வெள்ளிக்கிழமைக்கேள்விகள் ! வரலாறும் படிப்பினையும்! என்ற தலைப்பில் இந்தப்பதிவை எழுதி ஆறாண்டுகள் நிறையவிருக்கும் தருணம் இது.
கேள்விகள் அப்படியே தானிருக்கின்றன. வரலாறு, படிப்பினை ஏதாவது கற்றுக் கொண்டிருக்கிறோமா என்ற கேள்வியுமே அப்படியே தானிருக்கிறது. அங்கே வெள்ளிக்கிழமைக்கேள்வியாக ராமச்சந்திர குஹா Patriots and partisans என்ற தன்னுடைய நூல் அறிமுகத்தில் நான்கு விஷயங்களை சொல்லியிருந்தது
பேசப்பட்டிருந்தது.
சுருக்கமாக, இந்திய ஜனநாயகம் முதிர்ச்சி பெற, மேம்பட நான்கு விஷயங்கள் நடந்தே ஆகவேண்டும் என்று திரு ராமச்சந்திர குஹா சொல்வது இதுதான்:
முதலாவதாக,காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தையே நம்பி இருப்பதில் இருந்து வெளிவர,விடுபட வேண்டும் ராகுல் காந்திக்கு அரசியலில் ஈடுபட முழு உரிமையும் இருக்கிறதென்றாலும் அவரோ இத்தாலிய மம்மியோ மட்டும் தான் கட்சியில் முக்கியமானவர்கள், அதிக சக்தி அதிகாரம் படைத்தவர்கள் என்ற மாயையில் இருந்து விடுபட வேண்டும்
இரண்டாவதாக,பிஜேபி ஆர்எஸ்எஸ்சை நம்பியிருப்பதில் இருந்து அல்லது பிடியிலிருந்து விடுபட்டுத் தன்னை வலதுசாரி மையமாகப் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இஸ்லாமிய ஜிஹாதிகள் மாதிரி ஆகிவிடாமல், ஜெர்மனியில் கிறிஸ்டியன் டெமாக்ரட்டுக்களைப் போலமிதவாதக் கட்சியாக தன்னை புதுப்பித்துக் கொள்ளவேண்டும்
மூன்றாவதாக, இடதுசாரிகள் மாறிவரும் தொழில்நுட்பம், அவசியத்துகேற்றபடி தங்களை மாற்றிக் கொள்ளவேண்டும். காலாவதியாகிப்போன, ஜனநாயகத்துக்கு முரணான லெனின்ஸ்டாலினிசத்தையே நம்பியிருப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். இடது, வலது என்று பிரிந்து கிடக்கும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒன்று பட வேண்டும்.உதிரிக் குழுக்களாக சிதறுண்டு போயிருக்கும் மாவோயிஸ்டுகள் நக்சலைட்டுகளை வன்முறை தீவீரவாதத்தைக் கைவிடும்படி கன்வின்ஸ் செய்ய வேண்டும்.
நான்காவதாக எண்ணிக்கையிலும் செல்வாக்கிலும் அதிகரித்து வரும் மத்திமர் (மிடில் கிளாஸ்) தங்களுக்கென்று ஒரு புதிய கட்சியை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் #பிஜேபி கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம் இரண்டாவதாக சொல்லப் பட்டிருக்கிறது. இந்தக் கேள்விகளுக்கு அனானிமசாக வந்த பின்னூட்டத்தில் ......
- என்ன கருத்தைச் சொல்வது என்று பலரும் தயங்கிக் கொண்டிருந்த நேரத்தில், பளீர் பளீரென பதில்சொல்லியிருக்கிறீர்கள்.அதற்காகவே என்னுடைய வாழ்த்துகள்.பௌதீக, ரசாயனப் பரிசோதனைகளில் கிடைக்கிற மாதிரி சமுதாய இயக்கத்தில் மிகவும் துல்லியமான விடை கிடைப்பது இல்லை. ஜனங்களுடைய மனோநிலையைக் கணிப்பதில், நமக்கு முக்கியமில்லாத ஒன்றாகத் தோன்றுமொரு காரணி நிகழ்வுகளைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டு விடக் கூடியது.
திரு ராமச்சந்திர குஹா சொன்ன நாலு அம்சங்களில் முதலிரண்டும் நடக்கும் என்று தோன்றவில்லை, வெறும் கனவுதான் என்று சொல்லியிருப்பது ஓரளவுக்கு சரி.எதனால் என்று யோசித்துப் பாருங்களேன்! இங்கே ஜனங்களுடைய எதிர்பார்ப்புக்களுக்கும், கட்சிகள் நடந்துகொள்வதற்கும் ஏகப்பட்ட இடைவெளி இருக்கிறது. ஒரே வார்த்தையில் சொல்வதானால், இங்கே அரசியல் கட்சிகள் ஜனங்களுடைய உணர்வுகளைப் புரிந்து கொண்டு, மதித்து அதற்கேற்றபடி அரசியல் முடிவுகளை எடுப்பதே இல்லை.
