சீனாதானாவை வெற்றிகரமாக திஹார் சிறையில் அரசு தள்ளிவிட்டதே! அதுவே மிகப்பெரிய சாதனையாகப் பேசப் படுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? நம்மூர் நீதிமன்ற நடைமுறைகளில் சின்னமீன்கள் மட்டுமே மாட்டும்; திமிங்கிலங்கள் தப்பிவிடும் என்கிற அவல நிலைமையை மாற்றாமல் இப்போதே சாதனை என்று தம்பட்டம் அடிப்பது உண்மையிலேயே கேலிக்குரியதுதான்!
இந்த 21 நிமிட விவாதத்தில் காங்கிரசின் கோபண்ணா திரும்ப திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பது ஒன்றைத்தான்! INX மீடியா வழக்கில் முறை தவறி அனுமதி வழங்கியது FIPBயின் அதிகாரிகள்! அவர்களை கைது செய்யாமல், அமைச்சராக இருந்தவரைக் கைது செய்வது சரியா? இந்த வார வெள்ளிக்கிழமைக் கேள்வியாக, கோபண்ணா சொல்வது சரிதானா என்பதற்கு உங்களால் விடை சொல்ல முடிகிறதா என்று பாருங்களேன்! சீனாதானா இன்றைக்குச் சந்திக்கும் ஒவ்வொரு வழக்கு, விசாரணை, ஊடகங்களில் கசியும் பல விதமான செய்திகளுக்குப் பின்னணியில் சால்வை அழகரின் வாய்க்கொழுப்புத்தான் முக்கியமான காரணமாக இருந்து வருகிறது என்று சொன்னால், அது சரியா? தவறா? இங்கே இன்றும் கூட, கூட்டணி தர்மத்தில் இணைந்திருக்கும் திமுக முதற்கொண்டு, சொந்தக் கட்சி, தொகுதியில் கூட எங்கும் நீக்கமற எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருப்பவர் சிவகங்கை சின்னப்பையன் பானாசீனா என்பது மறந்துபோய்விட்டதா என்ன?
விடாது கருப்பு!
From WhatsApp
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது முக்கியமான துறையில் இருந்த மூத்த அமைச்சாின் செயல்களைக் கண்காணிப்பதற்கு உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் முடிவு செய்தாா் .அந்த அமைச்சருக்கே தொியாமல் ,உளவுப் படை ஒட்டுக் கேட்புக் கருவிகளையும் , இரகசிய கேமராக்களையும் அமைத்து , கண்காணித்து வந்தாா் .இந்த சம்பவம் எப்படியோ மூத்த அமைச்சருக்குத் தொிய வர , காங்கிரஸ் கட்சிக்குள் தீப்பிழம்பாய் சண்டை வெடித்தது .
ஆனால் அப்போது மூத்த அமைச்சாின் பேச்சு சோனியாவிடம் எடுபடவில்லை .இந்த சம்பவத்தால் பயங்கரமன உளைச்சலுக்கு ஆளான அந்த மூத்த அமைச்சா் அப்போதைக்கு அமைதியாகப் போய் விட்டாா் .
ஆனால் , சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்த காலகட்டத்தில் என்னென்ன முறைகேடுகள் நடந்தன , எத்தனை கோப்புகள் விதிமுறைகள் மீறப்பட்டன என்று ஆராயத் தொடங்கினாா் .
அப்போதே ஏராளமான ஆவணங்களைத் திரட்டி உள்ளாா் .
சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது அனில் அம்பானிக்கும் , முகேஷ் அம்பானிக்கும் ஏற்பட்ட சொத்துப் பிரச்னையை மத்தியஸ்தம் செய்து வைத்துள்ளாா் .
அவா்களுடைய சொத்துக்களைப் பிாித்துக் கொடுப்பதற்கு கட்டணமாக , பொிய தொகையை மலேசியா மற்றும் சிங்கப்பூாிலுள்ள காா்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்தின் மூலமாக வாங்கி உள்ளாா் .
அடுத்ததாக வேதாந்தா குழுமத்தின் தலைவரான அனில் அகா்வாலுக்கும் சிதம்பரத்திற்கும் இடையில் பண உறவு இருந்துள்ளது .வேதாந்தா குழுவின் நிா்வாக இயக்குநா் பதவியில் சிதம்பரமும் , லீகல் அட்வைஸராக சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரமும் இருந்துள்ளனா் .
