டீலா? No டீலா? சீனாதானாவும் DK சிவகுமாரும்!

இன்றைய முக்கியச் செய்தியாக பிரிட்டிஷ் நாடாளு மன்றத்தில், பிரதமர் போரிஸ் ஜான்சனை ஆளும் கட்சி உறுப்பினர்களே கைகழுவிவிட்டதில், மெஜாரிட்டியை இழந்து வரும் அக்டோபர் 14 வாக்கில் பொதுத்தேர்தலைச் சந்திக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கிறது. #nodealbrexit என்று அக்டோபர் 31 கெடுவுக்குள் எந்தவிதமான இடைக்கால ஏற்பாடுகளும் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதான போரிஸ் ஜான்சனுடைய பிடிவாதத்துக்கு கடிவாளம் போடப்பட்டிருப்பதன் அடையாளமாக இது இருக்கிறது என்று சுருக்கமாகப் புரிந்துகொள்ளலாம். 



#brexit ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது என்று பிரிட்டன் பொதுக்கருத்து வாக்கெடுப்பில் 51:49 என thin difference  இல் முடிவெடுத்த நாளில் இருந்தே, குழப்பங்களும் ஆரம்பித்து விட்டன. அடுத்த கட்டத்துக்கு நகர்வதில் ஏற்பட்ட பல்வேறுவிதமான கருத்து மோதல்களில் தெரெசா மே பிரதமர் பொறுப்பிலிருந்து விலக நேரிட்டது. போரிஸ் ஜான்சன் பிரதமரானார். #nodealbrexit என்றால் என்ன, ஏன் இப்படிக் குழம்புகிறார்கள் என்பதைக் கொஞ்சம் புரிந்துகொள்ள  

இனி கஸ்டடி வேண்டாம் என்று கூறியபிறகும்... நீதிபதி பானுமதி அமர்வு....சிபிஐ தான் 5 ஆம் தேதி வரை வைத்துக் கொள்ளவேண்டும் என்று மீண்டும் அனுப்புவதும்...
அமலாக்கத்துறை கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு காத்துக் கிடப்பதும்...
இவ் வழக்கில் முக்கிய நடவடிக்கை எடுத்த அமலாக்கத் துறையின் முன்னாள் அதிகாரி கர்னால் சிங் மீது விசாரணை முடுக்கி விடப் பட்டிருப்பதும்..
முரண்களும் , இருட்டறையாக இருக்கும் சட்டம் நிகழ்த்தும் சுவாரஸ்யங்களுமாக...பெரும் பொருளாதார குற்ற திரில்லர் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இதையெல்லாம் கவனித்தால்...பொது மக்களுக்கு தான் மனஉளைச்சல். அவர்கள் thumbs up காட்டி சிரித்தபடியே போகிறார்கள். வந்தும் விடுகிறார்கள்.


In an unprecedented way, the bench headed by Justice Banumati ordered that “status quo” be maintained on Chidambaram’s custody despite the CBI insisting that it does not require his further custodial interrogation in the case.In an affidavit filed by CBI S P Rajpal Meena, the probe agency said: “I state and submit that entertaining of a petition under Article 136 of the Constitution directly against an order of remand passed by the competent court in exercise of discretionary jurisdiction under section 167 of the CrPC would set a very bad precedent.”
It said there is a remedy available against the orders before the higher forum and it is settled legal position that this court would not invoke its constitutional discretionary jurisdiction under Article 136, directly against an order of the Special Judge remanding an accused to a few days of police custody. என்கிறது PGurus தளச் செய்தி. கள்ளன் பெருசா காப்பான் பெருசா என்ற கேள்வி இங்கே தெக்கத்திச் சீமையில் நீண்ட நாட்களாகவே இருந்துவருவது தெரியுமில்லையா?  

கர்நாடகக்  காங்கிரசுக்கு மட்டுமல்ல, பொதுவாகக்  CONgress கட்சி, ஆட்சிக்குச் சிக்கல் வரும்போதெல்லாம் ரட்சகனாகவும் பணம் செலவழிப்பவராகவும் இருந்த D K  சிவகுமார் நான்கு நாட்கள் அமலாக்கத்துறை விசாரணையில் போக்குக் காட்டி வந்தநிலையில் நேற்றைக்கு கைது செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தியில் உச்சுக் கொட்டுவதற்குமேல் ஒன்றும் சொல்ல தோன்றவில்லை. ஆனால் அட்சய் சந்தர் கார்டூன் கொஞ்சம் சுவாரசியமாகத்தான் இருக்கிறது. 
Bengaluru: Buses were torched and schools and colleges shut as a precautionary measure as the Karnataka Congress called for a state-wide bandh on Wednesday to protest against the arrest of its troubleshooter DK Shivakumar by the Enforcement Directorate under the Prevention of Money Laundering Act (PMLA) after a long session of interrogation.
Soon after the Kanakapura MLA’s arrest, protests erupted across Karnataka, which turned violent in Bengaluru Rural and Ramanagaram districts, which are Shivakumar’s strongholds. இது இன்றைய நி(க)லவரம். எடியூரப்பா பிஜேபி கட்சிக்காரர்கள் யாரும் சிவகுமார் கைதைப்பற்றி எதுவும் சொல்லவேண்டாமென்று வாய்ப்பூட்டு போட்டிருப்பதில் என்னவென்று புரிந்து கொள்வது? 
சிவகுமார் கைது என்றவுடன் கர்நாடக காங்கிரஸ்காரர்கள் கொந்தளித்த விதமும்  சிவகங்கைச் சின்னப்பையனுக்கு இங்கே தமிழக காங்கிரஸ் பெயரளவுக்கு நடத்திய கண்டன ஆர்ப்பாட்டமும் வேற லெவலில் செய்தி சொல்கிறதோ? 

மீண்டும் சந்திப்போம்.


No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!