Showing posts with label கூட்டணி தர்மம். Show all posts
Showing posts with label கூட்டணி தர்மம். Show all posts

#கூட்டணிதர்மம் காத்துல பறக்குமோ? கொஞ்சம் அரசியல்! திக்...திக்..காமெடிகள்!

தமிழக அரசியலில் எதற்குப் பஞ்சமோ இல்லையோ, கூட்டணிக் குழப்பங்களே பெரிய காமெடியாக இருப்பதற்கு ஒரு குறைச்சலும் இருந்ததில்லை. இரண்டு கழகங்கங்களுமே ஒன்றுக்கொன்று இந்த விஷயத்தில் சளைத்தவை அல்ல. சீரியசான அரசியல், அரசு விஷயங்கள் கூடக் கழகங்களால் பெரும் காமெடி ஆக்கப்பட்டதும், கழக முன்னோடிகள் என்போர் காமெடிப்பீஸ்களாகி நின்றதும்தான் திராவிட அரசியல் வரலாறு என்பதை இந்தப்பக்கங்களுக்கு வரும் நண்பர்களுக்குத் தனியாகச் சொல்லவும் வேண்டுமா? 


இந்த 27 நிமிட நேர்காணலை நடத்தும் ரெட் பிக்சின் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் மீதோ நிகழ்ச்சியில் பங்குகொண்ட சவுக்கு சங்கர் மீதோ எனக்கு சொல்லிக் கொள்கிற மாதிரியான அபிப்பிராயம் கிடையாது. ஆனாலும் இந்த நேர்காணலை இங்கே பகிர்வதற்கு ஒரே காரணம், என்னதான் ஜெயிக்கிற குதிரை மாதிரி திமுக தன்னைக் காட்டிக் கொண்டாலும், உண்மை நிலவரம் அப்படியில்லை என்பதைத் தோலுரித்துக் காட்டுகிற நேர்காணலாக இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்ட மட்டுமே.

திமுக 200 தொகுதிகளில் போட்டியிடும் என்கிற மாதிரி வதந்திகள் திமுகவினராலேயே பரப்பப்பட்டவை தான் என்பதில் சந்தேகம் இருக்கிறதா? மாநிலத்தில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள், இன்னபிற உதிரிகளில் பெரும்பாலானவை திமுக கூட்டணியில் இருந்தவைதான்! இப்படி உதி!ரிகளோடு கூட்டணி வைக்காமல் திமுக எந்தத்தேர்தலிலும் போட்டியிட்ட்டதே இல்லை சமீபகாலங்களில், உதிரிகளுக்கு சீட்டும் கொடுத்து, செலவுக்குப் பணமும் கோடிகளில் கொட்டி அழுத கட்சியும் கூட திமுக தான்! (அதிமுக மட்டும் யோக்கியமா என்ன? இல்லையே! அந்தக்கூத்தை அப்புறம் பார்ப்போம்) 