காா்த்தி சிதம்பரத்திற்கு லண்டனிலுள்ள சொத்துக்களை வாங்கிக் கொடுத்தது அனில் அகா்வால் தரப்புதான் என்பதற்கும் ஆதாரங்களைத் திரட்டிக் கொடுத்திருக்கிறாா் .
இது தவிர , ஸ்டொ்லைட் நிறுவனத்திற்கு அந்நியச் செலாவணி விவகாரங்களில் சிதம்பரம் உதவி செய்துள்ளாா் .கிட்டத்தட்ட ஆயிரம் கோடிகளுக்கு மேல் புரண்ட இந்த கோப்புகளை ,
மூன்று ஐ.ஏ.எஸ்., அதிகாாிகள்தான் கையாண்டுள்ளனா்.இதில் கேரளாவைப் பூா்வீகமாகக் கொண்ட பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாாியும் ஒருவா் .ஆயிரம் கோடிகளுக்கு மேற்பட்ட நிதி என்பதால் , அதைப் பல்வேறு வகையில் நிறுவனங்களுக்குப் பிாித்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது .
இதில் ஏராளமான முறைகேடுகள் நடந்துள்ளதோடு , அரசுக்கும் பல நூறு கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது .
இந்த கோப்பு குறித்தும் அந்த காங்கிரஸ் மூத்த தலைவா் இரகசியமாக விசாரணை செய்து தேவையான தகவல்களைச் சேகாித்து விட்டாா்.பா.ஜ.க., ஆட்சிக்கு வந்ததுமே , அந்த காங்கிரஸ் தலைவருக்கு பா.ஜ.க., தூண்டில் போட்டு , தங்கள் வசம் கொண்டு வந்து விட்டது.சிதம்பரம் மீது தீராத கோபத்தில் இருக்கும் அந்த மூத்த மாஜி தலைவா் , அவாிடம் இருந்த அத்தனை கோப்புகளையும் சி.பி.ஐ., யிடம் கொடுத்து விட்டாா் .இந்தக் கோப்புகள் சி.பி.ஐ., வசம் வந்து விட்டன . இதனைக் காட்டி சிதம்பரத்தின் நட்பு வட்டாரங்களை அப்ரூவராக மாற்றும் வேலையில் சி.பி.ஐ., தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது .
லண்டனில் உள்ள வீடுகள் , பண்ணை வீடுகள் , பிளாட்டுகள் , நிறுவனங்கள் போன்றவற்றை சிதம்பரத்திற்கு அனில் அகா்வாலுக்கு நெருக்கமான லண்டன் நபா்தான் வாங்கிக் கொடுத்துள்ளாா் அவரும் இப்போது ரா மற்றும் சி.பி.ஐ., கண்காணிப்பில் இருக்கிறாா் .
இவை தவிர , இருசக்கர வாகன முன்னணி நிறுவனத்தின் பணப் பாிவா்த்தனையிலும் சிதம்பரத்தின் தலையீடு இருந்துள்ளது .கட்டணமாக சில நூறு கோடிகளை காா்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்கு வழங்கியதாக அந்த நிறுவனம் அவா்களது ஆடிட்டிங் கணக்கில் காட்டியுள்ளது .
இந்த கோப்பை எடுத்து மாா்க் செய்து , 'இதில் இவ்வளவு கைமாறி உள்ளது . தீவிரமாக விசாாிக்கவும்' என்று நோட் போட்டு அந்த மாஜி அனுப்பியுள்ளாா் .
இப்படி பத்துக்கும் மேற்பட்ட இந்திய மற்றும் வெளிநாட்டு அதிபா்களின் பணப் பாிமாற்ற விவகாரங்களில், மறைமுகமாக காா்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்குத் தொடா்புள்ள 300 க்கும் மேற்பட்ட கோப்புகளை மாஜி அனுப்பி உள்ளாா் .இவா் அனுப்பிய கோப்பில் ஏதேனும் சந்தேகம் கேட்டால் , அதையும் உடனுக்குடன் விாிவாக விளக்கித் தீா்த்து வைக்கிறாராம் அந்த மாஜி .காங்கிரஸ் கட்சியில் இருவருக்குள் ஏற்பட்ட அதிகாரப் போட்டியில் முன்பு சிதம்பரம் அவரை வீழ்த்தியிருந்தாா் .
