Showing posts with label படிப்பினைகள். Show all posts
Showing posts with label படிப்பினைகள். Show all posts

வெள்ளிக்கிழமைக்கேள்விகள் ! வரலாறும் படிப்பினையும்! 2



வெள்ளிக்கிழமைக்கேள்விகள் ! வரலாறும் படிப்பினையும்!  என்ற தலைப்பில் இந்தப்பதிவை எழுதி ஆறாண்டுகள் நிறையவிருக்கும் தருணம் இது.
கேள்விகள் அப்படியே தானிருக்கின்றன. வரலாறு, படிப்பினை ஏதாவது கற்றுக் கொண்டிருக்கிறோமா என்ற கேள்வியுமே அப்படியே தானிருக்கிறது. அங்கே  வெள்ளிக்கிழமைக்கேள்வியாக  ராமச்சந்திர குஹா Patriots and partisans என்ற தன்னுடைய நூல் அறிமுகத்தில் நான்கு விஷயங்களை சொல்லியிருந்தது
பேசப்பட்டிருந்தது.

சுருக்கமாகஇந்திய ஜனநாயகம் முதிர்ச்சி பெறமேம்பட நான்கு விஷயங்கள் நடந்தே ஆகவேண்டும் என்று திரு ராமச்சந்திர குஹா சொல்வது இதுதான்:
முதலாவதாக,காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தையே நம்பி 
ருப்பதில் இருந்து வெளிவர,விடுபட வேண்டும் ராகுல் காந்திக்கு அரசியலில் ஈடுபட முழு உரிமையும் இருக்கிறதென்றாலும் அவரோ இத்தாலிய மம்மியோ மட்டும் தான் கட்சியில் முக்கியமானவர்கள்அதிக சக்தி அதிகாரம் படைத்தவர்கள் என்ற மாயையில் இருந்து விடுபட வேண்டும்
இரண்டாவதாக,பிஜேபி ஆர்எஸ்எஸ்சை நம்பியிருப்பதில் இருந்து அல்லது பிடியிலிருந்து விடுபட்டுத் தன்னை வலதுசாரி மையமாகப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய ஜிஹாதிகள் மாதிரி ஆகிவிடாமல்ஜெர்மனியில் கிறிஸ்டியன் டெமாக்ரட்டுக்களைப் போலமிதவாதக் கட்சியாக தன்னை புதுப்பித்துக் கொள்ளவேண்டும் 
மூன்றாவதாகஇடதுசாரிகள் மாறிவரும் தொழில்நுட்பம்அவசியத்துகேற்றபடி தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும். காலாவதியாகிப்போனஜனநாயகத்துக்கு முரணான லெனின்ஸ்டாலினிசத்தையே நம்பியிருப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இடதுவலது என்று பிரிந்து கிடக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்று பட வேண்டும்.உதிரிக் குழுக்களாக சிதறுண்டு போயிருக்கும் மாவோயிஸ்டுகள் நக்சலைட்டுகளை வன்முறை தீவீரவாதத்தைக் கைவிடும்படி கன்வின்ஸ் செய்ய வேண்டும்.
நான்காவதாக எண்ணிக்கையிலும் செல்வாக்கிலும் அதிகரித்து வரும் மத்திமர் (மிடில் கிளாஸ்) தங்களுக்கென்று ஒரு புதிய கட்சியை உருவாக்கிக் கொள்ளவேண்டும். 

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் #பிஜேபி கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் இரண்டாவதாக சொல்லப் பட்டிருக்கிறது. இந்தக் கேள்விகளுக்கு அனானிமசாக வந்த  பின்னூட்டத்தில் ......

  1. 1. முதல் விஷயம் நடக்கும் என்று தோன்றவில்லை. மக்களுக்கு கவர்ச்சி தேவை.
    2. இரண்டாவது விஷயமும் கனவுதான்.
    3. மூன்றாவது விஷயம் நடந்தால் நன்றாக இருக்கும். ஆனால் ஒற்றுமை வருவது மிகவும் கடினம்.
    4. அர்விந்த் கெஜ்ரிவல் போன்றவர்களை ஆதரிக்கலாம். மத்திமர் வகுப்பிற்கு உயர்ந்த வகுப்பு ஆகுவது ஒன்றே லட்சியம். அதனால் இந்த மாதிரி விஷயங்களில் இறங்க மாட்டார்கள்.

