பிரதமர் நரேந்திர மோடி தனது 69வது பிறந்தநாளை தன்னுடைய சொந்த மாநிலத்தில் சர்தார் சரோவர் அணையில் நர்மதை நதிக்கு அஞ்சலி செலுத்திக் கொண்டாடுவதன் பின்னணியில், குஜராத் முதல்வராக இருந்த நாட்களில் இந்த அணை கட்டப்படுவதற்கு இருந்த முட்டுக்கட்டைகளைத் தாண்டிய விதம் இருக்கிறது. 1961 களில் நேரு காலத்திலேயே பேசப்பட்டதுதான் என்றாலும் செயல்வடிவம் பெறுவதற்கு, ஒரு உறுதியான அரசியல் தலைமையை அவர் முதல்வராக இருந்த நாட்களில் தான் தர முடிந்தது! இன்றைக்கு உலகின் 3வது மிகப்பெரிய அணைக்கட்டாக உயர்ந்திருக்கும் சர்தார் சரோவர் அணை, குஜராத் மாநிலத்துக்கு மட்டுமல்ல, அண்டை மாநிலங்களான , மத்தியப் பிரதேசம், மஹாராஷ்ட்ரா, ராஜஸ்தான் இவைகளுடைய தண்ணீர் தேவைகளையும் பூர்த்தி செய்வதாக, மின்சாரத் தேவைகளிலும் பங்களிப்பதாக உருவாகியிருக்கிறது.
இந்த 12 நிமிடச் செய்தித் தொகுப்பில் கொஞ்சம் விவரங்களை அறிந்து கொள்ளலாம்! நாட்டு நலனில் அக்கறை கொண்ட தலைவராக, பிரதமர் நரேந்திர மோடி இந்த அணையைப் போலவே உயர்ந்து நிற்கும் இந்தத் தருணத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை நெஞ்சின் அடி ஆழத்திலிருந்து தெரிவிப்பது ஒவ்வொரு இந்தியனுடைய கடமையும், பெருமிதமும் கூட!
ஐந்து மாதங்களில் இரண்டாவது முறையாக ஒரு பொதுத் தேர்தலை இஸ்ரேல் இன்றைக்குச் சந்திக்கிறது. நெஸ்செட் என்றழைக்கப்படும் இஸ்ரேலின் நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 120 இடங்களில், பிரதமர் நேத்தன்யாஹூவின் வலதுசாரி லிக்குட் கட்சியும் எதிரணியில் நட்டநடு சென்டர் ப்ளூ அண்ட் வைட் கட்சியும் சரி சமமாக தலா 35 இடங்களைப் பெற்றதில், மீதமுள்ள 50 இடங்களில் உதிரிக்கட்சிகளே வென்றதால் உதிரிக் கட்சிகளின் ஆதரவோடுதான் ஆட்சி அமைக்க முடிந்தது உதிரிகள் தொல்லை தாங்கமுடியாமல் பிரதமர் ஐந்து மாத இடைவெளியில் இன்னொரு பொதுத்தேர்தலை அறிவிக்கிற மாதிரி ஒரு இக்கட்டான நிலைமை.
Mr Netanyahu declared victory and it appeared that he would be able to secure a majority with the backing of smaller right-ring and religious parties. But after several chaotic weeks the attempted coalition-building collapsed into recriminations. On the surface was a dispute over Israel's secular versus its religious character, says the BBC's Tom Bateman in Jerusalem. But ultimately, our correspondent adds, Mr Netanyahu's problems stemmed from a narrowing range of options to build a governing bloc, weakened as he is by the charges of bribery, fraud and breach of trust he faces in three corruption cases, pending a final hearing. He has denied any wrongdoing. என்கிறது BBC
இன்று காலை தன் மனைவியுடன் வாக்களித்தபிறகு பிரதமர் நேத்தன்யாஹூ வாக்காளர்களிடம் இதர கட்சிகளிடம் வீண் அடிக்காமல் தனது கட்சிக்கே வாக்கு அளிக்குமாறு வேண்டிக் கொண்டிருப்பதாக தற்போதைய செய்திகள் சொல்கின்றன. தேர்தல் முடிவுகள் எப்படி வருகிறது என்பதைப் பொறுத்து இருந்து பார்க்கலாம்!