200 தொகுதிகளில் திமுக என்றால் 200 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் வேட்பாளர் என்று அர்த்தம். ஆனால் திமுக கூட்டணியில் உள்ள உதிரிகளுக்கு வேறு விதமான நெருக்கடி! ஒரு அரசியல் கட்சியாக, களத்தில் நீடிப்பதற்கு, அவை தனிச்சின்னத்தில் நின்று குறைந்த பட்ச வாக்குகள், சீட்டுகளைப் பெற்றாக வேண்டும் என்பதிலேயே திமுகவின் #கூட்டணிதர்மம்  2021 சட்டசபைத் தேர்தல்களில் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு சோதனைக்கு ஆளாகிற நிலைமை! வைகோ தனிச்சின்னத்தில் தான் போட்டி என்று ஆரம்பித்து வைக்க அதுவே எங்கள் வழியும் என்று திருமாவளவனும் அறிவித்துவிட்டார். CPIயின் முத்தரசன் ரஜனியிடம் திமுக கூட்டணிக்கு ஆதரவு கேட்போம் என்று நிகழ்நேரக் காமெடி செய்திருந்தாலும், இன்னொரு முறை இரண்டு கழகங்களாலும் சீந்தப்படாத உதிரிகள் எல்லாம் சேர்ந்து #மக்கள்நலக்கூட்டணி என்று ஆரம்பிக்கிற வாய்ப்பு நிஜமாகிவிடாமல் இருக்க திமுக 150-160 தொகுதிகளுக்குள்ளாக்கத் தனது இடங்களைக் குறுக்கிக் கொண்டே ஆகவேண்டிய நிலைமை இருப்பதாகவே எனக்குப் படுகிறது. காங்கிரஸ் என்னமாதிரி பேரம், திரைமறைவு காய்நகர்த்தல்களைச் செய்யப்போகிறது என்பது ஊகத்துக்கு அப்பாற்பட்ட விஷயம்! கருணாநிதி காலத்தில் கையை முறுக்கி 63 சீட்டுகள் பெற்றமாதிரி இன்றைக்கு கனவுகூடக்காணமுடியாது. முந்தைய காலங்களில் பெற்ற 41 சீட்டும் சந்தேகமே! ஆனால் 30 சீட்டுகளுக்கும் கீழ் குறைக்க முடியாதபடி, தமிழ்நாடு சோனியா காங்கிரசுக்கு சுமார் 600 நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்களே! கமல் காசரைக் காட்டி சும்மா வேண்டுமானால் மிரட்டலாம்!

அதிமுகவின் கூட்டணிக்கு கதையில், பண உதவி ஒரு பிரமாதமான விஷயமே இல்லை அவரவர் சின்னத்தில் போட்டியிடத் தடையுமில்லை. சீட்டுகளில் பிடிவாதம் பிடிக்கிற கட்சிகளை உதறவும் தயங்குவதில்லை. இந்த முறை பாமகவுக்கு, அவர்கள் விதிக்கிற நிபந்தனைகள், கேட்கிற சீட்டுகளால் அப்படி உதறப்படுகிற நிலைமை வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை. அப்படி பாமக வெளியேறினால், திமுக அரவணைக்கத் தயாராகவே இருக்கும்! தயாநிதி மாறன் உசுப்பிவிடுகிற மாதிரிப் பேசியதையோ பேசி வாங்கிக்கட்டிக் கொண்டதையோ திமுகவின் தலைமை கண்டுகொள்ளாமல் விட்டதே ஒரு அடையாளம். அதனால் திமுகவின் தற்போதைய கூட்டாளிகள் சிலர் வெளியேறுவதும் இயல்பே

தேதிமுக மிகவும் முன்னெச்சரிக்கையாகத் தாங்கள் அதிமுக கூட்டணியிலேயே நீடிப்பதாக துண்டு போட்டு வைத்து விட்டது. 

#கூட்டணிதர்மம் என ஒன்று உண்மையிலேயே இருந்தது கிடையாது.(அப்படி இருந்ததாக நம்புகிறவர்கள் இன்னும் வாஜ்பாய் காலத்தைய mindset இல் இருப்பவர்கள்) கூட்டு சேர்வது தேர்தல் காலத்து நிர்பந்தம் என்பதைத் தாண்டி ஏதோ காலத்துக்கும் தொடர்கிற லட்சியக்கூட்டணி என்பதெல்லாம் சும்மா சொல்லிக்கொள்வதுதான்! எல்லாமே இங்கு காசுக்காக நடக்கிற கூத்தே அன்றி வேறெதுவும் இல்லை. 