    எல்லாவற்றிற்கும் மக்கள் மனது மாற வேண்டும். கவர்ச்சியை விடுத்து உண்மை அறியும் மனது வேண்டும். காமராஜர் கவர்ச்சி ஆனவர் அல்ல, கவர்ச்சி முன் தோற்றார். அண்ணாவும், கருணாவும் வார்த்தை ஜாலத்தால் கவர்ச்சி பெற்றார்கள், ஜெயித்தார்கள். எம் ஜி ஆர் அதை விட கவர்ச்சி ஆக தென்பட்டார், ஜெயித்தார். நாட்டில் எல்லா வளமும் மக்களுக்கு போய் சேர காமராஜர் பாடுபட்டார். அதனால் மக்கள் மொழி போன்ற extra curricular விஷயத்தில் ஆர்வம் காட்ட முடிந்தது. இன்று இருப்பது போல் பிரச்சனைகள் இருந்து இருந்தால் காமராஜரும் அரசியல் செய்து இருக்கலாம். பாவம் அவர் அப்பாவி. மக்களுக்கு தேவை என்றாவது கிடைக்கும் தேன் மட்டுமே. தினமும் கிடைக்கும் கூழை விட என்றாவது கிடைக்கும் தேன் மீது மக்களுக்கு அக்கறை அதிகம்.
    REPLYDELETE
  2. என்ன கருத்தைச் சொல்வது என்று பலரும் தயங்கிக் கொண்டிருந்த நேரத்தில், பளீர் பளீரென பதில்சொல்லியிருக்கிறீர்கள்.அதற்காகவே என்னுடைய வாழ்த்துகள்.பௌதீக, ரசாயனப் பரிசோதனைகளில் கிடைக்கிற மாதிரி சமுதாய இயக்கத்தில் மிகவும் துல்லியமான விடை கிடைப்பது இல்லை. ஜனங்களுடைய மனோநிலையைக் கணிப்பதில், நமக்கு முக்கியமில்லாத ஒன்றாகத் தோன்றுமொரு காரணி நிகழ்வுகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடக் கூடியது.

    திரு ராமச்சந்திர குஹா சொன்ன நாலு அம்சங்களில் முதலிரண்டும் நடக்கும் என்று தோன்றவில்லை, வெறும் கனவுதான் என்று சொல்லியிருப்பது ஓரளவுக்கு சரி.எதனால் என்று யோசித்துப் பாருங்களேன்! இங்கே ஜனங்களுடைய எதிர்பார்ப்புக்களுக்கும், கட்சிகள் நடந்துகொள்வதற்கும் ஏகப்பட்ட இடைவெளி இருக்கிறது. ஒரே வார்த்தையில் சொல்வதானால், இங்கே அரசியல் கட்சிகள் ஜனங்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு, மதித்து அதற்கேற்றபடி அரசியல் முடிவுகளை எடுப்பதே இல்லை.

    மூன்றாவது, இடதுசாரி இயக்கங்களுடைய ஒற்றுமை. ஒட்டு வங்கி அரசியலில் தங்களைத் தொலைத்துவிட்டு நிற்கிற வரைக்கும் இது சாத்தியமில்லைதான்.தவிர, இந்தியச் சூழ்நிலையை இடதுசாரிகள் இன்னமும் தெளிவாகப் புரிந்துகொள்ளவே இல்லை.

    நான்காவதாக எண்ணிக்கையிலும் செல்வாக்கிலும் அதிகரித்து வரும் மத்தியதர வர்க்கம் தனக்கென ஒருஅரசியல் கட்சியைத் தொடங்கவேண்டும். அண்ணா .ஹசாரேவின் ஊழலுக்கெதிரான இந்தியா இயக்கத்தை இந்த அளவுக்கு முன்னெடுத்துச் சென்றது மத்தியதர வர்க்கம் தான்.இன்னும் ஆழமாக, அடித்தட்டு மக்களிடம் ஒரு அதிர்வை உண்டாக்குவதற்கு முன்னாலேயே,தொய்வடைந்துவிட்டது. ஆனால், இது மீண்டும் கிளர்ந்தெழும்.

