சேகர் குப்தா! The Great Hack! இந்திய ஜனநாயகம்!

சேகர் குப்தா மாதிரி அனுபவமுள்ள பத்திரிகையாளர்கள் கூடப் பலசமயங்களில் சம்பந்தம் இல்லாத விஷயங்களை போட்டுக் குழப்பிக் கொள்வது உண்டு. அதுவும் சொந்த விருப்பு வெறுப்புகளோடு செய்திகளை அனலைஸ் செய்தால் எப்படியிருக்கும் என்பதைச் சொல்லவேண்டியதே இல்லை!பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் மிகவினோதமான விஷயங்கள் சமீபத்தில் நடந்தன. ஆளும் கன்செர்வேடிவ் கட்சிப் பிரதமர்  தெரசா மே பதவியை ராஜினாமா செய்ய வைக்கப் பட்ட பிறகு, அதே கட்சியைச் சேர்ந்தநாடாளுமன்றத்தில்  போரிஸ் ஜான்சன், ஒரு மாத காலத்துக்கும் குறைவாகப் பிரதமராக இருந்து வருகிறார். ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவது என்று மிக மெல்லிய வித்தியாசத்தில் பிரிட்டிஷ் மக்கள் முடிவு செய்து மூன்று ஆண்டுகளாகியும், அதற்கான மாற்று வழிகளைத் தீர்மானிக்க முடியாமல், அங்கே அரசு தடுமாறி வருகிறது. என்ன ஆனாலும் சரி, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறியே தீருவோம் என்று குதித்துக் கொண்டிருக்கும் போரிஸ் ஜான்சன் கடந்த சிலநாட்களில்  முக்கியமான தீர்மானங்களில் இருமுறை  நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப் பட்டிருக்கிறார் என்ற பின்னணியை மனதில் வைத்துக் கொண்டு சேகர் குப்தா இந்த விஷயத்தில் என்ன சொல்கிறார் என்பதைக் கொஞ்சம் கேளுங்கள்! டீலா நோ டீலா என்று பிரிட்டன் தவித்துக் கொண்டிருப்பதைக் குறித்து நமக்கென்ன கவலை? அங்கே தான் சேகர் குப்தா, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டிருப்பதோடு, இந்திய நாடாளுமன்றத்தையும் முடிச்சுப்போட்டுச் சில விஷயங்களை சொல்வது வருகிறது!  கொஞ்சம் சுவாரசியமாகவே தன்னைக் குழப்பிக் கொள்கிறார் என்றும் சொல்லலாம்! 17 நிமிடம்தான்! தவறாமல் பாருங்களேன்!


        
bandhuSeptember 10, 2019 at 8:13 PM
The Great Hack என்ற டாக்குமெண்டரி netflix இல். இருக்கிறது. இதில், ட்ரம்ப் எலக்ஷனில் எப்படி ஜெயிக்க முடிந்தது என்று விவரமாக விளக்கியிருக்கிறார்கள். அமெரிக்கா மட்டுமல்ல. ஜனநாயக நாடுகள் எல்லாவற்றிலுமே எலெக்ஷனை எப்படி வளைத்து வெற்றிபெறுவது என்று பயமுறுத்தி இருக்கிறார்கள். பிரெக்ஸிட், மலேசியா தேர்தல், பிரேசில் தேர்தல், டிரினிடாட் தேர்தல், அமெரிக்கா தேர்தல் என்று எல்லாவற்றிலுமே இதே பார்முலா. வழிமுறைகள் தான் வேறு.

நம்ம ஊர் 'போரளிகள்' எல்லாமே இதன் ஒரு பாகம் தான். ஒருவர் வேலைக்கோ / முழுநேர தொழிலாளியாகவோ / முதலாளியாகவோ உழைத்தால் தான் வாழமுடியும் என்ற போது, இவ்வளவு பேர் முழுநேர 'போராளி' யாக எப்படி இருக்க முடிகிறது? இவர்களுக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்ற கேள்விக்கு விடை அளிக்கிறது இந்த டாகுமெண்டரி.
நேரம் கிடைத்தால் பாருங்கள்!  

முந்தைய பதிவில் இப்படி நண்பர் எனக்குச் சொல்லி இருந்ததை, சேகர் குப்தாவுக்கும் சொல்ல எனக்கு ஆசைதான்! அதற்கு முன்னால் இந்த 2 மணிநேர வீடியோ டாக்குமென்டரியை நேற்றிரவே பாதி பார்த்துவிட்டேன். சேகர் குப்தாவுக்கு Cambridge Analytica பற்றித் தெரிந்திருக்காதா? அதுவும் அவர் பெரிதும் ஆதரிக்கிற காங்கிரஸ் கட்சியையும் தொடர்பு படுத்தி சிலகாலத்துக்கு முன்பு நிறையத் தகவல்கள் வந்து கொண்டிருந்தனவே!

