அம்புட்டு நல்லவனா நீயி? சீனாதானா, டொனால்ட் ட்ரம்ப் ஸ்டண்டுகள்!

சீனாதானா தான் திஹார் சிறைக்குப் போவதைப் பற்றிக் கூடக் கவலைப் படவில்லையாம்!  நாட்டின் பொருளாதாரம் பற்றித்தான் கவலை என்று சொன்னாராம்! காங்கிரஸ் ஆதரவு The Print தளத்தில் நேற்றைக்கு குமார் கேட்கர் என்கிற காங்கிரஸ் ராஜ்யசபா உறுப்பினர் ரொம்பவுமே உருகி உருகி எழுதியிருக்கிறார். Chidambaram won’t get bail under Modi rule. Everyone isn’t Salman Khan It is the economy, stupid. Time Modi government listens to P. Chidambaram and Manmohan Singh என்ற தலைப்பில் When former Finance Minister P. Chidambaram was being taken to prison Thursday after a CBI court rejected his bail petition in a money laundering case, a reporter asked him, “Are you not worried (that you are) going to Tihar Jail?” The veteran economist and politician’s instant response was, “I am more worried about our economy!” என்று ஆரம்பிக்கிற உருகல் இங்கே.  நேரமிருந்தால் கொஞ்சம் முழு காமெடியையும் படித்துப் பார்க்கலாமே! 



சீனாதானா அம்புட்டு நல்லவனாய்யா நீயி என்று 2013  ஜூலையில் சதீஷ் ஆசார்யா வரைந்த கார்டூன் இப்போதும் கேட்கிற மாதிரி இருக்கிறதே!  சீனாதானாவை இன்னமும்  பொருளாதாரப் புளி என்று நம்புவதில் காங்கிரஸ் கிறுக்கு மாய்க்கான்கள் கட்சி என்று வெளிப்படுவதைத் தவிர வேறென்ன?


  
எங்கப்பா யார்னு தெரியுமான்னுட்டே எத்தனை நாள்தான் ஓட்ட முடியுமாம்?


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை யாரும் அம்புட்டு நல்லவனா நீயி என்று கேட்பதில்லை. எப்போது இந்த ஏழரை பதவியை விட்டு விலகும் என்று உள்நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகள் அத்தனையுமே சேர்ந்து  தவித்துக் கொண்டு இருக்கிறார்கள்! இன்றுடன்  இஸ்லாமியத் தீவீரவாதிகள் அமெரிக்காவில் தீவீரவாதத் தாக்குதல்களை நடத்தி, 18 ஆண்டுகள் நிறைகின்றன. 9/11 என்று நாளை இந்த சோகநிகழ்வின் நினைவு நாளாக அனுசரிக்கிற சமயமாகப் பார்த்து, யாராவது அந்தத் தீவீரவாதிகளையே நடுவீட்டுக்குள் அழைத்து வந்து சமாதானம் பேசுவார்களா? புத்தியுள்ள எவரும் செய்யத் துணிய மாட்டார்கள் தான்! ஆனால் டொனால்ட் ட்ரம்ப் அசால்ட்டாகச் செய்வார் என்றால் அமெரிக்க ஜனங்கள் பாடு எவ்வளவு பரிதாபம்  என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்களேன்! அமெரிக்க அதிபர்கள் விடுமுறை நாட்களில் தங்குகிற இடம் Camp David என்றழைக்கப் படுகிறது. நேற்றைக்கு ஆப்கானிஸ்தானிய தாலிபான்களையும், Afghan  அரசையும் ரகசிய பேச்சுவார்த்தைக்கு அழைத்து விட்டு,  தாலிபான்கள் தாக்குதலில் ஒரு அமெரிக்க ராணுவ வீரர் கொல்லப்பட்டதை அடுத்து, பேச்சுவார்த்தை செத்து விட்டது, நானேதான் அழைத்தேன் நானேதான் ரத்துசெய்தேன் என்று சர்வ சாதாரணமாக டொனால்ட் ட்ரம்ப் என்கிற ஒரே ஒரு ஆசாமியால் தான் சொல்ல முடியும். ஜனநாயகத்தில் மிகப் பெரிய சாபக்கேடே இந்த மாதிரி ஆசாமிகள் பதவிக்கு வந்து விடுவதுதான்! 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில், ரிபப்லிக்கன் கட்சி வேட்பாளராக ட்ரம்ப்பும் டெமாக்ரட்டுகள் வேட்பாளராக ஹிலாரி க்ளிண்டனும் என்று ஒன்றுக்கொன்று சளைக்காத மிகவும் மோசமான வேட்பாளர்கள் இறுதிக்கட்டத்துக்கு வந்த போது, ஹிலாரி க்ளிண்டனுடைய முந்தைய நாட்களின் சாதனையைக் கண்டு பயந்து, அவருக்கு இவரே தேவலை என்றுதான் டொனால்ட் ட்ரம்ப்பைத் தேர்ந்தெடுத்தார்கள் என்ற கதையை இந்தப்பக்கங்களிலேயே பார்த்திருக்கிறோம்.