    நேரடியாக இந்த நான்குமே சாத்தியமில்லாததாகத்தான் தோற்றும். ஆனால்,இப்போதுள்ள தேர்தல் முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தால், உதாரணமாக winner takes all என்ற முறையை மாற்றி, ஒவ்வொரு கட்சிக்கும் அது வாங்குகிற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் தான் சட்ட/நாடாளுமன்றங்களில் பிரதிநிதித்துவம் என்றாக்கினால்,ஒரு நபர் இரண்டு முறைக்குமேல் முக்கியமான பதவிகளில் நீடிக்க முடியாது என்ற டெர்ம் லிமிடேஷன், அப்புறம் சின்னச் சின்ன விஷயங்களைக் கொண்டு வந்தாலேயே ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும்.
  3. ராமச்சந்திர குகா முன்வைத்த நான்கு விஷயங்களும் அதை ஒட்டி எழுந்த கேள்வியும் பதிலுக்காக இன்னமும் காத்துக் கொண்டிருக்கின்றன. சரி, உங்களிடம் விடை இருக்கிறதா?  
  

வரலாற்றில் இன்று....! நாகசாகி தினம்!

மாதா பிதா செய்த பாவம் மக்கள் தலையிலே என்று ஒரு சொலவடை  உண்டு!

தாய் தகப்பன் சேர்த்து வைக்கும் சொத்துக்களுக்கு மட்டும் பிள்ளைகள் வாரிசுகள் அல்ல.. ..அவர்கள் செய்கிற தீய செயல்களின் விளைவுகளுக்கும் கூடத் தான்! கொஞ்சம் விரிவு படுத்திப் பார்த்தால், ஒரு தேசத்தின் ஆட்சியாளர்கள் செய்கிற முட்டாள்தனங்களுக்கு, அந்த தேசத்து மக்கள் தான் விலை கொடுத்தாக வேண்டியிருக்கிறது என்பதை நிரூபித்த நாள் இன்று! குண்டு வீசியவர்களுடைய மனோ நிலை இங்கே செய்தியாக

முற்பகல் 11.02, ஆகஸ்ட் 9! 1945

அதற்கு மூன்று நாட்களுக்கு முன்னர் தான் ஹிரோஷிமா நகரின் மீது அமெரிக்கா ஒரு அணுகுண்டை வீசியிருந்தது! கொலைபாதக அணு குண்டு சரியாக வேலை செய்கிறதா, அணு வெடிப்பின் பரிசோதனை முடிவுகள் துல்லியமாக இருக்கிறதா என்று மறுபடி சோதித்துப் பார்ப்பதற்காக, இன்னொரு அணுகுண்டை நாகசாகி என்ற நகரின் மீது வெடிக்கச் செய்த கொடூரத்தின் அறுபத்தைந்தாவது ஆண்டு நிறைவு தினம் இன்று.

கொடூரமான மரணத்தின் வலியை உணர்ந்தவர்கள், அந்த வெடி குண்டு வீச்சில் உயிர் தப்பி, ஆனால் கதிரியக்கத்தின் விளைவாக ஏன்  இன்னும் உயிரோடிருக்கிறோம் என்று  வேதனையுடன்,  தங்கள் கண்முன்னாலேயே குழந்தைகள், உறவினர்கள், நண்பர்களைப் பறிகொடுத்த துயரத்துடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள்  இன்னமும் இருக்கிறார்கள். அப்படி உயிர் பிழைத்தவர்களோடு, நாகசாகி நகரத்து மக்களும், இன்னும் முப்பத்திரண்டு நாடுகளின் பிரதிநிதிகளும் இந்த நினைவுநாளில் ஒன்று கூடி, பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்கள் வேண்டவே வேண்டாம் என்ற உறுதிமொழியையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். .

