவது எளிது..

    ஆனா அதை நிரூபீப்பது?..

    இப்புரளிக்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.. ஆனாலும் மன்னித்து விடவேண்டியுள்ளது..

    எல்லோராலும் புரளி கிளப்ப முடியும்தானே.?புனைவு எழுத முடியுமே..


    நுணலும் தன் வாயால் கெடும்.. - எத்தனை நிஜம்.?



    புனைவு, புரளி என பலியாக்குதல் தொடர்ச்சியாக

    http://punnagaithesam.blogspot.com/2010/09/blog-post_28.html

    வெளியிடுவதும் வெளியிடாமையும் உங்க விருப்பம்..

    ReplyDelete
  2. பயணங்களும் எண்ணங்களும் என்ற அடையாளத்தில் பின்னூட்டம் இட்டிருக்கும் jmms என்ற சாந்தியின் டெஸ்ட் என்று வெறுமனே அனுப்பிய பின்னூட்டத்தை நிராகரித்து, இந்த ஒரு பின்னூட்டத்தை மட்டும் அனுமதித்திருக்கிறேன். அவரவர் புரிதலுக்கேற்றபடி,அவரவர் விதைத்ததை அறுவடை செய்வது என்றபடியே இங்கே எல்லாமே நடந்து கொண்டிருப்பதையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

    தவிர, சாந்தி இந்தப்பதிவின் பின்னூட்ட வசதியைத் தனது சுவரொட்டி மாதிரிப் பயன்படுத்த முனைந்திருப்பதை, இனிமேல் அனுமதிக்க முடியாது. இந்தப்பதிவுக்கு சம்பந்தமுள்ள பின்னூட்டங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

    ReplyDelete
  3. sir, i would like to ask you share your views and happenings on the current educational"market".since i have been associated with a educational corporate for k-12 education where i could see that educational systems were being sold as a productive with a technology coating on it .Corporates in educational sector is a vulnerable threat to our society .Waiting for your blog on this regard.[commentai tamilil seiya virupum irunthum muthal murai enangalai pagirkiren aduthamurai tamilil muyalkiren,tamilil sola iyalamaiku varunthukiren]

    ReplyDelete
  4. திரு துரை அருண்!

    உங்கள் முதல் கருத்துப் பகிர்வுக்கு மிகவும் நன்றி! தமிழில் எழுதுவது இப்போதெல்லாம் மிகவும் எளிது.இணையத்தில் புழங்கும்போது Google Indic உபயோகித்து தமிழை தேர்வு செய்து ammaa என்று அடித்தால் அம்மா என்று வரும், இதே மாதிரி ஒலிக் குறிப்பின் அடிப்படையில் தட்டச்சுவது எளிது.இணையத்தில் இல்லாதபோது higopi.com, kuralsoft, அழகி போன்ற தமிழ் எழுதிகள் நிறையக் கிடைக்கின்றன. கொஞ்சம் பழக வேண்டும்.

    கல்வித்துறையைப் பற்றிக் கேட்டிருக்கிறீர்கள் இல்லையா?

    கல்வித்துறையைப் பற்றி லேசாகத் தொட்டு எழுதிய சில விஷயங்கள் இந்தப்பதிவில், ஆசிரியர் தினம், கபில் சிபல் என்ற வார்த்தைகளைக் கொண்டுஇந்தப்பதிவின் இடதுபுறம் உள்ள கூகிள் தேடும் வசதியில் தேடிப்பார்த்தால் கிடைக்கும். நீங்களே கல்வித் துறையோடு சம்பந்தப்பட்டவராக இருக்கிறீர்கள்! உங்களுக்கு என்ன விவரம் வேண்டும் என்பதைப் பின்னூட்டத்தில் மின்னஞ்சல் முகவரியுடன் எழுதுங்கள், நேரடியாகவோ, அல்லது உங்கள் கேள்விக்கு சம்பந்தப்பட்ட விவரங்களைத் தொகுத்தோ தருகிறேன்.

    ReplyDelete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!