மீண்டும் சந்திப்போம்    

                                        

       

பூனை கண்ணை மூடினால் உலகம் இருளுமா? #சேகர்குப்தா #அரசியல்களம்

அதிமுக--பிஜேபி கூட்டணி எந்த லட்சணத்தில் இருக்கிறது?   இப்படி இன்னொரு வலைப்பக்கத்தில் நேற்று எழுதிய பதிவுக்கு நண்பர் நெல்லைத்தமிழன் ஒரு காட்டமான பின்னூட்டத்தை எழுதியிருந்தார். அவருக்காக சேகர் குப்தா  பிஜேபியின் கூட்டணிக் கட்சிகள் எதற்காக பிஜேபியுடன் வந்து ஒட்டிக் கொண்டன, எதற்காகக் கழன்று கொண்டன என்பதை அவரது பார்வையில் இந்த 26 நிமிட வீடியோவில் சொல்வதைப் பரிந்துரைக்கிறேன்.


NDA கூட்டணியில் பிஜேபியுடன் கூட்டு சேர்ந்திருந்த கட்சிகளில் 19வதாக ஒரு ராஜஸ்தான் கட்சி NDA வில் இருந்து கழன்று கொண்டதை விரிவாகச் சொல்வதற்கு முன்னால் ரஜனிகாந்த் அரசியலுக்கு முழுக்குப் போட்டதை வாய் நிறையச் சிரிப்புடன் சொல்லி ஆரம்பிக்கிறார் சேகர் குப்தா.நவம்பர் மாதத்திலேயே இங்கே சார்ட் போட்டுச் சொன்னதைத்தான் சேகர் குப்தாவும் கொஞ்சம் காரணங்களோடு சொல்கிறார். 

தமிழகத்தைப் பொறுத்தவரையில் பாஜக உமி, அதிமுக அரிசி. ஆனால் பாஜக தமிழகத் தலைவர், ஏதோ இது தேசியக் கூட்டணி போலவும், யார் முதலமைச்சர் என்பதை பாஜகவின் தேசியத் தலைமை அறிவிக்கும் என்று சொல்வது டூ டூ மச் இல்லையோ? முருகன் அவர்களின் பேச்சு எனக்கே கடுப்பாகிறது எனும்போது, போனாப் போகுதுன்னு ஆட்டத்தில் சேர்த்துக்கொண்ட அதிமுகவினருக்கு எப்படி இருக்கும்? அதிமுகவுக்கு பாஜக என்பது பெரும் சுமை, 8-10 சதவிகித ஓட்டிழப்பிற்குக் காரணமாக இருக்கும் கட்சி. பாஜக கூட்டணி இல்லாவிடில் குறைந்தது ஐந்து எம்பிக்களாவது அதிமுகவிற்கு இருந்திருக்கும்.

கேபி முனுசாமி பேசியது சரிதான். முருகன் அவர்கள் அதீதமாகப் பேசுவதை நிறுத்த வேண்டும். தைரியம் இருந்தால் தனித்துப் போட்டியிட்டு பாஜக, 2 சதவிகித வாக்குகளுக்கும் அதிகம் இருக்கும் கட்சி என நிரூபிக்கட்டும். நெல்லைத்தமிழன் எழுதியது இது . இதற்கான பதிலை இந்தப்பதிவின் முதல்வரியிலேயே இருக்கும் இணைப்பைக் க்ளிக் செய்து வாசிக்கலாம்.

NDA கூட்டணி பற்றிப் பேசுவதற்கு முன்னால், சோனியா இன்னமும் தலைமை தாங்கிக் கொண்டிருப்பதாகச் சொல்லப் படுகிற UPA க்கிய முற்போக்குக் கூட்டணி யோக்கியதை என்னவாக இருக்கிறது என்பதையும் சேர்த்தே பார்த்து விடலாமா?


