தலைவர்கள், தலைமைப்பண்பு குறித்து இந்தப் பக்கங்களில் விரிவாகவே பேசி வந்திருக்கிறோம். ஒரு மாற்றத்தின் உந்துசக்தியாகவே தலைவர்கள் இருப்பது அல்லது இருக்கத் தவறுவது இவைகளை இந்திய அரசியல் தலைவர்கள், நிகழ்வுகளை வைத்தே விளக்குகிற முயற்சியாக அந்தப்பதிவுகள் இருந்ததை இப்போது நினைத்துப் பார்க்கிற தருணம்!
சந்திராயன் 2 பயணம் எல்லாம் திட்டமிட்டபடியே நடந்து வந்ததில் ஆர்பிட்டரில் இருந்து விக்ரம் என்ற பெயரில் நிலவில் இறங்குகிற கலம்,கடைசி நிமிடத்தில் தொடர்பு விடுபட்டுப் போனது, இரவுபகலாக இதற்காக உழைத்த விஞ்ஞானிகளுக்கு எவ்வளவு ஏமாற்றமாக இருந்திருக்கும் என்று விவரித்துச் சொல்ல வேண்டியதே இல்லை! அந்த இக்கட்டான சூழ்நிலையில் ஒரு நல்ல தலைவனுக்குண்டான குணங்களோடு பிரதமர் நரேந்திர மோடி, விஞ்ஞானிகளைத் தேற்றிய விதம் இருந்தது. நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்பதற்கு மேல் ஒரு நல்ல தலைவன் செய்திருக்கக் கூடியது வேறென்ன சொல்லுங்கள்!
விக்ரம் என்கிற lander வேண்டுமானால் தொடர்பிழந்து போயிருக்கலாம்! ஆனால் அதன் பணி 5% தான்! ஆர்பிட்டர் சந்திரனை மிக அணுக்கமாகப் படமெடுக்க முடியும்! நிலவைக்குறித்த ஆய்வுகளை இன்னும் செம்மையாக மேற்கொள்ளத் தேவையான தகவல்களைத் திரட்ட முடியும் என்பதே மிக நல்ல செய்தி! வழக்கம் போல இதையும் கலாய்க்க வந்த பாகிஸ்தானிய அமைச்சர் ட்வீட்டரில் வறுபட்டு வருகிறாராம்!
Science & Technology Minister of Pakistan
doesn't even know the spelling of 'Satellite'. Not only they're illiterate, they're too dumb to even use a feature like auto-correct
#Chandrayan2 #ISRO
3:31 AM · Sep 7, 2019
சிங்கத்தைப்பற்றி பேசுகிற இடத்தில் ஈ கொசு எறும்பைப் பற்றி எல்லாம் பேசலாமா? பொருத்தம் தானா என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறதா? இது மதுரை திமுகவின் 42வது வட்டக் காமெடி அல்லது லந்து! இந்தப்போஸ்டர் மு.க.அழகிரியை வம்பிழுக்கும் வகையில் ஒட்டப்பட்டுள்ளதா? அல்லது மதுரை இன்னும் மு.க.அழகிரியின் கோட்டை தான் என்பதை உதயநிதி ஸ்டாலினுக்கு உணர்த்தும் வகையில் ஒட்டப்பட்டுள்ளதா? மருதைக்காரனான எனக்கே கொஞ்சம் குழப்பம் தான்!
மீண்டும் சந்திப்போம்.
தல்லா(!) குளம்!...
ReplyDeleteவால்க தமி(!)ல்!..
பீபீகுளம், சொக்கிகுளம், தல்லாகுளம் இவையெல்லாம் இன்றைய மதுரையின் சிலபகுதிகள்.நாயக்கர் காலத்துக்குப் பிந்தையதாக இருக்கலாம்! மதுரைமதுரைக்குத் தெற்கே இன்னமும் தமிழ் வாழ்கிறது துரை செல்வராஜூ சார்!
Deleteஆனால் போஸ்டரில் குளம் என்றில்லாமல் குலம் என்றிருக்கிறது!
Deleteஸ்ரீராம்! மாடக்குளம் கண்மாய் தொடங்கி ஒரு மாலையாக இன்றைய மதுரையைச் சுற்றிக் கண்மாய்களும் குலங்களுமாய் வரிசையாக நிரம்பிக் கடைசியில் வண்டியூர்க்கண்மாயில் நிறைகிற காலமெல்லாம் போச்சு! அங்கே அந்தப்பெயரில் கண்மாயோ குளமோ இருந்தது என்ற ஞாபகச் சின்னமாக பெயர்கள் மட்டும் இருக்கிற இன்றைய மதுரை, மழை, நீருக்காகத் தவித்துக் கொண்டிருக்கிறது!
Deleteஎழுத்துப்பிழையைக் கூட மன்னித்துவிடலாம். ஆனால் கண்மாய் குளங்களைத் தூர்த்துப் பட்டாபோட்டு விற்க ஆரம்பித்த திமுக முன்னோடிகளை ......?