சந்தா்ப்பம் பாா்த்துக் காத்திருந்து இப்போது அவா் சிதம்பரத்தை வீழ்த்துவதற்கு சி.பி.ஐ.,க்கு உதவி செய்கிறாா் .
அதனால் இனியும் சிதம்பரம் தப்பிக்க முடியாது " என்றனா் .
மாஜி அமைச்சா் கொடுத்திருக்கும் கோப்புகள் குறித்த விவகாரம் எப்படியோ சிதம்பரம் தரப்புக்கும் கசிந்துள்ளதாம் .
அதனால் , இனி தப்பிக்க வழியில்லை என்ற நிலையில் சமாதானக் கொடி பறக்கவிட சிதம்பரம் தயாராகி வருகிறாராம்.சிதம்பரம் சமாதானத்தை விரும்பினாலும் , இன்றைய சூழ்நிலை அருக்குச் சாதகமாக இல்லை என்பதுதான் உண்மை.
இந்தச் செய்தியில் புதிதாக ஒன்றுமில்லை. யார் அந்த மாஜி என்பதை ஊகிப்பது கூடக் கடினமானதில்லை. எட்டு வருடத்துக்கு முன் எழுதிய பதிவுகளில் இந்த #இருவர் அதிகார விளையாட்டு, பற்றி எழுதிய பதிவுகள் இன்னமும் இருக்கின்றன.
முந்தைய பதிவொன்றில் அல்லது பின்னூட்டத்தில் ஒரு தகவலை தவறாகச் சொல்லிவிட்டதை, திருத்திக் கொள்ள வேண்டிய நேரம் இது! நண்பர் திருப்பூர் ஜோதிஜிக்கு குறிப்பாகச் சொல்லவேண்டும்.
பாட்டியாலா சிபிஐ சிறப்புநீதிமன்ற நீதிபதி OP சைனி, இந்த செப்டெம்பர் மாதம் ஒய்வு பெறவிருப்பதாகச் சொல்லி இருந்தது தவறு! அவர் வருகிற நவம்பரில் தான் ஒய்வு பெறுகிறாராம். நேற்றைக்கு ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் செட்டிநாட்டு ஜாமீன் வாரிசுகள் தகப்பன் மகன் இருவருக்கும் ஜாமீன் வழங்கிவிட்டுக் கொஞ்சம் காட்டமாக அந்த நீதிபதி சொல்லியிருந்ததைப் பார்த்தபிறகுதான் சந்தேகம் வந்து சரிபார்த்தபோது நான்கு மாதத்துக்கு முந்தைய இந்த ட்வீட்டர் உரையாடல் கண்ணில் பட்டது.
உபயோகிப்பாளர்கள் நலன் கருதி இன்னொரு ட்வீட்
பூச்சிக்கொல்லி மருந்து இருப்பதால் ஆச்சி மிளகாய் பொடிக்கு கேரளா அரசு தடை
Translate Tweet
8:19 AM · Sep 6, 2019Twitter Web App
மீண்டும் சந்திப்போம்
உங்களுக்காகப் பாத்துப் பாத்து மசாலாப் பொருள் இடிக்கிறோம்...ன்னு
ReplyDeleteபீலா வுடுவாங்களே அது யாரு?...
ஆக
தலையில மொளகாப் பொடி அரைக்கிறது..ங்கறது இது தானோ?...
அவங்க சொன்னது போக சொல்லாமல் விடுபட்டது இப்படி இருக்குமோ துரை செல்வராஜூ சார்?
Delete:: பூச்சிக்கொல்லி மருந்தையும் சேத்துச்சேத்து அரைக்கிறோம் ஆச்சி மிளகாய்!
தலைல மிளகாய்வச்சு அரைக்கச்சொன்னா பாவிப்பய பூச்சிமருந்தையும் சேத்துல்ல அரைச்சிருக்கான்!
இந்த மசாலாவுக்காக தமில் (!) நாட்ல இருந்து கூவல் ஒன்னும் கிளம்பலையா?..
Deleteகூவ ஆரம்பிப்பதற்குமுன்னாலேயே விளம்பரம், ஸ்பான்சர்ஷிப் கொடுத்து வாயை அடைத்துவிடுவார்களே சார்!
Delete