மூன்றாவது, இடதுசாரி இயக்கங்களுடைய ஒற்றுமை. ஒட்டு வங்கி அரசியலில் தங்களைத் தொலைத்துவிட்டு நிற்கிற வரைக்கும் இது சாத்தியமில்லைதான்.தவிர, இந்தியச் சூழ்நிலையை இடதுசாரிகள் இன்னமும் தெளிவாகப் புரிந்துகொள்ளவே இல்லை.
நான்காவதாக எண்ணிக்கையிலும் செல்வாக்கிலும் அதிகரித்து வரும் மத்தியதர வர்க்கம் தனக்கென ஒருஅரசியல் கட்சியைத் தொடங்கவேண்டும். அண்ணா .ஹசாரேவின் ஊழலுக்கெதிரான இந்தியா இயக்கத்தை இந்த அளவுக்கு முன்னெடுத்துச் சென்றது மத்தியதர வர்க்கம் தான்.இன்னும் ஆழமாக, அடித்தட்டு மக்களிடம் ஒரு அதிர்வை உண்டாக்குவதற்கு முன்னாலேயே,தொய்வடைந்துவிட்டது. ஆனால், இது மீண்டும் கிளர்ந்தெழும்.
நேரடியாக இந்த நான்குமே சாத்தியமில்லாததாகத்தான் தோற்றும். ஆனால்,இப்போதுள்ள தேர்தல் முறைகளில் மாற்றங்களைக் கொண்டுவந்தால், உதாரணமாக winner takes all என்ற முறையை மாற்றி, ஒவ்வொரு கட்சிக்கும் அது வாங்குகிற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் தான் சட்ட/நாடாளுமன்றங்களில் பிரதிநிதித்துவம் என்றாக்கினால்,ஒரு நபர் இரண்டு முறைக்குமேல் முக்கியமான பதவிகளில் நீடிக்க முடியாது என்ற டெர்ம் லிமிடேஷன், அப்புறம் சின்னச் சின்ன விஷயங்களைக் கொண்டு வந்தாலேயே ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியும். - ராமச்சந்திர குகா முன்வைத்த நான்கு விஷயங்களும் அதை ஒட்டி எழுந்த கேள்வியும் பதிலுக்காக இன்னமும் காத்துக் கொண்டிருக்கின்றன. சரி, உங்களிடம் விடை இருக்கிறதா?
2. இரண்டாவது விஷயமும் கனவுதான்.
3. மூன்றாவது விஷயம் நடந்தால் நன்றாக இருக்கும். ஆனால் ஒற்றுமை வருவது மிகவும் கடினம்.
4. அர்விந்த் கெஜ்ரிவல் போன்றவர்களை ஆதரிக்கலாம். மத்திமர் வகுப்பிற்கு உயர்ந்த வகுப்பு ஆகுவது ஒன்றே லட்சியம். அதனால் இந்த மாதிரி விஷயங்களில் இறங்க மாட்டார்கள்.
எல்லாவற்றிற்கும் மக்கள் மனது மாற வேண்டும். கவர்ச்சியை விடுத்து உண்மை அறியும் மனது வேண்டும். காமராஜர் கவர்ச்சி ஆனவர் அல்ல, கவர்ச்சி முன் தோற்றார். அண்ணாவும், கருணாவும் வார்த்தை ஜாலத்தால் கவர்ச்சி பெற்றார்கள், ஜெயித்தார்கள். எம் ஜி ஆர் அதை விட கவர்ச்சி ஆக தென்பட்டார், ஜெயித்தார். நாட்டில் எல்லா வளமும் மக்களுக்கு போய் சேர காமராஜர் பாடுபட்டார். அதனால் மக்கள் மொழி போன்ற extra curricular விஷயத்தில் ஆர்வம் காட்ட முடிந்தது. இன்று இருப்பது போல் பிரச்சனைகள் இருந்து இருந்தால் காமராஜரும் அரசியல் செய்து இருக்கலாம். பாவம் அவர் அப்பாவி. மக்களுக்கு தேவை என்றாவது கிடைக்கும் தேன் மட்டுமே. தினமும் கிடைக்கும் கூழை விட என்றாவது கிடைக்கும் தேன் மீது மக்களுக்கு அக்கறை அதிகம்.