இப்போது படித்ததில் பிடித்தது
உடன்பிறப்பே,
இப்போதுதான் வயிற்றுப்பிழைப்புக்காக மொழிப்போரை கையில் எடுத்த எமக்கு பேரிடி,
சமூகநீதி காக்க, அலைக்கற்றை பெற வந்தோருக்கு வெறும் அன்பளிப்புக்காக ஒப்பம் அளித்த எமக்கு விழுந்தது ஓர் அடி,
சமூகநீதி காக்க, அலைக்கற்றை பெற வந்தோருக்கு வெறும் அன்பளிப்புக்காக ஒப்பம் அளித்த எமக்கு விழுந்தது ஓர் அடி,
அனைவரும் கைபேசி மலிவாக பெற்று, சமூகநீதி காக்க தம்பி ஆ ராசா பெற்ற ஊக்கத்தொகை குற்றமென தொடர்ந்த வழக்குகளில், எமது குடும்பம் முழுவதையும் சேர்த்து விடுபெற்றோம் என்று பெருமூச்சு விட்டிருந்த தமிழனுக்கு வந்தது ஒரு சோதனை !
"செய்வாயா நீ" என்று கேட்காமலேயே "செய்வேன் நான்" என்று எம்மை விடுவித்த நீதியரசர் "செய்நீ" ஓய்வு பெற்றுள்ளார். அவருக்கு பதிலாக "ஊழலுக்கு எதிரி" எனும் ஒரு நீதியரசரிடம் எமது வழக்குகளை மதவாத தில்லி உயர் நீதிமன்றம் மாற்றியுள்ளது, பாசிச மோடியுடன் கைகோத்துள்ளது என்பதையே காட்டுகிறது.
யோசித்துப்பார், ஒட்டு மொத்த குடும்பமும் திஹாரில் என்றால், கழகமெங்கே, மொழி காப்பதெங்கே, சமூக நீதியெங்கே, பெரியார்(ஆல்) மண்ணான தமிழகம் மீண்டும் ஆன்மீக பூமியாக மாறி தமிழன் முன்னேறும் அபாயம் கருமேகமாக எமக்கு காட்சியளிக்கிறது.
விழிப்போம், தனி தமிழ்நாடும், முக்கியமாக கழக நீதியரசரும் மட்டுமே தீர்வு.
வழக்கம்போல், கிழி கொண்டுவரும் தொண்டரிடம், பழி வாங்காமல், கழக வழி நடக்க, விழிக்கட்டும் தமிழன். கொட்டட்டும் நிதி, நிரம்பட்டும் எம் பொற்கிழி...
இரண்டாம் கலைஞன்,
சுடலை.
விடாதுதுரத்தும் 2 ஸ்பெக்ட்ரம்
மீண்டும் சந்திப்போம்.
பிரதமர் மோடி அவர்களுக்கு எல்லா நலன்களையும் தந்தருள இறைவனை வேண்டிக் கொள்கிறென்..
ReplyDeleteவாருங்கள் துரை செல்வராஜூ சார்!
Deleteஅப்படியே நமது ஜனங்களுக்கும் அரசியலில் நல்லது செய்கிறவர் யார், சொந்த ஆதாயத்துக்காகவே பெனாத்திக் கொண்டிருக்கிறவர் யார் என்பதை புரிந்துகொண்டு, கழித்துக் கட்டுகிற பக்குவமும் வரட்டும் என்பதையும் சேர்த்தே பிரார்த்தனை செய்துகொள்வோம்!
>>> இரண்டாம் கலைஞன்,
ReplyDeleteசுடலை. <<<
:( !?...
அது இணையத்தில் இசுடாலினுக்கு இம்சைஅரசன் வாரிசு என்பதால் இரண்டாம் கலீஞர் என்று செல்லப்பெயர்! இசுடாலினைத் தமிழ்ப்படுத்தி சுடலை என்றும் சொல்கிறார்கள் போல!
Delete