கதம்பமாக செய்திகளும்! அவை மீதான விமரிசனமும்!

ன்று ஆசிரியர் தினம். ஆசிரியர்களைக் கொண்டாடுவது வரவர ஒரு அர்த்தமிழந்து போன சாங்கியமாகவே ஆகிப் போன கதையை இந்தப்பக்கங்களில் பலமுறை பேசியாகி விட்டது. என்ன அந்தப் பழங்கதை என்று தெரிந்துகொள்ள நேரமிருப்பவர்கள் அந்தச் சொல் மீது க்ளிக் செய்து படித்துக் கொள்ளலாம்! அவர் அல்லவோ ஆசிரியர்! வணங்கத் தக்கவரும் கூட!    என்று இன்றைக்கும் நினைத்து வணங்கும் ஒரு ஆசிரியரைப் பற்றி பேசியதும் உண்டு! மாணவர்கள் மீது உண்மையான அக்கறையோடு கற்பிக்கும் நல்ல ஆசிரியர்கள் அனைவரையும் சிரந்தாழ்த்தி வணங்குகிறேன்!


சதீஷ் ஆசார்யா கார்டூன் ரொம்ப லேட்! முன்பே இதை அழுத்தம் திருத்தமாக ஜெயம் ரவி தன்னுடைய கோமாளி திரைப்படம் வாயிலாகச் சொல்லிவிட்டார் என்று நினைக்கிறேன்! 


இப்படிச் சொல்லக் கூடிய எத்தனை ஆசிரியர்களை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்? பின்னூட்டத்தில் வந்து சொல்லலாம்!

காசுக்கார காங்கிரஸ் வக்கீல்களுடைய ஜம்பம் எல்லாம் இனி வரும் காலங்களில் செல்லாக்காசுதான் என்பதை அடுத்தடுத்து உச்சநீதிமன்ற நிகழ்வுகளில் பார்க்கமுடிவது ஒரு நல்லவிஷயமாகத் தான் படுகிறது. சீனாதானா அமலாக்கத் துறை தன்னைக் கைதுசெய்யக்கூடாதென்று முன்ஜாமீன் கேட்டு நின்ற விஷயத்தில் இன்றைக்கு  முன்ஜாமீன் கேட்பதெல்லாம் அடிப்படை உரிமைகளில் வராதென்று மூஞ்சியில் அடித்தாற் போலச் சொல்லிவிட்டதாம்!  


பானாசீனா மீது அடுக்கடுக்கான வழக்குகள் இன்னமும் விசாரணைக்குவர இருக்கும் நிலைமையில் சால்வை அழகர் சிறிது காலத்துக்கு அரசுவிருந்தாளியாகத்தான் காலம் கழிக்கிற மாதிரி இருக்கும்! தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கோ வெளியே வந்து நிருபர்களுக்கோ அப்பச்சி அஞ்சு விரலைக் காட்டினாராமா? அல்லது மறந்துவிட்டாரா? செட்டிநாட்டுப் பவிசு எப்படி வெளிப்பட்டது என்பதை நேரலையில் எவருமே காட்டவில்லையே!
The top court’s ruling places the decision on what next for Chidambaram in the hands of the Enforcement Directorate and the CBI special court at Rouse Avenue Court complex in the national capital. The CBI told the court earlier this week that it was done with interrogating Chidambaram for its case and he should be sent to judicial custody in Tihar. For now, Chidambaram can avoid Tihar jail only if the ED arrests him today or he is granted bail by Special CBI judge Ajay Kumar Kuhar.  என்கிறது காங். ஆதரவு  ஹிந்துஸ்தான் டைம்ஸ்.

ஐந்து நாள் விசாரணைக்கு பிறகு பக்கோடாவுக்கு முன்ஜாமீன் மறுப்பு.
அதுவும் குறீப்பிட்ட தமிழக நீதிபதி தலைமையிலான அமர்விலே. அப்போ அதானே?
உச்ச பஞ்சாயத்து திருந்திடுச்சா?
சிபிஐ இன் விருந்துக்கு பிறகு அமலாக்கப்பிரிவு விசேச விருந்து பக்கோடாவை வரவேற்கிறது.


பிரதமருடைய ரஷ்யப்பயணத்தில் சென்னைக்கும் விளாடிவோஸ்டாக் இடையிலான புதியகடல்பாதைக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பது நல்லவிஷயம்!
இந்திய பிரதமர் மோடியின் ரஷ்ய பயணம்..
இந்தியா ரஷ்யா இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து இந்தியாவின் மும்பை வழியாக நடைபெற்று வந்தது.
இப்போது...அதைவிட குறைந்த கடல் மைல் தூரத்திலான இந்தியாவின் சென்னை -ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் துறைமுகங்கள்
இடையே சரக்கு கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தாகி உள்ளது. கவனிக்க தக்க நிகழ்வு.
பலவருடங்களாக எதிர்பார்க்கப் பட்ட ஒன்று நிறைவேறி இருக்கிறது.
சென்னை துறைமுகம் ...முன்னை விடவும் அதிக சரக்கு போக்குவரத்தை ...குறிப்பாக கச்சா எண்ணை போக்குவரத்தை கையாள போகிறது.
பாராட்டுகள்.
அதே நேரம்...இது தொடர்பான ஒன்றாக .. கவனித்து சீர்படுத்தவேண்டிய விஷயம் ...சென்னை துறைமுகத்தில் நீடித்திருக்கும் ...தமிழகத்தின் குறிப்பிட்ட சில அரசியலின் பேராதிக்கம்.  
இப்படி எச்சரித்திருக்கிறார்.

மீண்டும் சந்திப்போம்.   

.  


2 comments:

  1. ஆசிரியர் தினத்தைப் பற்றி பல இணைப்புகளுடன் பதிவினை வழங்கியிருக்கின்றீர்கள்..
    ஒவ்வொன்றாகப் படித்து விட்டு வருகிறேன்...

    நல்ல விஷயங்களை அறியத்தரும் தங்களுக்கு அன்புடன் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் துரை செல்வராஜூ சார்!

      உண்மையான அக்கறையோடு கற்பிக்கும் நல்ல ஆசிரியர்கள் அனைவரையும் சிரந்தாழ்த்தி வணங்க வேண்டியதருணமிது! சேர்ந்தே வணங்குவோம்!

      Delete

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!