Data rights are human rights” is the rallying cry of this gripping, challenging documentary by Karim Amer and Jehane Noujaim, about the biggest scandal of our time: the gigantic question mark over the legality of the Brexit vote.

It is about the Trump cam.paign, the Leave.EU campaign and many other reckless electoral adventures all over the world and their connection with Cambridge Analytica, the British data research company that cunningly harvested information from millions of Facebook users and their friends via an innocuous-seeming “personality” questionnaire. They put this gigantic database to lucrative work with machine-tooled marketing campaigns for Trump and the Brexiters; after the company declared bankruptcy, its documentation may never come to light. என்று பீட்டர் ப்ராட்ஷா The Guardian நாளிதழில் இந்த டாகுமெண்டரி மீதான விமரிசனப் பார்வையாக எழுதியது இந்தவருட ஜூலையில். அதற்கும் முன்னால் நம்மூர் FirstPost தளத்தில் சென்ற வருட  மார்ச் 17 இல்   இந்த  விவகாரம் வெடித்துக் கிளம்பிய நாள்முதல், இங்கே இந்தியாவில் எந்த எந்தக்கட்சிகள் வாடிக்கையாளராக இருந்தன, இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது, என்று   இந்த வருட மார்ச் வரையிலான ஓராண்டு நிகழ்வைத் தொகுத்துத் தந்திருக்கிறது. A report by The Observer reveals that Facebook was aware of the data harvesting scandal much before March 2018, as far back as 2016, when Cambridge Analytica started work on the Trump campaign. A meeting was hosted at Marc Andreessen's (Facebook board member and confidant of CEO Mark Zuckerberg) office with Christopher Wylie. Though Andreessen denies having ever met Wylie. நீலக்கலரில் சில சுட்டிகள் இருக்கின்றன. நேரமிருந்தால் பாருங்கள்!

கிடைக்கிற தகவல்களை வைத்து ஒரு மனிதனுடைய உளவியலை அனுமானிக்க முடியும் என்பது தெரிந்தது தான்! Mindhunter என்று கிரிமினல்களை ஆராய்ந்து ஒரு proile உருவாக்குகிற அமெரிக்க FBI விஞ்ஞானியை மையமாக வைத்து 2 சீசன்கள் வெப் சீரீசாகப் பார்த்ததுமுண்டு!   ஆனால் கிடைக்கிற தகவல்களைவைத்துக் கொஞ்சம்  manipulate செய்து மனிதர்களை ஒரு குறிப்பிட்ட முடிவெடுக்கத் தூண்டவும் செய்யலாம் என்ற மாதிரியான data science கொஞ்சம் விபரீதமாகத்தான் தெரிகிறது. சுஜாதா இதையே தனது சொர்கத்தீவு நாவலில் வேறொரு விதமாகச் சொல்லி இருந்ததும் நினைவுக்கு வருகிறது.

இந்திய ஜனங்களையோ இந்திய ஜனநாயகத்தையோ இந்த டேட்டா சயன்டிஸ்டுகளால் புரிந்து கொள்ள முடியுமா manipulate செய்ய முடியுமா என்பது என்னைப்பொறுத்தவரை இன்னமும் ஒரு கேள்விக் குறியாக மட்டுமே இருக்கிறது. தமிழேண்டா போராளிகள் உருவான மாதிரி வேறெங்கும் காணமுடியவில்லை என்பதாலா?

மீண்டும் சந்திப்போம்.                       

4 comments:

 1. நினைக்கவே நடுக்கமாக இருக்கிறது. மனித மூளையின் விபரீதங்கள்
  எப்படியெல்லாம் மற்றவரை அழிக்கப் பயன்படுகிறது.
  எல்லாம் பணத்துக்காக.

  நன்றி ஜி.

  ReplyDelete
  Replies
  1. இதில் பயப்படுவதற்கு என்ன அம்மா இருக்கிறது? கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்தாலே போதும்!