குருட்டுப்பூனை விட்டத்தில் பாய்ந்த கதை என்று சொல்வார்கள், அதேபோல டொனால்ட் ட்ரம்ப்  என்கிற ஆசாமி சர்வதேச அளவில் இன்னும் என்னென்ன தீம்பைக் கொண்டு சேர்ப்பாரோ என்கிற அச்சம் இருக்கத்தான் செய்கிறது.

மீண்டும் சந்திப்போம்.  
                

4 comments:

  1. The Great Hack என்ற டாக்குமெண்டரி netflix இல். இருக்கிறது. இதில், ட்ரம்ப் எலக்ஷனில் எப்படி ஜெயிக்க முடிந்தது என்று விவரமாக விளக்கியிருக்கிறார்கள். அமெரிக்கா மட்டுமல்ல. ஜனநாயக நாடுகள் எல்லாவற்றிலுமே எலெக்ஷனை எப்படி வளைத்து வெற்றிபெறுவது என்று பயமுறுத்தி இருக்கிறார்கள். பிரெக்ஸிட், மலேசியா தேர்தல், பிரேசில் தேர்தல், டிரினிடாட் தேர்தல், அமெரிக்கா தேர்தல் என்று எல்லாவற்றிலுமே இதே பார்முலா. வழிமுறைகள் தான் வேறு.

    நம்ம ஊர் 'போரளிகள்' எல்லாமே இதன் ஒரு பாகம் தான். ஒருவர் வேலைக்கோ / முழுநேர தொழிலாளியாகவோ / முதலாளியாகவோ உழைத்தால் தான் வாழமுடியும் என்ற போது, இவ்வளவு பேர் முழுநேர 'போராளி' யாக எப்படி இருக்க முடிகிறது? இவர்களுக்கு யார் பணம் கொடுக்கிறார்கள் என்ற கேள்விக்கு விடை அளிக்கிறது இந்த டாகுமெண்டரி.

    நேரம் கிடைத்தால் பாருங்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பந்து!
      தகவலுக்கு நன்றி. நிச்சயம் பார்க்கிறேன். ஜனநாயகம் என்பதே இன்னமும் முதிர்ச்சி பெறாமல் இருக்கிற ஒரு அரசியல் வடிவம்தான்! தங்களுடைய தேர்வு எப்படிப் மோசமான பின்விளைவுகளுக்குக் கொண்டு செல்லும் என்பது ஜனங்களுக்கும்தெரியாது. Frankenstein கதைதான்!

      Delete
  2. Just looking at him lying thru the teeth is something.Incorrigible.

    ReplyDelete
    Replies
    1. மாறாதையா மாறாது மனமும் குணமும் மாறாது என்று இவர்களுக்காகவே ஒரு சினிமாப்பாட்டு பாடிவைத்திருக்கிறார்களே அம்மா! https://youtu.be/wDpuKc5lq44

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!