ஐமுகூ சேர்பெர்சனாக சரத் பவார் ஒன்றும் தவம் கிடைக்கவில்லை. அந்த வெற்று நாற்காலியால் அவருக்கு பைசா பிரயோசனமில்லை. ஆனால் சிவசேனா தரப்பிலிருந்து, எதிர்க்கட்சியாக இருப்பதற்கே தகுதியில்லாத நிலையில் சோனியா காங்கிரஸ் இருக்கும் நிலையில், பிஜேபிக்கு எதிரான கட்சிகளை ஒன்றிணைக்கும் சக்தியாக சரத் பவார் மட்டுமே இருக்க முடியும் என்று வலுவான வாதம் முன்னெடுக்கப்பட்டது கூட இருபது நாட்களுக்கு முன்னால் தான்! சோனியா தலைவராக இருந்த காங்கிரஸ் கட்சி அனேகமாக நாசமாகப்போய்விட்டது.2004 இலிருந்து சோனியா அலங்கரித்த ஐமுகூ சேர்பெர்சன் பதவியும் கூட எவரும் சீந்த விரும்பாத ஒன்றாகத்தான் இருக்கிறது.

காங்கிரசோடு சேர்ந்து நின்றாலே பீடை ஒட்டிக் கொள்ளும் என்று சொல்லாமல் கொள்ளாமல் எதிர்க்கட்சிகள் ஒதுங்கி நிற்கிற அளவுக்குக் காங்கிரசின் இன்றைய நிலைமை இருக்கிறது.

NDA ஆரம்பமானது 1998 இல். காங்கிரசுக்கு எதிரான கட்சிகளின் கூட்டணியாக அன்று தொடங்கப்பட்டது போன்ற நிலைமை இன்றிருக்கிறதா? பிஜேபியை மதவாதக்கட்சியாக, தீண்டத்தகாத ஒன்றாகப்  பூச்சாண்டி காண்பித்த செகுலர் போலிகளின் காலம் முடிந்தே போய்விட்டது. வடவர்கள் கட்சி என்று சொல்லப்பட்ட நிலையும் மாறிவிட்டது. இந்தியா முழுதும் பரந்து விரியும் ஆலமரமாக பிஜேபி இன்று தனிப்பெரும் கட்சியாக வளர்ந்து நிற்பதில், துண்டு துக்காணிக் கட்சிகள் ஒட்டிக் கொடிருந்தால் என்ன? உதிர்ந்து போனால் என்ன? பிஜேபியின் இன்றைய தலைமை இதை ஒரு பெரிய விஷயமாகவே எடுத்துக் கொள்ளவுமில்லை, சேகர் குப்தா போல, என்னமோ பெரிய அரசியல் ரகசியத்தை உடைத்துவிட்டதுபோல பொதுவெளியில் விவாதிப்பதுமில்லை.

ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஏதோ ஒரு செயல் திட்டம், காலவரையறை என்று இருக்கக் கூடும் நான் அறிந்த வரை கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதுமாதிரி ஒரு strategy, tactics என்று ஏட்டளவிலாவது இருந்ததுண்டு ஆனால் கம்யூனிஸ்ட் கட்சிகள் எதுவுமே இப்போது புரட்சி, சோஷலிசம், என்றெல்லாம் பேசுவதில்லை. ஆனால், பிஜேபியினர் மட்டும் ஒரு இலக்கு, அதை அடைவதற்கான செயல்திட்டம் என வகுப்பதோடு அதை நடைமுறைப்படுத்த வருடம் முழுவதும் கடுமையாக உழைத்து வருவது கண்கூடாகவே தெரிகிறது.

இங்கே தமிழகத்தில் காலூன்ற பிஜேபி என்னமோ ரஜனி ஒருவரைத்தான்  மலைபோல நம்பியிருந்தது போலவும், அவர் வீட்டுக்குள் சுருண்டு படுத்துக் கொண்டதும், அது கனவாகப் போனது போலவும் இங்கே நிறையப்பேர் நமட்டுச் சிரிப்புடன் அலைவது சரிதானா என்பதைக் காலம் தான் தீர்மானிக்க வேண்டும்.

மீண்டும் சந்திப்போம்           .  

   

பதிவு #1025 மண்டேன்னா ஒண்ணு! #அரசியல் சொல்ல விடுபட்டவை!

ங்கே இங்கே எங்கே சுற்றினாலும் தமிழக அரசியலுக்கு வந்து தானே ஆகவேண்டும்? தமிழக அரசியலில் கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயங்களாக, இங்கே சொல்ல விடுபட்டவைகளாக சில செய்திகளைப் பார்க்கலாமா?