   இந்தப் பதிவில் data science என்று ஒரே ஒருமுறைதான் எழுதியிருக்கிறேன். ஆனால் முகநூல் தளம் போனால். data science என்றொரு விளம்பரம்! கோர்ஸ் படித்தால் 16 லட்சம் சம்பளம் என்று ஆசைகாட்டல் வேறு. இணையம் என்று வந்துவிட்டால் முன்னெல்லாம் phishing sites என்று தான் சொல்வார்கள்! இப்போது கூகிள் முதற்கொண்டு எல்லோருமே இந்த data வை யாரிடம் எவ்வளவுக்கு விற்கலாம் என்றுதான் அலைகிறார்கள்.

   Cambridge Analytica திவாலானதாக அறிவிக்கப்பட்டு, தகவல்திருட்டின் கோரங்களை மூடி மறைத்து விட்டார்கள். இதில் அவர்களைவிட அதிகம் சேதப்பட்டிருப்பது முகநூல்தான்!

   Delete
 2. இன்றைய தேதியில் உலகிலேயே மனிதனுக்கு அழிவை தரக்கூடிய நிறுவனங்களில் முதன்மையானது Facebook என உறுதியாக நம்புகிறேன். நாம் பார்க்கும் ஒவ்வொரு வீடியோவும், அதில் உள்ள ஒரு சுட்டியை அழுத்தும் செயலும், சிறியதாக உள்ள ஒரு படத்தை பெரியதாக நாம் அதன் மேல் செய்யும் க்ளிக்கும், Facebook இனால் சேமிக்கப் படுகின்றன. இதை வைத்து நம் profile build செய்யப்படுகிறது. அதன்மூலம் நாம் எப்படிப்பட்டவர் என்ற பிம்பம் அவர்களுக்கு தெளிவாகிறது.

  உதாரணத்துக்கு, நான் அமெரிக்காவில் வாழும் இந்தியன். நான் க்ளிக் செய்து படிக்கும் பலவும் இந்தியா தொடர்பான செய்திகள். நண்பர்கள் பலரும் இந்தியாவில் வாழ்பவர்கள். இப்போது ட்ரம்ப் தேர்தலுக்கு என் வாக்கும் தேவை என்றால் ட்ரம்ப் இந்தியா பற்றி சொன்ன நல்ல விஷயங்கள் / இந்தியா உடன் வர்த்தகம் வளர்ப்பது பற்றி ட்ரம்ப் சொன்னது / பாகிஸ்தானுக்கு எதிராக சொன்னது / போன்ற நியூஸ் என் facebook பக்கத்தில் தோன்ற ஆரம்பிக்கும். மறுபடி மறுபடி அதை பார்க்கும்போது, ட்ரம்ப் இந்தியருக்கு நெருக்கமானவர் என்ற பிம்பம் கட்டமைக்கப் படும். இதில் உள்ள நியூஸ் பெரும்பாலும் பொய்யாக இருக்காது. என்ன. ட்ரம்ப் இந்தியாவுக்கு எதிராக சொன்னது என் facebook பக்கத்தில் தோன்றாது!

  data scienceக்கு பல நல்ல பலன்கள் உள்ளன. அது ஒரு கருவி மட்டுமே. அதை எதற்கு உபயோகப் படுத்துகிறோமோ அதன் படி பலனும்!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் பந்து!

   நேற்றிரவே The Great Hack பார்க்க ஆரம்பித்து, இப்போது முடிக்கும் தருணம்! கொஞ்சம் சுவாரசியமான முறையில் எடுத்திருக்கிறார்கள் என்பதற்கு மேல் பயமுறுத்துகிற மாதிரியோ, ஏற்கெனெவே Cambridge Analytica பற்றி வெளியே தெரியாத தகவல்களோ இல்லை. என்பதனால் தான் சுருக்கமாகச் சொல்லிவிட்டு சுட்டிகளைக் கொடுத்திருக்கிறேன். இன்றைக்கு பிரிட்டிஷ் உளவு நிறுவனங்கள் எப்படி The Guardian, The Observer நாளிதழ்களைத் தங்களுடைய நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றொரு செய்தியைப் படித்தேன். இதே போல கூகிளும் அமெரிக்க அரசுக்கு மிக இணக்கமாகச் செயல்படுவதும் ஏற்கெனெவே தெரிந்த செய்தி. முகநூலில் கணக்கு இருந்தாலும் அதைப்பயன்படுத்துவதில்லை என்பதற்கு இங்கே தமிழ் இணையச் சூழலுக்கென்றே உண்டான கோளாறுகள் மட்டுமே காரணம். ஆனால் நேசிப்பதற்கு எந்தவிதமான காரணமும் இதுவரை எனக்குத் தெரியவில்லை.

   Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!