புதிய ஜனநாயகம்! மாற்றம் ஒன்றே மாறாதது! சரிதானா?

இன்று காலை செய்திகளைப் பார்த்துக் கொண்டிருந்த நேரம்! இடையிடையே சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளையும் பார்த்துக் கொண்டே வந்ததில் கண்ணில் பட்ட ஒரு குட்டிக் கதை மிகவும் அர்த்தமுள்ளதாக இருந்தது. ஹிட்லர் இறந்தபிறகு இந்த வீடியோவில் உள்ளதுபோல கிண்டல் செய்வதாகப் புனையப்பட்ட கதையாகக் கூட இருக்கலாம்!Führerprinzip (leader principle) என ஒற்றைப்புள்ளியில் முடிகிற அதிகாரக் கட்டமைப்பை ஹிட்லர் உருவாக்க முடிவதற்கு முன் இருந்த ஒரு சபை நம்மூர் பார்லிமென்ட் மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்! ஒரு நாள் சபைக்கு ஹிட்லர் ஒரு கோழியுடன் வந்தாராம்! எதுவுமே பேசாமல் கோழியின்  இறகுகளை ஒவ்வொன்றாகப் பிய்த்துப் போட்டுக் கொண்டே வந்ததில் கோழி வலியால் துடித்தது. சபையில் இருந்தவர்கள் என்ன சொல்வது என்று  விழித்துக் கொண்டிருந்தபோது கடைசி இறகையும் பிய்த்து எறிந்தாகிவிட்டது கோழியைத் தரையில் வீசி எறிந்தார் ஹிட்லர். தன்னுடைய கோட் பைகளில் இருந்து தானியங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இறைத்துக் கொண்டே நடந்தாராம்! சிறகுகள் பிய்க்கப்பட்ட கோழி வலியையும் மறந்து தத்தித்தத்தி தானியங்களைக் கொத்தித் தின்றபடியே ஹிட்லரின் காலடியில் வந்து விழுந்து கிடந்ததாம்! அப்போது ஹிட்லர் சபையைப் பார்த்து உலகப் பிரசித்தி பெற்ற இந்த வார்த்தைகளைச் சொன்னாராம்:

"ஜனநாயகநாடுகளில் வாழுகிற மக்கள் எல்லோருமே முடமான இந்தக் கோழியைப் போலத்தான்! ஆரம்பத்தில் அங்கே தலைவர்கள் மக்களிடமிருந்து எல்லாவற்றையும் பறித்து, திருடிக்கொள்வார்கள்; அப்புறம் நிவாரணம் என்று கொஞ்சம் கொடுத்து ஜனங்களுடைய நலம் விரும்பிகள் என்றாகி விடுவார்கள்!"   

#துக்ளக் வார இதழில் இப்படியெல்லாம் அட்டைப்படம் போடுவார்கள் என்று பயந்தோ மத்தியப்பிரதேசத்திலும் சத்திஸ்கரிலும் காங்கிரஸ் முதலமைச்சர்கள் பதவியேற்ற கையோடு விவசாயக் கடன்தள்ளுபடி உத்தரவில் போட்டிருக்கிறார்கள் என்று நினைத்தால் அது தவறு. இது இன்னும் 5 மாதங்களில் வரப்போகிற நாடாளுமன்றத் தேர்தலுக்கான தூண்டில்புழு! இன்று செய்திகளில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசும் கடன் தள்ளுபடி அறிவித்திருக்கிறதாம்! புதுவிதமான ஜனநாயகம்  உருவாக்க முனைகிற இந்தப் போக்குக்கும் மேலே ஹிட்லர் கதைக்கும் உள்ள தொடர்பை விளங்கிக் கொள்ள முடிகிறதா?      


தூண்டிலில் புழுவைத்து வீசுகிறவன் மீன்கள் மீது இரக்கம் கொண்டா வீசுகிறான்? 

#இலவசங்கள் என்ற மாயை என்ற குறிச்சொல்லில் இந்தப்பக்கங்களில் நிறையவே எழுதியிருக்கிறேன். இப்போது #கடன் தள்ளுபடி என்கிற மாயை வேகமாக உருவாகிக் கொண்டிருக்கிறது. இதிலும் கூட நம்மூர் #களவாணி காங்கிரஸ் கட்சிதான் முந்திக்கொண்டு நிற்கிறது. 


******* 
வாசகர் கருத்தாக இப்படிக்கு கேலிச்சித்திரம் போட்டிருக்கிற இன்றைய ஹிந்து தமிழ் நாளிதழில் முகப்புச் செய்தியாக மம்தா பானெர்ஜி இப்படிப் பேசியதும் ‘‘பிரதமர் பதவிக்கு யாரை முன்னிறுத்துவது என்பது குறித்து இப்போதைக்கு பேசுவது பொருத்தமானதல்ல. பிரதமர் பதவியை பொறுத்தவரை விரிவான விவாதம் நடத்தப்பட வேண்டும். தனிநபர்கள், கட்சிகள் மட்டுமே இதனை முடிவு செய்ய முடியாது. அனைத்துக்கட்சிகளும் அமர்ந்து இதனை முடிவு செய்யும். அதற்கான தருணம் வரும்போது அனைவரும் ஒன்றாக பேசி ஒத்த கருத்துடன் முடிவெடுப்போம்’’

ஆக இசுடாலின் வாள் கொடுத்து வாளேந்தி போஸ் கொடுத்துச் செய்த ராவுல்பாபா தான் பிரதமர் என்கிற பிரகடனம், வீரமுழக்கம் எங்கேயும் போணி ஆகவில்லை என்பது தொடர்ந்து வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது என்பது தெரிந்துமே ஆனந்த விகடன் வகையறா உடன்பிறப்புகள் மட்டும் இன்னும் புளகாங்கிதப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்!

*******  
ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளை மட்டும் வைத்து நரேந்திர மோடியா ராகுல்காந்தியா என்பதை முடிவு செய்து விடமுடியுமா? கொஞ்சம் கேளுங்கள்!  
    

சேனலை விட்டு வெளியேவந்த  பி!ன்னாலும் கூட ஊடகங்களில் ரங்கராஜ் பாண்டேவுக்கு இருக்கும் மவுசு கொஞ்சம் கூடக் குறையவில்லை என்பது ஆச்சரியம் தருகிற செய்திதானே! 


No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!