ந்த 43 நிமிட விவாதத்துக்கு புதிய தலைமுறை சேனல் வைத்திருக்கிற தலைப்பே கொஞ்சம் காமெடியானது! நிறையவே விஷமத் தனமானது என்பதை தனியாகச் சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன? தமிழக சோனியாG காங்கிரஸ் தலைவர் நாங்குனேரியில் பேசியதை வைத்துத்தான் இந்த விவாதம் என்பதால் என்னபேசினார் என்பதைக் கொஞ்சம் பார்த்து விடுங்கள்! செய்தி 9 நிமிடம். 

   
ந்திய தேசிய காங்கிரஸ் என்ற பெயரை எப்படி இந்திரா காண்டி, தேர்தல் கமிஷனில் எப்படி ஒரு சில்லறைத்தனமான வேலையைச் செய்து தக்கவைத்துக் கொண்டார் என்ற தகவல் இணையத்திலேயே தேடக் கிடைக்கும். ஆனால் அம்மணியின்  பிரதான குறிக்கோள், மத்தியில் தன்னுடைய ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வது மட்டுமே என்றிருந்ததில் படிப்படியாக அதன் தேசியத் தன்மை என்பது நீர்த்துப் போய்க் கொண்டே வந்து ஏதோ ஒருசில மாநிலங்களில் மட்டும் சில MP சீட் கெலிக்கிற, கழுதை தேய்ந்து கட்டெறும்பான  கேலிக்கதை ஆகிப் போய்க் கிடக்கிறது. இந்தப் பின்னணியில் மேலே முதலில் உள்ள விவாதத்தைக் கவனித்துக் கேளுங்கள்! செல்வப் பெருந்தகை என்னதான் முட்டுக் கொடுத்தாலும்  திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் பெரிதாகிக் கொண்டே வருவது நன்றாகவே புலப்படுகிறது. என்ன விரிசல் வந்தாலும் கூட்டணி தர்மம்  கூட்டுக்  களவாணிகளை எப்படி ஒன்றுசேர்க்கும் என்பதும் கூட ஊகிக்க முடிவதுதான்! 


டகங்கள் தேடுகின்றனவோ இல்லையோ, ஊடகங்களைத் தேடித்தேடி பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் விசிகவின் திருமாவளவன் என்பது கொஞ்சம் வினோதமாக இல்லையா? லண்டனில் அவர் பேசப்போன இடத்தில் ஒரு இலங்கைத்தமிழர் கரன்சி நோட்டுகளை வீசியெறிந்தார், அவரைப்போன்றவர்களால் தான் ஈழத்தில் இழப்பே, காசுதானே வேண்டும் இந்தா பொறுக்கிக் கொள் என்கிற மாதிரி ஒரு வீடியோ வைரலாகப் பரவியதும், அந்தக் கூட்டத்தில் விசிகவுக்கு நிதியுதவி கேட்டார் என்பதும், சீமான் பிரபாகரனோடு ஆமைக்கறி சாப்பிட்ட கதை மாதிரியே,  திருமாவளவனுக்கு சேரலாதன் என்பவர் வழியாக ஒரு சேதி அனுப்பினார் என்பதும், மூன்றுமாகச் சேர்ந்து ஒரு இக்கட்டான நிலைமையை ஏற்படுத்தியிருப்பதில், தன்னிலை விளக்கம் கொடுப்பதற்கு மனிதர் படாதபாடு படுகிறார். திமுகவோடு இணக்கமா பிணக்கமா என்ற சாதாரணமான ஒரு கேள்விக்குக் கூட கொஞ்சம் முறுக்கிக் கொண்டே பதில் சொல்கிறார் என்பதை எப்படிப் புரிந்துகொள்வது?

உங்களிடம் விடை இருக்கிறதா? இருந்தால்  பதிலைக் கொஞ்சம் சொல்லுங்களேன்! 

