வெள்ளிக்கிழமைக் கேள்விகள்! #அரசியல் இன்று!

சரத் பவார் ஊழல் பேர்வழிதான்! ஆனால் அவர் வட்டத்துக்குள் சிக்குவாரா?  இங்கே இது நண்பர் திருப்பூர் ஜோதிஜியின் கேள்வி! இந்தக் கேள்விக்கான விடை என்னிடம் இல்லைதான்! ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. நடப்புச் செய்திகளில் இருந்து எதையாவது அனுமானிக்க முடிகிறதா என்பதைத் தேட, அந்த இல்லை, ஒரு தடையாக இருந்துவிடுமா என்ன?  



சரத் பவார் தன்னுடைய வீரத்தை வெளிக்காட்டுகிற விதமாக  அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு ஆதரவாளர்கள் கூட்டத்துடன் விஜயம் செய்யவிருப்பதாக தற்போதைய செய்திகள் சொல்கின்றன. இதேமாதிரியான ஸ்டன்ட் ஒன்றை இங்கே சென்னையில் திமுக தலீவர் இசுடாலின் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்குத் தாமாக முன்வந்து ஆஜரான பழைய கதை நினைவிருக்குமானால், இதெல்லாம் புகார்களில் சிக்குகிறவர்கள் வழக்கமாக விடுகிற உதார்கள் தான் என்பது, நடப்பு அரசியலைக் கவனித்து வருகிற எவருக்கும் நன்றாகவே தெரிந்ததுதான்! சமீபத்தில் கர்நாடகா அரசியல்வாதி DK சிவகுமார் கைது செய்யப்பட்டபோது, அவர் கட்சி போராடியதோ இல்லையோ, ஒக்கலிகர் ஜாதி அமைப்பை வைத்து, பொதுச் சொத்துக்களை நாசம் செய்து தங்களுடைய பலத்தைக் காட்ட முயன்றதைக் கூட இந்தப் பக்கங்களில் பேசியிருக்கிறோம்.


காங்கிரசின் ஊதுகுழலாகவே செயல்படுகிற NDTV யின் இந்த 22 நிமிட நிகழ்ச்சியைப் பாருங்கள்! சரத் பவார் மீதான குற்றப் பத்திரிகை  உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில்தான் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. மோசடி செய்யப்பட்டதொகை 100 கோடிக்கும் அதிகம் என்பதால் அமலாக்கத்துறையும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறது. ED, CBI போன்ற விசாரணை அமைப்புக்களை பிஜேபி அரசு தொடர்ந்து பழி வாங்கும் நடவடிக்கைகளுக்காகவே பயன்படுத்துகிறது என்று இந்த நிகழ்ச்சியில் இவர்களாகவே விசாரித்து இவர்களாகவே ஒரு தீர்ப்பையும் பார்க்கிறவர்கள் தலையில் திணிப்பது NDTV நீண்டநாட்கலாகாவே செய்துவருகிற வேலைதான்! இதன் நிறுவனர் ப்ராணாய ராயும் அவரது மனைவி ராதிகாவும் அமலாக்கத்துறை விசாரணையில் இருப்பது கூட இவர்கள் ஏன் இப்படிக் கூவுகிறார்கள் என்பதற்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்!  FirstPost தளத்தில் வெளியாகியிருக்கிற இந்தச் செய்திக்கட்டுரையை ஒருமுறை வாசித்து விடுங்கள்!

திருப்பூர் ஜோதிஜி எழுப்பிய கேள்விக்கு பதில் இல்லாதது போலவே, இன்னொரு கேள்விக்கும் என்னிடம் பதில் இல்லை. சோனியாவின் மாப்பிள்ளை ராபர்ட் வாத்ரா, சீனாதானா, DK சிவகுமார், சரத் பவார் என்று ஊழல்களில் பிரபலமான காங்கிரஸ் ஆசாமிகளின் மீதான குற்றச்சாட்டுக்களின் பொதுவான அம்சம் மணிலாண்டரிங்! கறுப்பை வெளுப்பாக்குவது! இதையெல்லாம் விசாரிக்கிற அளவுக்கு அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகள் வலுவாக இருக்கின்றனவா? நீதிமன்ற நடைமுறைகளில் இருக்கிற சந்து பொந்துகளில் குற்றவாளிகள்  தப்பித்து  விடாத அளவுக்கு முறையான விசாரணை, தடயங்களை சேகரிக்கிற மெக்கானிசம் இருக்கிறதா?  இது இன்று வெள்ளிக்கிழமைக் கேள்வியாக!