ஆகஸ்ட் 15 என்றவுடன் இங்கே நமக்கு இந்தியா விடுதலை அடைந்த தினமாகத் தான் தெரியும்! அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், 1945 ஆகஸ்ட் பதினைந்தாம் தேதி தான்   இரண்டாவது அணுகுண்டு வீசப்பட்டு, ஏறத்தாழ இரண்டு லட்சத்து இருபதாயிரம் பேருக்கு மேல் கதிரியக்க வெப்பத்தில் கருகிய கொடுமைக்குப் பின்னர், ஜப்பான் நிபந்தனையற்ற போர்நிறுத்தத்தை,சரணடைவதை அறிவித்தது. முதல் குண்டு வீச்சின் போதே இந்த முடிவு எடுக்கப் பட்டு விட்டது, அமெரிக்க உளவுத்துறைக்கு அது தெரியும் என்று கூட தகவல்கள் உண்டு.

கிழக்கத்திய நாடுகளில், ஜப்பானியப் பிரபுக்களின் கொடுமைக்கு அண்டை நாடுகளின் மக்கள் ஆளானது சரித்திரம். சீனா, கொரியா என்று பக்கத்து நாட்டுப் பெண்கள் ஜப்பானியர்களுடைய இச்சை தீர்ப்பவர்களாக ஆக்கப் பட்டதும், தொடர்ந்த கொடுமைகளும், இன்றைக்கும் அந்த மக்களின் மனதில் மறக்க முடியாத வடுக்களாக இருக்கின்றன.

வட கொரியாவின் அதிபராக இருக்கும் ஒரு கிறுக்கனின் கையில் இருக்கும் அணு ஆயுதங்கள், இன்றைக்கு வரையிலும் ஜப்பான், தென் கொரியா  உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருப்பது வரலாற்றின் மிகப் பெரிய நகை முரண்! ஆனால், ஜப்பான், தனக்கேற்பட்ட துயரத்தையும், சோதனைகளையும் தாங்கிக் கொண்டு, அவமானத்தை சகித்துக் கொண்டு, அழிவிலிருந்து மீண்டெழுந்த அந்த அற்புதத்தையும் இந்த அறுபத்தைந்து ஆண்டு காலம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

அணு குண்டு வீசி அழித்த அமெரிக்கர்களை, ஜப்பான் தன்னுடைய தரமான உற்பத்தி முறை, தொழில் தயாரிப்புக்களால் வெற்றி கொண்டிருக்கிறது! ஆம், அழிக்கத் தெரிந்த அமெரிக்கர்களால், ஜப்பானோடு இன்றைக்கும் கூட, தர வரிசையில், வேலை முறையில் வெற்றி பெற முடியவில்லை!

வரலாற்றில் இருந்து கற்றுக் கொள்ளவேண்டிய பாடங்கள் நிறைய உண்டு! தவறுகளில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உண்டு!

தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ளத் தெரிந்தவர்கள், பேரழிவுக்குப் பின்னால் கூட தலை நிமிர்ந்து நிற்கிறார்கள்! சீனா, கடந்த முப்பதே ஆண்டுகளில் அசைக்க முடியாத வல்லரசாகத் தன்னை நிலை நாட்டிக் கொண்டிருப்பதையும் சேர்த்துப் பாருங்கள்!

இந்திய அரசியல்வாதிகளும், இங்கே உள்ள அரசும் எப்போது பாடத்தைக் கற்றுக் கொள்ளப் போகிறார்கள்? இவர்களுடைய மெத்தனத்திற்கு பலியாக வேண்டியிருப்பது சாதாரண மக்கள் தான் என்பதை நினைவு வைத்துக் கொண்டால், இவர்களுக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டிய பொறுப்பும் கூட ஆம் ஆத்மி என்று ஒட்டுக் கேட்பதற்காக மட்டும் இவர்களுடைய வசனங்களில் இடம் பெறும் அந்த சாமானிய மக்களுக்குத் தான் இருக்கிறது.

இந்த மோசமான அரசியல்வாதிகளுக்குச் சரியான பாடத்தைக் கற்றுக் கொடுக்க நாம் தயாராக வேண்டாமா?

நீங்களே சொல்லுங்கள்!