மீண்டும் சந்திப்போம்.                 
      

வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! மி.பொடியில் பூச்சிக்கொல்லி?

சீனாதானாவை வெற்றிகரமாக திஹார் சிறையில் அரசு தள்ளிவிட்டதே! அதுவே மிகப்பெரிய சாதனையாகப் பேசப் படுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? நம்மூர் நீதிமன்ற நடைமுறைகளில்  சின்னமீன்கள் மட்டுமே மாட்டும்; திமிங்கிலங்கள் தப்பிவிடும் என்கிற  அவல  நிலைமையை மாற்றாமல் இப்போதே சாதனை என்று தம்பட்டம் அடிப்பது உண்மையிலேயே கேலிக்குரியதுதான்! 


ந்த 21 நிமிட விவாதத்தில் காங்கிரசின் கோபண்ணா திரும்ப திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பது ஒன்றைத்தான்! INX மீடியா வழக்கில்   முறை தவறி அனுமதி வழங்கியது FIPBயின் அதிகாரிகள்! அவர்களை கைது செய்யாமல், அமைச்சராக இருந்தவரைக் கைது செய்வது சரியா?  இந்த வார வெள்ளிக்கிழமைக் கேள்வியாக, கோபண்ணா சொல்வது சரிதானா என்பதற்கு உங்களால் விடை சொல்ல முடிகிறதா என்று பாருங்களேன்! சீனாதானா இன்றைக்குச் சந்திக்கும் ஒவ்வொரு வழக்கு, விசாரணை, ஊடகங்களில் கசியும் பல விதமான செய்திகளுக்குப் பின்னணியில் சால்வை அழகரின் வாய்க்கொழுப்புத்தான் முக்கியமான காரணமாக இருந்து வருகிறது என்று சொன்னால், அது சரியா? தவறா? இங்கே இன்றும் கூட,  கூட்டணி தர்மத்தில் இணைந்திருக்கும் திமுக முதற்கொண்டு, சொந்தக் கட்சி, தொகுதியில் கூட எங்கும் நீக்கமற எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருப்பவர் சிவகங்கை சின்னப்பையன் பானாசீனா என்பது மறந்துபோய்விட்டதா என்ன?

   விடாது கருப்பு!   

