நம்மைச் சுற்றி வரும் உலகம்! தலைப்புச் செய்திகள்!

முதலில் அமெரிக்கா என்ற முழக்கத்தோடு அமெரிக்க அதிபர் ஆனவர் டொனால்ட் ட்ரம்ப்! அதற்கேற்ற மாதிரி அமெரிக்கா இனிமேல் உலகத்தின் போலீசாக (காவல் என்று மட்டுமே கொள்க) இருக்கப்போவதில்லை என இன்றைக்கு ஈராக்கில் பிரகடனம் செய்திருக்கிறார்.


Trump told troops, adding that the US wouldn't be helping to rebuild Syria. 'We’re no longer the suckers, folks. We’re respected again as a nation' என்கிறது தி கார்டியன் செய்தி!   

உலகப்போலீஸ் என்று லட்சக் கணக்கான கோடிகளில் செலவு செய்து தோற்ற பிறகு வந்த ஞானோதயம் இது என்றும் எடுத்துக் கொள்ளலாம்! நம்பர் #1 இடத்தைப் பிடிக்கக் காத்திருக்கும் சீனாவுக்கு கதவைத் திறந்து விட்ட மாதிரியும் எடுத்துக் கொள்ளலாம்.


CivMilAir ✈🎅🎄🐈
CivMilAir
Now, I'm not saying Trump is currently heading to the Middle East to visit troops. BUT... There's been some interesting aircraft movements the last couple of days. Some I've already tweeted... And a VC-25A has been reported over the UK earlier today. Watch this space! 😌
Twitter

இப்படி அமெரிக்கா என்ன செய்தாலும் சந்தேகப் படுகிற மாதிரியும் இருக்கலாம்! ஆனால் அமெரிக்க அதிபர் சிரியாவிலிருந்து, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை விலக்கிக் கொள்வதென்ற முடிவில் தீர்மானமாக இருக்கிறார் என்பதில் ஐயம் இல்லை. #ரட்சகர்கள் இலவசமாக எதையும் மீட்பது இல்லை, தசம பாகத்தை எதிர்பார்த்தே செய்கிறார்கள் என்பது டொனால்ட் ட்ரம்ப்பின் பேச்சிலிருந்து புரிந்து கொள்ள முடிகிற விஷயம். அமெரிக்காவின் ஆசிய,  ஐரோப்பியக் கூட்டாளிகள் உறைந்துபோய் நிற்பது, அடுத்து என்னாகப்போகிறதோ என்ற தவிப்பு பிடிபட இன்னும் சிறிது காலமாகலாம்!
,

American Tianxia: Chinese Money, American Power and the End of History என்று சால்வடோர் பாபோன்ஸ் என்கிற ஆஸ்திரேலிய பேராசிரியர் எண்பத்தெட்டே பக்கங்களில் சீனா ஒருபோதும் 21ஆம் நூற்றாண்டில் #நட்டநடுநாயகம் ஆகிவிட முடியாது; அமெரிக்கப் பொருளாதாரம் இன்றும் வலிமையாகத்தான் இருக்கிறது என்று புத்தகம் எழுதிப் பரபரப்பான ராசியோ என்னவோ இரண்டேஆண்டுகளில்

டொனால்ட் ட்ரம்ப் இப்படி ஒரு அதிர்ச்சி வைத்தியம் செய்து காட்டியிருக்கிறார்.   இந்த #Tianxia என்கிற வார்த்தையை தொடர்ந்து இந்திய வெளியுறவுக்கொள்கை, CPEC, OBOR, BRI   ராஜீய உறவுகளும் சிக்கல்களும், என்ற ஹேஷ்டாக்குகளில் கூகிள் பிளஸ்சில் எழுதி வந்ததை இந்தப்பக்கங்களில் தொடரலாம் என்று ஒரு எண்ணம்! எழுதலாமா? என்ன சொல்கிறீர்கள்?    
 ******* 
கீச்சுக்கு எதிர்க்கீச்சு!

மோடி என்ன செய்தார் என்று கேட்கும் ராகுல் காந்தி மைக் பிடித்து மட்டும் பேசிக் கொண்டிருக்கிறார்!

மேகலாயாவில் 15 பேர் சுரங்கத்திற்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, பிரதமர் மோடியோ புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

ஏன் இந்த வெத்து விளம்பரம்? முன்னும் பின்னும் பிரதமரை தொடரும் உயர்ரக காமரா? : யாரும் இல்லாத கடையில் யாருக்கு ஆத்துறீங்க டீ.😄😄😄

இந்தக் கீச்சுக்கு சரியான பதிலாக வந்திருப்பதைப் படித்தார்களோ என்னவோ? கண்ணைக் கழுவிட்டுப் பார்க்கவும் என்று கீச்சியிருக்கிறார் @KTL


*******
ராகுல் காந்தியைப் பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் அறிவித்த ராசியோ என்னவோ மீம்களில் ஏகத்துக்கு கலாய்த்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அவை ஒருபக்கம் இருந்தாலும், கருணாநிதி 2014 மார்ச்சில் என்ன சொன்னார் என்பதைக் கொஞ்சம் பாருங்கள்!

  
ஸ்டாலின் மீண்டும் நமக்குநாமே நடைபயணத்தை தொடங்கவிருக்கிறாராம்! வரவேற்பு மீம்களில் களை கட்ட ஆரம்பித்து விட்டது. சாம்பிளுக்கு ஒன்று.

    
இங்கே மட்டும் திருடவில்லை என்று உறுதியாக எப்படிச் சொல்கிறார்கள்? அரசியல் பேசுவதென்றால் எல்லாத்தரப்பையும் தான் கவனிக்க வேண்டும்! அதில் ஜான் பாண்டியனை மட்டும் ஒதுக்கி வைக்க முடியுமா?

  


No comments:

Post a Comment

ஏதோ சொல்லணும் போல இருக்கா? அப்ப சொல்லிட வேண்டியது தானே! என்ன தயக்கம்? அனானிகள், தங்களை அடையாளம் காட்டக் கொள்ளத் தயங்குகிறவர்கள், (Profile இல் தங்களைப் பற்றி சிறு அறிமுகம் கூட செய்யத் தயங்குபவர்கள்) பார்த்து விட்டு ஒதுங்கிக் கொள்வது நலம்!அப்படிப்பட்டவர்களுடைய பின்னூட்டங்களை இங்கே ஏற்பதற்கில்லை! மன்னிக்கவும்!