இது போன்ற விசயங்களை நீங்க சொல்வது போல காட்சி படுத்துவது அவசியம். சரத்பவார் லாலு போல உள்ளே இருப்பார். வைக்க முடியும்? அவர் லாபியை (சரத்பவார் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சர்க்கரை ஆலைகள், சர்க்கரை விலை விற்பனை மற்றும் விலை நிர்ணயித்தல், மகாராஷ்டிரா கிரிக்கெட் தொடர்பான முடிவுகள்) மோடி அரசு 50 சதவிகிதம் தான் அடக்க முடிந்துள்ளது. இன்னமும் உள்ளது. வட்டத்திற்குள் கொண்டு நிறுத்த முடியும் என்று நம்புகிறீர்களா?
ReplyDelete
Replies
  1. வாருங்கள் ஜோதிஜி!

    சரத் பவாரை ஒரு கட்டத்துக்குள் அடக்கி வைக்கவேண்டியது நாட்டின் பாதுகாப்பு உள்ளிட்ட விஷயங்களுக்கு மிகவும் நல்லது என்றுதான் நினைக்கிறேன். அரசியலில் எல்லோருடனும் ஒருமாதிரியான் நீக்குப்போக்குடன் நடந்துகொண்டு தன்னுடைய ஊழலை இதுவரை எவரும் கேள்வி கேட்காதபடி சமாளித்து வந்திருக்கிறார் என்பதில் அவரை முழுமையாக expose செய்ய முடியுமா செய்வார்களா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை. ஆனாலும் ஒரு ஆரம்பம் என்று வந்துவிட்டபிறகு, எப்படிப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்!

    சதீஷ் ஆசார்யாவின் இந்தக் கார்டூனை எதற்காக இங்கே எடுத்துப் போட்டேன் என்று நினைக்கிறீர்கள்?
   
ஆனால் இவர்களை மாதிரியான ஆசாமிகளைக் கட்டம் கட்டுவதற்கு           நம்மாலேயே முடியும்! அடுத்தடுத்த இரு தேர்தல் தோல்விகளில் காங்கிரஸ் கட்சியின் அஸ்திவாரமே கலகலத்துப்போய், ஆட்டம் அவ்வளவுதான் என்கிற நிலைக்குப் போயாகிவிட்டது. கொள்கையை மறந்துபோன இடதுசாரிகள் செல்வாக்கிழந்து நிற்கிறார்கள்! காங்கிரசின் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஆட்டம் போட்ட மாநிலக் கட்சிகள் கூட, அடக்கியே வாசித்தாக வேண்டிய நிலைமை! இவைகளைச் சாதித்தது நம்முடைய வாக்குகள் தான்! யாராலும் நம்.மை அசைக்க முடியாது என்று ஆட்டம் போடுகிறவர் எவராக இருந்தாலும், அவர்களை மீண்டும் எழுந்திருக்க முடியாமல் தோற்கடிக்கிற சக்தி மக்களிடமே இன்னமும் இருக்கிறது. போகும் திசை மறந்து போச்சு என்று தடுமாறாமல், ஏதாவது செய்யவேண்டும் ஆனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் இன்றைய இளைஞர்களிடம் ஒரு சரியான பாதைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது நம்முடைய கடமை.

இதைச் செய்ய முடிந்தால் எல்லாம் ஒரு ஒழுங்குக்கு வரும்!

மீண்டும் சந்திப்போம்.                

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!