  
From WhatsApp
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது முக்கியமான துறையில் இருந்த மூத்த அமைச்சாின் செயல்களைக் கண்காணிப்பதற்கு உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் முடிவு செய்தாா் .அந்த அமைச்சருக்கே தொியாமல் ,உளவுப் படை ஒட்டுக் கேட்புக் கருவிகளையும் , இரகசிய கேமராக்களையும் அமைத்து , கண்காணித்து வந்தாா் .இந்த சம்பவம் எப்படியோ மூத்த அமைச்சருக்குத் தொிய வர , காங்கிரஸ் கட்சிக்குள் தீப்பிழம்பாய் சண்டை வெடித்தது .
ஆனால் அப்போது மூத்த அமைச்சாின் பேச்சு சோனியாவிடம் எடுபடவில்லை .இந்த சம்பவத்தால் பயங்கரமன ளைச்சலுக்கு ஆளான அந்த மூத்த அமைச்சா் அப்போதைக்கு அமைதியாகப் போய் விட்டாா் .
ஆனால் , சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் என்னென்ன முறைகேடுகள் நடந்தன , எத்தனை கோப்புகள் விதிமுறைகள் மீறப்பட்டன என்று ஆராயத் தொடங்கினாா் .
அப்போதே ஏராளமான ஆவணங்களைத் திரட்டி உள்ளாா் .
சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது அனில் அம்பானிக்கும் , முகேஷ் அம்பானிக்கும் ஏற்பட்ட சொத்துப் பிரச்னையை மத்தியஸ்தம் செய்து வைத்துள்ளாா் .
அவா்களுடைய சொத்துக்களைப் பிாித்துக் கொடுப்பதற்கு கட்டணமாக , பொிய தொகையை மலேசியா மற்றும் சிங்கப்பூாிலுள்ள காா்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்தின் மூலமாக வாங்கி உள்ளாா் .
அடுத்ததாக வேதாந்தா குழுமத்தின் தலைவரான அனில் அகா்வாலுக்கும் சிதம்பரத்திற்கும் இடையில் பண உறவு இருந்துள்ளது .வேதாந்தா குழுவின் நிா்வாக இயக்குநா் பதவியில் சிதம்பரமும் , லீகல் அட்வைஸராக சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரமும் இருந்துள்ளனா் .
காா்த்தி சிதம்பரத்திற்கு லண்டனிலுள்ள சொத்துக்களை வாங்கிக் கொடுத்தது அனில் அகா்வால் தரப்புதான் என்பதற்கும் ஆதாரங்களைத் திரட்டிக் கொடுத்திருக்கிறாா் .
இது தவிர , ஸ்டொ்லைட் நிறுவனத்திற்கு அந்நியச் செலாவணி விவகாரங்களில் சிதம்பரம் உதவி செய்துள்ளாா் .கிட்டத்தட்ட ஆயிரம் கோடிகளுக்கு மேல் புரண்ட இந்த கோப்புகளை ,
மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாாிகள்தான் கையாண்டுள்ளனா்.இதில் கேரளாவைப் பூா்வீகமாகக் கொண்ட பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாாியும் ஒருவா் .ஆயிரம் கோடிகளுக்கு மேற்பட்ட நிதி என்பதால் , அதைப் பல்வேறு வகையில் நிறுவனங்களுக்குப் பிாித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .
இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதோடு , அரசுக்கும் பல நூறு கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது .
இந்த கோப்பு குறித்தும் அந்த காங்கிரஸ் மூத்த தலைவா் இரகசியமாக விசாரணை செய்து தேவையான தகவல்களைச் சேகாித்து விட்டாா்.பா.ஜ.க., ஆட்சிக்கு வந்ததுமே , அந்த காங்கிரஸ் தலைவருக்கு பா.ஜ.க., தூண்டில் போட்டு , தங்கள் வசம் கொண்டு வந்து விட்டது.சிதம்பரம் மீது தீராத கோபத்தில் இருக்கும் அந்த மூத்த மாஜி தலைவா் , அவாிடம் இருந்த அத்தனை கோப்புகளையும் சி.பி.ஐ., யிடம் கொடுத்து விட்டாா் .இந்தக் கோப்புகள் சி.பி.ஐ., வசம் வந்து விட்டன . இதனைக் காட்டி சிதம்பரத்தின் நட்பு வட்டாரங்களை அப்ரூவராக மாற்றும் வேலையில் சி.பி.ஐ., தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது .
லண்டனில் உள்ள வீடுகள் , பண்ணை வீடுகள் , பிளாட்டுகள் , நிறுவனங்கள் போன்றவற்றை சிதம்பரத்திற்கு அனில் அகா்வாலுக்கு நெருக்கமான லண்டன் நபா்தான் வாங்கிக் கொடுத்துள்ளாா் அவரும் இப்போது ரா மற்றும் சி.பி.ஐ., கண்காணிப்பில் இருக்கிறாா் .
இவை தவிர , இருசக்கர வாகன முன்னணி நிறுவனத்தின் பணப் பாிவா்த்தனையிலும் சிதம்பரத்தின் தலையீடு இருந்துள்ளது .கட்டணமாக சில நூறு கோடிகளை காா்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்கு வழங்கியதாக அந்த நிறுவனம் அவா்களது ஆடிட்டிங் கணக்கில் காட்டியுள்ளது .
இந்த கோப்பை எடுத்து மாா்க் செய்து , 'இதில் இவ்வளவு கைமாறி உள்ளது . தீவிரமாக விசாாிக்கவும்' என்று நோட் போட்டு அந்த மாஜி அனுப்பியுள்ளாா் .
இப்படி பத்துக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு அதிபா்களின் பணப் பாிமாற்ற விவகாரங்களில், மறைமுகமாக காா்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்குத் தொடா்புள்ள 300 க்கும் மேற்பட்ட கோப்புகளை மாஜி அனுப்பி உள்ளாா் .இவா் அனுப்பிய கோப்பில் ஏதேனும் சந்தேகம் கேட்டால் , அதையும் உடனுக்குடன் விாிவாக விளக்கித் தீா்த்து வைக்கிறாராம் அந்த மாஜி .காங்கிரஸ் கட்சியில் இருவருக்குள் ஏற்பட்ட அதிகாரப் போட்டியில் முன்பு சிதம்பரம் அவரை வீழ்த்தியிருந்தாா் .
சந்தா்ப்பம் பாா்த்துக் காத்திருந்து இப்போது அவா் சிதம்பரத்தை வீழ்த்துவதற்கு சி.பி.ஐ.,க்கு உதவி செய்கிறாா் .
அதனால் இனியும் சிதம்பரம் தப்பிக்க முடியாது " என்றனா் .
மாஜி அமைச்சா் கொடுத்திருக்கும் கோப்புகள் குறித்த விவகாரம் எப்படியோ சிதம்பரம் தரப்புக்கும் கசிந்துள்ளதாம் .
அதனால் , இனி தப்பிக்க வழியில்லை என்ற நிலையில் சமாதானக் கொடி பறக்கவிட சிதம்பரம் தயாராகி வருகிறாராம்.சிதம்பரம் சமாதானத்தை விரும்பினாலும் , இன்றைய சூழ்நிலை அருக்குச் சாதகமாக இல்லை என்பதுதான் உண்மை.
இந்தச் செய்தியில் புதிதாக ஒன்றுமில்லை. யார் அந்த மாஜி என்பதை ஊகிப்பது கூடக் கடினமானதில்லை. எட்டு வருடத்துக்கு முன் எழுதிய பதிவுகளில் இந்த #இருவர் அதிகார விளையாட்டு, பற்றி எழுதிய பதிவுகள் இன்னமும் இருக்கின்றன.

