இந்த இரண்டரை நிமிட வீடியோ செய்தியைப் பார்த்து விட்டு என்ன நினைக்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா என்று நான் கேள்வி கேட்கப்போவதில்லை! எங்களைக் கேள்வி கேட்கிற உனக்கு பதில் தெரியுமா? தெரிந்தால் சொல்லிவிட்டுப் போயேன்! அதென்ன, எங்களைக் கேள்வி கேட்பது? இப்படி நண்பர்கள் மனதில் ஓடுகிற மாதிரிப் பட்சி சொல்கிறது!😉🙏
ஆந்திராவில்...ஜெகன்மோகன் அரசை எதிர்த்து போராட்டம் நடத்தவிருந்த சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
தேர்தல் நேரத்தில்..நாயுடுகாரு ..தமிழகத்திற்கு நேரில் வந்திருந்து ஆதரவு தெரிவித்து போனாரே..அதனால்...
''ஜனநாயக படுகொலை செய்யும் பாசிச ஜெகன்மோகன் ரெட்டி ஒழிக'' என்று வழக்கமான முறையில் தமிழகத்திலிருந்து எதிர்க்கட்சிகளின் குரல் கேட்குமா என்றால் கேட்காது.
ஏனெனில்..வேறு சில காரணங்களுக்காக, ஜெகன்மோகன் ரெட்டி தேவைப்படுகிறார். அதனால் பகைத்துக் கொள்ளாமல் பதுங்குகின்றன.
சில கட்சிகள் குத்தகை எடுத்து பேசும் பாசிஸ எதிர்ப்பும், வெங்காயமும் ஒன்று. உரிக்க உரிக்க ஒன்றுமில்லை
நன்றாகப்பார்த்துவிட்டு இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்ல முடிந்தவர்கள் சொல்லலாம்! நண்பர் ராஜசங்கருடைய முகநூல் பகிர்வு வழியாக இந்தச் செய்தி, படத்தைப் பார்த்தேன். ஒரு முன்னாள் வங்கியாளனாக இதன் பின்னணி என்னவாக இருக்கும் என்பது ஊகிக்க முடிந்ததும் கூட! Demonetisation ஏன் நிறையப் பேருக்கு வெளியே சொல்லமுடியாத அளவுக்கு வலித்தது, ஊமைக்குத்தாக இருந்தது என்பதுகூடப் புரிய வரலாம்!
மனுஷ்ய புத்திரன் என்கிற இந்த திமுக ஆசாமி மட்டுமல்ல திமுக தலீவரே, பேசும்போதெல்லாம் காமெடியாகிக் கொண்டு தான் வருகிறார்! சமீபத்தில் சாத்தனார் என்பதைக் கீர்த்தனராக்கிப் பேசிய வீடியோவைப் பார்த்தவர்கள் பாக்கிய வான்கள்! ஜட லோக சாம்ராஜ்யம் அவர்களுடையது!
இது இன்றைக்கு நியூஸ் 7 சேனலின் தளத்தில் பார்த்தது.
விவசாயிகள் பெயரில் பெரு முதலாளிகள் வங்கிகளில் நகைக் கடன்களை வாங்குவதைத் தடுக்கவே, நகைக் கடன் வழங்குவதில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை அருகே திருமயத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த ஹெச். ராஜா, செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ப. சிதம்பரத்தை போன்று தமிழகத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார் என தெரிவித்தார். தமது இலவச இணைப்பில் உள்ள ஒரு கட்சியை கழற்றி விடுவது திமுக-வுக்கு நல்லது என்றும் அவர் கூறினார்.
கேள்விகள் கேட்பதும் விடைதேட முயற்சிப்பதும் வளர்ச்சியின் அறிகுறி, வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அம்சமும் கூட என்பதைப் புரிந்துகொண்டால் கேள்விகளை எதிர் கொள்ளத் தயங்கவும் மாட்டோம்! வெளிப்படையாக பதில் சொல்லவும் தயங்கமாட்டோம்!
மீண்டும் சந்திப்போம்.
No comments:
Post a Comment
ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!