வெள்ளிக்கிழமை! #அரசியல் காமெடிகள்!

 காமெடி 1 : "பொதுவாக ஆளுநர்கள், முதலமைச்சர்களைத்தான் அழைத்துப் பேசுவது வழக்கம். ஆனால், தமிழக ஆளுநர், எதிர்க்கட்சித் தலைவரை அழைத்துப் பேசியுள்ளார். இது தி.மு.கவுக்கு கிடைத்த வெற்றி. `அமித் ஷா பேசியது தவறாகப் புரிந்துகொள்ளப் பட்டுள்ளது' என்று ஆளுநர் தி.மு.க தலைவரிடம் கூறியுள்ளார். அதற்கு தி.மு.க தலைவர், 'இது உங்களுடைய கருத்தா அல்லது அமித் ஷாவின் கருத்தா?' என்று கேட்டுள்ளார். உடனே ஆளுநர், `அமித் ஷா சொன்னது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இது அவருடைய கருத்துதான்' என்று சொல்லியுள்ளார். இதுவே தி.மு.க-வுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இந்தியை இந்தியை தமிழகத்தில் திணிப்பதை எதிர்த்து, தி.மு.க அறிவித்த போராட்டத்தைக் கண்டு அமித் ஷா பயந்துவிட்டார் அதனால்தான், தன் கருத்தை மாற்றிக் கொண்டுவிட்டார் அமித் ஷா"


இந்தமாதிரிக் காமெடி செய்ய திமுகவினரைத் தவிர வேறு எவருக்கு முடியும் சொல்லுங்கள்! மூன்றாம் கலீஞர் என்று சொல்லப்படுகிற உதயநிதி நேற்று கரூர் பக்கம் உலாத்தப் போன சமயத்தில் பெனாத்தியது இது என்று விகடன் தளத்தில் படித்தது செம காமெடியாக இருந்தது. ஆளுநரைச் சந்தித்தபிறகு இன்று நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்த இந்தி எதிர்ப்புப்போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் படுவதாக இசுடாலின் ஜகா வாங்கியதை உபிக்கள் வேறெப்படி சொல்வார்களாம்? நேற்று முழுவதும் திமுக ஜகா வாங்கியதைப் பற்றி முகநூலில் நிறையப்பேர் கழுவிக்கழுவி ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.



ஒருத்தர் முகத்திலும் அருள் இல்லை..
தங்கள் போராட்டத்திற்கு எதிர்தரப்பு பயந்திருந்தால் எப்படி கொண்டாட்டத்தில் இருந்திருப்பார்கள்..
அதுவும் துரைமுருகன் இப்படியா தலை தொங்கி இருப்பார்..
கூப்பிட்டு வச்சு.. போராட்டம் பண்ணா..
பிச்சு பிச்சு.. என்று ஏஜெண்ட் தாத்தா மிரட்டி அனுப்பியிருப்பதாகவே தகவல் .
அதனாலயே இந்த சோக ராகம்..
வெளியே வந்து ஆளுநர் விளக்கம் கொடுத்தாராம். இவிங்க ஏத்துக்கிட்டு போராட்டத்தை வாபஸ் வாங்கிட்டாங்க என்று சீனைப்போட்டுக் கொண்டிருக்கிறார்கள்..
2009 ஈழப்படுகொலையின் போது காங்கிரசின் மிரட்டலுக்கு பயந்து தந்தை எப்படி பல நாடகங்கள் நடித்து மடை மாற்றினாரோ.. அதே பாலிஸிதான் இப்போது ஸ்டாலினுக்கும் கை கொடுக்கிறது..
மத்திய அதிகாரத்தை வைத்து எல்லா மாநில கட்சிகளையும் சோலிய முடிக்கப் போகிறார்கள்..
அதிலிருந்து தப்ப.. "பாஜக ஒன்றும் தீண்டதகாத கட்சி அல்ல".. என்று தந்தை போட்டுக்கொடுத்த பாதையில் விரைவில் பயணிப்பார் ஸ்டாலின்..
சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் இதுபோல் நிறைய காமெடிகளை பார்க்க தமிழர்கள் தயாராக இருக்கவும்.. 
-கார்ட்டூனிஸ்ட் பாலா

   
காமெடி 2: ஒரு மாறுதலுக்காக ஒரு அயலூர் காமெடி! தேர்தல் நெருங்கும் சமயத்தில் அரசியல்வாதிகள் அனைவருமே கோமாளிகளாய் மாறிவிடுவது உலகெங்கும் பொதுவானது தான் போலிருக்கிறது! கனடாவில் இன்னும் நான்கு வாரங்களில் பொதுத்தேர்தல் நெருங்கிவரும் நேரத்தில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, 18 வருடங்களுக்கு முன்னால்  தன்னுடைய 29 வயதில் பள்ளி ஆசிரியராக இருந்த சமயம், அரேபிய இரவுகள் என்ற நிகழ்ச்சிக்காக கறுப்பு வண்ணம் பூசிக் கொண்டு போஸ் கொடுத்த புகைப்படம் வெளியாகி தர்மசங்கடத்தைக் கொடுத்ததும், அது இனவெறியாகக் கருதப்படும் என்று தெரியாமல் செய்தது, தவறுதான் என்று மன்னிப்புக் கேட்டார்! அடுத்து அதே நிகழ்ச்சியின் வீடியோ வெளியானதும் நேற்று மீண்டும் விரிவாக மன்னிப்புக் கோரிய செய்தி!  "If everyone who is going to be standing for office needs to demonstrate they've been perfect every step of their lives," Trudeau said, "there is going to be a shortage of people running for office."


ஜஸ்டின் ட்ரூடோ தன்னுடைய குடும்பத்துடன் இங்கே இந்தியாவுக்கு பிக்னிக் வந்த மாதிரி நடந்துகொண்டது, கனடாவில் உள்ள சீக்கிய வாக்குகளுக்காக,  அமிர்தசரஸ் பொற்கோவிலுக்குப்போய்  பாரம்பரிய உடை அணிந்து  போஸ் கொடுத்தது, கூடவே ஒரு காலிஸ்தான் பிரிவினை ஆசாமியுடன் போட்டோவுக்குப் போஸ் கொடுத்தது முதலான சிறுபிள்ளைத்தனமான விஷயங்களை ஏற்கெனெவே பார்த்திருப்பதால், இந்த தேர்தல் ஸ்டன்டில்  எந்த சீரியசான விஷயமும் இருப்பதாகத் தெரியவில்லை! வெறும் காமெடியாக மட்டுமே இருக்கிறது. 
But Trudeau's argument would carry more weight had his war room not spent the week prior furiously digging up reasons why his opponents should be disqualified — reasons that include what they once said, once advocated for, or with whom they previously associated.None of those claims were close to as bad as a grown man wearing blackface on multiple occasions. Had Trudeau been a regular candidate of any party, including the Liberals, he would've been closing up his campaign office by now என்று சொல்கிறார் ராபின் உர்பாக். அவர் சொல்கிற மாதிரி The Liberal leader's days as a progressive icon are over என்றுதான் எனக்கும் தோன்றுகிறது. 

அரசியல் என்றால் காமெடிதானே என்று ஒதுங்கிப்போய்விட முடியுமா? அப்படி ஒதுங்கிப்போய்த்தானே தகுதியில்லாத நபர்களிடம் சிக்கிக் கொண்டிருக்கிறோம்! என்ன செய்யப் போகிறோம்?  இது இந்த வெள்ளிக்கிழமைக் கேள்வியாக! 

மீண்டும் சந்திப்போம்.  

No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!