முந்தைய பதிவொன்றில் அல்லது பின்னூட்டத்தில் ஒரு தகவலை தவறாகச் சொல்லிவிட்டதை, திருத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது! நண்பர் திருப்பூர் ஜோதிஜிக்கு குறிப்பாகச் சொல்லவேண்டும்.

Replying to and
O.P.Saini's 26 year old businessman son is a Cong MLA, CJI K.G.Balakrishnan's son-in-law is Kerala Cong MLA & after retirement Balki became head of NHRC. No wonder Cong gets favorable judgments. Your every single court victory is a miracle.
2
28
32

பாட்டியாலா சிபிஐ சிறப்புநீதிமன்ற நீதிபதி OP சைனி, இந்த செப்டெம்பர் மாதம் ஒய்வு பெறவிருப்பதாகச் சொல்லி இருந்தது தவறு! அவர்  வருகிற நவம்பரில் தான் ஒய்வு பெறுகிறாராம். நேற்றைக்கு ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் செட்டிநாட்டு ஜாமீன் வாரிசுகள் தகப்பன் மகன் இருவருக்கும் ஜாமீன் வழங்கிவிட்டுக் கொஞ்சம் காட்டமாக அந்த நீதிபதி சொல்லியிருந்ததைப் பார்த்தபிறகுதான் சந்தேகம் வந்து சரிபார்த்தபோது நான்கு மாதத்துக்கு முந்தைய இந்த ட்வீட்டர் உரையாடல் கண்ணில் பட்டது. 
உபயோகிப்பாளர்கள் நலன் கருதி இன்னொரு ட்வீட் 

பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதால் ஆச்சி மிளகாய் பொடிக்கு கேரளா அரசு தடை
8:19 AM · Sep 6, 2019Twitter Web App

மீண்டும் சந்திப்போம்